PDA

View Full Version : ரௌத்திரம் பழகுseguwera
18-08-2011, 10:28 PM
சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் என்னை கிண்டிக்கு அழைத்து செல்லும் பேருந்துக்கு காத்திருந்தபோது, எதிர்பட்டான் அவன். ஒரு கை இழந்த பிச்சைக்காரன். சக பயணி ஒருவரிடம் கையை நீட்டியபோது ஒரு கை தானே இல்ல, இன்னொரு கையை வைத்து எதாவது உழைத்து சாப்பிடலாமே(ஏதோ வேலை என்பது கடைசி தெரு அண்ணாச்சி கடையில் கிடைப்பது போல) வுன்ன மாதிரி ஆலுங்கலை சிட்டியை விட்டே தொரத்தனும் அப்பத்தான் சிட்டி வுருப்படும் என்றார். . நான் என்னால் முடிந்ததை அவனுக்கு கொடுக்கும்போது அதே சக பயணி "இந்த மாதிரி பிட்சைக்கரனுக்கு காசு போட்டு பழக்கப்படுத்தாதீர்கள்" என்றார். பேருந்து வந்தது எல்லோரும் ஏறியபின்னும் பேருந்து புறப்பட 15 நிமிடம் ஆகும் என நடத்துனர் சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மறுபடியும் அந்த பிச்சைக்காரன் வண்டி மேல் ஏரி ஒரு பாட்டை பாட தொடங்கினான். "கடவுள் ஏன் கல் ஆனான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே" இந்த பாட்டை கேட்டவுடன் சக பயணியின் முகம் பார்க்க சகிக்கவில்லை. நண்பர்களே நம்முள் பலர் இப்படித்தான் பிச்சைக்காரனுக்கு காசு போடக்கூடாது என நம் கோபத்தை பிட்சைக்கரனிடம் தான் காட்டுவோம். நம் கண் முன்னே நம் தெருவுக்கு ரோடு போடும் ஒப்பந்தக்காரன் சரியாக போடமாட்டான். இது தெரிந்தும் நாம் அவனிடம் சண்டைபோடுவதில்லை. மிக சுலபமாக ஆமாம் இதில் இவன் எவ்வளவு சுருட்டுவானோ என சாதாரனமாய் சொல்லிவிட்டு விட்டுவிடுவர் நம்முடைய கோபம் எல்லாம் பிட்சைக்கரனோடு நின்று விடும். இவர்களால் ஒரு பஞ்சாயத்து தலைவரின் தவறை கூட தட்டி கேட்க்க முடியாது . பிச்சை எடுப்பது சரி என சொல்லவில்லை அதை எதிர்க்கும் கோபம் அரசியல்வாதியின் தவறையும் எதிர்த்தால் நம் சந்ததியினர் நாளை பிச்சை எடுக்காது என்பதே பாரதி சொன்னது போல் திண்ணை பேச்சு வீரர்களாய் எத்தனை காலம்தான் இருப்பது ரௌத்திரம் பழகு என்று பாரதி சொன்னானே அது பிச்சைக்காரனிடம் மட்டும்தானா?

Nivas.T
19-08-2011, 06:35 AM
இயலாதவரிடம்தானே நம் வீரத்தக் காட்ட முடியும், மற்றவர்களிடம் காட்டினால் என்ன பின்விளைவுகள் வரமோ என்ற பயமாய் இருக்கலாம்

aren
19-08-2011, 10:54 AM
நம் அரசியல்வாதிகளும் அரசாங்கத்தில் வேலை செய்பவர்களும் ஒரு விதத்தில் பிச்சைக்காரர்களே. காரணம் அவர்களும் லஞ்சம் பெயரில் நம்மிடம் கையேந்துகிறார்களே. ஆனால் ஒரே ஒரு வித்யாசம், நாம் அவர்களுக்கு பயப்பட்டு பணத்தை எடுத்துக் கொடுத்துவிடுகிறோம், ஆனால் இந்தப் பிச்சைக்காரர்களை ஏளனமாகப் பார்க்கிறோம்.

innamburan
19-08-2011, 07:23 PM
திரு.அரேன்,
பொத்தாம்படையாக, அரசியல் வாதிகள், அரசாங்கத்தில் வேலை செய்பவர்கள் என்று குறை கூறுவது பயந்தாளிக்குணம், ரெளத்திரம் அன்று. அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டது யாரு? லஞ்சம் கொடுப்பது யாரு? மூல உபத்திரவத்தின் மீது பாய்ந்து உடைப்பது தான் பாரதி கூறும் ரெளத்ரம். எனக்கு நாணயமான அரசியல் வாதிகளை ( சான்றாக, திரு.இரா.செழியன்) எண்ணற்ற அரசு ஊழியர்களை தெரியும்.

நாஞ்சில் த.க.ஜெய்
20-08-2011, 08:40 AM
மனமில்லாமல் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யாமலிருந்தால் போதும் என்பது அனுபவப்பட்டவர்கள் கூறும் பொன் மொழி..இதனை தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம் .

அமரன்
20-08-2011, 09:07 PM
பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

சிவக்கும் சிந்தனையுடன் உங்கள் பயணப் பதிவின் ஆரம்பம்.

பயணம் நீளட்டும்.

Ravee
21-08-2011, 12:23 AM
தவறில் சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை ... அந்நியனில் சொல்வது போல சிறிய தவறுகள் உரமாக பெரிய தவறுகள் வேர் ஊன்றி விருட்சம் ஆகிறது. பாத்திரம் அறிந்து பிச்சை இடுவதில் தப்பில்லை ... ஆனால் பிச்சைகாரர்களை வைத்து வயிறு வளர்க்கும் முதலாளிகள் உண்டு. இது தினமும் நான் காணும் உண்மை. இவைகளை பற்றி , இவற்ர்களை பற்றி என் சில கதைகளில் கோடிட்டு காட்டி இருக்கிறேன்.

உங்கள் உணர்வுக்கு நன்றி சே ...