PDA

View Full Version : என்னைப் பொருத்தே....



Nivas.T
04-08-2011, 12:04 PM
http://www.whitetimer.com/white%20time.jpg

இதோ இருக்கிறேன் நான் என்று சொல்லப்படுகிறது
அனைத்திற்கும் தொடக்கமும்
முடிவுமாய் நானே

என்னுள் அனைத்தும்
என்னால் அனைத்தும்
என்று இறுதியாய் நம்பப்பட்டாலும்
என்னைக் கணக்கிட்டதாய் தெரியவில்லை

எனக்கென்று ஆதியுமில்லை
அந்தமுமில்லை
எதுவாய் இருக்கிறேன் என்பதும் புலப்படுவதுமில்லை

தொடக்கமென்பது உண்டா?
என்பது உறுதியில்லை
நடப்பவை அனைத்திற்கும்
அடையாளப்படுத்தப் படுகிறேன்
என்பது மட்டுமே உறுதி

நான் கடப்பதாய் சொன்னாலும்
என்னால் அனைத்தும் கடப்பதென்பது
பொருத்தமானது

அனைத்திற்கும் நானே கணக்கீட்டாலன்
அனைத்திற்கும் நானே காரண கார்த்தா

நிலையானதென்பது என்னிடம் இல்லை
நிலையில்லா நிலையில்
முடிவிலியாய்
நான் மட்டும் நிலைத்திருக்க

நிகழ்வு என்பதே நான் என்று இருக்க
ஒவ்வொரு நிகழ்வும் என்னைப் பொருத்தே
ஒவ்வொரு அமைப்பும் எனது நிகழ்வே

dellas
04-08-2011, 06:13 PM
அட ..அண்டத்தையும், கடவுளையும் அழகாக இருபொருள்பட..

பாராட்டுக்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
04-08-2011, 07:04 PM
.முதல்முறை படித்தேன் விளங்கவில்லை மறுமுறைபடித்தேன் விளங்கியது கவிதையின் சாராம்சம் .. .இன்றும் எம்மை வழிநடத்தும் இறைவனை உணர்த்தும் கவிதை வரிகள் ....

Nivas.T
05-08-2011, 05:10 AM
அட ..அண்டத்தையும், கடவுளையும் அழகாக இருபொருள்பட..

பாராட்டுக்கள்.

பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி டெல்லாஸ்

Nivas.T
05-08-2011, 05:12 AM
.முதல்முறை படித்தேன் விளங்கவில்லை மறுமுறைபடித்தேன் விளங்கியது கவிதையின் சாராம்சம் .. .இன்றும் எம்மை வழிநடத்தும் இறைவனை உணர்த்தும் கவிதை வரிகள் ....

ஊக்கப்படுத்தும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெய்

Nivas.T
08-08-2011, 04:08 PM
காலம் என்பதே நான் - என்று உணர

Ravee
09-08-2011, 11:52 AM
எங்கிருந்து ஆரம்பித்தாய் என்றேன்
உன் காலடியில் இருந்துதான் என்றான்
எங்கே முடிகிறாய் என்றேன்
திரும்பி பார் உன் காலடியில்தான் என்றான்

Nivas.T
09-08-2011, 03:30 PM
எங்கிருந்து ஆரம்பித்தாய் என்றேன்
உன் காலடியில் இருந்துதான் என்றான்
எங்கே முடிகிறாய் என்றேன்
திரும்பி பார் உன் காலடியில்தான் என்றான்

எல்லாமே அப்படித்தான் அண்ணா
பார்க்கும் விதத்தை பொறுத்தே மாறுகிறது

மிக்க நன்றி