PDA

View Full Version : காணவில்லை



ஆளுங்க
31-07-2011, 04:57 PM
திறவாதிருந்த பெட்டி ஒன்று
திறந்து பார்த்தேன்
பல காலமாய் சேர்த்த
பல ஆயிரத்தில்
சில்வண்டு அளவு
சில்லரை கூட மிஞ்சவில்லை

எங்கே சென்றது
எந்தன் பணம்
தேடுகிறேன் பல நாளாய்
தேடலே தேய்ந்தது!

இழந்த பணம் அது
இனியாவது கிடைக்குமா? :traurig001:

நாஞ்சில் த.க.ஜெய்
01-08-2011, 04:50 AM
காணாமல் போனது பணம்
கூடவே சென்றது மனம்
கிடைக்குமா என் பணம்
என்று வரும் அந்த தினம்
என எண்ணும் நம்
மனம் அணு தினம் ..........