PDA

View Full Version : தொடரும் சுழற்சி



ஆதி
26-07-2011, 01:00 PM
காமராஜர் நகரில் இருக்கிறதென்று தெரியும்
எனினும்
அப்பக்கம் போக
எந்த தேவையும் ஏற்பட்டதில்லை

பள்ளி காலங்களில்
பொறந்த வீடா புகுந்த வீடா
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
போஸ்டர்களுக்கு ஊடே
முத்தக்காட்சிகள் உறைந்த போஸ்டரில்
அத்தியேடரின் பெயரை பார்த்திருக்கிறேன்

7ஆம் வகுப்பில் பள்ளி முடித்து
வீடு திரும்பி கொண்டிருந்த
சனி கிழமை மதியமொன்றில்
அத்தியேடருக்கு வழி கேட்டவனை பார்த்து
குரு மூர்த்தியுடன் நமட்டு சிரிப்பு சிரித்தது
இன்னும் ஞாபகத்திலிருக்கிறது..

வீட்டில் கூட ஒருமுறை
அந்த தியேடரின் பெயர் சொன்னதற்காக
அந்த அடி விழுந்திருக்கிறது..


சமீபத்தில்
நண்பனொருவனின் வீட்டை தேடி
குமரன் தியேடருக்கு வழி கேட்கையில்
நமட்டு சிரிப்பு சிரித்தவர்களை
எப்படி நம்ப வைப்பதென தெரியாமல்
அவமானத்தில் முகங்குலைந்த போது
தோன்றியது
குரு மூர்த்தியுடன் சேர்ந்து
நமட்டு சிரிப்பு சிரித்திருக்க கூடாதென...

அக்னி
26-07-2011, 01:55 PM
இந்த நாட்டுக்கு வந்த புதிதில்,
இதைவிடவும் கேவலமான பார்வைகளுக்கு நான் ஆளாகினேன்.

இரவு நேரத்தில் விழித்திருக்கும் உல்லாசத் தெருவொன்றில்,
அது தெரியாமல் அறையொன்று எடுத்துத் தங்கியிருந்த காலம்.
சாமத்தில் அழைப்புமணி ஒலிக்கும். அடிக்கடி காவல்துறை குறுக்கிடும்.

மொழி படிக்கவென்று வகுப்புக்குச் செல்கையிலும்,
பிறதேவைகளுக்கு அலுவலகங்கள் செல்கையிலும்,
விலாசம் சொல்லவேண்டிய வேளைகளில்,
தவறாது வாடகை கொடுத்துத் தங்கியிருந்த போதிலும்,
தவறான வாடை என்னிடமிருந்தும் என்றே வீசியதான பார்வைகள்.

குறுகிய அந்த அறையின் குறுக்கத்திலும், புழுக்கத்திலும் பார்க்க,
அந்தப் பார்வைகளில் குறுகியும் புழுங்கியும் போனதுதான் அதிகம்.

இப்போதும் அந்தத் தெருவில் ஒரு தமிழ்க்குடும்பம்.
கேவலப் பார்வையும், பரிதாபப் பார்வையும் என்னிடமும் இருந்திருக்கலாம்,
எனக்கு இந்த அனுபவம் கிட்டியிருக்காவிட்டால்...

Nivas.T
26-07-2011, 02:02 PM
முன்னாடி எல்லாம் இதுமாதிரி நிறைய அனுபமுண்டு, ஆனால் இப்பொழுதெல்லாம் இதைப்பற்றி கவலை படுவதில்லை

ஹீ ஹீ ...... போங்க பாஸ் இவங்க எப்பவுமே இப்படித்தான் :D

பென்ஸ்
26-07-2011, 05:43 PM
காலம் பல கடந்தாலும் பார்வை ஒன்றாகவே இருப்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஆதன்...

ஆனால்...
பல நூற்றாண்டுகளுக்கு முன் கோவிலினுள் செதுக்கி அதை பார்க்கும் போது
இருந்த பார்வை இப்போது மாறி போனது மட்டுமே புரியவில்லை...
கால போக்கில் இன்னும் மாறலாம்....

உன் மகன் பார்வை= உன் பார்வை +உன் வக்கிகரம்...

பென்ஸ்
26-07-2011, 05:47 PM
அக்னி... நீங்கள் நடந்து வந்த பாதைகள் தீயாய் இருந்ததால் என்னையும் சுட்டது...

ஆனாலும்... அக்னியை சிகிரட் சுடுமா..??
சிகரட்டை தானே அக்கினி சுடனும்....
எங்கிருந்தாலும் நீங்கள் தீயாய்...