PDA

View Full Version : அதிகாரம்



kulirthazhal
14-08-2011, 09:57 AM
அந்த நிழலுக்கு
சத்தம்போட
தெரியவில்லை...

அந்த மொழியில்
மறுத்துப்பேசும்
வார்த்தை இல்லை...

அந்த ஆசைகளுக்கு
தேவைகளைப்பற்றி
தெளிவில்லை...

அந்த விழிகளுக்கு
நேராய்ப்பார்த்து
பழக்கமில்லை...

அங்கு
ஏதோ அதிகாரம்
உலவிக்கொண்டிருக்கலாம்...

அவன்
இன்னமும்
அடிமையாய் இருக்கிறான்...

- குளிர்தழல்

கீதம்
17-08-2011, 11:35 PM
அதிகாரத்தின் உலவலால் அங்கே இல்லைகள் எடுத்துரைக்கப்பட்டதா?

இல்லைகள் பற்றி அறிந்ததால் அங்கு உலவ அதிகாரம் தலைப்பட்டதா?

கண்ணுக்குத் தெரியா அதிகாரத்துக்கு கைகட்டி சேவகம் புரியும் கையாலாகாத நிலையைக் கவியால் உணர்த்தியவிதம் நன்று.

Nivas.T
18-08-2011, 07:09 AM
கருத்துக்கள் அனைத்தும் பிம்பத்தினால் மட்டுமே பிரதிபலிக்க முடிக்கற அளவிற்கு அடிமைத்தனத்தில் அழ்ந்திருப்பவனுக்கு அழ்ந்த அனுதாபங்கள்

பாராட்டுகள் குளிர்தழல்