PDA

View Full Version : எதிர்பாராத் திருப்பம்....



Nivas.T
26-07-2011, 01:55 PM
பலரும் உலாவி வரும் நெடுஞ்சாலையது
காற்றோடு கலந்தது போல் ஒரு பயணம் அங்கே
நொடிக்கொன்றாய் என்னை கடக்கிறது பல
அதிர்வலைகள் அடிக்கடுக்காய் சில
எதிர்நோக்கி பறந்துவரும் பூச்சிகளும்
சில தூசிகளும் தடந்தெறியாமல்
தெரித்துப்போயின

பயணம் ஊர்வதாயில்லை
பறப்பதாயிருந்தது
எல்லைக் கற்களை எண்ணி முடியவில்லை

விட்டு விட்டு போடப்பட்டிருந்த கோடு
விடாமல் ஒரே கோடாய் மாறிவிட்டிருந்தது

திடீரென வந்த திருப்பத்தை நான் கவனிக்கவில்லை
எச்சரிக்கை பலகை இருந்தும்

தடம்புரண்டது வாகனம்
தடைப்பட்டது பயணம்

பலமுறை இதுவே நடந்தாலும்
முதன்முறை மட்டும் தான் அது
எதிர்பாராத் திருப்பம்

அக்னி
26-07-2011, 02:04 PM
நெடுஞ்சாலைகளில் அவதானிப்பு மிக அவசியம்.
அவதானிப்பு அயர்ச்சியுற்றால்,
வாகனம் தடம்புரள்வது மட்டுமல்ல,
நம் வாழ்க்கையும் தடம் புரண்டிடலாம்.

நிவாஸ், உண்மை நிகழ்வானால் ஆபத்தில் காத்த ஆண்டவனுக்கு நன்றி. அவதானம் இனி அவசியம் இருக்கட்டும்.

இந்தக் கவிதையை வாழ்க்கையோட்டத்தோடும் பொருத்திப் பார்க்க,
கச்சிதமாய்ப் பொருந்துகின்றது.
வாழ்க்கையின் தொடரோட்டத்தில்,
சலிப்பும் பராக்கும் தடங்கல் ஏற்படுத்தலாம்.

Nivas.T
26-07-2011, 02:28 PM
நெடுஞ்சாலைகளில் அவதானிப்பு மிக அவசியம்.
அவதானிப்பு அயர்ச்சியுற்றால்,
வாகனம் தடம்புரள்வது மட்டுமல்ல,
நம் வாழ்க்கையும் தடம் புரண்டிடலாம்.

நிவாஸ், உண்மை நிகழ்வானால் ஆபத்தில் காத்த ஆண்டவனுக்கு நன்றி. அவதானம் இனி அவசியம் இருக்கட்டும்.


உண்மை நிகழ்வுதான் அக்னி, ஆனால் நான் இங்கு இவ்வாறு பதித்தக் காரணம்

இதுதான்



இந்தக் கவிதையை வாழ்க்கையோட்டத்தோடும் பொருத்திப் பார்க்க,
கச்சிதமாய்ப் பொருந்துகின்றது.


அழகானப் பின்னூட்டத்திற்கும், கனிவான கரிசனத்திர்க்கும் மிக்க நன்றி அக்னி

(எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது):D

அக்னி
26-07-2011, 02:49 PM
(எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது):D

விட்டுவிட்டுப் போட்டிருந்த கோடுகள்,
தொடர்கோடாகி,
மீண்டும் விட்டுவிட்டுப் போடப்படலாம்.
தொலைதூரத்திற்கும் தொடர்கோடுகள்
தொடரலாம்.

நிர்ணயிக்கப்பட்ட ஓட்டத்தில்,
திருப்பங்கள் தவிர்க்க இயலாது.
விபத்துக்கள் தவிர்க்கக் கூடியது.

கீதம்
28-07-2011, 01:10 AM
எதிர்பாராத் திருப்பங்களை என்றும் எதிர்பார்த்திருப்பவனைப் பாதைகள் பழிவாங்குவதில்லை, பலிவாங்குவதுமில்லை.

கவிதை காட்டும் வலிக்கு வழி சொல்லி, வலி சேர்க்கிறது அக்னியின் அலசற்பின்னூட்டம். பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
29-07-2011, 06:12 AM
எதிர்பாராத் திருப்பங்களை என்றும் எதிர்பார்த்திருப்பவனைப் பாதைகள் பழிவாங்குவதில்லை, பலிவாங்குவதுமில்லை.

கவிதை காட்டும் வலிக்கு வழி சொல்லி, வலி சேர்க்கிறது அக்னியின் அலசற்பின்னூட்டம். பாராட்டுகள் நிவாஸ்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றீங்க :)