PDA

View Full Version : ஆனாலும் .......



lavanya
07-04-2003, 12:03 PM
உன் வாசல் வந்து
நேசம் சொல்லிக் காத்திருக்கும்
என் காதல்
உன் காலடி பட காத்திருக்கிறது
நீயோ செருப்பில்லாமல்
பயணித்துக் கொண்டிருந்தாய்.....

நீ பூவான நாளிலிருந்து
என் நேசத்தை
வேலியாக்கி உனக்கொரு
காதல் பாதை அமைத்து
கனவுகளோடு காத்திருந்தேன்...
நீயோ தூங்க விடவுமில்லை
தூங்க வைக்கவுமில்லை

எப்படியாவது உன்னிடம்
சேர்ப்பிப்பதற்காக எழுதிய
கடிதங்கள்-உன் விரல்
தொட்டு பிரிப்பதற்காக
உறங்கிக் கொண்டிருந்தன...
பத்திரமாக என் வீட்டு
அலமாரியில்......

உனக்கு தெரியாமல்
உன்னிடமிருந்து எடுத்துப் போன
சின்ன சின்ன பொருள்களுடன்
வாழ்ந்து கொண்டிருந்தேன்
பெரும்பான்மையாய் உன்னை
மறந்து இருக்கும் நேரங்களில்....

எல்லாமே விளையாட்டுதான்
உனக்கு......
கல் இடித்து ஏற்பட்ட உன்
கால் காயமாகட்டும்....
அதிகமாய் நீ நேசித்த உன்
செல்ல நாய் செத்துப் போனதையும்....
காதலைப் பிரித்து வெறிக் கூச்சலிடும்
சினிமா வில்லனாகட்டும்...
இன்னும் பிறவாகட்டும்...
எல்லாமே விளையாட்டுதான்
உனக்கு....
என்னையே உருக்கி உன்
மீது வைத்திருந்த
என் காதலும் கூட....

எப்படியாவது சொல்லி விட
ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தன...
உதடுகளும் மனசும்
உன்னை நேசிக்கிறேன் என்பதை...
சேர்ந்திருக்கும் நேரங்களில்
எல்லா நேரங்களிலும்
அவற்றை உணவாக்கி
கொண்டிருந்தது நம்
பாழாப்போன மௌனம்....

................................................
................................................

இப்போதெல்லாம்
உனக்கென இல்லையெனிலும்
தினம் தினம் எழுதிக் கொண்டிருக்கிறேன்
சில கவிதைகளை-சில ரத்தம் கசியும்
ஞாபகங்களுடனும்
படித்து பாதுகாத்து வைத்திருக்கும்
என் மனைவிக்காகவும்.....

rambal
07-04-2003, 01:17 PM
அன்பே..
எனக்கு உன் பார்வை வரம் வேண்டாம்...
ஏனெனிலோ,
பாடையில் போகும்
மனிதனுக்கெதுக்கடி
உன் பார்வை வரம்?



பாராட்டுக்கள் லாவண்யா அவர்களே..

karikaalan
07-04-2003, 01:48 PM
பேசவேண்டிய நேரத்துல பேசலைன்னா, இதுதான் கதி! நம்ம மனசுல இருக்கறதை அடுத்தவங்க அப்படியே புரிஞ்சுக்கணும்னு எதிர்பார்ப்பது எவ்வளவு தவறுன்னு பார்த்தீங்களா?

லாவண்யாஜி, கவிதை நன்றாகவே இருக்கிறது. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

poo
07-04-2003, 01:51 PM
ஆனாலும்.. இந்த கவிதையைப் பாராட்டாமல் போனால் மனிதனே இல்லை நான்...

பாராட்டுக்கள் லாவண்யா.

இளசு
07-04-2003, 06:13 PM
பாராட்டுகள் லாவண்யா அவர்களுக்கு....

அன்று கடலில் பெய்த காதல் மழை
இன்று கவிதை மேகமாய்
மனவியின் மனதிலும்
இந்த தமிழ்மன்றத்தின் முற்றத்திலும்....

puppy
08-01-2004, 06:08 AM
நல்ல கவிதை லாவ்..

Nanban
08-01-2004, 08:35 AM
எத்தனை நாட்கள் கழிந்தாலும், காதல் மட்டும் மாறாது. அதை எழுதும் வார்த்தைகளும் கசக்காது.......

நன்றி லாவ்.......

kavitha
08-01-2004, 09:45 AM
நன்றாக இருக்கிறது. மனதின் குரல் போல...இன்னும் தொடருங்கள்

பாலமுருகன்
08-01-2004, 01:02 PM
காதல் திகட்டாதது...காதலின் வரிகளும்.... எழுதுங்கள் லாவன்யா...உங்கள் வரிகளும் எங்களுக்கு திகட்டியதே இல்லை..

பாலா