PDA

View Full Version : மன்னரின் கவிதை

சொ.ஞானசம்பந்தன்
11-08-2011, 10:19 AM
( பிரான்சில் 17 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூய் மன்னன் ஆண்டபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சிலவற்றை மதாம் த
செவிஞே என்ற பெண்மணி பதிந்திருக்கிறார் . கீழ் காணும் செய்தி 1- 12 -1664 இல் எழுதப்பட்டது . இனி மொழிபெயர்ப்பு )

கொஞ்ச காலமாய் அரசர் கவிதைகள் இயற்றுவதற்குக் கடுமையாய் முயல்கிறார் .

ஒரு நாள் சிறு கவியொன்றை எழுதினார் ; அது அவருக்கே பிடிக்கவில்லை .

மார்ஷல் கிராமோனிடம் அதைக் காட்டி , " மார்ஷல் , இதை வாசியுங்கள் ; இவ்வளவு மட்டமான கவிதை யொன்றை நீங்கள் கண்டதுண்டா என்று பாருங்கள் . அண்மைக் காலமாக நான் கவிகளை விரும்புகிறேன் என்பதால் பல தரப்பட்ட கவிகளைக் கொண்டுவருகிறார்கள் " என்றார் .

அதை வாசித்துப் பார்த்த மார்ஷல் , " நீங்கள் எல்லாவற்றையும் மிகச் செம்மையாய் மதிப்பிடுகிறீர்கள் ; உண்மையிலேயே இதைப் போன்ற மடத்தனமான , ஏளனத்துக்கு உரிய ஒரு கவிதையை நான் இதுவரை படித்ததே இல்லை " என்றார் .

மன்னர் சிரித்துக்கொண்டே , " இதை இயற்றியவர் ஒரு தற்பெருமை கொண்ட முட்டாள் என்பது மெய்யல்லவா ?" என்று கேட்டார் .

"அவரை வேறு விதமாய் அழைத்தல் பொருந்தாது "

" நன்று , இவ்வளவு வெளிப்படையாய் நீங்கள் அதைப் பற்றி என்னிடம் கூறியதற்கு மகிழ்ச்சி ; அதை எழுதியவன் நான் தான்

ஆ ! அவசரப்பட்டுவிட்டேன் . அதைத் திருப்பித் தாருங்கள் ; நான் சரியாய்ப் படிக்கவில்லை ""

" வேண்டாம் , மார்ஷல் , முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது "

மார்ஷலின் நிலையை எண்ணி அரசர் பெரிதாய்ச் சிரித்தார் . வயதான ஓர் அதிகாரிக்குச் செய்யக்கூடிய மிக மோசமான கொடுமை இதுவே என்பது அனைவருடைய கருத்துமாகும் .

சிந்திப்பதை எப்போதும் விரும்புகிற நானோ , வேந்தர் இதுபற்றி எண்ணீப் பார்க்க வேண்டும் என்றும் உண்மையைத் தெரிநது கொள்ளமுடியாத எவ்வளவு நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன் .

சிவா.ஜி
11-08-2011, 02:03 PM
கொடுங்கோலர் எழுதும் கவிதையில் வேறு என்ன சுவையிருக்க முடியும். மென்மையான உள்ளம் எழுதும் கவிதை இந்த மன்னனிடம் பட்ட பாடும், அதைப் படித்து விமர்சித்த மார்ஷல் பட்டபாடும் கொடுமைதான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2011, 08:30 AM
தன படைப்பின் உண்மை நிலையினை யாரோ எழுதியது போன்று அறிந்த விதம் அருமை ..அருமையான மொழிபெயர்ப்பு ..

சொ.ஞானசம்பந்தன்
15-08-2011, 01:58 AM
கொடுங்கோலர் எழுதும் கவிதையில் வேறு என்ன சுவையிருக்க முடியும். மென்மையான உள்ளம் எழுதும் கவிதை இந்த மன்னனிடம் பட்ட பாடும், அதைப் படித்து விமர்சித்த மார்ஷல் பட்டபாடும் கொடுமைதான்.

பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

அமரன்
15-08-2011, 09:06 AM
இந்த இம்சை அரசனின் தண்டனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது என்னவோ தெரியல.. இந்த மாதிரி ஆட்கள் எப்போதும் சிறப்பாகச் சிந்திக்கிறார்கள்.

சொ.ஞானசம்பந்தன்
16-08-2011, 01:48 AM
இந்த இம்சை அரசனின் தண்டனை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அது என்னவோ தெரியல.. இந்த மாதிரி ஆட்கள் எப்போதும் சிறப்பாகச் சிந்திக்கிறார்கள்.

பின்னூட்டத்துக்கு அகமார்ந்த நன்றி.

M.Jagadeesan
16-08-2011, 03:05 AM
நம் நாட்டில் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மிகப்பெரிய புலவர்களாக இருந்ததை எண்ணிப் பார்க்கும்பொழுது நமக்கு இறும்பூது ஏற்படுகின்றது. இறைவன் எழுதிய கவிதையானாலும் குற்றமிருந்தால் துணிவாக எடுத்துச் சொல்லும் நக்கீரர் போன்ற புலவர்களும் நம்நாட்டில் இருந்துள்ளனர்.

கலையரசி
16-08-2011, 03:30 AM
அதிகாரத்திலிருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஆமோதித்து ‘ஆமாம் சாமி’ போடுகிற பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை இன்னும் மாறவில்லை.
சுவையான பதிவு.

கலையரசி
16-08-2011, 03:34 AM
அதிகாரத்திலிருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஆமோதித்து ‘ஆமாம் சாமி’ போடுகிற பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லையென்பதையும், உலகமெங்கும் மனிதரின் அடிப்படை குணம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்கிறது இப்பதிவு.
சுவையான பெயர்ப்பு.

innamburan
16-08-2011, 05:35 AM
சுவையான சம்பவம். லூயி 14 காலத்தில் ஃப்ரான்ஸ் வளமான நாடு. யதேச்சிதிகாரம். பாமர மக்கள் வறுமையில். இந்த த்லை கனம் பிடித்த மன்னன் சொன்னது: " ஃப்ரான்ஸ்! அது நான் தான்!' இரு தலைமுறைகள் கழிந்தன. லூயி 16 மக்கள் எழுச்சியில் நடந்த புரட்சியின் போது கைது செய்யப்பட்டான். அவன் தலை சீவப்பட்டது.

கீதம்
17-08-2011, 11:06 PM
மார்ஷலின் நிலையை எண்ணி அரசர் பெரிதாய்ச் சிரித்தார். வயதான ஓர் அதிகாரிக்குச் செய்யக்கூடிய மிக மோசமான கொடுமை இதுவே என்பது அனைவருடைய கருத்துமாகும்.

மிகச்சரியான மதிப்பீடு. மார்ஷலின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

என்ற வள்ளுவரின் வாய்மொழி சொல்லும் மன்னரைச் சேர்ந்தொழுகும் கலையை அவர் கற்றிருக்கவில்லை போலும். பாவம்!

மொழிபெயர்த்துப் பகிர்ந்ததற்கு நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
18-08-2011, 01:54 AM

குறள் மேற்கோளுடன் கூடிய விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் உளமார்ந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
18-08-2011, 02:00 AM
நம் நாட்டில் சங்க காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மிகப்பெரிய புலவர்களாக இருந்ததை எண்ணிப் பார்க்கும்பொழுது நமக்கு இறும்பூது ஏற்படுகின்றது. இறைவன் எழுதிய கவிதையானாலும் குற்றமிருந்தால் துணிவாக எடுத்துச் சொல்லும் நக்கீரர் போன்ற புலவர்களும் நம்நாட்டில் இருந்துள்ளனர்.

உண்மை தான். மிகப் பழைய காலத்தில் தமிழ் மன்னர்களும் பெண்டிரும் கல்வி கற்றதோடு செய்யுள் இயற்றும் அளவுக்கு யாப்பையும் கற்றுப் பா எழுதினார்கள் என்பது தமிழினத்துக்குப் பெருமையே . உங்கள் பின்னூட்ட்த்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
18-08-2011, 02:04 AM
சுவையான சம்பவம். லூயி 14 காலத்தில் ஃப்ரான்ஸ் வளமான நாடு. யதேச்சிதிகாரம். பாமர மக்கள் வறுமையில். இந்த த்லை கனம் பிடித்த மன்னன் சொன்னது: " ஃப்ரான்ஸ்! அது நான் தான்!' இரு தலைமுறைகள் கழிந்தன. லூயி 16 மக்கள் எழுச்சியில் நடந்த புரட்சியின் போது கைது செய்யப்பட்டான். அவன் தலை சீவப்பட்டது.

வரலாற்றுச் செய்திகளை எடுத்து எழுதியதற்கும் பின்னூட்டத்துக்கும் மிகுந்த நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
18-08-2011, 02:12 AM
அதிகாரத்திலிருப்பவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே ஆமோதித்து ‘ஆமாம் சாமி’ போடுகிற பழக்கம் அன்றிலிருந்து இன்று வரை மாறவில்லையென்பதையும், உலகமெங்கும் மனிதரின் அடிப்படை குணம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது என்பதையும் மெய்ப்பிக்கிறது இப்பதிவு.
சுவையான பெயர்ப்பு.

சரியான கருத்து . தான் புகழப்படவேண்டும் என்ற ஒருவனின் ஆசைதான் புகழ்ந்து தன் காரியத்தை நிறைவேற்றிக்கொள்வோரை உருவாக்குகிறது . எவ்வளவு காலமானாலும் மனிதனின் அடிப்படைப் பண்புகள் மாறுவதில்லை என்பதை உலக வரலாறு காட்டுகிறது .பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி .

dhilipramki
09-11-2011, 12:58 PM
சுவையான, கருத்துள்ள கதை, கதை என்பதைவிட இது ஒரு பாடத்தை புகுத்தும் சம்பவம். ஆம், மார்ஷல் சொன்னது உண்மையின் வெளிப்பாடு என்பதால், அரசர் அவரிடம் கடுமையாக நடுந்து கொள்ளாமல், தான் அரசன் என்பதை ஒத்திக்கு விட்டு சராசரி மனிதானாக, சிரித்தது, அவரின் புரிந்துகொள்ளும் தன்மையை காட்டுகிறது. நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
10-11-2011, 09:04 AM
சுவையான, கருத்துள்ள கதை, கதை என்பதைவிட இது ஒரு பாடத்தை புகுத்தும் சம்பவம். ஆம், மார்ஷல் சொன்னது உண்மையின் வெளிப்பாடு என்பதால், அரசர் அவரிடம் கடுமையாக நடுந்து கொள்ளாமல், தான் அரசன் என்பதை ஒத்திக்கு விட்டு சராசரி மனிதானாக, சிரித்தது, அவரின் புரிந்துகொள்ளும் தன்மையை காட்டுகிறது. நன்றி.

சரியாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .