PDA

View Full Version : பொய் சிரிப்பு....

Nivas.T
08-08-2011, 02:54 PM
தோரணங்களுக்கு கீழே
ஊர்கூடி ஒன்றாய் அமர்ந்திருக்க
மண்டபம் கோலாகலமாய் நிறைந்திருக்க

இசைக்கச்சேரி ஒருபுறம்
ஓங்கி ஒலிக்கும் குழந்தை ஒருபுறம்
சிதறி ஓடிக்கொண்டிருக்கும் சிறுவர்கள்
எங்கும் சலசப்பாய் சிதறிவிழும் பேச்சுக்கள்

மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து வீச

அழைத்தவுடன்
அடித்துக்கொண்டோடும்
கூட்டத்தின் நடுவே
தெரிந்த முகங்கள் சில
தெரியாதவை பல
என்றாலும்
அனைத்திற்கும் பதிலாய்
முகத்தோடு ஒட்டப்பட்ட பொய் சிரிப்பு

சிவா.ஜி
08-08-2011, 03:14 PM
பொய்சிரிப்பு...எங்கும் உண்டு. வாழ்த்துக்கள் நிவாஸ்.

Nivas.T
08-08-2011, 03:33 PM
பொய்சிரிப்பு...எங்கும் உண்டு. வாழ்த்துக்கள் நிவாஸ்.

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா

என்ன அண்ணா பயங்கர வேலை பளுவோ?

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2011, 05:54 PM
இந்த பொய் சிரிப்பில் சில நிஜமும் காண்கிறேன் இதுவரை காணாத உறவுகளை காணும் போது மகிழ்வினையும் காண்கிறேன் ...

Nivas.T
09-08-2011, 05:21 AM
இந்த பொய் சிரிப்பில் சில நிஜமும் காண்கிறேன் இதுவரை காணாத உறவுகளை காணும் போது மகிழ்வினையும் காண்கிறேன் ...

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெய்

Ravee
09-08-2011, 11:47 AM
இந்த புன்னகை எனபது போலி அல்ல ...
அதுவொரு அறிமுகச் சீட்டு ...
உங்கள் அறிமுக சீட்டை பெற்றுக்கொண்டு
அவரும் கொடுத்தால் இதயகதவுகள் திறக்கும்.
சிலரின் கதவுகள் திறந்த பிறகு
கல்யாண பத்திரிகை கொடுப்பார்கள்
விவரத்திற்கு ஆதவாவை கேளுங்கள் ... :lachen001:

ஜானகி
09-08-2011, 02:50 PM
பொய்யோ மெய்யோ, சிரிப்பால் மலரவைக்கும் விழாக்களுக்கு ஒரு ஜே !

Nivas.T
09-08-2011, 03:33 PM
இந்த புன்னகை எனபது போலி அல்ல ...
அதுவொரு அறிமுகச் சீட்டு ...
உங்கள் அறிமுக சீட்டை பெற்றுக்கொண்டு
அவரும் கொடுத்தால் இதயகதவுகள் திறக்கும்.
சிலரின் கதவுகள் திறந்த பிறகு
கல்யாண பத்திரிகை கொடுப்பார்கள்
விவரத்திற்கு ஆதவாவை கேளுங்கள் ... :lachen001:

தேவை என்பவருக்குத்தான் நுழைவுச்சீட்டு
வேண்டாம் என்போருக்கு அது பொய்ச்சீட்டு

ஆதவாவின் அந்த பதிவை நானும் படித்தேனே :D:D:D

Nivas.T
09-08-2011, 03:36 PM
பொய்யோ மெய்யோ, சிரிப்பால் மலரவைக்கும் விழாக்களுக்கு ஒரு ஜே !

பின்னூட்டத்திற்கும் உங்கள் ஜேக்கும்
நன்றி ஜானகியம்மா :D

கீதம்
10-08-2011, 07:38 AM
ஜானகி அம்மா சொன்னது போல் விழாக்களும் பண்டிகைகளும் இயல்பு வாழ்க்கையின் இறுக்கம் தளர்த்த உதவுகின்றனவே... அதில் பொய் என்ன, மெய் என்ன? சிரிக்கவும், புன்னகைக்கவும் கிடைக்கும் சந்தர்ப்பங்களிலும் சிக்கனம் கடைப்பிடிப்பானேன்? சிரித்து சில நொடிகள் ஆயுளைக் கூட்டிக்கொள்வோமே...(நம் சிரிப்பைப் பார்த்து அடுத்தவர் ஆயுள் குறைந்தால் நான் பொறுப்பல்ல)

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
10-08-2011, 08:00 AM

:lachen001:

பாராட்டுகளுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றீங்க

சான்வி
24-08-2011, 11:28 AM
மெய்யது ஆயினும்
பொய்யது ஆயினும்
விழாவெனில் வருமே
மகிழ்ச்சி :icon_b:

வரிகள் அருமை நிவாஸ்

Nivas.T
24-08-2011, 02:09 PM
மெய்யது ஆயினும்
பொய்யது ஆயினும்
விழாவெனில் வருமே
மகிழ்ச்சி :icon_b:

வரிகள் அருமை நிவாஸ்

பாராட்டிற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சான்வி

த.ஜார்ஜ்
24-08-2011, 04:26 PM
அதற்காக அந்த மகிழ்சியான இடத்தில் போய் சோகமாகவா உட்கார்த்திருக்க முடியும்.

innamburan
24-08-2011, 07:53 PM
பொய்ச்சிரிப்பில் கவர்ச்சி ஒட்டுவது எளிது. மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து முகர உதவும்.

Nivas.T
03-10-2011, 09:37 AM
அதற்காக அந்த மகிழ்சியான இடத்தில் போய் சோகமாகவா உட்கார்த்திருக்க முடியும்.

நிச்சயம் கூடாது ஜார்ஜ் அண்ணா

அது பொய் சிரிப்பு என்பது நமக்குத்தான் தெரியும்
பிறர் மகிழ்வுக்காக நம்மை நாம் ஏமாற்றி கொணர்வதே அது

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி அண்ணா

Nivas.T
03-10-2011, 09:39 AM
பொய்ச்சிரிப்பில் கவர்ச்சி ஒட்டுவது எளிது. மல்லிகைப்பூ
சந்தனத்தோடு
பன்னீரின் வாசம்
காற்றோடு கலந்து முகர உதவும்.

உண்மைதான் ஐயா

பின்னூட்டதிற்கு மிக்க நன்றி

jaffer
03-10-2011, 09:57 AM
முடிவில் அருமையான வரி - எழுதிய விதம் அந்த கோர்வை பிடிச்சிருக்கு

Nivas.T
03-10-2011, 10:08 AM
முடிவில் அருமையான வரி - எழுதிய விதம் அந்த கோர்வை பிடிச்சிருக்கு

ரசித்து பாராட்டி பின்னூட்டமிட்ட தங்களுக்கு என் நன்றிகள் நண்பரே

பென்ஸ்
03-10-2011, 04:03 PM
நல்ல கவிதை நிவாஸ்...

வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு முக மூடி நமக்கு...
கல்யாண வீட்டில் சிரிப்பு முக மூடி
சாவு வீட்டில் அழும் முக மூடி...
காரியம் நடக்க வேண்டும் என்றல் பரிதாப முக மூடி...
இந்த "பெர்சனா" இல்லை என்றால் வாழ்க்கையே கடினம் அல்லவா ...???

ரவி பதிலை போட்ட பிறகு என் எண்ணம் அவர் பதிலை தவிர வேறு பக்கங்களுக்கு செல்லவில்லை...
சில எழுத்துகள் அப்படித்கான் நம்மை கட்டி போட்டுவிடும்....

Nivas.T
03-10-2011, 04:14 PM

உண்மைதான் அண்ணா

நாம் சொல்ல நினைப்போம் ஆனால் எழுத்தில் சொல்ல இயலாமல் போகும். அவ்வாறு நினைத்ததை சிலர் மிக சுவையாக எழுதிவிடுவார்கள், அதுபோன்றவை என்றுமே ரசிக்கக் கூடியதாய் விளங்கும்.

உங்கள் பாராட்டிற்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அண்ணா

Dr.சுந்தரராஜ் தயாளன்
31-03-2012, 09:11 AM
உண்மையான பொய்ச்சிரிப்பை பார்க்கவேண்டுமா?....ஆகாய விமானத்தில் பறந்தால் போதும்...உங்களை வரவேற்கும் அந்தப் பெண் பணியாளர்கள் ....அவர்களின் சிரிப்பைப் பாருங்கள். உங்களுக்கு எரிச்சல்தான் வரும்:lachen001: