PDA

View Full Version : அங்கில்லாத ஒருவனை பற்றி



ஆதி
27-07-2011, 04:52 PM
அங்கில்லாத அவன் பற்றிய
புகார்களை
மனஸ்தாபத்தை
அதிருப்தியை
சினத்தை
புரிதலின்மையை
வெறுப்பை
சந்தேகத்தை
பழியை
அனுமானத்தை
அவநம்பிக்கையை
நீண்ட நேரம் பேசுகிறோம்..

அவனங்கு வந்த பிறகு
தோள்களில் கைப்போட்டு
சிநேகமாய் உரையாடுகிறோம்
அவன் உறிஞ்சிய சிகரெட்டை வாங்கி புகைக்கிறோம்
இல்லாத வேறொருவனை பற்றி
அவனிடம் பேசுகிறோம்...

அவன் வரும்வரை நாம் பேசிய யாவும்
நம்மை பற்றியவையெனும்
குற்றவுணர்வில்லாமலே வாழ்கிறோம்..

தாமரை
27-07-2011, 06:59 PM
நான் ஆலோசகர்கள் மையத்தில் எழுதி இருந்ததை இங்கே கவிதையாகப் போட்டு இருக்கியே இது ஞாயமா?

பென்ஸ்
28-07-2011, 03:30 PM
ஆலோசகர் மன்றத்தில் இல்லாதவரை பற்றி அங்கு எழுதி இருந்தீரா....
அதை தான் ஆதன் எழுதி இருக்கிறார் போலும்....


என்ன செய்வது ஆதன்...
பாசிடீவ் கிரிட்டிசீசம் கூட ஏற்று கொள்ளாத மனிதரிடம்,
அவர் குறைகளை சொல்ல முடியுமா....???
அதனால் மக்கள் இப்படி அடுத்தவரிடம் இதை வெளியேற்றுகிறோம்....:D

தாமரை
28-07-2011, 03:32 PM
ஆலோசகர் மன்றத்தில் இல்லாதவரை பற்றி அங்கு எழுதி இருந்தீரா....
அதை தான் ஆதன் எழுதி இருக்கிறார் போலும்....


\..:D

:D:D:D:D

இல்லிங்க பென்ஸூ ... ஏறத்தாழ இங்கிருக்கும் இதே வார்த்தைகளை எழுதி இருந்தேன்...

ஹி ஹி ஹி..

ஆதி
28-07-2011, 03:58 PM
:D:D:D:D

இல்லிங்க பென்ஸூ ... ஏறத்தாழ இங்கிருக்கும் இதே வார்த்தைகளை எழுதி இருந்தேன்...

ஹி ஹி ஹி..

இதுவரைக்கும் அதை நான் வாசிக்கவே இல்லை... அந்த திரியை மேலெழுப்பி விடுறீங்களா ?

தாமரை
28-07-2011, 03:59 PM
இதுவரைக்கும் அதை நான் வாசிக்கவே இல்லை... அந்த திரியை மேலெழுப்பி விடுறீங்களா ?

அந்தத் திரியை நிர்வாகி தூக்கிட்டாரே ஆதன்,,,:eek::eek::eek:

சிவா.ஜி
28-07-2011, 04:48 PM
பத்துக்கு எட்டுப்பேர் இப்படித்தான்...பட்டாலும் தெளியாத அந்த எட்டுபேரை என்னதான் செய்வது ஆதன். ரோமில் இருக்கும்போது ரோமனாய் இரு....என்று போக வேண்டியதுதான்.

செல்வா
28-07-2011, 05:25 PM
இந்த மாதிரி எளிய வார்த்தைகளில் நமக்கு நெருக்கமான விடயங்களை அறியச்செய்யும் கவிதைகள் என்னை மிகவும் கவரும்.
"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்" ஒரு உதாரணம்.

எளிய ஆனால் வலிமையான கவிதை.
வாழ்த்துக்கள்டா...!

ஈரோடு வரீயாடா?

அமரன்
28-07-2011, 07:43 PM
நேர்படப் பேசுவது பிடிக்காதவர்கள் இருக்கும் வரை இந்த நிலை நீடிக்கும்..

ஆற்றாமையும், தூற்றுதலும் காட்டும் இருமுகக்கவிதை.

M.Jagadeesan
29-07-2011, 03:13 AM
புறங்கூறுதல் அநேகமாக எல்லோரிடமும் இருக்கிறது. குறிப்பாகப் பெண்களிடம் அதிகம் இருக்கிறது.சுட்டுவிரலால் ஒருவனைக் சுட்டிக் குற்றம் காணும்போது, மற்ற மூன்று விரல்களும் நம்மை நோக்கியே இருக்கின்றன என்பதை உணரவேண்டும்.

aren
29-07-2011, 05:19 AM
இதை நிவர்த்தி செய்யமுடியாது.

நமக்கு ஒருவரிடம் இருக்கும் பிரச்சனையை நேரடியாக அவரிடம் சொல்லமுடியாது, அதனால் அவரைத் தெரிந்த இன்னொரு நண்பரிடம் இதைப் பற்றி பேசுகிறோம். நேரடியாகச் சொன்னால் பல பிரச்சனைகளை இன்னும் வளர்த்துவிடுவோம்.

விடுங்கள், இது காலத்தின் கட்டாயம்.

Nivas.T
29-07-2011, 06:05 AM
பலருக்கு இதில் ஒரு ஆனந்தம், என்ன பழக்க வழக்கமோ இது என்று நினைக்கத் தோன்றுகிறது

கவிதை மிக அருமை ஆதன்