PDA

View Full Version : அலையும் மனத்திற்கு ஆதரவாய்….கீதம்
31-07-2011, 11:43 PM
முடிவிலியாய் நீண்டுதொடரும்
கோடுநிறைப் புள்ளிகளுக்கு நிகராக
மனவெளியெங்கும் இறைந்துகிடக்கும்
எண்ணங்களின் விதைப்புகள்!
இண்டுகளிலும் இடுக்குகளிலும்
இறுகப்பற்றி வேர்விடும் ஆலமரமென
அழுந்திப் படரும் நினைவுகளின் முடிச்சுகளில்
முரண்பட்டு நிற்கும்
மனமுவந்த நிகழ்வுகளின் நெருடல்கள்!

விழிநீரின் வெம்மையில் வெந்தபடி வெளியேறும்
சில வைராக்கியங்களை விழுங்கத் தலைப்படும்
சொல்லொணாத் துயரம் விழுங்கி,
தொலைதூர அடர்வனமொன்றில்
துணையற்றுத் தனித்தொலிக்கும்
ஒற்றைப்பறவையின் சோகத்துக்கிணையாக
உள்ளாடும் உயிர்த்துடிப்பைச் சுமந்தபடி
அலையும் மனத்திற்கு ஆதரவாய்….

நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
திசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்!

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 05:57 AM
சொல்லொணாத் துயரம் விழுங்கி,
தொலைதூர அடர்வனமொன்றில்
துணையற்றுத் தனித்தொலிக்கும்
ஒற்றைப்பறவையின் சோகத்துக்கிணையாக

மிகவும் அருமை இந்த வரிகள் ...இந்த வரிகளில் தன் தேசம் விட்டு மறு தேசம் செல்லும் மனிதர்களின் தனிமை துயரினை காண முடிகிறது ..வாழ்த்துகள் கீதம் அவர்களே ...

ஜானகி
01-08-2011, 06:17 AM
ஆலமரத்தின் அடிவாரத்திலே....

மூலவேரின் பிடி ஈரத்திலே....

அன்பெனும் அமுதும், நட்பெனும் சாரலும்

தெம்பு தரும் மனம் உயிர்த்தெழவே.....

வாட்டமுறாதே மென்கொடியே...

கேட்டிலையோ தூரத்துக் குயிலின் குரல்...?

கீதம்
08-08-2011, 09:59 AM
மிகவும் அருமை இந்த வரிகள் ...இந்த வரிகளில் தன் தேசம் விட்டு மறு தேசம் செல்லும் மனிதர்களின் தனிமை துயரினை காண முடிகிறது ..வாழ்த்துகள் கீதம் அவர்களே ...

நேசமுடனான பின்னூட்டத்துக்கு நன்றி ஜெய்.

கீதம்
08-08-2011, 10:01 AM
ஆலமரத்தின் அடிவாரத்திலே....

மூலவேரின் பிடி ஈரத்திலே....

அன்பெனும் அமுதும், நட்பெனும் சாரலும்

தெம்பு தரும் மனம் உயிர்த்தெழவே.....

வாட்டமுறாதே மென்கொடியே...

கேட்டிலையோ தூரத்துக் குயிலின் குரல்...?

உண்மையில் உங்கள் பின்னூட்டம் கண்டு, சோர்ந்த மனத்துள் ஒரு சந்தோஷம் படர்கிறது. நன்றி ஜானகி அம்மா.

Nivas.T
08-08-2011, 12:43 PM
வாழ்க்கையில் வருத்தமென்பதே இல்லையெனில்
இன்பமென்பதே தெரிவதில்லை
வாழ்க்கை என்றுமே இனிப்பதில்லை

சத்திரமாய் இருக்கட்டும் மனது
அவ்வப்போது தங்கிபோகட்டும் துன்பமும் வருத்தமும்

ஒரு இலையுதிர் காலம் என்பது
அடுத்த வசந்தகாலத்தின் தொடக்கமே

கவிதை மிக அருமைங்க

சிவா.ஜி
08-08-2011, 01:00 PM
அல்லாடும் மனதுக்கு ஆறுதலாய் அறிமுகமற்ற நட்புக்களே துணை நிற்கும்போது....அன்பான உள்ளங்கள் ஆதரவாயிருக்காதா.....

அழகான வார்த்தையாடலில்...அல்லாடும் மனம் சொன்னவிதம் மிக அருமைம்மா. வாழ்த்துக்கள் தங்கையே.

Ravee
09-08-2011, 11:37 AM
தொலைதூர அடர்வனமொன்றில்
துணையற்றுத் தனித்தொலிக்கும்
ஒற்றைப்பறவையின் சோகத்துக்கிணையாக

வலியின் வார்த்தைகளை சில இடங்களில் அழகாக தொட்டு சொல்லி இருக்கிறீர்கள் அக்கா ...

நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
திசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்

அத்தகைய நட்புகள் எப்போதும் என் அருகில் இருந்திருந்தால் முகவரி தவறிய கடிதமாய் முத்திரைகளால் குத்தப்பட்டு சேருமிடம் சேராமல் .... முடங்கி இருந்திருக்கமாட்டேன்.

கருணை
14-08-2011, 06:37 AM
உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளில் சொல்லுறீங்க அக்கா ... நான் இது போல எழுதி பார்த்தால் அது கடிதம் போல இருக்கு .... படிக்க மட்டும் மன்றம் வந்து போகிறேன் பகிர்ந்து கொள்ள கஷ்டமாக இருக்கு.

kulirthazhal
14-08-2011, 10:27 AM
ஒவ்வொரு சோகமும் ஏக்கமும் கவிதையாய் பிறந்த பின்பு நாம் தேடும் ஆறுதலை தரும் தமிழ்மன்றம் உங்களின் கவிதையின் கதாநாயகனாக என் கண்ணில்... கவிதை படிக்கும்போதே சோகத்திற்கும் ஆறுதலுக்கும் தேடல் உறவாய் இருப்பதாக எனக்கு சொல்லிக்காட்டுகிறது.. நன்றி...

கீதம்
21-08-2011, 02:03 AM
வாழ்க்கையில் வருத்தமென்பதே இல்லையெனில்
இன்பமென்பதே தெரிவதில்லை
வாழ்க்கை என்றுமே இனிப்பதில்லை

சத்திரமாய் இருக்கட்டும் மனது
அவ்வப்போது தங்கிபோகட்டும் துன்பமும் வருத்தமும்

ஒரு இலையுதிர் காலம் என்பது
அடுத்த வசந்தகாலத்தின் தொடக்கமே

கவிதை மிக அருமைங்க

அழகான வரிகளால் ஆறுதல் சொல்கிறீர்கள் நிவாஸ். அன்பான நன்றி.

கீதம்
21-08-2011, 02:10 AM
அல்லாடும் மனதுக்கு ஆறுதலாய் அறிமுகமற்ற நட்புக்களே துணை நிற்கும்போது....அன்பான உள்ளங்கள் ஆதரவாயிருக்காதா.....

அழகான வார்த்தையாடலில்...அல்லாடும் மனம் சொன்னவிதம் மிக அருமைம்மா. வாழ்த்துக்கள் தங்கையே.

எப்பொழுதும்போல் ஊக்கம் தரும் பின்னூட்டமிட்டு உற்சாகமளித்ததற்கு நன்றி அண்ணா.

கீதம்
01-09-2011, 10:39 PM
தொலைதூர அடர்வனமொன்றில்
துணையற்றுத் தனித்தொலிக்கும்
ஒற்றைப்பறவையின் சோகத்துக்கிணையாக

வலியின் வார்த்தைகளை சில இடங்களில் அழகாக தொட்டு சொல்லி இருக்கிறீர்கள் அக்கா ...

நோக்கமெதுவுமற்றுத் திரிந்து
திசைமாறிச்சொரியும் அன்பின் சாரல்களும்,
அதில் திளைத்தபடி ஆசுவாசப்படுத்தும்
அறிமுகமற்ற சில நட்புகளும்

அத்தகைய நட்புகள் எப்போதும் என் அருகில் இருந்திருந்தால் முகவரி தவறிய கடிதமாய் முத்திரைகளால் குத்தப்பட்டு சேருமிடம் சேராமல் .... முடங்கி இருந்திருக்கமாட்டேன்.

கடந்தவற்றைக் காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்றைய நாளை மட்டும் இனிதாய் மனதில் ஏற்றுவோமே. பின்னூட்டத்துக்கு நன்றி ரவி.

கீதம்
01-09-2011, 10:44 PM
உணர்ச்சிகளை அப்படியே வார்த்தைகளில் சொல்லுறீங்க அக்கா ... நான் இது போல எழுதி பார்த்தால் அது கடிதம் போல இருக்கு .... படிக்க மட்டும் மன்றம் வந்து போகிறேன் பகிர்ந்து கொள்ள கஷ்டமாக இருக்கு.

கவலைப்படாதீங்க கருணை, கடிதமும் படைப்பில் ஒரு வகைதான். எல்லோராலும் வெகு நேர்த்தியாய் கடிதம் எழுதிவிட முடியாது. சொல்லவேண்டியதைத் தெளிவாகச் சொல்லி, சொல்லக்கூடாததைத் திறம்படத் தள்ளி, எண்ணியவற்றையெல்லாம் எழுத்தாய் மாற்றி, எழும் ஐயங்களை உத்தேசித்து அதற்கான பதிலையும் ஏற்றி, முரணில்லாமல், முறுக்கில்லாமல் எழுத்தின் மூலம் இதயங்களில் இடம்பிடிப்பதும் ஒரு கலை.

எனவே தயங்காமல் எழுதுங்கள். எழுத எழுத எழுத்து வசப்படும். :icon_b:

கீதம்
01-09-2011, 10:52 PM
ஒவ்வொரு சோகமும் ஏக்கமும் கவிதையாய் பிறந்த பின்பு நாம் தேடும் ஆறுதலை தரும் தமிழ்மன்றம் உங்களின் கவிதையின் கதாநாயகனாக என் கண்ணில்... கவிதை படிக்கும்போதே சோகத்திற்கும் ஆறுதலுக்கும் தேடல் உறவாய் இருப்பதாக எனக்கு சொல்லிக்காட்டுகிறது.. நன்றி...

ஒத்த மனப் பிரதிபலிப்பு காண்கிறேன் உங்கள் பின்னூட்டத்தில். நன்றி குளிர்தழல்.

எனக்கு மட்டுமல்ல,

ஏராளமானவர்க்கு இதுதான் நட்புக்கூடம்.

ஏராள மாணவர்க்கு இதுதான் பள்ளிக்கூடம்.

நாடுவிட்டு வந்தப் பறவைகளை நடுக்கடலில் இளைப்பாற்றும் கட்டுமரம்.

கூடுகட்ட வரும் பறவைகளைக் குதூகலத்துடன் வரவேற்கும் காட்டுமரம்.