PDA

View Full Version : விசை...

Nivas.T
27-07-2011, 03:43 PM
தெளிந்த நீராய் தேங்கியிருக்கும்
தண்ணீர் தடாகம்
என் முகம் பார்க்கிறேன்
வானம் பார்க்கிறேன்
கண்ணாடிபோல் காட்டுகிறது
பார்வை போதாதென்று
உணரவேண்டி தொட முயல்கிறேன்
முதலில் பயத்தோடு
மெதுவாக மென்மையாக
சிறியதாய் ஒரு அலை வட்டம்
வன்மையாய் தொடத் தோன்றி
தொட்டவுடன் தோன்றுகிறது
பெரியதாய் பல வட்டம்
அழுத்தம் கொடுக்க கொடுக்க
அலைவட்டம் அதிகரிக்க
புரிந்தது ஒவ்வொரு விசைக்கு
சமமான எதிர் விசை :D

கீதம்
28-07-2011, 01:25 AM
நியூட்டன் சொன்னதை நிரூபித்தாயிற்று. அடுத்து அகப்படப்போகிறவர் யார்? ஆர்க்கிமிடிஸா? :)

ஆதவா
28-07-2011, 04:40 AM
நியூட்டன் சொன்னதை நிரூபித்தாயிற்று. அடுத்து அகப்படப்போகிறவர் யார்? ஆர்க்கிமிடிஸா? :)

தண்ணீரில் அலை உருவாவதே ஆர்கிமிடிஸ் தத்துவத்தினால்தானே?

தெளிந்த நீர் முகம் - இயல்பான வாழ்க்கை
அலைவட்டம் - பிரச்சனை
வட்டத்தினுள் வட்டம் - பிரச்சனை மேல் பிரச்சனை
நல்லதை விதைத்தால் நல்லதே வரும் என்பார்கள். வாழ்க்கையெனும் நீரினுள் நல்லதோ கெட்டதோ எதை அழுத்துகிறோமோ அதுவே அலைகளை உருவாக்கும்!!

கவிதை சொல்லவந்த, அல்லது சொல்லவராமல் புதையுண்ட கருத்து நல்லது.
இன்னும் நன்கு செதுக்கியிருந்தால் படிமங்கள், குறியீடுகள் கொண்ட ஒரு நல்ல கவிதை கிடைத்திருக்கும்!!
வாழ்த்துகள்!

தாமரை
28-07-2011, 04:49 AM
அடடா அடடா..
நீரில் விரல் விட்டால்
அலையுண்டாக
காரணம்
நியூட்டன் விதியா?
ஆர்க்கிமிடீஸ் தத்துவமா?
என்றொரு பட்டிமன்றம் வைத்தால் என்ன? :lachen001::lachen001::lachen001:

ஆனாலும் நீரில் அழுத்தம் கொடுக்க கொடுக்க
அலைவட்டம் பெரிதாவது கொஞ்சம் ஓவரா இருக்கு..

மூழ்கிய பின் அலைவட்டம் உண்டா என்று ஒரு கேள்வி எழுகிறது..

நிவாஸ் என்ன சொல்ல வந்தோமோ அது அப்படியே இருக்கட்டும்..

ஆனால் உருவகமா ஒண்ணு சொல்லி இருக்கீங்களே அதுதான் ஒத்துவரலை..

ஆழச் சிந்தித்து படித்து உண்மையைச் சொல்லுங்க..

விரல் நீரில் பட்டபோது உண்டாகும் விசைதானே வட்டத்தின் அளவிற்குக் காரணம். அதன் பின் எவ்வளவு முக்கினாலும்.. அலை வராது... அடுத்த விரல் நீரில் படும் வரை.

தம்பி ஆதவா.. ஆர்க்கிமிடீஸ் சொன்னதும் ஒத்துவரும் பருமனுக்கு ஏற்ப நீரின் இடப்பெயற்சி.. ஆனால் அலையின் வேகத்துக்கும், உயரத்துக்கும் காரணம் விசை.. பருமனல்ல..

போய் உங்க ஆறாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தைப் படிச்சிட்டு வாங்க,...

ஆதவா
28-07-2011, 05:24 AM
தம்பி ஆதவா.. ஆர்க்கிமிடீஸ் சொன்னதும் ஒத்துவரும் பருமனுக்கு ஏற்ப நீரின் இடப்பெயற்சி.. ஆனால் அலையின் வேகத்துக்கும், உயரத்துக்கும் காரணம் விசை.. பருமனல்ல..

போய் உங்க ஆறாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தைப் படிச்சிட்டு வாங்க,...

இதை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால்,

நீரினுள் ஒரு பொருளை செலுத்த அதன் எடையும் வெளியேறும் நீரின் எடையும் சமம் என்பது ஆர்க்கிமிடீஸ் தத்துவம்,
நிலையாக இருக்கும் நீரினுள் பொருளைச் செலுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சியாகிறது. அதே மாதிரிதான் விரலை அழுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சி ஆகிறது.!

கீதம்
28-07-2011, 05:29 AM
நான் என்ன நினைத்தேன் என்றால் முதலில் விரலை விட்டுப் பார்த்த நிவாஸ் அடுத்து அந்தத் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறார் என்று! :D

தாமரை
28-07-2011, 05:42 AM
இதை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால்,

நீரினுள் ஒரு பொருளை செலுத்த அதன் எடையும் வெளியேறும் நீரின் எடையும் சமம் என்பது ஆர்க்கிமிடீஸ் தத்துவம்,
நிலையாக இருக்கும் நீரினுள் பொருளைச் செலுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சியாகிறது. அதே மாதிரிதான் விரலை அழுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சி ஆகிறது.!

நீரில் விரலை விடறது நெனைக்கத் தானே.. (பேச்சுத் தமிழில் நினைக்க, நனைக்க ரெண்டுமே ஏன் நெனைக்கறதாகுது??)

கையை நீரில் விட்டாலும் கையின் பருமனைப் பொருத்த அளவிற்கு நீர் இடப்பெயர்ச்சி அடையும் என்பது ஆர்க்கிமிடீஸ் தத்துவம். ஆனால் அலையின் உயரம், வட்டத்தின் விட்டம் ஆகியவை நீரின் பரப்பின் மீது கையின் எந்தாளவு பரப்பு எந்த விசையுடன் மோதுகிறது என்பதைப் பொறுத்தது ஆகும். நீரில் கையை விரித்து முக்கி... முக்கி முக்கி அழுத்தினால் நீரின் இடப்பெயர்ச்சி இருக்காது..அலைகள் உயராது..

கப்பல் முழுகும் போது உண்டாகும் சுழல்களைப் பற்றி டைட்டானிக்ல பார்த்தீங்களா இல்லையா?

நீங்க எங்க பார்த்திருக்கப் போறீங்க.. உங்களுக்கு கேத் வின்ஸலேட்டை அல்லவா பார்க்கத் தோணும்.. :D:D:D

தாமரை
28-07-2011, 05:43 AM
நான் என்ன நினைத்தேன் என்றால் முதலில் விரலை விட்டுப் பார்த்த நிவாஸ் அடுத்து அந்தத் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறார் என்று! :D

அச்சோ அச்சச்சோ...

நிவாஸ் ரெண்டு மீன் பிடிச்சுகிட்டு மேல வந்திருங்க!!!

Nivas.T
28-07-2011, 06:48 AM
நியூட்டன் சொன்னதை நிரூபித்தாயிற்று. அடுத்து அகப்படப்போகிறவர் யார்? ஆர்க்கிமிடிஸா? :)

அவரும் சிக்குவாரன்னு பாக்குறேன், ஒன்னும் தோனல:D

மிக்க நன்றீங்க

Nivas.T
28-07-2011, 06:57 AM
தண்ணீரில் அலை உருவாவதே ஆர்கிமிடிஸ் தத்துவத்தினால்தானே?

தெளிந்த நீர் முகம் - இயல்பான வாழ்க்கை
அலைவட்டம் - பிரச்சனை
வட்டத்தினுள் வட்டம் - பிரச்சனை மேல் பிரச்சனை
நல்லதை விதைத்தால் நல்லதே வரும் என்பார்கள். வாழ்க்கையெனும் நீரினுள் நல்லதோ கெட்டதோ எதை அழுத்துகிறோமோ அதுவே அலைகளை உருவாக்கும்!!

கவிதை சொல்லவந்த, அல்லது சொல்லவராமல் புதையுண்ட கருத்து நல்லது.
இன்னும் நன்கு செதுக்கியிருந்தால் படிமங்கள், குறியீடுகள் கொண்ட ஒரு நல்ல கவிதை கிடைத்திருக்கும்!!
வாழ்த்துகள்!

உண்மை ஆதவ சரியான புரிதல் தான், ஒரு சின்ன மாற்றம், இங்கு நீங்கள் வாழ்க்கையாக எடுத்துக்கொண்டதை நான் மனமாக உருவகப்படுத்திக் கொண்டேன் அவ்வளவுதான். இதுதான் நான் சொல்லவந்தது.

ஏதோ எனக்கு தெரிந்தவரை வடிவமைத்தேன், அடுத்தமுறை இன்னும் சிறப்பாக முயச்சிக்கிறேன்

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆதவா

Nivas.T
28-07-2011, 07:03 AM
தண்ணீரில் அலை உருவாவதே ஆர்கிமிடிஸ் தத்துவத்தினால்தானே?

அடடா அடடா..
நீரில் விரல் விட்டால்
அலையுண்டாக
காரணம்
நியூட்டன் விதியா?
ஆர்க்கிமிடீஸ் தத்துவமா?
என்றொரு பட்டிமன்றம் வைத்தால் என்ன? :lachen001::lachen001::lachen001:

ஆனாலும் நீரில் அழுத்தம் கொடுக்க கொடுக்க
அலைவட்டம் பெரிதாவது கொஞ்சம் ஓவரா இருக்கு..

மூழ்கிய பின் அலைவட்டம் உண்டா என்று ஒரு கேள்வி எழுகிறது..

நிவாஸ் என்ன சொல்ல வந்தோமோ அது அப்படியே இருக்கட்டும்..

ஆனால் உருவகமா ஒண்ணு சொல்லி இருக்கீங்களே அதுதான் ஒத்துவரலை..

ஆழச் சிந்தித்து படித்து உண்மையைச் சொல்லுங்க..

விரல் நீரில் பட்டபோது உண்டாகும் விசைதானே வட்டத்தின் அளவிற்குக் காரணம். அதன் பின் எவ்வளவு முக்கினாலும்.. அலை வராது... அடுத்த விரல் நீரில் படும் வரை.

தம்பி ஆதவா.. ஆர்க்கிமிடீஸ் சொன்னதும் ஒத்துவரும் பருமனுக்கு ஏற்ப நீரின் இடப்பெயற்சி.. ஆனால் அலையின் வேகத்துக்கும், உயரத்துக்கும் காரணம் விசை.. பருமனல்ல..

போய் உங்க ஆறாங்கிளாஸ் அறிவியல் புத்தகத்தைப் படிச்சிட்டு வாங்க,...

இதை நான் எப்படி எடுத்துக் கொண்டேனென்றால்,

நீரினுள் ஒரு பொருளை செலுத்த அதன் எடையும் வெளியேறும் நீரின் எடையும் சமம் என்பது ஆர்க்கிமிடீஸ் தத்துவம்,
நிலையாக இருக்கும் நீரினுள் பொருளைச் செலுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சியாகிறது. அதே மாதிரிதான் விரலை அழுத்தும் பொழுது நீர் இடப்பெயர்ச்சி ஆகிறது.!

நீரில் விரலை விடறது நெனைக்கத் தானே.. (பேச்சுத் தமிழில் நினைக்க, நனைக்க ரெண்டுமே ஏன் நெனைக்கறதாகுது??)

கையை நீரில் விட்டாலும் கையின் பருமனைப் பொருத்த அளவிற்கு நீர் இடப்பெயர்ச்சி அடையும் என்பது ஆர்க்கிமிடீஸ் தத்துவம். ஆனால் அலையின் உயரம், வட்டத்தின் விட்டம் ஆகியவை நீரின் பரப்பின் மீது கையின் எந்தாளவு பரப்பு எந்த விசையுடன் மோதுகிறது என்பதைப் பொறுத்தது ஆகும். நீரில் கையை விரித்து முக்கி... முக்கி முக்கி அழுத்தினால் நீரின் இடப்பெயர்ச்சி இருக்காது..அலைகள் உயராது..

கப்பல் முழுகும் போது உண்டாகும் சுழல்களைப் பற்றி டைட்டானிக்ல பார்த்தீங்களா இல்லையா?

நீங்க எங்க பார்த்திருக்கப் போறீங்க.. உங்களுக்கு கேத் வின்ஸலேட்டை அல்லவா பார்க்கத் தோணும்.. :D:D:D

இது தோன்ற காரணம் என்னவென்றால், நேற்று ஒரு பிரச்னைக்கு வழிதேடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தேங்கிநின்ற மழைநீரின் மேல்பரப்பில் காலால் மெதுவாக தட்டியபோது, உண்டான அலை எனக்குள் இந்த எண்ண அலைகளை அடிக்க வைத்தது அவ்வளவே
:D

தாமரை
28-07-2011, 07:05 AM
மூழ்குதல் என்னும் நிகழ்வில் ஐந்து அறிவியல் அடிப்படைத் தத்துவங்கள் பிணைந்திருக்கின்றன

1. புவியீர்ப்பு விசை
2. ஆற்றல் அழிவின்மை விதி
3. நியூட்டனின் முதல் விதி
4. ஆர்க்கிமிடீஸ் தத்துவம்
5. நியூட்டனின் மூன்றாம் விதி

புவிஈர்ப்பு விசை பொருளின் மீது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் அதற்கு ஒரு நிலை ஆற்றல் உண்டாகிறது. அந்தப்பொருளை தாங்கி இருக்கும் இடத்திலிருந்து விடுபடும் பொழுது இந்த நிலை ஆற்றல் இயக்க ஆற்றலாக மாறுகிறது. இது ஆற்றல் அழிவின்மையின் விதியின் பாற்பட்டது.

அந்தப் பொருள் நீரின் பரப்பை எட்டும் பொழுது முதலில் எதிர்கொள்வது பரப்பு இழுவிசையை. இந்த பரப்பு இழுவிசையை மிஞ்ச முடியாவிட்டால் நீரில் அப்பொருள் உள்ளே செல்வதே இல்லை. நீரில் சலனம் ஏற்படும்.

அதே வினாடியில் ஆர்க்கிமிடீஸ் தத்துவமும் செயல்பட ஆரம்பிக்கிறது பொருளின் பருமனுக்கு சமமான அளவு நீர் இடப்பெயர்ச்சி அடைகிறது. இதனால் அலைகள் உண்டாவதில்லை. அலைகளுக்குக் காரணம் ஆற்றல் மாறுவதே ஆகும்.

கூடவே நியூட்டனின் முதல்விதியையும் அந்தப் பொருள் எதிர் கொள்கிறது. நீரின் அடர்த்தியாய் உண்டாகும் உராய்வினால் வேகம் குறைகிறது.

பரப்பு இழுவிசையை தாண்டிய பொருள் நீரில் முழுகுகிறது. நீரின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் நீரின் அடர்த்தி காரணமாக உண்டான எதிர்விசை சமன் செய்யப்பட்ட பிறகு பொருள் மேலே வந்து மிதக்கத் தொடங்குகிறது.

நீரின் அடர்த்தியைவிட பொருளின் அடர்த்தி அதிகம் இருந்தால் நீரில் பொருள் மூழ்கத்தொடங்குகிறது. அப்பொழுது பொருளுக்கு கீழே இருக்கும் நீர் பக்கவாட்டில் விலக, பொருள் மேலும் மேலும் உள்ளே செல்கிறது. பொருள் நகருவதால் பொருளுக்கு மேற்புறம் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப பக்கவாட்டில் உள்ள நீர் அங்கு நகர்கிறது. இது நியூட்டனின் 3 வது விதி

தண்ணீரில் நாம் டைவ் அடிக்கும் போட்டிகளை ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பார்த்திருப்போம். அதுவும் பெண்கள் போட்டியென்றால் ஜொள்ளிக்கொண்டே (குளிக்கிற பழக்கம் பார்ப்பதற்கு அவசியமில்லை) தண்ணீரின் மீது கிடைமட்டமாக விழுந்தால் பெரிய அலைகள் உண்டாவதைக் காணலாம். ஆனால் செங்குத்தாக விழுந்தால் சிறு சலசலப்புகள் மட்டுமே உண்டாகும். காரணம் பரப்பு இழுவிசை.

செங்குத்தாக விழும்பொழுது அதிக ஆழம் செல்வோம். காரணம் அழுத்தம் மிகக்குறைந்த பரப்பின் மேல் செயல்படுவதால் மிக அதிகமாக இருக்கும். ஆகவே அலையின் உயரம் அழுத்தம் இரண்டிற்கும் எப்படிப்பட்டத் தொடர்பு உள்ளதென்று அறியலாம்.

இதில் எதன் விளைவு எதனால் என்று துல்லியமாக அறிந்து அதை உருவகிப்பது கவிஞனின் கடமை ஆகிறது.

பெருங்கப்பல்கள் மூழ்கும்பொழுது அக்கம் பக்கம் உள்ள அனைத்தும் உள்ளே இழுக்கும் சுழல் உண்டாவதற்குக் காரணம் அவற்றில் அடைபட்டிருக்கும் காற்று வெளியேறுவதாகும். இதனால் உண்டாகும் அடர்த்தி குறைவான பகுதியில் உள்ள அனைத்தும் கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் மூழ்குகின்றன.

http://ebtx.com/mech/sinkship.gif

அருவிகளில் நீர்ச்சுழல் உண்டாகக்காரணமும் இதுபோல்தான்.

சரிங்க நிவாஸ்.. தைரியமா அடுத்த கவிதையை எழுதுங்க.. என்ன?:icon_b:

தாமரை
28-07-2011, 07:06 AM
இது தோன்ற காரணம் என்னவென்றால், நேற்று ஒரு பிரச்னைக்கு வழிதேடி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, தேங்கிநின்ற மழைநீரின் மேல்பரப்பில் காலால் மெதுவாக தட்டியபோது, உண்டான அலை எனக்குள் இந்த எண்ண அலைகளை அடிக்க வைத்தது அவ்வளவே
:D

:wuerg019::wuerg019::wuerg019::wuerg019::wuerg019:

Nivas.T
28-07-2011, 07:09 AM
நான் என்ன நினைத்தேன் என்றால் முதலில் விரலை விட்டுப் பார்த்த நிவாஸ் அடுத்து அந்தத் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறார் என்று! :D

நீச்சல் தெரியுமே................ நீச்சல் தெரியுமே :sport-smiley-018:

காட்டாற்றில் நீந்தியவனாக்கும்:D:icon_b::sport009:

Nivas.T
28-07-2011, 07:14 AM
:eek::eek::eek::eek::eek:
என்ன அண்ணா இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க? நான் அவ்வளவு தூரமெல்லா போகல :frown::frown:

Nivas.T
28-07-2011, 07:18 AM
அச்சோ அச்சச்சோ...

நிவாஸ் ரெண்டு மீன் பிடிச்சுகிட்டு மேல வந்திருங்க!!!
:eek:
ஏற்கனவே மீன்பிடிக்க குதிச்சி பாம்ப புடிச்சிகிட்டு நிக்கிறேன், உங்களுக்கு இன்னும் ரெண்டு மீன் வேணுமா ? சரி என்ன மீனுன்னு சொல்லுங்க இப்பவாவது மீன் சிக்குதான்னு பாப்போம் :lachen001::icon_b:

தாமரை
28-07-2011, 07:26 AM
:eek::eek::eek::eek::eek:
என்ன அண்ணா இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க? நான் அவ்வளவு தூரமெல்லா போகல :frown::frown:

வெயிட்டா இருந்தா முழுகிருவோம்னு இப்பதானே நிவாஸ் சொன்னேன்

:innocent0002::icon_drunk::icon_clap::music-smiley-012:

தாமரை
28-07-2011, 07:29 AM
:eek:
ஏற்கனவே மீன்பிடிக்க குதிச்சி பாம்ப புடிச்சிகிட்டு நிக்கிறேன், உங்களுக்கு இன்னும் ரெண்டு மீன் வேணுமா ? சரி என்ன மீனுன்னு சொல்லுங்க இப்பவாவது மீன் சிக்குதான்னு பாப்போம் :lachen001::icon_b:

எனக்கு ஒரு மீன் - ஜமீன்
உனக்கு ஒரு மீன் - ஜாமீன்

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
28-07-2011, 07:40 AM
வெயிட்டா இருந்தா முழுகிருவோம்னு இப்பதானே நிவாஸ் சொன்னேன்

:innocent0002::icon_drunk::icon_clap::music-smiley-012:

எனக்கு ஒரு மீன் - ஜமீன்
உனக்கு ஒரு மீன் - ஜாமீன்

:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

வாட் ஐ மீன், யு மீன்

ஜமீன், ஜாமீன்.........

ஐயயோ........ மீன்....................மீன்.........மீன்.........மீன்.........மீன்.........மீன்.........மீன்.......கடைசியில் கருவாடு :D

தாமரை
28-07-2011, 08:05 AM

மீன் காய்ந்து போனால் கருவாடு..

நிவாஸ் (மண்டை) காய்ந்து போனால்??? :confused::aetsch013:

தாமரை
28-07-2011, 08:11 AM
நியூட்டன் சொன்னதை நிரூபித்தாயிற்று. அடுத்து அகப்படப்போகிறவர் யார்? ஆர்க்கிமிடிஸா? :)

அவரும் சிக்குவாரன்னு பாக்குறேன், ஒன்னும் தோனல:D

மிக்க நன்றீங்க

நான் என்ன நினைத்தேன் என்றால் முதலில் விரலை விட்டுப் பார்த்த நிவாஸ் அடுத்து அந்தத் தண்ணீருக்குள் குதிக்கப்போகிறார் என்று! :D

நீச்சல் தெரியுமே................ நீச்சல் தெரியுமே :sport-smiley-018:

காட்டாற்றில் நீந்தியவனாக்கும்:D:icon_b::sport009:

:eek::eek::eek::eek::eek:
என்ன அண்ணா இந்த அளவுக்கு யோசிக்கிறீங்க? நான் அவ்வளவு தூரமெல்லா போகல :frown::frown:

இதையெல்லாம் வரிசையாய் படிக்கும் பொழுது.. ஹ ஹ ஹ :lachen001::lachen001::lachen001:

Nivas.T
28-07-2011, 08:38 AM
மீன் காய்ந்து போனால் கருவாடு..

நிவாஸ் (மண்டை) காய்ந்து போனால்??? :confused::aetsch013:

இதையெல்லாம் வரிசையாய் படிக்கும் பொழுது.. ஹ ஹ ஹ :lachen001::lachen001::lachen001:

:lachen001::lachen001::lachen001:

சிவா.ஜி
28-07-2011, 04:03 PM
நிவாஸ் ...ஏற்கனவே நீங்க போட் ஹவுஸ்ல இருக்கீங்க....தாமரையோட பின்னூட்டத்தைப் பாத்துக் கடல்ல குதிச்சிடாதீங்க.....

(அவரு கேட்ட ரெண்டு மீன்ல ஒண்ணு ஐ மீன் ஓக்கே....ஆனா அடுத்த மீன்....ஜாமீன்....கிடைச்சா சொல்லுங்க தாத்தாவுக்குக் குடுத்து 1,76 ஆயிரம் கோடியில ஏதாவது கிடைக்குமான்னு கேக்கனும்....ஹி...ஹி...)

தாமரை
28-07-2011, 04:10 PM

ஐ மீன் இல்லிங்க சிவா.ஜி.. ஜமீன்.. நிலம்...ஊரையே வளைச்சு போட வேணுமே

Nivas.T
28-07-2011, 04:25 PM
நிவாஸ் ...ஏற்கனவே நீங்க போட் ஹவுஸ்ல இருக்கீங்க....தாமரையோட பின்னூட்டத்தைப் பாத்துக் கடல்ல குதிச்சிடாதீங்க.....

(அவரு கேட்ட ரெண்டு மீன்ல ஒண்ணு ஐ மீன் ஓக்கே....ஆனா அடுத்த மீன்....ஜாமீன்....கிடைச்சா சொல்லுங்க தாத்தாவுக்குக் குடுத்து 1,76 ஆயிரம் கோடியில ஏதாவது கிடைக்குமான்னு கேக்கனும்....ஹி...ஹி...)

அப்படி பாத்தாலும் ஜாமீனே ரெண்டு வேணுமே அண்ணா :D:D:D

தாமரை
28-07-2011, 04:58 PM
அப்படி பாத்தாலும் ஜாமீனே ரெண்டு வேணுமே அண்ணா :D:D:D

அப்ப அப்ப என்னைப் போட்டுத்தள்ளணும்னு நீங்க பிளானே செய்யலியா...

அதனாலதானே

எனக்கு ஜமீன் - ஆறுக்கு மூணு
உங்களுக்கு ஜாமீன் கேட்டேன்... :D:aetsch013::eek:

சிவா.ஜி
28-07-2011, 05:01 PM
அப்ப அப்ப என்னைப் போட்டுத்தள்ளணும்னு நீங்க பிளானே செய்யலியா...

அதனாலதானே

எனக்கு ஜமீன் - ஆறுக்கு மூணு
உங்களுக்கு ஜாமீன் கேட்டேன்... :D:aetsch013::eek:

என்னக் கொடும சார் இது...............!!!

மதி
28-07-2011, 05:03 PM
விசையெல்லாம் வசையாவே போய்கிட்டு இருக்கு..!!

Nivas.T
29-07-2011, 05:31 AM
அப்ப அப்ப என்னைப் போட்டுத்தள்ளணும்னு நீங்க பிளானே செய்யலியா...

அதனாலதானே

எனக்கு ஜமீன் - ஆறுக்கு மூணு
உங்களுக்கு ஜாமீன் கேட்டேன்... :D:aetsch013::eek:

என்னக் கொடும சார் இது...............!!!

:confused::confused::confused::confused:

Nivas.T
29-07-2011, 05:32 AM
விசையெல்லாம் வசையாவே போய்கிட்டு இருக்கு..!!

வசையும் ஒரு விசையின் விளைவுதானே மதி? :D:D:D:D:icon_b::icon_b:

தாமரை
29-07-2011, 05:35 AM
:confused::confused::confused::confused:

புரியலியா?

உங்களுக்குக் கோபம் வந்து என்னை போட்டுத் தள்ளிருவீங்க.

அப்ப என்னைப் புதைக்க எனக்கு ஆறடிக்கு மூணடி அளவில் நிலம் வேணும்

என்னை போட்டுத்தள்ளிய குற்றத்துக்கு உங்களை கைது செய்தால் உங்களுக்குத் தேவை ஜாமீன்.

அதாங்க

எனக்கு ஒரு மீன் - ஜமீன் - நிலம் ஆறடிக்கு மூணடி - நீங்க போட்டுத் தள்ளின பின்னாடி என்னைப் புதைக்க

உனக்கு ஒரு மீன் - ஜாமீன் - என்னைப் போட்டுத் தள்ளிய கேசுக்காக

எல்லாத்தையும் விளக்கோ விளக்குன்னு விளக்க வேண்டியதா இருக்கே:D:D:D:D

Nivas.T
29-07-2011, 06:07 AM
அவ்வளவு கொலைவெறி எனக்கு கிடையதுண்ணா :D:D:D:D:D