PDA

View Full Version : முற்றுப்பெறாத மூன்று ஓவியங்கள்Ravee
29-07-2011, 11:59 PM
https://lh5.googleusercontent.com/-1yPADo44yuk/TjNHIEQB6_I/AAAAAAAAAvI/FP-m57fXmoE/nude_painting.jpg

முற்றுப்பெறாத மூன்று ஓவியங்கள்

ஓவிய பள்ளியில் பரபரப்பு
மூன்று நாட்கள் ... மூன்று மணி நேரம்
முக்கால் நிர்வாணமாய்
பெண் ஓவியம் வரைய வேண்டும்

முதல் நாள் வந்தாள் ஒரு விலை மாது
இடம் பொருள் எல்லாம் பார்த்தாள்
எண்ணிக்கை உயர்த்தி பேசி
காசு முதல் வாங்கி நேசமாய் பார்த்தாள்

கூச்சம் ஏதும் இல்லை அவளுக்கு
போதும் என்று கூறிய போதும் முற்றும் துறந்தாள்
கை விரித்து கால் பரப்பி
விட்டம் நோக்கி அமர்ந்தாள்

தலை முதல் கால் வரை தங்க சிலை
உதடுகள் இரண்டும் பலாச்சுளைகள்
என்ன இறுமாப்போ அவள் மார்புக்கு
அவளை போல விட்டம் நோக்கி இருந்தது

இடை ... இன்னும் கீழே என்று
எண்ணிக்கொண்டு இருக்கையில்
முடிந்தது ஒரு மணி நேரம் என்று
முடிவுக்கு காத்திராமல் படி இறங்கி போனாள்.

அழகுடன் சேர்ந்த ஆணவம்
அரை குறையாய் முடிந்தது ஓவியம்
வண்ணங்கள் பூசிய எண்ணங்கள் மட்டும்
கோட்டு ஓவியத்திற்கு உயிர் தர முயன்று தோற்றன.

மறுநாள் தாயொருத்தி
கையில் பிள்ளையுடன்
முந்திய நாள் கற்ற பாடம்
முடிவிலே கூலி என்றோம் கண்டிப்புடன்.

தன் சீலைதனை உரித்து தரையில் விரித்தாள்
தவழும் குழந்தையை தரையில் கிடத்தி
உச்சி மோர்ந்தாள் , முத்தம் பதித்தாள்
உடனே வருவேன் என்று உறுதி கூறி ஓரம் போனாள்.

தலை குனிந்தே மேல் சட்டை களைந்தாள்
கை மூடி மறைத்தாலும் கனிவான மார்பகங்கள்
அவள் கண்களை போலவே கசிந்தது
அவள் உடல் அங்கிருக்க உயிர் குழந்தையுடன்

என்ன நினைத்ததோ குழந்தை
ஏங்கி அழ ஆரம்பித்தது
உயிர் துடிக்கும் போது உடல் பொறுக்க வில்லை
ஓடி வந்து அணைத்தாள் குழந்தையை

இல்லாத குறைக்கு இந்த பிழைப்பா
இருப்பதை கொடுங்கள் போதும் என்றாள்
தாய்க்கு முன் பேரம் பேச தைரியம் இல்லை
கொடுத்ததை பெற்றுக்கொண்டாள் கை கூப்பி

கண் மூடி கன நேரம் யோசித்த பின்
கைகள் வரைய முயன்ற போதும்
கருத்து சிதைந்தது
நிர்வாணம் முழுவதும் தாயுருவாய் ...

எங்கெங்கோ அலைந்து எவரும் கிடைக்காமல்
எழுபது வயது மூதாட்டி கிடைத்தாள் இறுதியாக
அவள் களைவதற்கு பெரிதாய் ஒன்றும் இல்லை
அவள் கட்டி இருந்த கந்தல் துணி தவிர

ஒளி இழந்த கண்கள் வெறித்து இருக்க
காதுகளால் கண்கள் பார்த்தாள்
வற்றிய மார்பும் , வயிற்று சுருக்கங்களும்
அவள் வறட்சியை காட்டின

நேரம் பற்றிய நினைவுகள் இல்லை அவளுக்கு
யாரையோ எண்ணி விடும் பெருமூச்சு அதிர
இடை இடையே இடைவெளி விடாத இருமல்
குத்துக்கால் இட்டு இருந்தவள் குறுக்கே சாய்ந்தாள்

ஓவியம் முற்று பெறும் நிலையில்
உடல் சட்டையை உதறி உயிர் நிர்வாணமாய் பறந்தது
அந்த உண்மையான நிர்வாணத்தை எப்படி வரைவது ?
கண்கள் கசிந்ததில் கலைந்தது வண்ணங்கள் ...

M.Jagadeesan
30-07-2011, 12:22 AM
கவியும்,கருத்தும் அருமை! பாராட்டுக்கள் இரவி.

Ravee
30-07-2011, 12:50 AM
கவியும்,கருத்தும் அருமை! பாராட்டுக்கள் இரவி.

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி அய்யா ... :)

ஜானகி
30-07-2011, 01:33 AM
முற்றும் துறந்தவள் முற்றுப் புள்ளி ஆனாள்....

கற்றுத் தெரிந்தது எதுவோ...?

முதலும் முடிவும் அதுவே...!

இடையில் மறைப்பது மாயமெனும் ஆடை..!

தடையும் உடைவது எந்நாளோ..?

Ravee
30-07-2011, 05:32 AM
முற்றும் துறந்தவள் முற்றுப் புள்ளி ஆனாள்....

கற்றுத் தெரிந்தது எதுவோ...?

முதலும் முடிவும் அதுவே...!

இடையில் மறைப்பது மாயமெனும் ஆடை..!

தடையும் உடைவது எந்நாளோ..?

இதுதான் இளமை என்று இறுமாந்திருக்க
இமைக்கும் நேரத்தில் சென்றது இளமை

இளமை கனவோடு இளமை திமிர் போக
பொறுப்பும் தவிப்பும் களைப்புமாக கழிந்தது

எல்லாம் முடிந்து ஏக்கத்துடன் காத்து இருக்க
மூச்சு சுளித்து ஒரு முடிவுக்கு வருகிறது.

Nivas.T
30-07-2011, 07:15 AM
இளமை
தாய்மை
முதுமை

எதுவாக இருந்தாலும் நிர்வாணம் என்பது உடலுக்குத்தான் என்பது அறியாமை

கவிதை மிக அருமை அண்ணா

Ravee
30-07-2011, 07:57 AM
என்னை பொறுத்தவரை நிர்வாணம் மட்டுமே நிரந்தரம் நிவாஸ் ... அதை உடல் கூறாக பார்க்கவேண்டாம் ... உள்ளத்தையும் கூறு போடுங்கள் நம் உள்ளுக்குள் இருந்து உரித்து போட ஓராயிரம் உடுப்புக்கள் அணிந்து இருக்கிறோம்.... :)

Nivas.T
30-07-2011, 08:16 AM
பலர் அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று சொல்லவந்தேன் அண்ணா

இப்பொழுது திருத்திவிட்டேன் பாருங்கள் :)

கீதம்
31-07-2011, 11:32 PM
மனம் தொட்ட கவிதை, ரவி. இங்கு நிர்வாணம் என்பதை ஆடையுரித்தலாய் மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அதிலும் பொதிந்த அர்த்தங்கள் எத்தனை எத்தனை?

அழகிய நிர்வாணம்!
அதை ரசிப்பதிலேயே அரைமணி போனது,
அடடா, முற்றுப்பெறவில்லை முதல் ஓவியம்!

வறுமை சுமந்த நிர்வாணத்தின்
வயிற்றுப்பாடெண்ணிக் கலங்கியதில் ஆனது தாமதம்,
காலத்தே முற்றுப் பெறவில்லை இரண்டாவதும்!

வெறுமையின் நிர்வாணம், மூன்றாவது!
அவசரம் தேவையில்லை, ஆவி பிரிந்துவிட்டது,

குத்துக்காலிட்டுக் குந்தியிருக்க,
கூட்டுக்குள் ஆவி அவசியமில்லை...
பணம் பணமென்று
வாய்பிளந்து கேளாது பிணம்!
பொறுமையாக வரையலாம்,
பிணம் நாறுமுன் வேலை முடிந்தால் போதும்,
பாதகம் ஏதுமின்றி பக்குவமாய்
முற்றுப் பெற்றிடும் இம்முறை ஓவியம்,
படைக்கும் வெறி கொண்ட மனத்துக்குள்
நெறியும் நேயமும் இல்லாதிருந்தால்!

Ravee
03-08-2011, 12:01 PM
மனம் தொட்ட கவிதை, ரவி. இங்கு நிர்வாணம் என்பதை ஆடையுரித்தலாய் மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.

படைக்கும் வெறி கொண்ட மனத்துக்குள்
நெறியும் நேயமும் இல்லாதிருந்தால்!

இவை இரண்டும் இல்லாதிருந்தால் நாம் இருந்துதான் என்ன பயன் அக்கா .... :frown:

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
14-08-2011, 02:57 AM
ஒரு மாதிரியான கவிதை என்றுதான் நினைத்தேன. உண்மையிலேயே கவிதைக்கு மாதிரியாய் அமைந்து விட்டது. படம் இன்னும் பிரமாதம். வாழ்த்துக்கள ரவி.

Ravee
14-08-2011, 03:20 AM
ஒரு மாதிரியான கவிதை என்றுதான் நினைத்தேன. உண்மையிலேயே கவிதைக்கு மாதிரியாய் அமைந்து விட்டது. படம் இன்னும் பிரமாதம். வாழ்த்துக்கள ரவி.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சுனைத் ஹசனி .... :)

கருணை
14-08-2011, 06:27 AM
அங்கிள் ... எப்படி ஆரம்பித்தாலும் கடைசியில் சோகமாய் முடிக்கிறதே உங்க வழக்கமாய் போச்சு .... ஆனால் ரொம்ப வித்தியாசமாக பார்க்கிறீர்கள்... :redface:

Ravee
14-08-2011, 07:23 AM
அங்கிள் ... எப்படி ஆரம்பித்தாலும் கடைசியில் சோகமாய் முடிக்கிறதே உங்க வழக்கமாய் போச்சு .... ஆனால் ரொம்ப வித்தியாசமாக பார்க்கிறீர்கள்... :redface:

ம்ம் உன் வயசுக்கு இது சோகம்ன்னு படலாம் ஆனால் இன்னும் அடுத்த படி வாழ்க்கையில் எடுத்து போகும் போது அந்த வெற்றிடம் எல்லோருக்கும் தேவைபடுகிறது. அந்த நேரத்தில் ஏற்ப்படும் நிதானம் மனிதனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் .... :sauer028:

சரி சரி பல்லை கடிக்கிறது தெரியுது நிறுத்திக்கிறேன்.... :lachen001:

sridhara
14-08-2011, 07:16 PM
சொல்வதற்கு ஒன்றும் இல்லை ரவி.....................
'அருமை' என்றால் கவிக்கு பொருத்தம் இருக்காது........ வாழ்க நீர் !

Ravee
23-08-2011, 12:22 PM
சொல்வதற்கு ஒன்றும் இல்லை ரவி.....................
'அருமை' என்றால் கவிக்கு பொருத்தம் இருக்காது........ வாழ்க நீர் !

மிகவும் சுருக்கமாக வாழ்த்தி சென்றாலும் அதில் ஒரு அழுத்தம் கொடுத்து போய் இருக்கிறீர்கள் நன்றி ஸ்ரீதர்

innamburan
23-08-2011, 08:22 PM
மிகவும் உருக்கமான, மென்மையான கவிதை. பின்னலும் நேர்த்தி. வாழ்த்துக்கள். இன்பமான கவிதைகளும் தாருங்கள், நண்பரே.

Ravee
24-08-2011, 05:06 AM
நன்றி அய்யா ... அறுசுவையும் தந்தால் போச்சு .

சான்வி
24-08-2011, 05:10 AM
முற்றுப்பெறாத ஓவியத்தை சொல்ல
மனிதம் முற்றிய வரிகள்

அருமை என்பதைத்தவிர வேறன்ன சொல்கொண்டு நான் சொல்ல?? :icon_03::icon_good:

Ravee
24-08-2011, 05:19 AM
முற்றுப்பெறாத ஓவியத்தை சொல்ல
மனிதம் முற்றிய வரிகள்

அருமை என்பதைத்தவிர வேறன்ன சொல்கொண்டு நான் சொல்ல?? :icon_03::icon_good:

நன்றி சான்வி , எல்லோரும் ஒரே மாதிரி புரிதலில் இருபது சந்தோசமாக இருக்கிறது .

seguwera
31-08-2011, 02:25 PM
நிர்வாணத்தையே நல்ல கவிதையாய் நிர்மாநிதிருக்கிரீர்கள்.
ஆணவம்,பணத்தை தோற்கடித்த தாய் பாசம், முதுமையின் சோகம்.
எல்லாம் அருமை.

கலைவேந்தன்
31-08-2011, 02:45 PM
நிர்வாணம் உடலில் இல்லை மனதில் தான் என்று அழுத்தமாக உரைக்க வந்த அருமையான கவிதை..

மூன்று முற்றிலும் மாறுபட்ட பெண்கள். வாழ்வின் மூன்று நிலைகளைக் காட்டி நின்ற கவிவரிகள் கவர்ந்த அழகு பாராட்டுக்குரியது.

இளமையில் முறுக்கெடுத்து ஓடும் திமிர்.

தாய்மையின் இதயம் கரைய வைக்கும் பாசம்.

முதுமையின் வறுமை பாய்ந்த நிலைமை.

மூன்று நிலைகளுமே மனிதத்தின் இயலாமை குறிக்கிறது..? எப்படி என்ற கேள்வி எழுகிறது.

இளமையின் பெண்மையை நன்கு வாழவைக்காத மனிதம் அவளை எதையுமே வியாபாரமாய் எடுக்க வைத்தது. அவளுக்கு காதலும் காசும் ஒன்றே. மதிப்பில்லாதது.

தாய்மையின் அருமை போற்ற வைக்காத மனிதம். வறுமையை அவளுக்கு ஊட்டி குழந்தைக்கு பால் கொடுக்க வைக்கும் இரக்கமற்ற சமுதாயம்.

முதுமையில் ஊன்றுகோல்கள் கணவன் மகன் பேரன் என்று எவ்வித சார்பும் இன்றி விதியின் வலிமிகுந்த புயலுக்கு தாக்கு பிடிக்க இயலாத கொடுமை.

முற்றுப்பெறாத மூன்று ஓவியங்களுமே மனிதத்தின் நிர்வாணம் முரசடித்துப் பறைவது புரிகிறதா..?

சிந்திக்க வைத்த கவிதை ரவி..! பாராட்டுகள்..!

Ravee
01-09-2011, 10:37 AM

என் மனநிலையை படம் பிடித்தது போல அனைவரும் பின்னூட்டம் இடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.... :)