PDA

View Full Version : விடை இல்லா கேள்விகள்

Ravee
20-08-2011, 11:56 AM
https://lh4.googleusercontent.com/-NUaeLLgKM0Q/Tk-cdfhzQcI/AAAAAAAAAyw/BOCWd-wIQAk/s512/cokoo%252520clock.jpg

விடை இல்லா கேள்விகள்

விடியல் விடிய ஆரம்பிக்கும் முன்
அந்த ஒற்றை குயிலின் கூவல்

ஈன சுரத்தில் ஆரம்பிக்கும் குரல்
எண்ணற்ற வேதனைகளுடன் முடியும்

என்ன சோகமோ அதன் இதய கூட்டுக்குள்
என்னை தவிர எவரும் கேட்டதில்லை ...

குழப்பம் என்ன அதன் வாழ்வில்
குயிலின் வலி புரியவில்லை

தனக்குத்தானே கேட்கும் கேள்விக்கு
தவிப்பு ஒன்றே விடையாய் மிஞ்ச

தவறாமல் தளராமல் தினம் தினம்
விடை தேடும் வினாக்கள் மட்டும் விடையாக

நீண்டு ஒலிக்கும் கூவலுக்கு ஆறுதலாய்
புள்ளினங்கள் பள்ளி எழுப்ப

காறாம் பசுவின் அம்மா என்ற குரல் கேட்டு
கதிரவன் கிரணங்கள் எழும் பொழுது

கருங்குயிலின் குரல் கேட்பதில்லை
சடசடத்து பறக்கும் பறவையின்

ஒரு அலறல் சத்தத்தின் பின்
எல்லாமே இயந்திரமயமாகிறது

குயிலின் கூவல்கள் அடிவயிறினில் தங்க ......
ஆரம்பிக்கும் என் அன்றாட அலுவல்கள்

வழிய புன்னகைத்து ... வாய் பிளந்து
எதிரில் இருப்பவன் மனம் அறிந்து

இருப்பதை மறைத்து இல்லை என்று கூறி
இல்லாததை இருப்பதாய் கூறி

எல்லோரையும் திருப்திப் படுத்தி
முகம் கழுவி பார்க்கையில் ......

அங்கில்லை என் முகம்
எல்லாம் அடங்கி இரவு வரும் பொழுது

எவருக்கும் கேட்காமல்
எனக்குள் ஒரு அழுகை குரல்

இருப்பதும் கிடைப்பதும் நிலையில்லாமல்
அடச்சே என்ன வாழ்க்கை இது ?

இருந்தும் நடிக்கிறேன் .....
எதில் வெற்றி பெற ....

விடை இல்லா கேள்விகள்
ஓட்டைக் குடைகளாய் என் தலை மேல்

இதுதானோ குயிலின் நிலைமை ?
எல்லாம் இருந்தும் இல்லாத வாழ்க்கை

விடை இல்லா பயணம் தொடர்கிறது - ஒருவேளை
குயிலும் நானும் உறவோ ............ குழப்பமே

Nivas.T
20-08-2011, 12:31 PM
நிச்சயமாக கிடையாது

அவற்றிற்கு சோகம் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப்போல நிலையில்லா ஆசைகள் கிடையாது, அவற்றிற்காக நடிப்பதும் இல்லை, போலி முகமூடி அணிவதுமில்லை. உண்மையில் அவை சுதந்திரமானவை. நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு சுதந்திரமானவை. நிச்சயம் அது ஏக்கத்தின் குரல் அல்ல. வேண்டுமானால் பயத்தில் அலறலாக இருக்கலாம்.

மிக வித்தியாசமான கண்ணோட்டம்

கவிதை மிக அழகு அண்ணா

Ravee
20-08-2011, 02:07 PM

நிவாஸ் நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ... ஆனால் இதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது ... நன்றி நிவாஸ் ... :)

Nivas.T
20-08-2011, 02:44 PM
நிவாஸ் நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ... ஆனால் இதற்கு இன்னொரு பரிமாணம் இருக்கிறது ... நன்றி நிவாஸ் ... :)

:confused::confused::eek::eek::eek::icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2011, 05:10 PM
தன் இணை தொலைந்த சோகத்தினால் ஏற்பட்ட துக்கமாக கூட இருக்கலாம் ..இன்றேல் அன்றாட வாழ்வில் மனிதரால் ஏற்படும் துக்கத்தினால் நிகழும் சோகமாக இருக்கலாம் ..ஆனால் உண்மை முகம் தொலைக்கும் சூழல் அவறிற்கு இருக்காது .. எது எப்படியாகினும் கூவும் குயிலினூடே மனிதரின் சோகம் இழையோட கவிதை வரிகளில் மிளிரும் அழகு...

அமரன்
20-08-2011, 09:00 PM
குழப்பமே விடை..
குழப்பத்துக்குள்
குழம்பிக் கிடக்கிறதே விடை.

ஒருக்களித்துப் படுத்து
ஒழுங்கம்மைத்து ஒருங்கிணைத்து
விடையைக் கண்டு பிடித்த கணத்தில்
காணாமல் போய் விடுகிறது
மாயப் பூதக் கேள்வி...!!!

விடை அநாதையாய்..
ஆனாலும்
ஆதரவாய்.. ஆறுதலாய்...!!!!

Ravee
20-08-2011, 11:57 PM
தன் இணை தொலைந்த சோகத்தினால் ஏற்பட்ட துக்கமாக கூட இருக்கலாம் ..இன்றேல் அன்றாட வாழ்வில் மனிதரால் ஏற்படும் துக்கத்தினால் நிகழும் சோகமாக இருக்கலாம் ..ஆனால் உண்மை முகம் தொலைக்கும் சூழல் அவறிற்கு இருக்காது .. எது எப்படியாகினும் கூவும் குயிலினூடே மனிதரின் சோகம் இழையோட கவிதை வரிகளில் மிளிரும் அழகு...

குழப்பமே விடை..
குழப்பத்துக்குள்
குழம்பிக் கிடக்கிறதே விடை.

ஒருக்களித்துப் படுத்து
ஒழுங்கம்மைத்து ஒருங்கிணைத்து
விடையைக் கண்டு பிடித்த கணத்தில்
காணாமல் போய் விடுகிறது
மாயப் பூதக் கேள்வி...!!!

விடை அநாதையாய்..
ஆனாலும்
ஆதரவாய்.. ஆறுதலாய்...!!!!

நிச்சயமாக கிடையாது

அவற்றிற்கு சோகம் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப்போல நிலையில்லா ஆசைகள் கிடையாது, அவற்றிற்காக நடிப்பதும் இல்லை, போலி முகமூடி அணிவதுமில்லை. உண்மையில் அவை சுதந்திரமானவை. நம்மால் நினைத்துக்கூட பார்க்க இயலாத அளவிற்கு சுதந்திரமானவை. நிச்சயம் அது ஏக்கத்தின் குரல் அல்ல. வேண்டுமானால் பயத்தில் அலறலாக இருக்கலாம்.

மிக வித்தியாசமான கண்ணோட்டம்

கவிதை மிக அழகு அண்ணா

நண்பர்களே , இங்கு நான் குயிலாக உருவகப்படுத்தி இருப்பது என் அகம். என் அகத்தின் தேடல் என்ன என்பதை இதுவரை ஏதும் அறியாமல் அறியாமையிலேயே பொழுது போகிறது .அதுவே அதன் ஈன சுரத்தின் முனங்கல் ... எப்பொழுதும் அதி காலையில் விழிப்புற்று இருக்கும் இந்த நிலையானது முனங்கல்கள் முற்றுப் பெறாமல் வேதனையில் சோர்ந்து விடும் பொழுது நடப்பான இயந்திர வாழ்க்கைக்கு புறம் தள்ளப்படுகிறது. இங்கே உள்ளிருக்கும் அகத்துக்கும் புறத்துக்கும் சம்பந்தம் இல்லாத பணிகளை செய்து ஓய்ந்து போன உடல் செய்த பணிகளில் சந்தோசம் இல்லாமல் பிரிந்தே கிடக்கிறது. அக சிந்தனையும் புறத்தேடல்களும் ஒரு கோட்டில் இணையும் போதல்லாவா உண்மை விளங்கும் இந்த உயிருக்கு .... இனி குழப்பம் இருக்காது என்றே எண்ணுகிறேன்..... :)

கீதம்
21-08-2011, 03:20 AM
கவிதையின் கரு பற்றிய என் யூகம் ஊர்ஜிதமானது உங்கள் விளக்கத்தால். நன்றி ரவி. கவிதையின் கருவினும் அது சொல்லும் வரிகளின் நயம் ரசித்தேன்.

சடசடத்து பறக்கும் பறவையின்

ஒரு அலறல் சத்தத்தின் பின்
எல்லாமே இயந்திரமயமாகிறது

குயிலின் கூவலைத் துரத்தும் சடசடவென்ற பறவையின் அலறலென்பது அதிகாலைத் துயிலெழுப்பும் மனைவியின் குரலோ?:)

வழிய புன்னகைத்து ... வாய் பிளந்து
எதிரில் இருப்பவன் மனம் அறிந்து

இருப்பதை மறைத்து இல்லை என்று கூறி
இல்லாததை இருப்பதாய் கூறி

எல்லோரையும் திருப்திப் படுத்தி...

வலிய புன்னகைத்து? வழிய புன்னகைத்து?

எழுத்து மாறியதோ என்றெண்ணினேன். மாறினாலும் பொருத்தமாகவே பொருள் தருவதைக் கண்டு ரசித்தேன்.

வலிய புன்னகைத்து - செயற்கையாய்ப் புன்னகைத்து

வழிய புன்னகைத்து - அளவுக்கு அதிகமாகவே புன்னகைத்து (பல்லிளித்து?) :D

வாடிக்கையாளர் மனம் அறிந்து சொல்லப்படும் பொய்கள்...

இருப்பதை மறைத்து இல்லையென்றும், இல்லாததை இருக்கிறதென்றும் சொல்வதன் மூலம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் கலை...

ஒரு விற்பனைப் பிரதிநிதியின் வியாபார சூட்சுமத்தை அழகாய் வெளிப்படுத்துகின்றன வரிகள்.:icon_b:

விடை இல்லா கேள்விகள்
ஓட்டைக் குடைகளாய் என் தலை மேல்

தேர்ந்த உவமை, ரசித்தேன். விடைகளால் ஓட்டை அடைக்கும் வித்தை கைவரப்பெற்றபின் சொல்லுங்கள். கற்றுக்கொள்கிறேன் நானும்.

அதற்காக விடை தேடும்பொருட்டு திடும்மெனப் புறப்பட்டுவிடாதீர்கள். யசோதரையையும் ராகுலனையும் நள்ளிரவில் விட்டுப்பிரிந்த சித்தார்த்தனின் மேல் இன்னமும் கோபம் தீரவில்லை எனக்கு.

ஜானகி
21-08-2011, 07:46 AM
வெளி உலக இரைச்சலிலும் குயிலின் குரல் கேட்பதே அரிது....நேரமும் காலமும் கனியும்போது...குயிலின் குரலே விடையாக அமையும்...பொறுத்திருப்போம்...

Nivas.T
21-08-2011, 12:21 PM
:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

Ravee
22-08-2011, 05:30 AM
கவிதையின் கரு பற்றிய என் யூகம் ஊர்ஜிதமானது உங்கள் விளக்கத்தால். நன்றி ரவி. கவிதையின் கருவினும் அது சொல்லும் வரிகளின் நயம் ரசித்தேன்.

குயிலின் கூவலைத் துரத்தும் சடசடவென்ற பறவையின் அலறலென்பது அதிகாலைத் துயிலெழுப்பும் மனைவியின் குரலோ?:)

வலிய புன்னகைத்து? வழிய புன்னகைத்து?

எழுத்து மாறியதோ என்றெண்ணினேன். மாறினாலும் பொருத்தமாகவே பொருள் தருவதைக் கண்டு ரசித்தேன்.

வலிய புன்னகைத்து - செயற்கையாய்ப் புன்னகைத்து

வழிய புன்னகைத்து - அளவுக்கு அதிகமாகவே புன்னகைத்து (பல்லிளித்து?) :D

வாடிக்கையாளர் மனம் அறிந்து சொல்லப்படும் பொய்கள்...

இருப்பதை மறைத்து இல்லையென்றும், இல்லாததை இருக்கிறதென்றும் சொல்வதன் மூலம் எல்லோரையும் திருப்திப்படுத்தும் கலை...

ஒரு விற்பனைப் பிரதிநிதியின் வியாபார சூட்சுமத்தை அழகாய் வெளிப்படுத்துகின்றன வரிகள்.:icon_b:

தேர்ந்த உவமை, ரசித்தேன். விடைகளால் ஓட்டை அடைக்கும் வித்தை கைவரப்பெற்றபின் சொல்லுங்கள். கற்றுக்கொள்கிறேன் நானும்.

அதற்காக விடை தேடும்பொருட்டு திடும்மெனப் புறப்பட்டுவிடாதீர்கள். யசோதரையையும் ராகுலனையும் நள்ளிரவில் விட்டுப்பிரிந்த சித்தார்த்தனின் மேல் இன்னமும் கோபம் தீரவில்லை எனக்கு.

அக்கா , எப்போதும் என் ஆக்கங்களில் எனக்கு திருப்தியாக அமைந்தால் உங்களிடம் இருந்தும் ,முரண்பாடாக அமைந்தால் தாமரை அண்ணாவிடம் இருந்தும் பதிலை எதிர்பார்ப்பேன் . அந்த விதத்தில் இந்த கவிதைக்கு உங்கள் வரவை ரொம்பவும் எதிர்பார்த்தேன். அது என்ன பிரமாதமாக போட்டு கொடுக்கிறீர்கள் .எனக்கு கூட தோன்றவில்லை.ஆனால் நீங்கள் சொன்னதும் பொருத்தமாவே இருக்கிறது . ஹா ஹா ஹா

வலிய வழிவதே எங்கள் வேலை ... மனதுக்கு ஒப்பினாலும் ஒப்பாவிட்டாலும் பார்க்கும் வேலைக்கான தருமம் ...போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் போகட்டும் கண்ணனுக்கே ..... அந்த மனநிலைதான் எங்கள் நிலை. காலங்கள் செல்ல செல்ல இந்த நிலைகூட கடினமாகவே இருக்கிறது.

மன ஓட்டத்தை கவிதையாய் பிரசவம் செய்யும் போது . பாதி மன அழுத்தம் குறைகிறது , பின்னூட்டங்களில் மீதம் உள்ள குறையும் களையப்படுகிறது . நன்றி அக்கா....:)

http://upload.wikimedia.org/wikipedia/en/0/04/Hermann_Hesse_-_Siddhartha_%28book_cover%29.jpg

நேரம் கிடைத்தால் இந்த நாவலை இணையத்தில் தேடிப்படியுங்கள் சித்தார்த்தன் மேல் உள்ள கோபம் குறையும். இதை மீறிய வாழ்க்கை தத்துவம் இல்லை. நான் சித்தார்த்தனை போல உண்மையை தேடும் நிலையிலோ தகுதியிலோ இல்லை. அருணகிரியையும் பட்டினத்தாரையும்போல ஆட்கொள்ளப்பட வேண்டியவன். விட்டு வச்சா உலகம் தாங்காது.....:lachen001:

Ravee
22-08-2011, 06:11 AM
வெளி உலக இரைச்சலிலும் குயிலின் குரல் கேட்பதே அரிது....நேரமும் காலமும் கனியும்போது...குயிலின் குரலே விடையாக அமையும்...பொறுத்திருப்போம்...

ஊமை குயிலாய் பிறந்துவிட்டால் ரொம்ப கஷ்டம்தானே அம்மா ... :rolleyes:

Ravee
22-08-2011, 06:13 AM
:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

என்ன நிவாஸ் குயில் கூவிடுச்சா இப்ப .... :lachen001: :lachen001: :lachen001: