PDA

View Full Version : ஆப்பில் ஐ பேட் 2 -Apple I Pad 2



Mano.G.
05-08-2011, 12:52 PM
ஐ பேட் 2ல்
தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியுமா?
இந்த ஐ பேட்டை வாங்குவதற்க்கு முன்
உங்கள் ஆலோசனைகளை எதிர்பர்க்கிரேன்.

மனோ.ஜி

Nivas.T
05-08-2011, 01:38 PM
எந்த மாதிரி இடங்களில் பயன்படுத்த வேண்டும்?

மன்றம் போன்ற வலைத்தளங்களை படிக்க வேண்டுமா? அல்லது தமிழில் மென்பொருட்கள் தேவையா? என்று தெளிவாக சொன்னால்

நன்று ஐயா

பாரதி
05-08-2011, 03:18 PM
அன்புள்ள அண்ணா,

எனக்கு ஆப்பிளில் பழக்கம் இல்லை என்பதால் இணையத்தில் தேடினேன்.

நீங்கள் அதிகம் தட்டச்ச வேண்டியதிருந்தால் ஐபேட்..ஐ விட மடிக்கணினி வசதி. அதைத் தவிர்த்து பார்த்தால் ஐபேட் நன்றாக இருக்கும் என்றே பலரும் சொல்கிறார்கள். தமிழில் வாசிப்பதில் பிரச்சினை இருக்காது. தமிழில் தட்டச்ச ஒரு வேளை ”செல்லினம்” மென்பொருளை நிறுவ வேண்டியதிருக்கலாம்.

ஏன் ஐபேட் வேண்டாம் என்பதை அறிய

http://nchokkan.wordpress.com/2011/03/28/tablet

ஏன் ஐபேட் வேண்டும் என்பதை அறிய

http://thalafanz.blogspot.com/2010/04/blog-post_02.html

http://geethappriyan.blogspot.com/2010/08/blog-post.html

அசைபடமாக யூட்யூபில் காண
http://www.youtube.com/watch?v=syL-kYlrDxg
http://www.youtube.com/watch?v=1tXjLU10r24

முடிவு உங்கள் கையில் அண்ணா.

aren
06-08-2011, 03:07 AM
உங்களுக்கு எக்ஸெல் போன்ற மென்பொருளை உபயோகப்படுத்தவேண்டுமாயின் லேப்டாப்தான் வசதியானது. வெறுமனே மின்னஞ்சலையும் மற்றும் இணையத்தில் இருக்கும் விஷயங்களையும் படித்துப்பார்க்க ஐபாட் வசதியானது.

Mano.G.
06-08-2011, 04:01 AM
தகவலுக்கு மிக்க நன்றி
உறவுகளே,
தம்பி நிவாஸ்- தமிழ் மென்பொருட்களை ஆப்பிள் ஐ பேட்டில் பதிவேற்ற முடியுமா?

தம்பி பாரதியின் அறிய தகவல்-
ஒலி ஒளி காட்சியோடு.

நண்பர் ஆரேன் இது ஒரு ஆர்கனைசர் போல
உள்ள்து , இளையோருக்கானது போல.

விலையோ அதிகம் ரிங் 1900.00

Nivas.T
06-08-2011, 05:52 AM
தமிழ் மென்பொருட்களை ஆப்பிள் ஐ பேட்டில் பதிவேற்ற முடியுமா?


எனக்கு தெரிந்தவரை வாய்ப்புகள் ஏதும் இல்லை ஐயா. நாம் விண்டோஸ் ல் பத்திவேற்றக் கூடிய எந்த மென்பொருட்களையும் ஆப்பில் நிறுவன பொருட்களில் பத்திவேற்ற முடியாது. ஆப்பில் நிறுவனம் அப்படி ஏதாவது தமிழ் மென்பொருட்களை வெளியிட்டால் மட்டுமே முடியும். எனக்கு தெரிந்த வரையில் ஆப்பிள் நிறுவன பொருட்களில் i-Phone க்கு மட்டும் சில கிடைப்பதாக தகவல் அதுவும் இந்தியாவில் மட்டும் விற்கப்படும் i-Phone க்கு மட்டும். இதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. இன்னும் ஆப்பிள் ஐ பேட் பற்றி தகவல்கள் தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைத்தால் தருகிறேன் ஐயா.

அன்புரசிகன்
07-08-2011, 05:35 AM
ஐ பேட் 2ல்
தமிழ் எழுத்துக்களை வாசிக்க முடியுமா?
இந்த ஐ பேட்டை வாங்குவதற்க்கு முன்
உங்கள் ஆலோசனைகளை எதிர்பர்க்கிரேன்.


அண்ணா...

ஒருங்குக்குறியில் உள்ள எந்த எழுத்துருக்களையும் படிக்க முடியும். தமிழில் எழுதுவதற்கு இதுவரை எந்த செயலிகளையோ அல்லது இணைய உலாவிகளையோ அப்பிள் அல்லது எந்த நிறுவனங்களும் தயாரிக்கவில்லை. ஆனால் குறுந்தகவல்கள் மற்றும் தமிழில் எழுதுவதற்கு பாரதி அண்ணா சொன்னது போல் செல்லினம் செயலி பயன்படுத்தமுடியும். எவ்வாறு எனில் அதில் எழுதிவிட்டு பின் தேவையான இடத்தில் இடமுடியும். தவிர குறுந்தகவல்களை செல்லினம் மூலம் தமிழில் நேரடியாக அனுப்ப முடியும்.

வாசிப்புத்திறன் உள்ளவர்களுக்கு மற்றய கணினிகளிலும் ஐபாட் சிறந்தது எனலாம். ibook என்பதில் எந்த ஒரு மின்னூல்களையும் சேமிக்க முடியும். (pdf உள்ளடங்கலாக) தவிர அதில் உங்களுக்கு தேவையானவற்றை highlight செய்துவைக்க இயலும்.

அடுத்த ஐபாட் ஐபோன் களுக்கான இயங்குதளம் iSO5 இல் இந்த சேவை மேலதிகமாக்குகிறார்கள் என்கிறார்கள். அதாவது உங்களுக்கு தேவையான கோப்புக்களை அல்லது பாடல்களை இணைய வசதிகளுடனான icloude என்பதில் சேமிக்கலாம். முதல் 5 GB ற்கு இலவசம் என்றும் மேலதிக இடவசதியை கட்டணங்களுடனும் அறிவிக்கப்போவதாக அவர்களது இணையத்தில் உள்ளது.

உங்கள் கணினியில் உள்ள படங்களை ஐபாடில் பார்க்க Airvideo என்ற செயலி மூலம் காணலாம். அதற்கு அதன் வழங்கி மென்பொருளை தங்களின் கணினியில் நிறுவி கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கலாம்.

கூகிளின் மொழிபெயர்ப்பான் செயலி வெளியிட்டுவிட்டார்கள். ஆனால் அதில் தமிழ் இன்னமும் சேர்க்கவில்லை. ஆனால் இணைய உலாவி மூலமான பாவனையில் தமிழ் உள்ளது.

தவிர கூகிள் + கூகிள் தேடல் கூகிள் ஏர்த் போன்ற பல செயலிகள் உள்ளன.

உங்களுடைய தேவை எது என தெரிந்தால் உதவுவது இன்னும் இலகு.

presentation போன்றவற்றிற்கு என்றால் ஐபாட் இலும் tablet pc கள் நிறைய உள்ளன. ஏசரின் ஒரு கணினி வகை ஐபாட் போன்று விண்டோஸின் வசதிகளுடன் உள்ளது. அதில் சாதாரண கணினி போன்று பாவிக்கலாம். பெரிய விலையும் இல்லை.

பாரதி
07-08-2011, 07:14 AM
ஆங்கிலத்திற்கு பொருத்தருளவும்.

யுனிக்கோட் எனப்படும் ஒருங்குறி, ஆப்பிளில் செயற்பட கீழ்க்கண்ட முறையை கையாள வேண்டும் என்று இணையத்தில் தகவல் கிட்டியது.

Since the release of the latest Mac OS version 10.4 (Tiger), Tamil Unicode support is available at the operating system level for Apple computers. The system software comes with a Tamil Unicode font called InaiMathi, which can display all Tamil characters. The OS provides two keyboard layout options: Murasu Anjal (somewhat phonetically based) and Tamilnet99.

Tamil Unicode webpages should display correctly by default. To enable Tamil Unicode keyboard support on Mac OS 10.4, do the following:

■Open "System Preferences..." (available under the Apple sign)
■Select "International" (under Personal)
■Select "Edit List..." (under Language)
■Click "Show" (next to Tamil)
■Click "OK"
■Select "Input Menu" (under International)
■Click "ON" next to Murasu Anjal Tamil
■Confirm that Anjal and Tamil99 are selected (under Murasu Anjal Tamil)
■Close the window (press red button)
■To input in Tamil, click on the national flag menu (likely US flag) on the vertical bar at the top of the screen and select one of the keyboards. The font will by default be InaiMathi.

aren
07-08-2011, 09:07 AM
நான் ஆப்பிள் மாக் ப்ரோ தான் உபயோகிக்கிறேன். நான் எந்த மென்பொருளையும் தமிழ்மன்றத்திற்கு வருவதற்கு உபயோகிக்கவில்லை.

இப்போது தட்டச்சு செய்துகொண்டிருப்பதும் என்னுடைய ஆப்பிள் மாக் ப்ரோ மூலம்தான்.

அன்புரசிகன்
08-08-2011, 12:05 AM
ஆங்கிலத்திற்கு பொருத்தருளவும்.

யுனிக்கோட் எனப்படும் ஒருங்குறி, ஆப்பிளில் செயற்பட கீழ்க்கண்ட முறையை கையாள வேண்டும் என்று இணையத்தில் தகவல் கிட்டியது.

Since the release of the latest Mac OS version 10.4 (Tiger), Tamil Unicode support is available at the operating system level for Apple computers. The system software comes with a Tamil Unicode font called InaiMathi, which can display all Tamil characters. The OS provides two keyboard layout options: Murasu Anjal (somewhat phonetically based) and Tamilnet99.

Tamil Unicode webpages should display correctly by default. To enable Tamil Unicode keyboard support on Mac OS 10.4, do the following:

■Open "System Preferences..." (available under the Apple sign)
■Select "International" (under Personal)
■Select "Edit List..." (under Language)
■Click "Show" (next to Tamil)
■Click "OK"
■Select "Input Menu" (under International)
■Click "ON" next to Murasu Anjal Tamil
■Confirm that Anjal and Tamil99 are selected (under Murasu Anjal Tamil)
■Close the window (press red button)
■To input in Tamil, click on the national flag menu (likely US flag) on the vertical bar at the top of the screen and select one of the keyboards. The font will by default be InaiMathi.

இப்படியானவை ஐபாட் இல் இருக்காது அண்ணா. இது மக் இன் இயங்கு தளம் அல்ல. இது iOS இயங்கு தளம். iphone இன் சற்றே பெரிய வடிவம் தான் இந்த IPAD. சில வசதிகள் அதிகமாக உள்ளனவே அன்றி மக் இன் இயங்கும் அல்ல. உதாரணமாக அண்மைய மக்கின் புதிய இயங்குதள வெளியீடு லயன் (http://www.apple.com/au/macosx/). அது ஐபோனுக்கு அல்ல. அதற்காக தான் வரும் மாதத்தில் iOS 5 (http://www.apple.com/au/ios/ios5/)வெளியிட உள்ளார்கள்.

ஐபாடில் ஒருங்குக்குறிகள் (தமிழ் மட்டுமல்ல) படிப்பதற்கு எந்த பிரச்சனையும் வராது. எழுதுவதுக்கு தான் சற்று சிரமப்படவேண்டி வரலாம். காரணம் நேரடியாக தட்டச்ச இயலாது. செல்லினம் போன்ற செயலிகளால் தட்டச்சி பேஸ்ட் பண்ண வேண்டி வரும். அவ்வளவே...

பாரதி
08-08-2011, 01:22 PM
மேலதிக தகவல்களுக்கு நன்றி அன்பு.

Mano.G.
13-08-2011, 05:34 PM
ஐ பேட் 2 வாங்கி ஆச்சு,
தமிழ்மன்றத்தை தெளிவா
பார்க்க வாசிக்க முடியுது,

இந்த பினூட்டத்தை ஆப்பில்
ஐ பேட் 2ன் யுனிகோட் கன்வெட்டர் மூலம்
தட்டச்சு செய்யபட்டு பதிவேற்றபட்டது

மனோ.ஜி

பாரதி
13-08-2011, 06:58 PM
ஐ பேட் 2 வாங்கி ஆச்சு,
தமிழ்மன்றத்தை தெளிவா
பார்க்க வாசிக்க முடியுது,

இந்த பினூட்டத்தை ஆப்பில்
ஐ பேட் 2ன் யுனிகோட் கன்வெட்டர் மூலம்
தட்டச்சு செய்யபட்டு பதிவேற்றபட்டது

மனோ.ஜி
மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன் அண்ணா.
அசத்துங்கள்.
நானும் இப்போதுதான் ஒரு கணினியில் உபுண்டு 11.04 ஐ நிறுவி அதிலிருந்து தமிழில் தட்டச்சுகிறேன்.