PDA

View Full Version : அடுத்து என்ன செய்யறது?தாமரை
21-08-2011, 06:24 PM
செகண்ட் ஷோ போறதுன்னா அப்படி ஒரு சந்தோஷம்.

ஒரு 8:30 மணிக்கு மேல நானு, செல்வராஜூ, சுந்தரராஜன், ஜெயக்குமார், என்.எஸ்.கே, சஃபியுதீன்,சிவகுமார்,ராஜபிரபு ஆகிய அஷ்ட திக் கஜங்களும் கிளம்புவோம்.. கல்லூரியிலிருந்து கீரனூருக்கு 3 கி,மீ. நடந்து போனா அரை மணி நேரம் ஆகும். அங்க போனா செட்டி நாடு மெஸ், அய்யர் மெஸ், மூகாம்பிகை மெஸ் இப்படி எதாவது ஒரு மெஸ்ஸிலோ அல்லது நாலணாவுக்கு இரண்டு இட்லி கொடுக்கும் ஆயா கடையில் எட்டு இட்லி ஒர் ஆம்லெட் என இரண்டு ரூபாய்க்கு டிஃபன் சாப்பிட்டு விட்டு லஷ்மி தியேட்டருக்குப் படம் பார்க்க போவோம். திருவிளையாடல் படத்தை நாப்பது நாள் செகண்ட்ஷோ டெய்லி போய் பார்த்தோம்னா எங்க மனம் எவ்வளவு உறுதியானதுன்னு புரிஞ்சிக்கலாம். நூத்தியெட்டாவது பிரிண்ட்ல திருவிளையாடல் பொன்விழா கொண்டாடிச்சின்னா அதுக்கு நாங்களும் ஒரு காரணம்னு சொல்லலாம்.

படம் முடிஞ்ச பின்னால் பல பேர் லாரியில் 50 பைசா கொடுத்து ஹாஸ்டலுக்குப் போனாலும் நாங்கள் என்னைக்கும் அப்படிப் போனது கிடையாது. மறுபடியும் நடைதான்..

ஆனா மேட்டர் திருவிளையாடல் பத்தியோ சினிமா பார்த்தது, ஹோட்டல் விஜயம் போன்றவையோ இல்லை. நடக்கறது கூட இல்லை. நடக்கும் போது நடக்குமே அதான் மேட்டர்..

அதென்ன நடக்கறப்ப நடக்கறதுன்னு கேட்கறீங்களா? நடக்கறப்ப நடக்கறது மிகப் பெரிய ஜூகல்பந்திக் கச்சேரி... ஆளாளுக்கு ஒரு பாட்டு பாடிகிட்டே நடப்போம். நிலா, நட்சத்திரம், எப்பவோ கடந்து போகும் எதாவது ஒரு பஸ் அல்லது லாரி வெளிச்சம் தவிர வேறெதுவும் வெளிச்சமில்லா இரவில்...

இரண்டு பக்கமும் வரிசையா நின்னுகிட்டு அசைய முடியாம கண்ணீர் விட முடியாம இலையை மட்டுமே உதிர்க்க முடிந்த பாவப்பட்ட புளிய மரங்களை செவிடாக்கிய படி..

உயர்த்திய குரலில் பாடியபடி நாங்க போற அழகு இருக்கே,,. அடடா அடடா..

குரல் நல்லா இருக்கா இல்லையா? இராகம் இருக்கா? சுரம் இருக்கா என்று ஒரு கவலையும் இல்லாம பாட்டுக்களை பாடிக் கொண்டே போவோம். கோரஸெல்லாம் கிடையாது., எல்லாம் தனிப்பாட்டுகள் தான்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், மோகன், இப்படி பல வகைப்பட்ட பாட்டுகள் அவை. ஒரு 60 பாடல்கள் எனக்கு அதனால முழுசா மனப்பாடமா தெரியும்னா அதற்குக் காரணம் அதுதான்.

இப்படி தினம் தினம் வாய்விட்டு மனம் விட்டுப் பாடிகிட்டு இருந்த நான் சின்னவயசிலயும் அப்படித்தான் இருந்தேன். எந்தப் பாட்டு வரிகள் மனசில பதியறமாதிரியும் புரியமாதிரியும் இருக்கோ அதையெல்லாம் வாய்விட்டு பாடிகிட்டே இருப்போம், எங்க பாட்டி வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர் சொல்வாரு.. மெட்ராஸ்ல டிசம்பர் சீசன் மாதிரி உங்க வீட்டுக்கு மே சீசன்.. இந்தப் பசங்களைப் பாருங்க எப்பப் பார்த்தாலும் பாடிகிட்டே இருக்காங்க அப்படின்னு.

இப்படி இருந்த நானு ஏழாவது படிக்கறப்ப இருந்து காலேஜூக்குப் போகிற வரை பாட்டுப் பாடனது ஒரே ஒரு பாட்டுப் போட்டிக்குத்தான்..

என்னாச்சி தெரியுமா?

அன்னிக்கு ஒரு நாள் அண்ணனுக்குக் கல்யாணமான புதுசு.. பள்ளிக்கூடம் போய்ட்டு வந்து விளையாடிட்டு சாப்டுட்டு வீட்ல பெஞ்சில உட்கார்ந்து ஆசை ஆசையா பாட்டு பாடிகிட்டு இருந்தேன்,,

"இராசாத்தி காத்திருந்தா ரோஸாப் போலே பூத்திருந்தா
இராசாவும் ஓடி வந்தான் இராகத்தோடே பாடிவந்தேன்"


"பளார்" ஒரு அரை விழுந்தது.. இனிமே பாடின வாயைக் கிழிச்சிடுவேன்னு உறுமிட்டு போனார் அண்ணா..

எதுக்கு அடிச்சார்னு எனக்குப் புரியவே இல்லை. அழுதுகிட்டே உட்கார்ந்து இருந்தேன். சின்ன அக்கா ஏண்டா அழுவற அப்படின்னு கேட்டப்ப சொன்னேன்..

பாட்டு பாடிகிட்டு இருந்தேன் அண்ணன் அடிச்சிட்டாருன்னு அழுதேன்.. அவங்க போய் அண்ணாவைக் கேட்டுட்டு வந்துதான் விவரம் சொன்னாங்க..

அண்ணியை அவங்க அப்பா வீட்ல செல்லமா அப்படிக் கூப்பிடுவாங்களாம் அதான் கோவப்பட்டு அடிச்சிட்டாராம்னு..

அதுக்கப்பறம் வாயைத்திறந்து வீட்ல பாடினதே கிடையாது...

பின்ன என்னங்க பண்றது. இந்த அண்ணமார்ங்க இப்படி இருக்காங்களே! தம்பிங்களுக்கு என்ன தெரியும் என்ன தெரியாதுன்னும் தெரியறதில்ல. தம்பி ஜாலியா பொழுது போக்கா பினாத்திகிட்டு இருக்கிறானா, இல்லைக் கிண்டல் செய்யறானான்னு ஆராய்ஞ்சும் பாக்கிறதில்ல. பளார்னு அடிச்சிட்டு போயிடறாங்க.. ஒண்ணுமே புரியாம கன்னத்தைத் தேய்ச்சுகிட்டு இருக்கறப்ப, யாராவது இதான் காரணம்னு சொல்லறப்ப அழுகை போய் கோபம்தாங்க வருது..

எதாவது நாம செய்யற விஷயம் யாரையாவது பாதிக்கறதுன்னா அதை அதோட நிறுத்திடறது என்னோடப் பிறவிக் குணம். அது இரவல் வண்டி, பாட்டு இப்படி ஒவ்வொரு விஷயமா என் வாழ்க்கைல தொடர்ந்துகிட்டுதான் இருக்கு..

வாழ்க்கையில் செய்ய எவ்வளவோ விஷயங்கள் இருக்கறப்ப, மத்தவங்களை பாதிக்கிற ஒர் விஷயத்தை ஏன் பண்ணனும்? வேற எதையாவது உபயோகமா செய்யலாம்கறது என்பாலிசி..

அப்படித்தான் பாட்டு போய் கவிதை வந்தது.. அடுத்தது என்னன்னு எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்..

:confused::confused::confused:

Nivas.T
22-08-2011, 06:04 AM
:eek::eek:
அப்போ கவிதையும் யாரையாவது பாதிச்சா?:confused::confused:

நல்லவேளை எனக்கு அண்ணங்க யாரும் இல்ல. :sprachlos020:

Ravee
22-08-2011, 06:34 AM
அட உங்க கதை பரவாயில்லை ...

http://www.latinoreview.com/images/stories/articles/tarzan1.jpg

டார்சான் படம் பார்த்துட்டு படுத்து இருந்த எங்க அப்பா வயித்தில ஏறி உக்காந்து கத்தி எடுத்து ஒரு ஷோ தான் போட்டேன். ரொம்ப நேச்சுரலா இருந்துச்சு போல ...கை தட்டுனாங்க பாருங்க ...முதுகு வீங்கிடுச்சி .

Nivas.T
22-08-2011, 07:41 AM
இதே கதைதான் ஆனான் இப்போ கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னாலதான் 1999 - 2002 இப்படிதான்

பூண்டியிலேருந்து இரவு எட்டுமணிக்கு கெளம்பி பக்கத்துல மூணு தியேட்டர்

ஒன்னு புன்னைநல்லூர் - 6 கிமீ தஞ்சாவூர் போகும் வழி

இன்னொன்னு சாலியமங்கலம் - 3 கி மீ நீடாமங்கலம் போகும் வழி

மூணாவது அம்மாபேட்டை - 9 கி மீ சாலியமங்கலம் அடுத்து

இந்த மூணு ஊரு தியேட்டருக்கும் இரண்டாவது ஆட்டம் தான் போவோம் அதுவும் ஒருவர் இருவர் அல்ல குறைந்தது பதினைந்து இருபது பேராவது போவோம். அதிகமாக செல்வது நடந்தேதான். அப்படி ஒரு மகிழ்ச்சியான நாட்கள் அவை. கவலைஎன்பதே தெரியாத நாட்கள்.

கர்ணன், திருவிளையாடல், ரயில் பயணங்களில், கிழக்கே போகும் ரயில், 16 வயதினிலே, போன்ற படங்கள் எங்களை நம்பியே திரையிடப்பட்டன. நாங்களும் அவர்களை நட்டப்படுத்தியதில்லை


முக்கிய குறிப்பு எந்த தியேட்டருக்கு சென்றாலும் தலா ஒரு சுடுகடாவது இருக்கும் குறைந்த பட்சம் :sprachlos020::sprachlos020::sprachlos020:

த.ஜார்ஜ்
24-08-2011, 04:59 PM
இப்படிதான் ஒரு பாடகரை நாங்கள் இழந்து போனோமா...?

innamburan
24-08-2011, 07:46 PM
'திருவிளையாடல் படத்தை நாப்பது நாள் செகண்ட்ஷோ டெய்லி போய் பார்த்தோம்னா...' ரவுசு தாங்கமுடியாமல் இருந்திருக்குமே. நல்ல வேலை நம்ப்ளைக்கூட்டிக்கிட்டு போகலே. தப்பிச்சிட்டீங்க.

seguwera
24-08-2011, 09:55 PM
இப்படி நம்முள் நாமே தொலைத்த விசயங்கள் பல.
(பட்டுக்கோட்டை சொன்னது போல வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு) தைரியம் மட்டும் அல்லாது தன்னம்பிக்கை கூட சில சமயம் நம்மை விட்டு போகின்ற அளவு.... நம்முடைய சிறு சிறு திறமைகளை வளர்த்து நம்மை மேலேற்றி விட நம் குடும்பம், நண்பர்கள் சுற்றம் அமைந்தால் அவனைவிட பாக்யசாலி யாரும் இல்லை.

சிவா.ஜி
28-08-2011, 12:41 PM
யாருமில்லாத அத்துவானத்துல குரலை உயர்த்திப் பாடற சுகம் இருக்கே...அடடா...அதுவும் மழைக்கால தவளைகளாய்...ஒண்ணு முடிஞ்சதும் இன்னொண்ணு ஆரம்பிச்சு தொடர்ற கச்சேரி இருக்கே....அது அதகளம்.

கல்லூரி வாழ்க்கை செம ஜாலியா போயிருக்குங்கறது...அப்பப்ப தவணையில நீங்க கொடுக்கிற அனுபவக் குறிப்புகள்லருந்து தெரியுது....ஆனா நல்ல ஒரு பாடகரை...அந்த ஒரு அறையால இழக்க வேண்டியதாப்போச்சே....அதனால என்ன நல்லக் கவிஞரை கொடுத்திருக்கே....

அடுத்து என்ன?...நமக்குள்ளயும் அதே கேள்விதானுங்கோவ்....!!!

சிவா.ஜி
28-08-2011, 12:42 PM
ரவீ சூப்பர். கைத்தட்டலுக்கு முதுகு வீங்கின கதையச் சொல்றேன்...ஹி...ஹி...!!

சூரியன்
28-08-2011, 02:02 PM
எனக்கு பாட்டு பாடுவதை விட அதை கேட்பதே அதிகம் பிடிக்கும் ஏன்னா எனக்கும் பாட வராது...;)

செல்வா
28-08-2011, 02:16 PM
அண்ணன் தம்பின்னாலே.... அடியும் அன்பும் வழக்கம் தானுங்களே... இதுக்காக அடுத்து என்னனு யோசிக்கிற அளவுக்குப் போயிட்டீங்களே...! :D

செல்வா
28-08-2011, 02:17 PM
அடுத்து என்ன?...நமக்குள்ளயும் அதே கேள்விதானுங்கோவ்....!!!

அடுத்து என்ன? அந்த மர்மத் தொடர்கதை தானுங்கண்ணா...:)

செல்வா
28-08-2011, 02:21 PM
அடுத்தது என்னன்னு எனக்குத் தெரிஞ்சா சொல்றேன்..


அடுத்து N-i................N-2....N-1.....N தான். :)

சூரியன்
28-08-2011, 02:36 PM
அடுத்து N-i................N-2....N-1.....N தான். :)

மறுபடியுமா?????????:rolleyes: