PDA

View Full Version : மரணம் நிகழ்ந்த வீடு



சசிதரன்
08-08-2011, 01:58 PM
அவன் அழுகையை எதிர்பார்த்து
காத்திருந்தனர்

ஒரு மரணத்தை தொடர்ந்து
அந்த வீடு நிரம்பியிருந்தது

மரணம் நிகழ்ந்த நொடி
இன்னும் முடியாமல்
வந்தவர் உதடுகளில் நீண்டிருந்தது

அழுதழுது ஓய்ந்த மனைவியை
மற்றொரு பெண் தன்னோடு சாய்த்திருந்தாள்
அழுது களைத்து தூங்கும்
குழந்தைக்கு ஒப்பாகியிருந்தாள் அவள்

அசையாது அமர்ந்திருந்த மகன்
இதுவரையிலும் அழாமலே இருந்தான்
ஒவ்வொருவர் வரும்போதும்
எழுந்து அமைதியாக நின்றான்

மரணம் நிகழ்ந்த நொடி
அனைவர் உதடுகளிலும் முடிந்திருந்தது

யோசித்து வைத்திருந்த
ஆறுதல் வார்த்தைகளோடு
காத்திருந்தனர்
அவன் அழுகையை எதிர்பார்த்து

நாஞ்சில் த.க.ஜெய்
08-08-2011, 06:10 PM
யோசித்து வைத்திருந்த
ஆறுதல் வார்த்தைகளோடு
காத்திருந்தனர்
அவன் அழுகையை எதிர்பார்த்து
இந்த வரிகளே கூறுகின்றன மரணம் நிகழ்ந்த வீட்டின் நிலையை ...

Ravee
09-08-2011, 11:09 AM
என் அழுகைக்காகவும் பலர் காத்திருந்தனர் ஒரு நாள்....
நான் அழுதபோது எவரும் இல்லை என் அருகில் ... :(

உங்களால் என் நினைவுகள் கிளறப்பட்டது சசி

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-08-2011, 02:51 AM
படித்த ஒவ்வொருவரும் கண்டிப்பாய் ஏதோ ஒரு தங்களுக்கு முன்னான மரணத்தை அசை போட்டிருப்பார்கள். நல்ல கவிதை சசி.

Mano.G.
14-08-2011, 04:42 AM
சோகத்தை கண்ணீர் சிந்திதான் காட்டவேண்டுமோ,
அழுதால் அவன் ஆண்மகனோ?
மரணம் என்றால் அழுகையோ?
சோகத்தை எப்படி வெளிபடுத்துவது?
வழிகாட்டி ஒன்று வேணுமே



எனக்குல் உதித்தது
மனோ.ஜி

கீதம்
21-08-2011, 03:50 AM
ஆறுதல் சொல்லக் காத்திருப்பவர்களுக்கு
அநேக மரணவீடுகளில்
அரங்கேறியிருக்கலாம் அதற்கான சூழல்கள்.
அழக்காத்திருப்பவனுக்கோ
அது ஒத்திகைகளுக்கு அப்பாற்பட்ட
முதல் அரங்கேற்றம்!
மனமுவந்த விழாக்களில்
மையக்கவர்ச்சியை எதிர்நோக்கும் மனம்
மரணம் நிகழ்ந்த வீட்டில் மட்டும்
இருட்டு மூலை தேடும் அதிசயம்,
இங்கே அருமையான கவிதையானது.
பாராட்டுகள் சசிதரன்.

அமரன்
21-08-2011, 05:56 PM
மரணம் இயல்பானது.. இரணம் இயற்கையானது..
சாவீட்டில் பலரும் இயல்பு இழந்து செயற்கைக்குள் புகுந்து
சாவியைத் தொலைத்தவர்களாகி விடுகின்றனர்.

எங்கள் வீட்டு சுக துக்கத்துக்கு வாறவை.. நாங்கள் போகா விட்டால் என்ன நினைப்பினம் என்ற கவலை கலைக்க ஓடி வந்தவை இப்படித்தான் இருப்பினம், சாவீட்டில. அப்படியானவர்களைப் பார்க்கையில் சவம் போலத் தெரிவார்கள் எனக்கு.

அதெல்லாம் சரி அவன் அடிக்கடி எழுந்து நிற்பது
சடலத்துக்கு மரியாதை செலுத்தவா? வாறவையை வரவேற்று மதிப்பளிக்கவா?

seguwera
31-08-2011, 03:18 PM
மரணம். உண்மை சுற்றங்களுக்கு நேரும்போது
கண்கள் தன்னை அறியாமல் நீர் சிந்தும்.
யார் சொன்னது அழுதால் ஆண்மை இல்லை என்று?
வியர்வை, உமிழ் நீர் போல கண்ணீரும் சில நேரங்களில் வெளிப்படுத்தித்தான் ஆகவேண்டும். வெளிப்படுத்தினால் தான் மனிதன்
மனதில் தேக்கி வைத்து அவதிப்படுவதை காட்டிலும் ரெண்டு சொட்டு கண்ணீர் அகற்றும் மன காயங்களை அதன் பின் தனக்குத்தானே மனம் அடையும் ஆறுதலை வேறு எவரும் கொடுக்கமுடியாது .