PDA

View Full Version : நதியின் வழியே....



Nivas.T
08-08-2011, 04:03 PM
நீண்ட நெடுந்தொலைவாய் காண்கிறேன்
இந்த நதிக்கரையை

வளைவுகள் அதிகம் என்றாலும்
பஞ்சமில்லை அழகு
நீரில் தெளிவில்லை என்றாலும்
குறைவில்லை வேகம்

பயணித்துக்கொண்டிருக்கிறேன்
கரைமீதென்றாலும்
நினைவுகள் அனைத்தும் நீரின் மேலும்
அதன்மீது எழும் அலைகளின் மேலும்

நதியின் பிறப்பிடம் அறிவேன்
என் பயணத்தின் தொடக்கமும்
அதுவாகத்தான்

முடிவிடம் மட்டும் அறியேன்
என் பயணத்திற்கும்
இந்த நதிக்கரைக்கும்

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2011, 06:02 PM
வளைவு நெளிவுகளிநூடே தடைகளை தாண்டி நெடுந்தொலைவில் தன இலக்கினை தேடி செல்லும் நதியின் பாதையில் நானும் செல்கிறேன் ....

Nivas.T
09-08-2011, 05:24 AM
வளைவு நெளிவுகளிநூடே தடைகளை தாண்டி நெடுந்தொலைவில் தன இலக்கினை தேடி செல்லும் நதியின் பாதையில் நானும் செல்கிறேன் ....

ஊக்கம் தரும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெய்

g.r.senthil kumar
09-08-2011, 07:33 AM
உங்களுடைய காட்சி கற்பனை அருமை ,. ஆனால்
இது கவிதையா அல்லது வசன கவிதையா..என்று புரியவில்லை

Nivas.T
09-08-2011, 09:18 AM
உங்களுடைய காட்சி கற்பனை அருமை ,. ஆனால்
இது கவிதையா அல்லது வசன கவிதையா..என்று புரியவில்லை

இந்த திரியில் இன்னும் பல கவிதைகள் இருக்கிறது, நிறைய பதிவேற்றியிருக்கிரார்கள் அனைத்தையும் படியுங்கள் சில புரியும் பல புரியாது :)

பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி செந்தில்

Ravee
09-08-2011, 11:16 AM
என் நினைவோட்டங்கள் எப்போதும்
வெள்ளோட்டமாய் ஓடுவதில்லை
ஆங்காங்கே குட்டையாய் தேங்கி விடுகிறது
குழப்பத்துக்கு காரணம் விதியா ? வினையா ?

ஜானகி
09-08-2011, 02:58 PM
வாழ்வெனும் நதியிலே, சிலரது பயணம் அலைகளின் போக்கிலேயே அமைதியாகச் செல்லும்படி அமையும்....சிலரது பயணமோ எதிர்நீச்சல் போடும்படி அமையும்......எது எப்படியோ விடை தெரியுமுன் முடிவு வந்துவிடும்....... மீண்டும் மற்றொரு பயணம்........

Nivas.T
09-08-2011, 03:38 PM
என் நினைவோட்டங்கள் எப்போதும்
வெள்ளோட்டமாய் ஓடுவதில்லை
ஆங்காங்கே குட்டையாய் தேங்கி விடுகிறது
குழப்பத்துக்கு காரணம் விதியா ? வினையா ?

விதியும் இல்லை வினையும் இல்லை

அதிக பள்ளங்கள்தான் காரணம் :D

மிக்க நன்றி அண்ணா

Nivas.T
09-08-2011, 03:39 PM
வாழ்வெனும் நதியிலே, சிலரது பயணம் அலைகளின் போக்கிலேயே அமைதியாகச் செல்லும்படி அமையும்....சிலரது பயணமோ எதிர்நீச்சல் போடும்படி அமையும்......எது எப்படியோ விடை தெரியுமுன் முடிவு வந்துவிடும்....... மீண்டும் மற்றொரு பயணம்........

உண்மை தான் பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜானகியம்மா

கீதம்
10-08-2011, 07:29 AM
நதியோடு பயணித்தாலும்
நடப்பதென்னவோ எதிர்த்திசையில் என்று
எழுதிய கவி சொல்கிறதே?
என்னவென்று நான் சொல்ல?

கரையின் மூலம் நதியின் மூலம் அறிவீரோ?
நதியும் முடிவில் கடலில் சங்கமம், அறியீரோ?

வேறுபட்டக் கவிக்கரு மூலம் மாறுபட்ட மனக்கருவூலம் அறிகிறேன். கவிதை நன்று. பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
10-08-2011, 07:56 AM
நதியோடு பயணித்தாலும்
நடப்பதென்னவோ எதிர்த்திசையில் என்று
எழுதிய கவி சொல்கிறதே?
என்னவென்று நான் சொல்ல?

கரையின் மூலம் நதியின் மூலம் அறிவீரோ?
நதியும் முடிவில் கடலில் சங்கமம், அறியீரோ?

வேறுபட்டக் கவிக்கரு மூலம் மாறுபட்ட மனக்கருவூலம் அறிகிறேன். கவிதை நன்று. பாராட்டுகள் நிவாஸ்.

முதன்முதலில் நதியை பார்ப்பவனுக்கு சங்கமம் என்பது கேள்விஞானம் மட்டுமே. அனுபவமாய் உணர கரைமீது பயனித்துதானே ஆகவேண்டும்.

கருத்துக்கூறும் பின்னூட்டம்
மிக்க நன்றீங்க