PDA

View Full Version : நடிகையுடன் சிக்கியவர்கள்



ஆதி
29-07-2011, 04:24 PM
நடிகையுடன் சிக்கிய
தலைவரின் ஒழுக்கததைப் பற்றி
எல்லொரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்...

வசைமொழிகளால் அந்நடிகையை விமர்சிக்கிறார்கள்..

தலைவரின் முந்தைய சல்லாப கதைகளை விவாதிக்கிறார்கள்

யாரும் நினைக்கவும் தயாராக இல்லை
அவளின் அதிரும் சதைகளின் சிந்தனையில்
தன் மனைவியுடன் உறவு கொண்ட துரோகத்தை பற்றி..
அந்த தலைவரும் நடிகையும் சிக்கிய தருணத்தை
எண்ணி விரகத்தீ/தில் எரிந்தது பற்றி..

அக்னி
29-07-2011, 07:21 PM
நிஜவாழ்வின் மாதவிகள்
அரிதாரம் பூசினால் கண்ணகிகளாயிடலாமா...

நூறுவீதம் இல்லை என்றாலும்,
ஒருவீதம் இருக்கத்தானே செய்கின்றது...

அங்கங்கே காட்டாத விரச நடிப்பும் இருக்கத்தான் செய்கின்றது.
அங்கம் காட்டியும் விரசமற்ற நடிப்பும் இருக்கத்தான் செய்கின்றது.
பார்க்கும் அங்கத்தில் மட்டும் பங்கம் சொல்லுவது நியாயமா...

திரையில் கவர்ச்சி கலைக்காக என்றால்,
மறைவில் கலவி எதற்காக...

கலைக்காக என்ற இந்தக் கள்ளத்தனங்கள்
வெளிப்படுகையில்,
கலையில் ஏங்கிப்பார்த்தவரின் ஆதங்கம்
அவதூறாக வெளிப்படுகின்றது...

மேற்சொன்ன ஒருவீதம் போலத்தான்,
சதை நினைவில் மனைவியோடு கூடும் கணவரும் இருப்பர்...

Ravee
29-07-2011, 10:10 PM
கன நேர இன்பத்தில்
கண் மூடி , கண் திறந்து

கண்ட கனவுகளில்
இழையோடும் இழையாக

அவனின் கனவு கன்னி
அவளின் முன்னாள் காதலன்

காதல் இல்லா காமத்தில்
இதை தவிர எதை காண முடியும் ...

அரிதாரம் பூசிய கலாச்சாரம்
அனைத்தையும் மன்னிக்கும் ...

Nivas.T
30-07-2011, 07:04 AM
கற்ப்பு என்பது உடலைப் பொறுத்தது அல்ல
மனதைப் பொறுத்தது என்பது

கட்டுப்பாடு இல்லாதபோது கலாச்சாரம் காணமல் போகும்

மிக அருமை

வாழ்த்துக்கள் ஆதன்

அமரன்
30-07-2011, 01:01 PM
ஆசைப்பட்டதை அடைய வேண்டும்,
அல்லது ஆசையை அணைக்க வேண்டும்.
மடியில் கட்டி நெருப்பாக வைத்திருந்தால் கண்ட இடத்தில் எரிந்து நாசம் ஆக்கிடும்.

முதல் இரண்டு தரப்பினரை விட மூன்றாம் தரப்பினர் வேஷிகள் (வேஷம் போடுவோர்) ஆபத்தானவர்கள்...