PDA

View Full Version : ஆடிப்பெருக்கு



கீதம்
29-07-2011, 06:27 AM
ஆடிப்பெருக்கன்று அதிகாலையில்
ஆற்றுக்குப் போய் வழிபட்டு
சுற்றத்தோடு சேர்ந்திருந்து
சித்ரான்னங்கள் உண்டு மகிழ்ந்திருந்த
பழங்கதைகள் பேசியபடியே…

வீட்டுக்கிணற்றின் சுற்றுச்சுவரில்
மஞ்சள் பூசிக் குங்குமம் வைத்து
சகடைக்கும், வாளிக்கும் மஞ்சள் கயிறு கட்டி
கிளறி வைத்தக் காப்பரிசி படைத்து,
கிரிவலம்போல் கிணறுவலம்வந்த
தன் தாயை நினைத்துக்கொண்டே…

குளியலறையில் நீர் தேக்கி,
தற்காலிகக் குளமுருவாக்கி,
அதுவரை கண்டிராத அநேகக்கனிகளோடு
காதோலை, கருகமணி படைத்து
குழாயின் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக்
கும்பிட்டாள் என் அன்னை.

முறைகள் மாறினாலும், குறைகளேதுமற்றுக்
களித்திருந்த கதைகளையெல்லாம்
நானும் என் மகளிடம் சொல்ல நினைக்கிறேன்…

ஆங்கில நாட்காட்டி அறிவிக்காக் காரணத்தால்
அந்நாளில் அந்நாளை மறந்தே போகிறேன்.

ஆதவா
29-07-2011, 06:33 AM
:confused::confused:

தமிழ் பண்டிகையை ஆங்கில நாட்காட்டியில பார்த்தது உங்கள் தவறு!!!! :D
உங்கள் மகள் உங்களை கிண்டல் செய்யப் போகிறார் பாருங்கள்.:cool:

கவிதை...... ம்ம்ம்....
மிக அருமையான உங்கள் கவிதைகள் நிறைய நம் மன்றத்தில் படித்திருக்கிறேன்.,

தாமரை
29-07-2011, 06:39 AM
மனமிருந்தால் மார்க்கமுண்டு (இப்பல்லாம் நான் ஒரு மார்க்கமாத்தான் இருக்கேன் :icon_ush:)

இப்படியும் கொண்டாடலாம் ஆடிப்பெருக்கு

http://2.bp.blogspot.com/_91PuRF3xTZ4/TG9SO1BtV6I/AAAAAAAAADU/xgLSCgCgCVM/s1600/Aaadiperuku2.JPG


இவர்கள் செய்ததில் நான் சிறுமாற்றம் செய்வேன்.. ஒரு மினரல் வாட்டர் பாட்டிலில் ஊசியால் துளையிட்டு சொட்டு சொட்டா வடிய விட்டு பூசை நடத்திடுவேன். ஹ ஹ ஹ...

ஏம்மா, தமிழ் காலண்டர் என்று தேடினால் நூற்றுக்கணக்காய் இணையத்தில்
உண்டே..

இன்னுமா

ஆங்கு இல நாள் காட்டி???

Nivas.T
29-07-2011, 06:42 AM
காலம் மாறிப்போச்சு - என்று தலைப்பு வைத்திருந்தால் மிக பொருத்தமாய் இருந்திருக்கும்


கவிதை மிக அருமை

கீதம்
29-07-2011, 06:42 AM
உங்கள் எதிர்பார்ப்பு பொய்த்ததில் எனக்கும் வருத்தம்தான் ஆதவா. என்ன செய்வது? சில சமயங்களில் தோன்றுவதை உடனே எழுதிவிடுகிறேன். அதில் கவித்துவம் இல்லாதிருக்கலாம், கருத்து கட்டாயம் இருக்கும்.

தலைமுறைகளின் வழியே பயணப்படும் பண்டிகைக் கொண்டாட்டங்கள் வேறுபட்டுவந்த விதத்தைச் சொல்லியிருக்கிறேன். இறுதியில், புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் அடுத்தத் தலைமுறைக்கு சொந்த மண்ணோடு இருக்கும் பிடிப்பும் பிணைப்பும் இற்றுப்போனதைச் சுட்டியிருக்கிறேன்.

ஊருடன் ஒத்து வாழப் பழகிக் கொண்டேன். அதுதான் உண்மை. சொல்ல வந்ததும் அதுவே. :)

கீதம்
29-07-2011, 06:49 AM
மனமிருந்தால் மார்க்கமுண்டு (இப்பல்லாம் நான் ஒரு மார்க்கமாத்தான் இருக்கேன் :icon_ush:)

இப்படியும் கொண்டாடலாம் ஆடிப்பெருக்கு

இவர்கள் செய்ததில் நான் சிறுமாற்றம் செய்வேன்.. ஒரு மினரல் வாட்டர் பாட்டிலில் ஊசியால் துளையிட்டு சொட்டு சொட்டா வடிய விட்டு பூசை நடத்திடுவேன். ஹ ஹ ஹ...

ஏம்மா, தமிழ் காலண்டர் என்று தேடினால் நூற்றுக்கணக்காய் இணையத்தில்
உண்டே..

இன்னுமா

ஆங்கு இல நாள் காட்டி???

நாட்காட்டி என்ன, பஞ்சாங்கம் கூட இருக்கு இந்தியக்கடைகளில். அதைப் பாவிக்கும் வாய்ப்புதான் இல்லை எனக்கு.:icon_p:

ஆதவா
29-07-2011, 07:03 AM
நாட்காட்டி என்ன, பஞ்சாங்கம் கூட இருக்கு இந்தியக்கடைகளில். அதைப் பாவிக்கும் வாய்ப்புதான் இல்லை எனக்கு.:icon_p:

இந்திய கடைகள்ல எல்லாம் இருக்கும்ங்க... ஆஸ்திரேலிய கடைகள்ல தேடினீங்களா....... :D

தாமரை
29-07-2011, 07:05 AM
பாவிக்கும் வாய்ப்புண்டு
புண்ணியவானுக்கும் வாய்ப்புண்டு
:lachen001:

கீதம்
29-07-2011, 07:27 AM
இந்திய கடைகள்ல எல்லாம் இருக்கும்ங்க... ஆஸ்திரேலிய கடைகள்ல தேடினீங்களா....... :D

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்தியக் கடைகள்! இப்ப சந்தேகமில்லையே? :D


பாவிக்கும் வாய்ப்புண்டு
புண்ணியவானுக்கும் வாய்ப்புண்டு
:lachen001:

பாவிக்கும் வாய்ப்பு அப்பாவிக்கு உண்டு, இப்பாவிக்கு இல்லை.:)

இன்னைக்கு நான் தான் சிக்கினேனா?

Nivas.T
29-07-2011, 08:51 AM
விதி யாரை விட்டது??? :D:D:D:D:D
:lachen001::lachen001:

தாமரை
29-07-2011, 08:53 AM
இன்னைக்கு நான் தான் சிக்கினேனா?

ஆடிப்பெருக்குன்னு சொன்னீங்க..

இங்கப் பாடிப்பெருக்கறீங்க..

பெருக்கப் பெருக்க

அள்ளினாத்தானே நல்லது!!!:D:aetsch013:

ஆதவா
29-07-2011, 09:05 AM
பாவிக்கும் வாய்ப்பு அப்பாவிக்கு உண்டு, இப்பாவிக்கு இல்லை.:)


அப்பாவிங்க தாங்க பா விப்பாங்க.....
அடப்பாவிங்கறீங்களா?



பாவிக்கும் வாய்ப்பு அப்பாவிக்கு உண்டு, இப்பாவிக்கு இல்லை.:)


ஓ அப்படியா... அப்ப முன்ன இருந்ததா?

கீதம்
29-07-2011, 09:14 AM
அப்பாவிங்க தாங்க பா விப்பாங்க.....
அடப்பாவிங்கறீங்களா?



ஓ அப்படியா... அப்ப முன்ன இருந்ததா?

எப்படியோ பழிக்குப் பழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=24683&page=9) வாங்கியாச்சு. இனி சமாதானமாப் போயிடுவோம். :)

தாமரை
29-07-2011, 09:28 AM
பாவிக்கும் வாய்ப்பு அப்பாவிக்கு உண்டு, இப்பாவிக்கு இல்லை.:)



ஆரென், கவனிச்சு வித்துக் கொடுத்திடுங்க...:lachen001::lachen001::lachen001:

அக்னி வந்து அப்பா விக் வச்சு இருந்தாரான்னு கேட்பார்..

இப்பா விக்கு இல்லைன்னா இப்பா ஒரிஜினலா என்றும் பிரிச்சா நீங்க என்ன ஆவிங்களோ (:aetsch013::eek::rolleyes:) தெரியலை

Ravee
30-07-2011, 08:14 AM
சங்கரா இது என்னடா சோதனை .... எத்தனையோ நாடு இருக்க இவர் ஏன் இங்க வந்து பொறந்தாரு ... :lachen001: