PDA

View Full Version : பறத்தல் பறவையியல்!



கீதம்
23-08-2011, 10:22 PM
திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

நன்றி: வல்லமை

சான்வி
24-08-2011, 04:55 AM
இயல்பை மறப்பது இயல்பா???
இறக்கையை மறப்பது இயற்கையா???
இயல்போடு இணைந்த செயற்கையா???
பறந்ததை மறந்த பறவையியல்
பெற்றதை மறக்கும் மனிதவியல்


ஆழமான கருத்தை சொன்ன அருமையான வரிகள். பகிர்வுக்கு நன்றி

Ravee
24-08-2011, 05:15 AM
திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

நன்றி: வல்லமை


நான் பார்த்த பல பெண்கள் இந்த மனநிலையில் இருப்பதையே விரும்புகிறார்கள் அக்கா . சொந்த சிந்தனை இன்றி சுயம் இழந்து சிறகுகள் இருந்தாலும் சிறைக்குள் இருப்பதையே .... என்று சொல்லி முப்பதை கடந்து மூப்பு வரை பெருமூச்சிலேயே காலம் தள்ளும் இவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ...

Nivas.T
24-08-2011, 08:54 AM
ஏன் எதற்கு

என்ற இரு கேள்விகளை கேட்டுவிட்டலே போதும்

அனால் கேட்பது தொடராத பொது நாம் என்ன செய்யமுடியும்

பலர் இப்படித்தான்

நல்ல சிந்தனை
உவமை அருமை
கவிதை மிக அழகுங்க

கௌதமன்
24-08-2011, 02:54 PM
வான்கோழியினம் பறவையா? விலங்கா?
வௌவால் விலங்கா? பறவையா?
பறப்பதையும், பாலூட்டுவதையும்
தீர்மானிப்பது எது?
பறப்பதனென்பது வாழ்வின் அவசியம்
எனறால் மனிதனுக்கும் சிறகு முளைக்கும்
அதுதான் பரிணாம மாற்றம்!
அவசியமற்றதென்றால் அதுபோலவே
இருக்கும் உறுப்பும் இல்லாததாகும்.
உபயோகத்தை தீர்மானிப்பது
தேவையும், சூழ்நிலையும்தான்.

த.ஜார்ஜ்
24-08-2011, 04:14 PM
தானியங்கள் தாராளமாய் கிடைத்துவிட்ட பிறகு அது எதற்காக பறக்க வேண்டும். லயித்துதான் கிடக்கும். கெளதமன் சொன்ன மாதிரி தேவைதான் தேடலை துவக்கி வைக்கும்.

innamburan
24-08-2011, 08:06 PM
சாளரம் திறந்தே இருக்க வேண்டும்.
மனதாகிற சாளரம்.

கீதம்
08-09-2011, 11:14 PM
இயல்பை மறப்பது இயல்பா???
இறக்கையை மறப்பது இயற்கையா???
இயல்போடு இணைந்த செயற்கையா???
பறந்ததை மறந்த பறவையியல்
பெற்றதை மறக்கும் மனிதவியல்


ஆழமான கருத்தை சொன்ன அருமையான வரிகள். பகிர்வுக்கு நன்றி

கருத்துரைத்துப் பாராட்டியதற்கு நன்றி சான்வி.



நான் பார்த்த பல பெண்கள் இந்த மனநிலையில் இருப்பதையே விரும்புகிறார்கள் அக்கா . சொந்த சிந்தனை இன்றி சுயம் இழந்து சிறகுகள் இருந்தாலும் சிறைக்குள் இருப்பதையே .... என்று சொல்லி முப்பதை கடந்து மூப்பு வரை பெருமூச்சிலேயே காலம் தள்ளும் இவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ...

சிறைக்கு வெளியில் வந்து சிலர் படும் பாட்டைப் பார்த்திருப்பார்கள். அதனால் எழுந்த ஞானோதயமாயிருக்கும். :) கருத்துக்கு நன்றி ரவி.


ஏன் எதற்கு

என்ற இரு கேள்விகளை கேட்டுவிட்டலே போதும்

அனால் கேட்பது தொடராத பொது நாம் என்ன செய்யமுடியும்

பலர் இப்படித்தான்

நல்ல சிந்தனை
உவமை அருமை
கவிதை மிக அழகுங்க

கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி நிவாஸ்.

கீதம்
08-09-2011, 11:20 PM
வான்கோழியினம் பறவையா? விலங்கா?
வௌவால் விலங்கா? பறவையா?
பறப்பதையும், பாலூட்டுவதையும்
தீர்மானிப்பது எது?
பறப்பதனென்பது வாழ்வின் அவசியம்
எனறால் மனிதனுக்கும் சிறகு முளைக்கும்
அதுதான் பரிணாம மாற்றம்!
அவசியமற்றதென்றால் அதுபோலவே
இருக்கும் உறுப்பும் இல்லாததாகும்.
உபயோகத்தை தீர்மானிப்பது
தேவையும், சூழ்நிலையும்தான்.

பறக்கவியலாப் பறவைகள் பற்றியேதும்
பரிந்துரைக்கவில்லையிங்கே.
பறக்கும் நிமித்தம் பாழுங்கதவை முட்டிப்
பரிதவித்தப் பறவைகள் பற்றியதே இப்பார்வை!
பசியடங்கியபின் பரந்த உலகம் பற்றிக் கவலையற்று
பதுங்கிநிற்கும் பறவைகளுக்கு சிறகிருந்தும் பயனென்ன?

இப்போது என் பார்வை உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் கெளதமன். :) அழகான கவிதையால் மறுமொழி சொல்லி மனக்கருத்தை உரைத்ததற்கு நன்றி.

கீதம்
08-09-2011, 11:27 PM
தானியங்கள் தாராளமாய் கிடைத்துவிட்ட பிறகு அது எதற்காக பறக்க வேண்டும். லயித்துதான் கிடக்கும். கெளதமன் சொன்ன மாதிரி தேவைதான் தேடலை துவக்கி வைக்கும்.

உங்களிருவரின் பார்வையும் சரியே என்றாலும், அந்த இடத்தில் மனிதர்களைப் பொருத்திப் பாருங்கள். இதென்ன வாழ்க்கையென்று நீங்களே சாடுவீர்கள்.:) பின்னூட்டத்துக்கு நன்றி ஜார்ஜ்.


சாளரம் திறந்தே இருக்க வேண்டும்.
மனதாகிற சாளரம்.

சரியாகச் சொன்னீர்கள். அப்படி அது திறந்தே இருந்தால் குறுகிய சிந்தனைகளை உள்ளே குத்தவைத்துக்கொண்டிராதே! பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா.