PDA

View Full Version : அன்றொருநாள்: ஆகஸ்ட் 05innamburan
04-08-2011, 06:45 PM
அன்றொருநாள்: ஆகஸ்ட் 05

தென்னாஃப்பிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் 1947லிருந்து பல வருடங்கள் தொடர்பு கிடையாது, சமீப காலம் வரை. ஏனெனில் இந்தியாவுக்கு அந்த நாட்டின் நிறவெறி பிடிக்காது. அண்ணல் காந்தியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது அங்கே தான் என்பதும் வரலாறு. அந்த நாட்டின் பிரபல மத போதகர் ஆர்ச்பிஷப் டெஸ்மாண்ட் டுடு அவர்கள் சொல்வதைக் கேளும், "தென்னாஃப்பிரிக்காவின் ‘வாய்மை & சர்வசம்மத கமிஷனின் முன் தங்களுடைய மனவலியையும், மனக்கசப்பையும் முன்னிறுத்தாமல், பெருந்தன்மையுடன் அவரவரது கதைகளை கூறிய பெரியோர்களின் சாக்ஷியத்தைக் கேட்டேன்.” இதன் பின்னணியில், இன்றைய தினம், ஆகஸ்ட் 5, 1964 ஆம் தேதி, 17 மாதங்களுக்கு அஞ்ஞாதவாசம் செய்த பின், அமெரிக்க உளவு தளத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு, கைதாகி, ஐந்து வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, அதன் தொடர்பாக, மற்ற கடும் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஃபெப்ரவரி 11, 1990 வரை, 27 வருடங்கள் சிறை வாசம் செய்த பின்னும், தன்னுடைய மனவலியையும், மனக்கசப்பையும் முன்னிறுத்தாமல், பொது ஜன சேவையிலும், விசாலமான சாந்தி பர்வம் அமைக்க, பரந்த மனதுடன் இயங்கிய சான்றோனின் பெயர், நெல்சன் மண்டேலா. பழங்குடி பரம்பரை. அவர்களில் முதல் முதலாக பள்ளி சென்ற மாணவன். வாத்தியரம்மா தான் நெல்சன் என்று நாமகரணம் செய்தார்.
டைம்லைன்: அரசின் நிறவெறி போக்கைக் கண்டிக்க ஆஃப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ்ஸில் 1944 இல் இணைந்த மண்டேலா அவர்கள் படாத இன்னல்கள் கிடையாது. தேசத்துரோகி என்று குற்றச்சாட்டப்பட்டு ஐந்து வருடங்கள் (1956 -61) வழக்கு நடந்தது; அரசு தோற்றது. ஆனால் ஆஃப்பிரிக்கன் நேஷனல் காங்கிரஸ் தடை செய்யப்பட்டது. மண்டேலா கட்சியில் ராணுவப்போக்கில் ஒரு பிரிவு இருக்கவேண்டும் என பிரஸ்தாபித்தார். அதற்கு தடையாக இருக்கப்போவதில்லை என்று கட்சித்தலைமை கூற, ‘உம்கோண்டோ வி ஸிஸ்வி’ (தேசாபிமான வேல்) என்ற அமைப்பு உதயமாயிற்று. அரசும் சுதாரித்துக்கொன்டது. 1962 இல் மண்டேலாவை கைது செய்து ஐந்து வருட கடுங்காவல் தண்டனை விதித்தது. வன்முறை மூலம் அரசை கவிழ்க்கச் சதி செய்தார் என்று குற்றப்பத்திரிகை. காந்திஜிக்கும், திலகர் முனிவருக்கும் அவ்வாறே. கலோனிய அரசுகளுக்கு விவஸ்தை கிடையாது. ஜூன்12, 1964 இல் ஆயுள் தண்டனை. ஒன்று பார்த்தீர்களா? சிறை வாசம் ஆக்கபூர்வமான தருணம். உலகப்புகழ். எழுத, படிக்க, திட்டமிட அவகாசம். திகார் ஜெயில் பார்க்கிறீர்கள், சலுகை மழை. இவருக்கோ, ஆறுமாதத்திற்கு ஒரு விசிட்டர்! ஒரு மடல்! இதற்கு நடுவில் லண்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பாடங்கள்! மனுஷன் ஒடிஞ்சுப்போயிருப்பான் என்று நினைத்தார்கள். 1985 இல் நிபந்தனை-விடுதலை அளிப்பதாக ஆஃபர். ஐயாவின் பதில்,”மக்களுக்குத் தடை; எனக்கு விடுதலை என்றால், நான் சிறையில் இருப்பதாகத்தான் பொருள். கைதிக்கு உங்களுடன் பேச்சு நடத்த தகுதி இல்லை.’
‘நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்’ என்ற உலக போராட்டமே தொடங்கிவிட்டது. இவருக்கும், வெள்ளையர் தலைவர் எஃப்.டிகிளேர்க் அவர்களுக்கும் சேர்ந்து 1993 இல் நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த கதை பெரிது. தன்னை சிறையில் அடைத்த ஸ்மட்ஸ் துரைக்கு (அவருக்கும் காந்திஜிக்கும் கிருத்துவ கருணையுள்ளத்தின் மீது அதீத ஈடுபாடு.) தன் கையால் சக்கிலியம் செய்த செருப்பை பரிசு அளித்ததிலிருந்து தொடருகிறது.
விடுதலை ஃபெப்ரவரி 11, 1990 அன்று. திரு.மண்டேலாவின் பிரகடனத்துடன் முடித்துக்கொள்கிறேன். அன்று அது உடனடியாக புவியெங்கும் ஒலித்தது.
“ நானும் என் கட்சியும் வெள்ளையர் மைனாரிட்டியுடன் அமைதியாக, எல்லாவற்றையும் மன்னித்து எழும் சம்மத மனப்போக்குடன், வாழ விரும்புகிறோம். எங்கள் வன்முறை தற்காப்பு வன்முறை. அது கூட இல்லாத சமாதானத்தை நாடுகிறோம். எங்கள் இலக்கு: கறுப்பர் மெஜாரிட்டிக்கு சாந்தியும், வாக்குரிமையும்.”
இன்னம்பூரான்
05 08 2011
http://www.indianstampghar.com/wp-content/uploads/2008/09/scan00941.jpgஉசாத்துணை:
http://nobelprize.org/nobel_prizes/peace/laureates/1993/mandela-bio.html

நாஞ்சில் த.க.ஜெய்
04-08-2011, 06:59 PM
தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா அவர்களின் போராட்டவாழ்க்கை ...தொடரட்டும் உங்கள் அன்றொரு நாள். ....