PDA

View Full Version : உன் குத்தமா....என் குத்தமா....!!!சிவா.ஜி
10-08-2011, 03:53 PM
இவன் செய்யப்போகும் காரியத்துக்கு அரசாங்க மருத்துவமனைதான் சரியாய் இருக்கும் என நினைத்ததிலேயே...கிரிமினலாய்த்தான் யோசித்திருக்கிறான் என்பது தெரிகிறது. இரவு இரண்டு மணி...படுக்கையில் படுத்துக்கொண்டிருந்த முரளி, மெள்ள தலையை உயர்த்தி அந்த வார்டில் இருக்கும் பதினாறு படுக்கைகளின் தற்கால சொந்தக்காரர்களை நோட்டம் விட்டான். இவன் அதிர்ஷ்டம்...இரவெல்லாம் இருமும் எந்த நோயாளியும் அங்கில்லை. பாதிப்பேர் மருந்தின் துணையுடனும், மீதிப்பேர் இயல்பாகவும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார்கள். தன் படுக்கைக்கு அருகிலேயே தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தன் நண்பனை லேசாய் சுரண்டினான். அந்த லேசான சுரண்டல் அவனை எழுப்ப உதவவில்லை. கால்களை கட்டிலுக்கு கீழே தொங்கப்போட்டு ஒரு எத்து எத்தினான். படக்கென்று எழுந்து அமர்ந்த அந்த நண்பன், லபோ திபோ என அலறி அனைவரையும் எழுப்புமுன் அவனது வாயை அழுத்திப் பொத்தினான்.

கிசுகிசுப்பானக் குரலில்,

“டே மனோ...வந்து பெட்டுல படுத்து போர்வையை நல்லா போத்திக்க. மூணுமணிக்கு நர்ஸ் வருவாங்க. நான் பெட்ல இருக்கிறமாதிரி தெரியனும். நான் நாலு மணிக்குள்ள வந்துடறேன்”

என்று மனோகரனிடம் சொன்னதும், அப்படியே அவனும் எழுந்துக் கட்டிலில் படுத்துக்கொண்டு போர்த்திக்கொண்டான். முரளி பக்கத்திலிருந்த ஜன்னலை மிக மெதுவாகத் திறந்தான். பராமரிப்பில்லாத ஜன்னல் சத்தம் போடுமே என பயந்தான். ஆனால் அதிர்ஷ்டம் இப்போதும் அவன் பக்கம்தான். ஜன்னல் அவனுக்கு விசுவாசமாய் இருந்தது. அந்தக் கம்பிகள் இல்லாத ஜன்னலின் திறப்புக்குள் உடலை நுழைத்து வெளியே இறங்கினான். முதல் மாடி. கீழே இறங்க வழியையும் இரண்டு நாட்களுக்கு முன்பே பார்த்து வைத்திருந்தான். அந்த வழியாய் இறங்கியதும், குப்பென்று ஒரு கவிச்சி நாற்றம் அடித்தது. கழற்றி எறிந்த பேண்டேஜுகள், ரத்தம் துடைத்தப் பஞ்சுத்துண்டுகள் போன்ற கழிவுகளின் உற்பத்திதான் அந்த நாற்றம். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விறு விறுவென நடக்கத்தொடங்கியவன், மருத்துவமனையின் பின்பக்க சுவரைத் தாண்டி சாலையில் குதித்தான்.

ஒரு ஈ...காக்காவும் தென்படவில்லை. மனதுக்குள் நிம்மதியடைந்து தன் வீட்டை நோக்கி வேகமாய் நடந்தான். வீட்டுக்குப் பின்னால் வந்தவன், இங்கேயும் சுவர்தாண்டி உள்ளே வந்தான். அப்பாக் கட்டிய பழைய வீடு. அந்தக் காலத்து முறைப்படி சமையலைறையும், கொல்லைப்புறம் வருவதற்கு ஒரு கதவும் இருந்தது. இவன் வீட்டுக்குள் போவதற்கும் ஏற்கனவே அவன் செய்து வைத்த சில காரியங்களால், அதேக் கதவுதான் உதவியது. கைகளில் இட்டிருந்த உறையின் உதவியினால்..பயமின்றி கதவைத் திறந்துகொண்டு...மெல்ல நடந்து தன் படுக்கையறைக்கதவுக்கு முன் வந்து நின்றான். ஒரு கதவு திறந்தேயிருந்தது...அங்கிருந்து பார்த்தவனின் கண்களுக்கு மிக மிக லேசான வெளிச்சத்தில் படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த மலர்கொடி தெரிந்தாள்.

அவளைப் பார்த்ததும் சுரு சுருவென்று ஆத்திரம் தலைக்கேறத் தொடங்கியது. கொஞ்சமும் அழகே இல்லாத கிராமத்துப் பெண். மாமாவின் ஒரே பெண். சொத்து நிறைய இருந்தது, அதோடு சொந்தமும் இருந்ததால்...இவனுடைய அப்பாவின் கடைசி நிமிட வேண்டுகோளால்(சொத்து கிடைக்காது என்ற மிரட்டலாலும்தான்) மலர்க்கொடியை வேண்டா வெறுப்பாய்க் கல்யாணம் செய்துகொண்டான். ஆனால்....வாழ்க்கையை மட்டும் வேறு ஒருவளிடம் நடத்தினான். அப்பாவும் போய் சேர்ந்துவிட்டதில், கேட்க யாருமில்லையென்ற துணிச்சலில்...ஆட்டம் போட்டான். அம்மாவும், மனைவியும் அவனை எதிர்த்துக் கேள்விக் கேட்டு அடியும் உதையும் வாங்கியதிலிருந்து அமைதியாகிப்போனார்கள். ஆனால்.....மாமா அப்படியில்லை..அவர் அவனுக்கும் மேல் ஆங்கார ஆட்டம் ஆடிவிட்டார்.

“எந்த சிறுக்கி அவ...அவளை வெட்டிப் போட்டுட்டு செயிலுக்கு போறேன். எம்மவளுக்கு துரோகம் பண்ணிட்டு அவகூட சாலியா இருந்துடுவியா நீ....மருமகன்னுக் கூட பாக்க மாட்டேன்....காலை ஒடச்சிக் காலம் பூரா மொண்டிக்கஞ்சி ஊத்துனாலும் ஊத்துவேனே தவிர....அவளோட இனிமே ஒத்த நாளு உன்னைய வால வுடமாட்டேன்....”

கிராமத்து மனுஷன்...கண்டிப்பா சொன்னத செஞ்சாலும் செஞ்சிடுவான்.. என்று நினைத்த முரளி,.அப்போதைக்கு அடக்கி வாசித்தான். மனைவி மீது புதுப்பாசம் காட்டினான், மாமா கிராமத்துக்குக் கிளம்பிப்போகும் வழியில் விபத்துக்குள்ளாகி காலை இழந்த உடன்....மீண்டும் ஆட ஆரம்பித்துவிட்டான். ஆனால் முன்பைப் போல வாய்மூடி மௌனமாய் இல்லாமல், தினமும் அவனைக் கேள்விக் கேட்டு சண்டைபோட ஆரம்பித்தாள் மலர்க்கொடி. அந்த தினசரி தொந்தரவை நிரந்தரமாய் தொலைத்துவிடத்தான் நேற்று ஒரு திட்டம் தீட்டினான்.

காலை எழுந்ததிலிருந்தே...எதையும் சாப்பிடாமல், அவளுடன் ஒன்றும் பேசாமலிருந்தவன்...பத்துமணி வாக்கில் அந்த நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்தான்.

“என்னங்க...காலையிலிருந்தே ஒன்னுமே சாப்புடல....இட்லி சுட்டு வெச்சிருக்கேன்...வந்து சாப்புடுங்க”

தன் முன்னால் வந்து நின்றுக் கூப்பிட்ட மலர்க்கொடியை முறைத்துப்பார்த்தவன், வேகமாய் எழுந்து போய் தன் அறையிலிருந்த அந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு வந்தான்.

“எதுவுமே சாப்பிடலன்னு சொன்னேயில்ல....இதோ சாப்பிடறேண்டி...இது என்னத் தெரியுமா பாலிடால்.....கடுமையான வெஷம். இதை சாப்பிடறேன் ஒரேயடியா இந்த நரகத்துலருந்து எனக்கு விடுதலைக் கிடைக்கும். நீ சந்தோஷமா இரு...”

என சொல்லிக்கொண்டே மலர்க்கொடி கிட்டே நெருங்குவதற்குள் பாட்டிலை வாயில் முழுவதுமாய்க் கவிழ்த்துக்கொண்டான். (முன் கூட்டியே அதில் வேண்டுமளவுக்குத் தண்ணீர் கலந்துவிட்டதால்...உயிருக்கு ஆபத்தில்லை என அவனுக்குத் தெரியும்) பாலிடாலின் காட்ட நெடியை உணர்ந்ததும் மலர்க்கொடி அலறிவிட்டாள்

“அய்யய்யோ நிஜமாவேக் குடிச்சிட்டீங்களா.....என்ன மன்னிச்சுடுங்க.....தயவுசெஞ்சு ஒடனேக் கெளம்புங்க ஆசுபத்திரிக்குப் போகலாம்”

“ஏன் பொழச்சு வந்து மறுபடியும் உன் டார்ச்சரைத் தாங்கிக்கிட்டு இருக்கனுமா...”

“அய்யோ...அய்யோ நான் என்ன பண்ணுவேன்....உங்களைத் தூக்கிக்கிட்டுப் போக எனக்குத் தெம்பில்லங்க...தயவுசெஞ்சு வாங்க....அத்த வேற இந்தநேரம் பாத்து வீட்ல இல்லியே கடவுளே....”

“என்னங்க என்ன ஆச்சு....அய்யய்யோ....டே முரளி என்னடா இது ஏதோ கெட்ட நாத்தம் வருது...அடப்பாவி என்னடா...பண்ணித் தொலச்ச...”

சரியாய் அந்த நேரத்துக்கு வருமாறு திட்டம் போட்டுக்கொடுத்த முரளியைப் பார்த்து அப்படிக் கேட்டான் மனோகரன்.

“பாருங்கண்ணா....வெஷத்தக் குடிச்சிட்டாரு...கடவுளே அனுப்பிச்சமாதிரி நீங்க சரியான நேரத்துக்கு வந்திருக்கீங்க....ஒடனே ஆசுபத்திரிக்குக் கெளம்பலான்னா...கடவுளே இவருக்கு ஒண்ணும் ஆகிடக்கூடாதே...ஆண்டவா....”

புலம்பிக்கொண்டே அவனைத் தூக்க வந்தவளை ஒதுக்கிவிட்டு....வர முடியாது என பொய்யாய் முரண்டு பிடித்தான். வலுக்கட்டாயமாக இழுத்துப்போவதைப்போல பாசாங்கு செய்து ஆட்டோவில் அழைத்துப்போகும் வழியில்,

“சிஸ்டர்...ஹாஸ்பிட்டல்ல வந்து இவன் தான் மருந்து குடிச்சிட்டான்னு சொல்லிடாதீங்க...அப்புறம் தற்கொலை முயற்சின்னு போலீஸ் கேஸ் அது இதுன்னு அலைய வேண்டியதாப் போகும். அதோட இவன் ஜெயிலுக்கும் போக வேண்டியதாயிடும். ஒடம்பு சரியில்ல...டாக்டர் குடுத்த மருந்துன்னு நினைச்சு மயக்கத்துல இதைக் குடிச்சிட்டான்னு சொல்லுங்க...”

எல்லாம் திட்டமிட்டபடி நடப்பதை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே வந்தான் முரளி.

மருத்துவமனையில்...

”பயப்படறதுக்கு ஒண்ணுமில்லம்மா....விஷம் அவ்ளோ ஸ்ட்ராங்கா இல்லாததுனால...ஆபத்தில்ல. இருந்தாலும் இன்னைக்கு ஒருநாள் இங்கேயே இருக்கட்டும். கொஞ்சம் ட்ரிப் ஏத்தி, மாத்திரை குடிச்சா சரியாப்போயிடும்.”

டாக்டர் சொன்னதும் நிம்மதியடைந்த மலர்க்கொடி, அதற்குள் தகவல் தெரிந்து அலறியடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்த மாமியாரை அவனுக்கு அருகே இருக்கச் சொல்லிவிட்டு, முரளிக்காக பழம் வாங்கப்போனாள். மாலைவரை அவனுடன் இருந்தவர்களைப் பார்த்து,

“அம்மா...நீங்களும் சிஸ்டரும் இப்ப வீட்டுக்குப் போங்க...நான் இங்க இவன் கூட இருக்கேன். பயப்படாமப் போங்க. அதான் டாக்டர் ஆபத்து ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாரில்ல..”

என மனோகரன் சொன்னதும் கிளம்பினார்கள். மலர்க்கொடியின் முகத்தில் தீவிரமான சிந்தனையின் இறுக்கம் தெரிந்தது.

கதவுக்கு வெளியிலிருந்து தூங்கிக்கொண்டிருந்த மலர்க்கொடியையே பார்த்துக்கொண்டிருந்தவன், திடீரென உள்ளே நுழைந்து, தலையணையை எடுத்து அவளது முகத்தில் அழுத்தி....அழுத்தி.....மலர்க்கொடி அடங்கிப் போனாள். அவள் அடங்கியதும், வெறுப்போடு முகத்தைத் திருப்பிக்கொண்டு, வேகமாய் வெளியேறினான் முரளி. திரும்ப அதே சுவர் தாண்டி, அதே சாலையில் நடந்து...இப்போதும் யாருமில்லை. தன் வார்டுக்கு வந்ததும் ஜன்னல் வழியே நுழைவதற்கு முன் மீண்டும் இருட்டில் கண்களால் துழாவி...அதே அமைதியான உறக்கச் சூழலை உறுதிப்படுத்திக்கொண்டு, மனோகரனை எழுப்பிவிட்டு படுத்துக்கொண்டான்.

காலையில் செக்கப்புக்கு வந்த டாக்டர்..பரிசோதனை முடிந்ததும் அருகிலிருந்த நர்ஸைக் கூப்பிட்டு,

“இவர் இப்ப நார்மலாயிட்டாரு. டிஸ்சார்ஜ் பண்ணிடுங்க....மிஸ்டர் முரளி உங்க நல்லநேரம்...பாய்சன் அவ்வளவா ஸ்ட்ராங்கா இல்ல..ஒடம்பப் பாத்துக்குங்க. கொஞ்சநாளைக்குக் காரம் அதிகமா சாப்பிட வேணாம்...இன்ஃபேக்ட்...காரமே சேத்துக்காம இருந்தா இன்னும் பெட்டர்.”

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு...என்ன இன்னும் எந்தத் தகவலும் வரலையே என வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“கையக் காமிங்க...ட்ரிப் ஏத்த போட்டிருந்த ஊசிய எடுக்கனும்....என்னங்க...எங்க உங்கக் கையிலருந்த ஊசி....?”

நர்ஸின் கேள்விக்குப் பதில் வாசல் பக்கமிருந்து கேட்டது..

“இதத்தான தேடுறீங்க...”

சொல்லிக்கொண்டே லேசான புன்முறுவலுடன் வந்துகொண்டிருந்த இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தான் முரளி....’இது...இது எப்படி இவர் கையில....

“இது எப்படி சார் உங்க கையில வந்தது..”

ஆச்சர்யமாய்க் கேட்ட நர்ஸைப் பார்த்து...

“உங்க பேஷண்ட்டையேக் கேளுங்க. இங்க நீங்கப் போட்ட ஊசி அவரு வீட்ல எப்படிக் கிடைச்சதுன்னு...?

நர்ஸ் ஒன்றும் புரியாமல் விழிக்க...முரளிக்கு நடுக்கம் தொடங்கியது..’இது எப்படி நம்ம வீட்ல...ச்சே...தலகாணியப் பிடிச்சு அமுத்தும் போது வுழுந்திருக்குமோ...அந்த இருட்டுல ஒரு எழவும் தெரியல...சரி சமாளிப்போம்’

முரளியின் கனநேர அதிர்ச்சியை கவனித்த இன்ஸ்பெக்டர்.....

“மிஸ்டர்...உங்க வீட்ல ஒரு கொலை நடந்திருக்கு....அதைப்பத்தி விசாரிக்கனும். உங்க உடம்பு இப்பத் தேவலான்னு டாக்டர் சொல்லிட்டாங்க....கொஞ்சம் என் கூட வறீங்களா?”

அவனது சம்மதத்திற்குக் காத்திருக்காமல், உடன் வந்த கான்ஸ்டபிளின் காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு, “ம்...நடங்க...” என்றார்.

கொலை, விசாரிப்பு என்றதும் அங்கிருந்து நைஸாய் நழுவிய மனோகரனை எதுவும் செய்யாமல் போக விட்டார். முரளியுடன் வெளியேறிய இன்ஸ்பெக்டர் தன் ஜீப்பில் அவனை அமர்த்திக்கொண்டு காவல்நிலையத்துக்கு வண்டியை செலுத்தினார்.

காவல் நிலையத்தில்,

“சார்...என் வீட்ல ஏதோ கொலை நடந்திருக்குன்னு சொல்லிட்டு, ஏன் ஸ்டேஷனுக்குக் கூட்டிக்கிட்டு வந்தீங்க....என்ன நடந்தது...எங்கம்மா, பொண்டாட்டி.....இவங்களுக்கு ஏதாவது ஆகியிருக்குமோன்னு பதட்டமா இருக்கு சார்...”

“பொறுமையா இருங்க மிஸ்டர்...ஆங்...உங்க பேரு முரளிதான....உங்க வீட்ல சொன்னாங்க....சரி...அந்த நர்ஸம்மா கேட்டக் கேள்விக்கு இப்ப பதில் சொல்லுங்க....இந்த ஊசி உங்க வீட்ல எப்படி வந்துச்சி...?”

“சார் நீங்க என்ன சொல்றீங்க? எனக்கு எப்படி சார் தெரியும்...அது சரி...இது என் கையில இருந்ததுதான்னு எப்படி சொல்றீங்க...?

“அட பரவால்லையே...பாயிண்ட்டாதான் பேசறீங்க.....அத அப்புறம் பேசிக்கலாம்.....உங்க வீட்ல ஒரு கொலை நடந்திருக்கே...அதப்பத்தி ஏதாவது தெரியுமா....?”

“சார் நீங்க என்ன சொல்றீங்க...என் வீட்லக் கொலை நட்ந்திருக்கறது நீங்க சொல்லித்தான் தெரியும்...என் மனைவிக்கோ, அம்மாவுக்கோ ஏதாவது ஆகிடிச்சோன்னு நானே அதிர்ச்சியில இருக்கேன்.....நீங்கதான் சொல்லனும்......என்ன சார் நடந்துச்சி...”

கைதேர்ந்த நடிகனைப்போல பதட்டப்பட்டவனைப் பார்த்து லேசாய் சிரித்துக்கொண்டே....

“கவலப்படாதீங்க....உங்க மனைவிக்கோ, உங்க அம்மாவுக்கோ ஒண்ணும் ஆகல....”

சொல்லிவிட்டு அவன் முக மாறுதலையே உண்ணிப்பாய்க் கவனித்தார். முரளிக்கு அதிர்ச்சியாய் இருந்தது. மலர்க்கொடி சாகலைன்னா...அப்ப நான் கொன்னது யாரை....அந்த உள் குழப்பம் அவன் முகத்திலும் பிரதிபலிப்பதை அர்த்தத்துடன் பார்த்துக்கொண்டே,

“என்ன மிஸ்டர்...சந்தோஷமான விஷயத்தை சொல்றேன்...நீங்க என்னடான்னா அதிர்ச்சியடையறீங்க...நீங்க எதிர்பார்த்தது நடக்கலையா...?”

“என்ன...என்ன...சார் சொல்றீங்க....ரொம்ப சந்தோஷம்தான் சார். ஆனா எங்க வீட்லக் கொலைன்னு சொன்ன அதிர்ச்சியில இருந்ததால...அப்படி ரியாக்ட் பண்ணிட்டேன்....”

“ஓ...அப்படியா.....சரி...அப்ப நீங்க கொலை பண்ணினது யார்ன்னு தெரிஞ்சிக்க வேணாமா.....?”

“சார்.....என்ன சார் சொல்றீங்க...நானா...நானா கொலை பண்ணேன்.....நான் எப்படி சார்...நான் நேத்தியிலருந்து இந்த பெட்லத்தான் இருக்கேன்...வேணுன்னா....அந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கிறவங்களையும், நர்ஸம்மாவையும் கேட்டுப் பாருங்க சார்...”

“அதான உன்னோட திட்டம்.....ஏண்டா....போலீஸை என்ன மடையங்கன்னு நினைச்சியா....தப்பு செஞ்சவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்...செய்யாதவன் எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாத கேனையனுங்களா நாங்க....ராஸ்கல்...மரியாதையா ஒத்துக்க.....ஏன்னா....இனி சந்தோஷமா இருக்க உன் ரஞ்சனியும் இல்ல...அவளத்தான் போட்டுத்தள்ளியிருக்க...”

உட்சப்பட்ச அதிர்ச்சியில் பேச இயலாமல் சிலையாக நின்றான்...

மாலையில் மாமியாருடன், தீவிர சிந்தனையுடன் வீட்டுக்கு வந்த மலர்க்கொடி, ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாய்,

“அத்த...நான் சொல்றதக் கேட்டு கோபப்படாதீங்க. எனக்கு இதைவிட்டா வேற வழியில்ல. அந்த ரஞ்சனியை இங்கேயேக் கூட்டிக்கிட்டு வந்துடலான்னு முடிவு பண்ணியிருக்கேன்...”

“என்னது....யோசிச்சிதான் பேசறயா...உனக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு...உன் வாழ்க்கையையே கெடுத்தவ அவ...அவளக் கூட்டிக்கிட்டு வந்து வீட்ல வெச்சுக்கிறயா...அந்தப் பய இந்த மாதிரி ட்ராமா பண்ணான்னு இப்படியெல்லாம் முட்டாள்தனமான முடிவ எடுக்காத....வரட்டும் அவன்....இனி மேலயும் நான் சும்மா இருக்கப்போறதில்ல....”

“அத்த....நான் நல்லா யோசிச்சுத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன். என்னை...என் மூஞ்சிய உங்கப் புள்ளைக்கு இந்த ஜென்மத்துல புடிக்கப்போறதில்ல....அவர் என் கூட நல்லத்தனமா வாழுவாருங்கற நம்பிக்கையும் எனக்கில்ல...நானும் பொறுக்க முடியாம...தினமும் சண்ட போட்டு...மறுபடியும் அவரு வெசத்த சாப்ட்டுட்டாருன்னா....இப்ப மாதிரி இன்னொருவாட்டியும் பொழச்சுக்குவாருன்னு என்னா நிச்சயம்...அவராவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டும். நானே அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுடறேன். இந்த முடிவுலருந்து நான் மாறப்போறதில்ல....”

உறுதியாய் சொன்னவளை ஏதோ கேட்க வாயைத்திறக்குமுன்....மலர்க்கொடி விறுவிறுவென வெளியேக் கிளம்பி...சிறிது நேரம் கழித்து ரஞ்சனியுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். அருவெறுப்புடன் அவளைப் பார்த்த மலர்க்கொடியின் மாமியார், முகத்தைத் திருப்பிக்கொண்டு உள்ளே போனார். மலர்க்கொடி, ரஞ்சனியை அழைத்துக்கொண்டுபோய் தங்கள் படுக்கையறையில் படுக்க வைத்துவிட்டு, தன் மாமியாருடன் அவரது அறைக்குள் வந்து படுத்து உறங்கிவிட்டாள்.

“அப்பதான் ஒன்னோட லேட் நைட் எண்ட்ரி...உன் மனைவின்னு நெனைச்சுக்கிட்டு ஒன்னோட ஆளையே தலகானிய வெச்சு அழுத்திக் கொண்ணுருக்க....இருட்டுல முகம் தெரியாததும் ஒரு காரணம். .பாத்தியா....ஒரு நல்ல மனசுக்காரியோட நல்ல செயல் அவளைக் காப்பாத்தியுமிருக்கு....உனக்கு தண்டனையும் வாங்கிக் குடுத்திருக்கு.....இதுல பாவம் அந்த ரஞ்சனிதான்.....அநியாயமா செத்துப்போனா....ஏண்டா இப்படி அழகு அழகுன்னு அழிஞ்சுப்போறது மேல ஆசை வெச்சு அலையறீங்க...இந்த மாதிரி பொண்டாட்டிக் கெடைக்க நீ குடுத்து வெச்சிருக்கனும்....ஆனா...இப்ப அந்த கொடுப்பினையும் உனக்கில்ல......இங்க வர்றதுக்கு முன்னால டாக்டரப் பாத்துட்டுதான் வரேன். டைலூட்டட் பாய்சன் அப்படீன்னு அவரு சொன்னப்பவே இது ட்ராமாத்தான்னு தெரிஞ்சிடுச்சி...அதுவுமில்லாம.....இப்ப நைஸா நழுவுனானே உன் நண்பன்....அந்த நழுவலும் காட்டிக் குடுத்திடிச்சு...அவனையும் அப்புறமா அள்ளிடுவோம்....”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே...அந்தக் கான்ஸ்டபிள் திரும்பி வந்தார். இன்ஸ்பெக்டர் அவரைத் தனியறைக்குக் கூட்டிக்கொண்டுபோய் சற்று நேரம் பேசியதும், திரும்பி வந்து,

”கவர்மெண்ட் ஆஸ்பிட்டல்தான அங்க பெருசா எந்தப் பாதுகாப்புமிருக்காதுன்னு நினைச்சே....அதே ஆஸ்பிட்டல்ல....சுத்தமும் இருக்காதுன்னு தெரியாதா. நீ எறங்குன ஜன்னலுக்கு வெளிய இருக்கிற சன்ஷேடுல ஒன்னோட கால்தடம் அப்பட்டமா பதிஞ்சிருக்கு. அதேக் கால்தடம்....உங்க வீட்டுக் கொல்லப்பக்கமும் இருக்கு. மாட்னடா நீ...”

நாஞ்சில் த.க.ஜெய்
10-08-2011, 07:40 PM
குற்றவாளிகள் குற்றம் செய்யும் போது தன்னை அறியாமல் விட்டு செல்லும் தடயம் அவர்களுக்கே வினையாக அமையும் என்பதை அருமையான கதை திருப்பங்களுடன் இனிதாக வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல் முடித்த விதம் அருமை ...இதில் எனக்கு தோன்றும் ஒரு நெருடல் கையில் குத்தபட்டிருந்த ஊசி கொலை செய்ய முயல்கையில்
தவறும் போது அந்த வலி உணர்வு கூடவா அவனுக்கு தெரியாமலிருக்கும் என்பதுதான் ..வாழ்த்துக்கள் சிவாஜி அவர்களே ...

கீதம்
10-08-2011, 11:12 PM
ரொம்ப நாளுக்கப்புறம் சிவாஜி அண்ணாவோட க்ரைம் கதை. படிக்கவே விறுவிறுப்பா இருக்கு. கடைசிவரையிலும் அது குறையல. என்னதான் சாமர்த்தியமா திட்டமெல்லாம் போட்டாலும் குற்றவாளிகள் சில தடயங்களைத் தங்களையறியாமலேயே விட்டுப் போய்விடுவார்கள் என்பது எத்தனை உண்மை! கதை நல்லா இருந்தது. பாராட்டுகள் அண்ணா. தொடர்ந்து எழுத அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தாமரை
11-08-2011, 02:17 AM
ரொம்ப நாளுக்கப்புறம் சிவாஜி அண்ணாவோட க்ரைம் கதை. படிக்கவே விறுவிறுப்பா இருக்கு. கடைசிவரையிலும் அது குறையல. என்னதான் சாமர்த்தியமா திட்டமெல்லாம் போட்டாலும் குற்றவாளிகள் சில தடயங்களைத் தங்களையறியாமலேயே விட்டுப் போய்விடுவார்கள் என்பது எத்தனை உண்மை! கதை நல்லா இருந்தது. பாராட்டுகள் அண்ணா. தொடர்ந்து எழுத அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

சிவாஜி அண்ணா நல்லவருங்கக்கா.. அவரு வல்லவருங்கக்கா.. அவரு க்ரைம் எல்லாம் பண்ணமாட்டாருங்கக்கா..
.இதில் எனக்கு தோன்றும் ஒரு நெருடல் கையில் குத்தபட்டிருந்த ஊசி கொலை செய்ய முயல்கையில் தவறும் போது அந்த வலி உணர்வு கூடவா அவனுக்கு தெரியாமலிருக்கும் என்பதுதான்

வலி தெரியறவனா இருந்தா கொலை செய்யத் துணிவானுங்களா? ஆக்சுவலா இந்த மாதிரி சமயங்களில் அட்ரினல் ரொம்ப சுரக்கும். இதனால் வலி தெரியாது.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=432315&postcount=309


சிவா.ஜி அண்ணா,

சட்டு புட்டுன்னு அந்தத் தொடர்கதையை சூட்டோடு சூடா ஆரம்பிச்சிருங்க.. :icon_b::icon_ush:

மதி
11-08-2011, 06:17 AM
சிவாண்ணாட்டேர்ந்து கதை... ரொம்ப நாள் எழுதறீங்க.. ஆனாலும் எழுத்து நடையும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையல..

நல்லாருக்கு.

Nivas.T
11-08-2011, 07:49 AM
சிவா அண்ணாவோட கதை என்றாலே ஒருரே விறுவிறுப்பு. சுவாரஸியத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்தக்கதையும் அதுபோல்தான். மிக பிரமாதம் அண்ணா.

தொடந்து எழுதுங்கள்

கீதம்
11-08-2011, 08:19 AM
சிவாண்ணாட்டேர்ந்து கதை... ரொம்ப நாள் எழுதறீங்க.. ஆனாலும் எழுத்து நடையும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையல..

நல்லாருக்கு.

மதி, இது உங்களுக்கான வசனமாச்சே....:)

கீதம்
11-08-2011, 08:27 AM
சிவாஜி அண்ணா நல்லவருங்கக்கா.. அவரு வல்லவருங்கக்கா.. அவரு க்ரைம் எல்லாம் பண்ணமாட்டாருங்கக்கா..

எல்லாம் சரி, எதுக்கு இத்தனை அக்கக்கா? கீலகத்துக்கு அப்புறம் தானே சாதாரணம்?


சிவா.ஜி அண்ணா,

சட்டு புட்டுன்னு அந்தத் தொடர்கதையை சூட்டோடு சூடா ஆரம்பிச்சிருங்க.. :icon_b::icon_ush:

ரொம்ப நாளாவே சொல்லிட்டிருக்கீங்க, ட்ரெய்லரே மர்மமா இருக்கே... கதை இன்னும் எவ்வளவு மர்மமா இருக்கும்? :confused:

செல்வா
11-08-2011, 08:28 AM
ஒரு வழியா சிவா அண்ணா தவம் கலைஞ்சு கதை சொல்ல வந்தாச்சு.
நல்ல விறுவிறுப்பான மர்மக் கதையோட...

கலக்கல் அண்ணா... மீண்டும் உங்கள் கதையருவிகளை மன்றில் பார்க்க ஆவல்
தொடருங்கள்.

தாமரை
11-08-2011, 08:30 AM
கீலகத்துக்கு அப்புறம் தானே சாதாரணம்?எந்த சுத்துன்னு யாருக்குத் தெரியும்? :confused:

கீதம்
11-08-2011, 08:36 AM
எந்த சுத்துன்னு யாருக்குத் தெரியும்? :confused:

இந்த சந்தேகம் உங்களுக்கு வரும்னு நிச்சயமா எதிர்பார்த்தேன்.:icon_b:

மதி
11-08-2011, 08:43 AM
மதி, இது உங்களுக்கான வசனமாச்சே....:)

நடுவுல ஒரு கழிச்சு மிஸ்ஸாயிட்டு :icon_b:

தாமரை
11-08-2011, 09:55 AM
நடுவுல ஒரு கழிச்சு மிஸ்ஸாயிட்டு :icon_b:

உன் குத்தமா....என் குத்தமா....!!!

Nivas.T
11-08-2011, 12:58 PM
உன் குத்தமா....என் குத்தமா....!!!

தட்டச்சுப் பலகை :D

சிவா.ஜி
11-08-2011, 02:47 PM
குற்றவாளிகள் குற்றம் செய்யும் போது தன்னை அறியாமல் விட்டு செல்லும் தடயம் அவர்களுக்கே வினையாக அமையும் என்பதை அருமையான கதை திருப்பங்களுடன் இனிதாக வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது போல் முடித்த விதம் அருமை ...இதில் எனக்கு தோன்றும் ஒரு நெருடல் கையில் குத்தபட்டிருந்த ஊசி கொலை செய்ய முயல்கையில்
தவறும் போது அந்த வலி உணர்வு கூடவா அவனுக்கு தெரியாமலிருக்கும் என்பதுதான் ..வாழ்த்துக்கள் சிவாஜி அவர்களே ...
முதல் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி ஜெய். உங்க கேள்விக்கு தாமரையின் பதில் பொருத்தமாயிருக்குமென்று நம்புகிறேன்.

சிவா.ஜி
11-08-2011, 02:50 PM
ஆமாம்மா....எவ்ளோ பெரிய குற்றவாளியானாலும் இதேதான் கதை. அதை வெச்சுத்தான் துப்பறிவாளர்கள் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ரொம்ப நன்றி தங்கையே. அப்புறம் அந்த தொடர்கதை மர்மமெல்லாம் இல்லை....சும்மா ஒரு பில்டப்தான். இப்பதான் கொஞ்சநாளா அறையில் இணையம் நல்ல வேகத்தில் வருகிறது. அதனால்தான் பழையபடி பங்கெடுக்கும் ஆவல் வந்தது.

முன்பெல்லாம் ஒரு பதிவு போடவே திணற வேண்டியிருந்தது. அதனாலேயே அதிகம் வர முடியவில்லை. இனி தொடருமென நினைக்கிறேன்.

பாராட்டுக்கு மிக்க நன்றிம்மா.

சிவா.ஜி
11-08-2011, 02:55 PM
வலி தெரியறவனா இருந்தா கொலை செய்யத் துணிவானுங்களா? ஆக்சுவலா இந்த மாதிரி சமயங்களில் அட்ரினல் ரொம்ப சுரக்கும். இதனால் வலி தெரியாது.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=432315&postcount=309


சிவா.ஜி அண்ணா,

சட்டு புட்டுன்னு அந்தத் தொடர்கதையை சூட்டோடு சூடா ஆரம்பிச்சிருங்க.. :icon_b::icon_ush:

ஜெய்யின் கேள்விக்கு பதிலளித்து உதவிய என்சைக்ளோபீடியாவுக்கு ரொம்ப நன்றிங்கோ.


சிவாண்ணாட்டேர்ந்து கதை... ரொம்ப நாள் எழுதறீங்க.. ஆனாலும் எழுத்து நடையும் விறுவிறுப்பும் கொஞ்சமும் குறையல..

நல்லாருக்கு.

நிஜமாவே கொஞ்சம் டச் விட்டுத்தான் போச்சு மதி. அடுத்தடுத்த கதைகளில் இன்னும் கொஞ்சம் நல்லாயிடும்ன்னு நினைக்கிறேன். நன்றி மதி.


சிவா அண்ணாவோட கதை என்றாலே ஒருரே விறுவிறுப்பு. சுவாரஸியத்திற்கு பஞ்சமே இருக்காது. இந்தக்கதையும் அதுபோல்தான். மிக பிரமாதம் அண்ணா.

தொடந்து எழுதுங்கள்

கண்டிப்பா எழுதறேன் நிவாஸ். ரொம்ப நன்றி.


ஒரு வழியா சிவா அண்ணா தவம் கலைஞ்சு கதை சொல்ல வந்தாச்சு.
நல்ல விறுவிறுப்பான மர்மக் கதையோட...

கலக்கல் அண்ணா... மீண்டும் உங்கள் கதையருவிகளை மன்றில் பார்க்க ஆவல்
தொடருங்கள்.

ரொம்ப நன்றி செல்வா. இன்னும் கொஞ்சம் சரக்கு இருக்கு...இறக்கி வெக்க மன்றம் இருக்கு.....இறக்குறேன் செல்வா.

நாஞ்சில் த.க.ஜெய்
12-08-2011, 08:42 AM
வலி தெரியறவனா இருந்தா கொலை செய்யத் துணிவானுங்களா? ஆக்சுவலா இந்த மாதிரி சமயங்களில் அட்ரினல் ரொம்ப சுரக்கும். இதனால் வலி தெரியாது.
http://www.tamilmantram.com/vb/showp...&postcount=309 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=432315&postcount=309)

என் சந்தேகத்தின் தீர்வை மிக தெளிவாக கூறியது உங்கள் பதிவு ...மிக்க நன்றி தாமரை அவர்களே ....

dellas
15-08-2011, 10:55 AM
நல்ல கதை. பக்கத்திலிருந்து பார்த்ததைப்போல் ஒரு பிரமிப்பு உண்டாக்கிவிடீர்கள். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
15-08-2011, 05:47 PM
மிக்க நன்றி டெல்லாஸ். உங்கள் கதைகளின் ரசிகன் நான்.

கலையரசி
16-08-2011, 05:28 AM
’மலர்க்கொடியின் முகத்தில் தீவிரமான சிந்தனையின் இறுக்கம் தெரிந்தது.’ என்ற ஒரு வரியை நீக்கிவிட்டால் இன்னும் சஸ்பென்ஸ் அதிகமாக இருக்குமோ? அந்த வரியைப் படித்ததினால், இறந்தது அவன் மனைவியாயிருக்காது என்று எனக்குச் சிறு சந்தேகம் ஏற்பட்டது.
நீண்ட நாள் கழித்து மன்றம் வந்து படித்த முதல் கதை நல்ல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்க சிவாஜி சார்!

கலையரசி
16-08-2011, 05:29 AM
’மலர்க்கொடியின் முகத்தில் தீவிரமான சிந்தனையின் இறுக்கம் தெரிந்தது.’ என்ற ஒரு வரியை நீக்கிவிட்டால் இன்னும் சஸ்பென்ஸ் அதிகமாக இருக்குமோ? அந்த வரியைப் படித்ததினால், இறந்தது அவன் மனைவியாயிருக்காது என்று எனக்குச் சிறு சந்தேகம் ஏற்பட்டது.

நீண்ட நாள் கழித்து மன்றம் வந்து படித்த முதல் கதை நல்ல விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்ததில் மகிழ்ச்சி. பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்க சிவாஜி சார்!

innamburan
16-08-2011, 06:25 AM
விரும்பிப் படித்த கதை.

aren
16-08-2011, 09:42 AM
ரொம்ப அவசரப்பட்டு முடித்துவிட்டது போல் இருந்தது எனக்கு. இன்னும் கொஞ்சம் நிதானமாக எழுதியிருக்கலாம்.

போலீஸுக்கு வேலையே கொடுக்கவில்லையே. இன்னும் வேறு கோலத்திலும் அவர்கள் பார்ப்பது போல் செய்திருக்கலாம்.

மனோகரனையும் கொஞ்சம் உள்ளே கொண்டு வந்திருக்கலாம் என்பது என் கருத்து.

இன்னும் நிறைய கதைகளை இங்கே நீங்கள் படைக்க என் வாழ்த்துக்கள்.

தாமரை
16-08-2011, 10:27 AM
போலீஸுக்கு வேலையே கொடுக்கவில்லையே.

ஏற்கனவே ஆட்சி மாற்றத்திற்கு அப்புறமா போலீஸ் ஏகப்பட்ட பிஸி. அதனால சிவா.ஜி அண்ணா வேலை கொடுக்க யோசிச்சிருக்கலாம்.. :D:D:D:D

Ravee
16-08-2011, 11:32 AM
யுவர் ஆனர், கட்டாய கல்யாணம் செய்ய வைத்து இடைவிடாத மன உளைச்சலுக்கு ஆளாக்கி என் கட்சிக்காரரை ஒரு கொலை செய்ய தூண்டும் அளவு மன நோயாளி ஆக்கிய அவரின் தகப்பனார் அவரின் மாமன் அவரின் தாயார் மற்றும் அவரின் மனைவி எல்லோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து என் கட்சிக்காரரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்..... :lachen001:

தாமரை
16-08-2011, 01:19 PM
யுவர் ஆனர், கட்டாய கல்யாணம் செய்ய வைத்து இடைவிடாத மன உளைச்சலுக்கு ஆளாக்கி என் கட்சிக்காரரை ஒரு கொலை செய்ய தூண்டும் அளவு மன நோயாளி ஆக்கிய அவரின் தகப்பனார் அவரின் மாமன் அவரின் தாயார் மற்றும் அவரின் மனைவி எல்லோருக்கும் ஆயுள் தண்டனை விதித்து என் கட்சிக்காரரை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்..... :lachen001:

இப்படியும்

நான் மருந்து சாப்பிட்டு தூக்கக் கலக்கத்தில் இருந்தப்ப கையில் இருந்த ஊசியை எனக்குத் தெரியாம யாரோ பிடுங்கி இருக்கிறார்கள்.. காலடி அச்சையும் அதே மாதிரி திட்டமிட்டு என் செருப்பைக் கொண்டு உருவாக்கி இருக்காங்க. இது திட்டமிட்ட சதி...

அந்தப் பெண் என் தங்கை மாதிரி.. இதையெல்லாம் என் மனைவியும் மாமனாரும்தான் திட்டமிட்டு செஞ்சிருக்கணும்.. ஏன்னா அவர்களின் இந்த டார்ச்சர் தாங்காமத்தான் நான் விஷமே குடிச்சேன். அதனால் என்னைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காகவும், அந்தப் பெண்ணைத் திட்டமிட்டு கொலை செய்ததற்காகவும், கொலை பழியை என் மேல் சுமத்தத் திட்டமிட்டதற்காகவும்... .. ;)இப்படியும் ஒரு வழி இருக்கு வக்கீல் சார்..

Ravee
16-08-2011, 02:04 PM
ம்ம் தேங்காய் மூடி தேங்காய் மூடிதான் ... பாரிஸ்டர், பாரிஸ்டர்தான் பாயின்ட் எப்படி எடுத்துக் கொடுக்குறீங்க ... யாருப்பா அரசாங்க வக்கீல் வந்து உங்க தரப்பு பாயிண்ட சொல்லுங்க ... :lachen001:

சிவா.ஜி
16-08-2011, 03:27 PM
இப்படியும்

நான் மருந்து சாப்பிட்டு தூக்கக் கலக்கத்தில் இருந்தப்ப கையில் இருந்த ஊசியை எனக்குத் தெரியாம யாரோ பிடுங்கி இருக்கிறார்கள்.. காலடி அச்சையும் அதே மாதிரி திட்டமிட்டு என் செருப்பைக் கொண்டு உருவாக்கி இருக்காங்க. இது திட்டமிட்ட சதி...

அந்தப் பெண் என் தங்கை மாதிரி.. இதையெல்லாம் என் மனைவியும் மாமனாரும்தான் திட்டமிட்டு செஞ்சிருக்கணும்.. ஏன்னா அவர்களின் இந்த டார்ச்சர் தாங்காமத்தான் நான் விஷமே குடிச்சேன். அதனால் என்னைத் தற்கொலைக்குத் தூண்டியதற்காகவும், அந்தப் பெண்ணைத் திட்டமிட்டு கொலை செய்ததற்காகவும், கொலை பழியை என் மேல் சுமத்தத் திட்டமிட்டதற்காகவும்... .. ;)இப்படியும் ஒரு வழி இருக்கு வக்கீல் சார்..


ம்ம் தேங்காய் மூடி தேங்காய் மூடிதான் ... பாரிஸ்டர், பாரிஸ்டர்தான் பாயின்ட் எப்படி எடுத்துக் கொடுக்குறீங்க ... யாருப்பா அரசாங்க வக்கீல் வந்து உங்க தரப்பு பாயிண்ட சொல்லுங்க ... :lachen001:

யுவர் ஆனர்....மருத்துவமனையில் சேரும்போது தான் தவறுதலாய், டாக்டர் கொடுத்த மருந்து என நினைத்துதான் விஷத்தைக் குடித்தேன் என சொல்லியிருப்பதால்...இப்போது சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது....ஹி...ஹி....

சிவா.ஜி
16-08-2011, 03:29 PM
ரொம்ப நாளைக்குப் பிறகு உங்களை மீண்டும் மன்றத்தில் பார்த்தது மிக்க மகிழ்ச்சிங்க கலையரசி.

நீங்க சொன்ன வரியை நீக்கியிருந்தா....சொன்ன மாதிரி..இன்னும் சஸ்பென்ஸ் இருக்குந்திருக்கும்ன்னுதான் தோணுதுங்க. பின்னூட்ட விமர்சனத்துக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி மேடம்.

சிவா.ஜி
16-08-2011, 03:30 PM
மிக்க நன்றி இன்னம்பூரான் அவர்களே.

சிவா.ஜி
16-08-2011, 03:32 PM
ரொம்ப ரொம்ப நன்றி ஆரென். ரொம்ப நாளைக்குப் பிறகு எழுதுவதால்....இவ்ளோ போதுமென்று நினைத்துவிட்டேன். இனி தொடர்ந்து எழுதும்போது நீங்கள் விரும்பியது இருக்குமாறு முயற்சி செய்கிறேன்.

சிவா.ஜி
16-08-2011, 03:33 PM
நல்ல பாயிண்டெல்லாம் சொல்லும் வக்கீல் ரவிக்கு ரொம்ப நன்றி.

தாமரை
16-08-2011, 05:14 PM
யுவர் ஆனர்....மருத்துவமனையில் சேரும்போது தான் தவறுதலாய், டாக்டர் கொடுத்த மருந்து என நினைத்துதான் விஷத்தைக் குடித்தேன் என சொல்லியிருப்பதால்...இப்போது சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ள முடியாது....ஹி...ஹி....

எந்த டாக்டர்? எந்த பிரிஸ்கிரிப்ஸன்.. ஆதாரம் இருக்கா?

அதைச் சொன்னது அவனது மனைவிங்க. அதுவே குற்றத்தை மறைக்கிற இன்னொரு ஆதாரம்.. இதோ அதற்கான அரசு மருத்துவமனை சான்று. குடிச்ச விஷம் பால்டாயில் என்பதற்குத்தான் அரசு மருத்துவமனை ஆதாரமே இதோ இருக்கிறது யுவர் ஆனர். விஷம் அருந்தி மயக்கத்தில் இருந்தவர் சொன்னதாக அரசு வக்கீல் சொல்வதிலிருந்தே இந்த வழக்கை திசை திருப்பத்தான் என்பதை கனம் நீதிபதி அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

innamburan
16-08-2011, 06:19 PM
திருமதி. கலையரசி மோப்பம் பிடித்து விட்டார்:cool:

சிவா.ஜி
18-08-2011, 04:18 PM
அடக் கடவுளே....மக்கள் இவ்ளோ விழிப்பா இருக்காங்களா.....எஸ்கேப்......

aren
19-08-2011, 04:20 PM
அடக் கடவுளே....மக்கள் இவ்ளோ விழிப்பா இருக்காங்களா.....எஸ்கேப்......

எஸ்கேப்பெல்லாம் கிடையாது. இன்னொரு கதையை உடனடியாக இங்கே பதிவு செய்து எங்களை மகிழ்விக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

seguwera
20-08-2011, 03:32 PM
கதை மிகவும் அருமை. இது போன்ற நிறைய முரளிகள் நிசத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இந்த சமுதாயத்தில். கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வைப்பாட்டிக்காக.

சிவா.ஜி
25-08-2011, 03:28 PM
மிக்க நன்றி சேகுவேரா.