PDA

View Full Version : ஈர்ப்பும் -இசையும்



இளசு
13-12-2003, 05:03 PM
ஈர்ப்பும் - [b]இசையும்

கடமை வயல்வெளி
காம எரிமலை
பாசப் பெருங்கடல்
வாக்குவாதச் சூறாவளி
தத்துவார்த்த மாயவெளி
அரசியல் அவலப் புதைசேறு
நகைச்சுவைக் காட்டாறு
கோப மின்னல்
சோக மழை
தனிமைப்பாலை
இருள் எண்ணக் காடு
உயர் எண்ண இமயம்
தமிழ்ப் பூஞ்சோலை
கனவுத் தொழிற்சாலை



இவை இழுக்கா தனிமையில்
உண்மையான நான்...

உள்ளுக்குள் ஓடும்
மெல்லிசை முணுமுணுக்க
என் எடை அழிந்து
என்னில் நான் மிதக்க
என்னையே பார்க்கும் நான்...

ஆம்...
விசையில்லா பொழுதுகளில்
இசையாகவே நான்...


இசையின் பெயர் - நீ!

நிலா
13-12-2003, 06:01 PM
தலை அருமை!


கடமை வயல்வெளி
காம எரிமலை
பாசப் பெருங்கடல்
வாக்குவாதச் சூறாவளி
தத்துவார்த்த மாயவெளி
அரசியல் அவலப் புதைசேறு
நகைச்சுவைக் காட்டாறு
கோப மின்னல்
சோக மழை
தனிமைப்பாலை
இருள் எண்ணக் காடு
உயர் எண்ண இமயம்
தமிழ்ப் பூஞ்சோலை
கனவுத் தொழிற்சாலை

புல்லரிக்குது!


என் எடை அழிந்து
என்னில் நான் மிதக்க
என்னையே பார்க்கும் நான்...


அதிலும் தெரிவது நானில்லை நீ எனும்படியாய் என்ன ஒரு வரிகள்!

இசையால் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருங்கள்!நாங்களும் சந்தோஷத்தில் மிதக்க!

முத்து
13-12-2003, 06:02 PM
இளசு அண்ணா ..
அருமை .. அருமை ...
அனைவருக்கும் பொருந்தும் அற்புதமான வரிகள் ..
ஒவ்வொருவருக்கும் சில வார்த்தைகள் மட்டுமே
அங்காங்கே கொஞ்சமாய் இடமாறும் ..

poo
13-12-2003, 06:51 PM
கவிவளம் இல்லையெனக்கு...
இனியும் கதைகள் வேண்டாம்...
என்ன வளம் இல்லையுனக்கு?!!

அண்ணா... வாழ்த்துக்கள்.... இசைப்ப்ரியனாய் நீங்களிருப்பதால் காக்கைகளும் குயிலாய் உங்களுக்கு!!

அனைத்திலும் இலாபமேயுனக்கு!!

lavanya
13-12-2003, 11:19 PM
இவை இழுக்கா தனிமையில்
உண்மையான நான்...



நம்பமுடியலையே...மேலே சொன்ன எல்லாத்திலேயும் உங்க பங்கு
கணிசமா இருக்கே ....

கவிதையில் சுயம் தன்னடக்கமாய் வெளிப்பட்டிருக்கிறது.
பாராட்டுக்கள் ...

பாரதி
14-12-2003, 04:20 PM
அதானே...நான் சொல்ல நினச்சதயே சொல்லிட்டீங்க வி.வி.
அண்ணா... உங்கள் எழுத்துக்கள் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கின்றன... பாராட்டுக்கள்.

Nanban
20-12-2003, 12:15 PM
[quote]ஈர்ப்பும் - [b]இசையும்



உள்ளுக்குள் ஓடும்
மெல்லிசை முணுமுணுக்க
என் எடை அழிந்து
என்னில் நான் மிதக்க
என்னையே பார்க்கும் நான்...

ஆம்...
விசையில்லா பொழுதுகளில்
இசையாகவே நான்...

கவிஞன்
வடிவு கொடுத்தான்
சிரத்தையாக.

இசைஞன்
நல்லாடை தந்தான்
அக்கறையாக.

பாடகன்
இதயத் துடிப்பை ஊற்றினான்
இழைந்து இழைந்து.....

படைத்து விட்டனர் -
பதுமையாக
உன்னை.

இனி
இந்த இசையினுள்
உறையும் ஆத்மா தான்
பாக்கி.

வரவா,
நீ உறையும்
ஆத்மாவாக -
நான்?

Nanban
20-12-2003, 12:23 PM
[quote="நிலா"]
புல்லரிக்குது!
[quote]

நிலவுக்குப் புல்லரிப்பு.....

அடுத்த ராக்கெட்டில்
ஏறுங்கள்
அனைவரும் -
நிலவிற்கு.

அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு முன்
அங்கிருக்க வேண்டும்.

ஏக்கர் கணக்கில்
வளைத்துப் போட வேண்டும்
நிலவில் நிலத்தை....

காணி நிலம்
பாரதிக்கு வேண்டுமானால்
போதுமாயிருக்கலாம் -
எனக்கில்லை.

பிராண வாயு அற்றுப் போன
மரணப் பாலையில்
நிலம் எடுத்து
என்ன செய்வாய்
மடையனே!

கவலை வேண்டாம் -
அரிக்கச் செய்ய
புல் முளைக்கும் பொழுது
அங்கே வாழும் வழி
இருக்கத் தான் செய்யும்.......

(இனிமே, நிலா புல்லரிக்கிறதுங்ற வார்த்தையேவே உபயோகிக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.)

rambal
08-04-2004, 05:13 PM
வார்த்தைச் சடுகுடு விளையாடியிருக்கும் இளசு அண்ணனுக்கு காலங்கடந்த பாராட்டுக்கள்..