PDA

View Full Version : வசந்தம் தேடும் விழிகள்...



kulirthazhal
14-08-2011, 10:12 AM
அந்த
தெருவெங்கும்
பட்டாம்பூசிகள்
விற்கப்படுகிறது...

அழகழகாய்
நிறங்கள்..,
புதுப்புதிதாய்
ஓவியங்கள்..,
மெல்லிய
படபடப்பின்
கீதங்கள்....

சூழலையே
சொர்கமாக்கியவை அவை..,

அவன் ஏனோ
கோபப்பட்டான்,
விற்றுக்கொண்டிருந்த
குட்டிப்பயல்களை
திட்டினான்...
அவைகளை
திறந்துவிட்டான்,,,
அவர்களை
விரட்டிவிட்டான்...

சாலையோர
வியாபார கூவல்கள்..,
சலசலப்பாய்
மக்கள் சத்தம்..,
வாகன
கலவை சத்தம்..,
காற்றில் ஓடும்
குப்பைக்கூட்டம்..,

பட்டாம்பூச்சிகள்
பத்தடிக்குமேல்
பறந்துவிட்டன..,

நான்
ஏதோ நினைவுகளில்
அவளின் வரவுக்காக
தெருக்கம்பத்தில்
சாய்ந்தபடி
காத்துக்கிடக்கிறேன்...,

- குளிர்தழல்

கீதம்
17-08-2011, 11:43 PM
ஏதோ நினைவுகளில் ஆழ்ந்திருந்த மனம் சுற்றுப்புறச் சூழலைத் துல்லியமாய்ப் படம் பிடிக்க இயலுமோ? கொஞ்சம் முரண்.

கடைசி பத்தி கவிதையோடு பொருந்தாமற்போனது போலொரு உணர்வு. கவியின் இருப்பு, சூழலுக்குப் பொருந்தாமற் போனதைப்போல்!

மறைபொருள் புரிந்தால் இன்னும் ரசிக்கமுடியும்.

Nivas.T
18-08-2011, 07:04 AM
சொல்லவந்த கருத்தை சரியாக புரிந்துகொள்ள இயலவில்லை என்றாலும்

கவிதை தொகுப்பில் ஒரு வித்தியாசம்காண முடிகிறது

பாராட்டுகள்

kulirthazhal
18-08-2011, 04:19 PM
கீதம் சொல்வது உண்மைதான்... நிழற்படம் போல சொன்னால் எதிர்பொருளும் நாமும் மட்டுமே களத்தில்... திரைக்கதை போல முயற்சித்தேன்,,, இன்னமும் தெளிவாய் சொல்லவேண்டுமென புரிந்துகொள்கிறேன்... மீண்டும் முயற்சிக்கிறேன் ஒரு மூன்றாம் பரிமாண நிகழ்வுடன் விரைவில்... இது சோதனை முயற்சி என கொள்ளலாம்... இருவருக்கும் நன்றி,,,,

நாஞ்சில் த.க.ஜெய்
18-08-2011, 05:55 PM
பொருந்தா களத்தில் ஒரு மாறுபட்ட கவிதை ..பாராட்டுகள் குளிர்தழல் அவர்களே உங்கள் மாறுபட்ட முயற்சிக்கு...தொடருங்கள் ...