PDA

View Full Version : மென்பொருள் கிடைக்குமா?



தமிழ்குமரன்
13-12-2003, 06:43 AM
பெண்ணின்
மனதை அறிந்து கொள்ள
மென்பொருள் கிடைத்தால்
கண்ணை விற்றாவது
வாங்குவேன்.

poo
13-12-2003, 01:11 PM
சித்திரம் வாங்கும் கதையா...

கண்போனாலும் பரவாயில்லை.. அவள் மனதை அறியமுடிந்ததே என்றமட்டில் மகிழலாம்..

நடத்துங்க நண்பரே!!

சேரன்கயல்
13-12-2003, 04:24 PM
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையே...

இளசு
13-12-2003, 05:22 PM
பெண்ணின்
மனதை அறிந்து கொள்ள
மென்பொருள் கிடைத்தால்
கண்ணை விற்றாவது
வாங்குவேன்.

அதானே..
விரல்கள் போதுமே..
விசைப்பலகை இயக்க...

puppy
15-12-2003, 04:31 PM
ஒவ்வொரு பெண்ணும்
ஒரு வகை.....
உங்கள் மனசெயலே
மென்பொருள்
பழங்குங்கள்
பேசுங்கள்
புரிந்துகொள்ள
முயலுங்கள்...

முத்து
15-12-2003, 04:47 PM
ஒவ்வொரு பெண்ணும்
ஒரு வகை.....
..
நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் பப்பி அவர்களே ..
ஒரு ப்ழமொழி(?) நினைவுக்கு வருகிறது ...

" ஒரு ஆணைப் பற்றித் தெரிந்துகொண்டால் உலகிலுள்ள அனைத்து ஆண்களைப் பற்றியும் சொல்லமுடியும்... ஆனால் உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "

அது உண்மைங்களா .. பப்பி அவர்களே ... :D

poo
15-12-2003, 05:15 PM
நீ பார்த்தவரையில் உண்மைதானே முத்து?!!

ஜெர்மனி ஆனாலும் சரி.. சீனாவானாலும் சரி...பெண் பெண்தான்!!!

இளசு
15-12-2003, 10:42 PM
உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "


பெரிய தம்பி:
லாஜிக் உதைக்குதே முத்து...
ஒரு பெண்ணையே புரிஞ்சுக்காம
உலகில் மத்த எல்லாப் பொண்னுங்களையும் எப்படி புரிஞ்சு..
ஊஹம்...

சின்ன தம்பி : அந்த ஒரு பெண் காதலிண்ணே...

பாலமுருகன்
16-12-2003, 03:17 AM
" ஒரு ஆணைப் பற்றித் தெரிந்துகொண்டால் உலகிலுள்ள அனைத்து ஆண்களைப் பற்றியும் சொல்லமுடியும்... ஆனால் உலகிலுள்ள ஒரே ஒரு பெண்ணைத்தவிர அனைத்துப் பெண்களையும் புரிந்துகொண்டாலும் விடுபட்ட அந்த ஒரு பெண்ணைப் பற்றி புரிந்து கொள்வது கடினம் ... "

அது உண்மைங்களா .. பப்பி அவர்களே ... :D

ஆமாம் உண்மைங்களா பப்பி ???