PDA

View Full Version : உழைப்பு! - குமுதம் (10-08-2011) இதழில் வெளிவந்தது



க.கமலக்கண்ணன்
09-08-2011, 07:03 AM
''பிரபு, ஏன் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு, நீங்கள்
வேலையை சொல்லித்தருவதில்லையாம் ! ரகு மணிக்கணக்கில்
பக்கத்துல இருந்து சொல்லித்தருகிறாராம்.'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''மன்னிக்கனும் சார், ஏதாவது ஒரு புதிய வேலைய எங்கள்
இருவருக்கும் தாருங்கள். ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள். எங்கள்
ஆட்களுக்கு சொல்லித் தருகிறோம். அடுத்த வாரம் அதே போல வேலையை
நீங்கள் அவர்களுக்கு கொடுத்து, நீங்களே நேரடியாக கண்காணியுங்கள்.''
என்றான் பிரபு. அதே போல ரகுவுக்கும் பிரபுவுக்கும் புது வேலையைக்
கொடுத்தார் பொது மேலாளர்.

ரகுவின் யோசித்து யோசித்து செய்தான். 2 மணி நேரத்தில்
பிரபுவின் ஆள் வேலையை முடித்து விட்டான். ரகுவின் ஆள் மூன்று
முறை ரகுவிடம் போய் சந்தேகம் கேட்டான். ஆனாலும் திணறினான்.
ஒரு வழியாக 5 மணி நேரத்தில் முடித்தான். பொது மேலாளர் பிரபுவை
அழைத்து,

''எப்படி முடிந்தது?'' என்று கேட்டார் பொது மேலாளர்.

''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்
கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது.
அதனால் விளைவுகளை மட்டும் சொல்லி, அதை கண்டுபிடிச்சிக்கோ
என்று நேரம் கொடுத்து விட்டுடனும். தேடிபிடிச்சி கத்துகிட்டா,
கடைசி வரைக்கும் மறக்காது. ஏன்னா நாமே உழைத்து சம்பாதிக்கும்
பணத்திற்கு மதிப்பு அதிகம்.'' என்றான் பிரபு.

''நான் உன்னுடைய மேலதிகாரி என்பதில் பெருமைபடுகிறேன்.''
என்றார் பொது மேலாளர்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_6th-F.jpg

சிவா.ஜி
09-08-2011, 01:27 PM
சரியான உத்திதான். அவர்களாகவே முயன்று செய்தால் எப்போதும் நினைவில் இருக்கும். தொடர்ந்து நல்ல வெகுஜனபத்திரிக்கை எழுத்தாளராய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

Nivas.T
09-08-2011, 03:42 PM
மிக அருமையான கதை

பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்

aren
10-08-2011, 03:35 AM
ஒரு பெரிய எழுத்தாளர் நம் மன்றத்தில் இருப்பதில் எங்களுக்கும் பெருமை. பாராட்டுக்கள் கமலக்கண்ணன். இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

கீதம்
10-08-2011, 06:52 AM
வேலை வாங்கவும் ஒரு சாதுர்யம் வேண்டும். அது பிரபுவிடம் தனித்திறமையாகவே அமைந்திருக்கிறது. ரகுவோ வேலை கற்றுத்தர மட்டுமே தெரிந்திருக்கிறார். நல்ல கதையும் கருத்தும். குமுதத்தில் வந்ததற்கு பாராட்டுகள் கமலக்கண்ணன்.

க.கமலக்கண்ணன்
11-08-2011, 09:07 AM
வெகுஜனபத்திரிக்கை எழுத்தாளராய் ஜொலிப்பதற்கு வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்.

மிக்க நன்றி சிவா.ஜி


மிக அருமையான கதை பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்

மிக்க நன்றி Nivas.T


ஒரு பெரிய எழுத்தாளர் நம் மன்றத்தில் இருப்பதில் எங்களுக்கும் பெருமை. பாராட்டுக்கள் கமலக்கண்ணன். இன்னும் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி என்னை எழுத்தாளர் அதுவும் பெரிய எழுத்தாளர் என்று சொன்னமைக்கு


நல்ல கதையும் கருத்தும். குமுதத்தில் வந்ததற்கு பாராட்டுகள் கமலக்கண்ணன்.

மிக்க நன்றி கீதம்

Mano.G.
14-08-2011, 04:51 AM
இதுதான் தற்போதைய மனிதவள
மேம்பாட்டு முறை OJT,
வாழ்த்துக்கள் கமலக்கண்ணன்l

க.கமலக்கண்ணன்
14-08-2011, 02:09 PM
மிக்க நன்றி திரு.மனோ அவர்களே... உங்களின் கூற்று உண்மை.... உங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...

redblack
17-09-2011, 06:10 AM
உண்மைதான் சொல்லிக்கொடுத்து வருவதை விட கற்றுகொண்டு வருவது நினைவில் நிற்கும்.

innamburan
17-09-2011, 05:27 PM
''சார், எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு எழுத்தாக சொல்லிக்
கொடுத்தா, அப்போது மட்டுமே நினைவில் இருக்கும். மனதில் பதியாது.
~ பாயிண்ட் மேட்.

க.கமலக்கண்ணன்
20-09-2011, 03:20 AM
மிக்க நன்றி redblack

உங்களின் பாராட்டு மிக்க நன்றி innamburan

பிரேம்
20-09-2011, 05:22 AM
கற்றுத்தரும் கதை..அருமை

M.Jagadeesan
20-09-2011, 11:19 AM
ஏட்டுக்கல்வியை விட அனுபவக்கல்வி என்றும் உயர்ந்தது. பாராட்டுக்கள் கமலக்கண்ணன்.

க.கமலக்கண்ணன்
22-09-2011, 02:12 AM
மிக்க நன்றி பிரேம்

உண்மைதான் அனுபவத்தைவிட சிறந்த ஆசிரியர் வேறில்லை... மிக்க நன்றி ஜெகதீசன்...

பால்ராஜ்
22-09-2011, 06:34 AM
அனுபவம் சிறந்ததுதான்...
ஆனாலும் சற்று ஏட்டுக் கல்வி பின்னால் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
இதுவும் அனுபவம்தான்:aetsch013:

க.கமலக்கண்ணன்
01-10-2011, 11:55 AM
மிக்க நன்றி பால்ராஜ்

dhilipramki
05-10-2011, 02:55 PM
அருமையான கதை, சரியான பதில்!!
(என்னை போல் யாரும் இல்லை-விஜய் அதிரடி):lachen001:

க.கமலக்கண்ணன்
05-10-2011, 03:51 PM
நன்றி திலீப்ராம்கி உங்களின் பாராட்டுக்கு...

vseenu
05-10-2011, 04:27 PM
கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ஒருவரிடம் இருந்தால் எதையும் கற்றுக்கொள்ளலாம்.இதையே இக்கதை எடுத்துரைக்கிறது.ஆர்வத்துடன் வாய்ப்பும் கிடைத்தால் முடியாததொன்றில்லை

க.கமலக்கண்ணன்
06-10-2011, 03:48 AM
உண்மைதான் ஆர்வம் மற்றும் முயற்சி வெற்றியை தரும் நன்றி உங்களின் பின்னூட்டத்திற்கு

இராஜேஸ்வரன்
15-02-2012, 02:13 PM
சிறிய கதையாக இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லும் கதை. பாராட்டுக்கள்.

arun
20-02-2012, 05:33 PM
ஒரு பக்க கதை அருமை அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தருகிறது !

இன்னும் பல படைப்புகளை படைத்து சிறக்க வாழ்த்துக்கள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 02:01 PM
பாராட்டுகள் கமலக்கண்ணன்...:)