PDA

View Full Version : அன்றொருநாள்: ஆகஸ்ட் 02innamburan
01-08-2011, 07:51 PM
அன்றொருநாள்: ஆகஸ்ட் 02
ஒரு நாள் அப்பா என்னை தன்னுடைய ஆசான், ஆராய்ச்சி பேரறிஞர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் அவர்களைக் காண, அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு அழைத்து சென்றிருந்தார். ஆசான் முன்னால், அவர் எவ்வளவு சொல்லியும், இவர் அமரவேயில்லை. இதை நினைவூட்டியது, நம் மின் தமிழ் அன்பர் ரெ.கா. அவர்களின் பின்னூட்டம்: (உசாத்துணையில் இருக்கும் முனைவர். மு.இளங்கோவனின் கட்டுரைக்கு: அதையும் படித்து விடுங்கள்).
‘நான் தனிநாயகம் அடிகளாரின் மாணவன். 1968இல் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நான் இளங்கலைப் பட்டம் வாங்கியது அவரிடமே. எனக்கு external examiner ஆக பேராசிரியர் மு.வ.இருந்ததும் நான் பெருமையோடு எண்ணிப் பார்க்கும் ஒன்று. இந்த இரண்டு பேரும் என் விடைத்தாள்களைப் பரிசீலித்து எனக்கு முதல் வகுப்புப் பட்டம் கொடுத்தார்கள். அடிகளாரின் துறைத் தலைமைத்துவம் முழுவதிலும் அவர் கொடுத்த ஒரே முதல் வகுப்புப் பட்டம் எனக்குத்தான். பெருமைக்காகச் சொல்லவில்லை. அருமைக்காகச் சொன்னேன்.’

இன்று ஒரு பரிசுத்தமயமான தினம். ஆம். ஆகஸ்ட் 2, 1913 அன்று யாழ்ப்பாணம், கரம்பொன் என்ற இடத்தில் அவதாரம்; இயற்பெயர் நாகநாதன்; குடும்பம் கிருத்துவத்தை தழுவியது. புதுப்பெயர்:சேவியர் ஸ்தனிசுலாசு. கத்தோலிக்க பாதிரியானார். துறவியின் பெயர் தான் சேவியர்.எஸ். தனிநாயகம் அடிகளார். அவரை பற்றி நான் அறிந்தது குறைவு. அவரது தமிழ் யாத்திரையில் சில மைல்கல்களை மட்டும் குறிப்பிடுகிறேன். முனைவர். மு. இ. மாதிரி என்னால் எழுதமுடியுமா என்ன?
நெல்லையில் பண்டித குருசாமி சுப்பிரமணிய ஐயர் அவர்களிடம் தமிழ் பாடம். (தன் 32 வது வயதில் தான் அவருக்கு தமிழார்வம் ஏற்பட்டது என்று ஒரு குறிப்பு சொல்கிறது. எனக்கு அது சரியாகப்படவில்லை.) அதற்கு பின் தமிழ் விரிவுரையாளராக, இலங்கை பல்கலைக்கழகத்தில். லண்டனில் முனைவர் பட்டம். தமிழின் மேன்மையை, ஆங்கிலத்தின், பதிவு செய்தால் தான் தனது தமிழ்த்தூது நிறைவேறும் என்ற தெளிவுடன் Tamil Culture என்ற ஆய்வு இதழை 1952லேயே தொடங்கினார். அது 1966ல் நின்று விட, ‘தமிழியல்’ என்ற பெயரில், அவர் தொடங்கிய ஆய்விதழ், இன்றும் ெளிவருகிறது. தமிழின் பெருமையை உலகெங்கும் மென்மையாக, புலமையுடன் பறை சாட்டிய அடிகளார், தமிழ் கற்றது அண்ணாமலை பல்கழகத்தில். பரப்பியதோ, இலங்கை, மலேயா, ஃப்ரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ப்ரேசில், மெக்ஸிகோ, ஈக்வடார், சில்லி என்ற பல நாடுகளில். அவர் பன்மொழிப்புலவராக ( ஆங்கிலம், லத்தீன், இத்தாலியன், ஃப்ரென்ச், ஜெர்மான், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ்,)இருந்தததால் தான், இது சாத்தியமாயிற்று. தமிழர்களல்லாத புலவர்களுக்கு - கமில்.ஸ்வெபல், ஃபிலியோஸட், எமெனெவ், குலிப்பர், நெளல்டன், மார், பாக்ஸர், பர்ரோ - தமிழார்வம் ஏற்படுத்தியதில், அடிகளாருக்கு பெரும்பங்கு உண்டு. உலக அளவில் தமிழ் சங்கங்களும், விழாக்களும், ஆராய்ச்சியும் இயங்குவதற்கு, டில்லியில் ஒரு சந்திப்பில்,பேராசிரியர்கள் கமில்.ஸ்வெபல், வி.ஐ.சுப்ரமணியம் அவர்களின் துணையுடன் உலக தமிழாராய்ச்சி நிலையம் அமைக்க வித்திட்டவர் அடிகளார்.
தன்னுடைய உலக யாத்திரைகளின் போது, அரிய நூல்களை பல கருவூலங்களில் கண்டு பிடித்து, விவரங்களை பதிவு செய்தார். ப்ரோனோகோவின் தமிழ்- போர்ச்சுகீஸ் அகராதியின் அச்சுப்பதிவு கொணர்ந்தார். ( முதல் பதிப்பின் ஒரு பிரதி, திருமதி.ராஜத்திடம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.) அவருடைய ஆய்வுக்களங்கள் பல. இன்று தமிழ் சார்ந்த உலக அமைப்புகள், அவரது நினைவார்த்தமாகவே என்று சொல்வது, மிகையாகாது.
அடிகளார் ஏசு பிரானின்காலடியில் சரணடைந்த தினம், ஸெப்டம்பர் 1, 1980.

http://www.jaffnatoday.com/wp-content/uploads/2011/01/Murukapoopathy.jpg
இன்னம்பூரான்
02 08 2011
உசாத்துணை
http://muelangovan.blogspot.com/2008/12/02081913-01091980.html

நாஞ்சில் த.க.ஜெய்
02-08-2011, 06:41 AM
தமிழுக்காக தன்னை அர்பணித்த ஒரு சிலரை தவிர பலரை மறந்துவிட்டோம் ..அப்படியிருக்க அறியாத தமிழ் தொண்டர் சேவியர்.எஸ். தனிநாயகம் அடிகளார் அவர்களின் பணியினை இந்த பதிவின் மூலம் அறிய முடிந்தது ...இது போன்று அறிய தகவல்களை தரும் இன்னம்பூரான் அவர்களின் பணிக்கு என் நன்றி ..தொடர்ந்து தாருங்கள் ....