PDA

View Full Version : அவனா ? நானா ? ... எது உண்மை



Ravee
23-07-2011, 02:34 PM
https://lh6.googleusercontent.com/-kUYdjVewmiA/TirbDTdifkI/AAAAAAAAAts/mVNj3s8Ge7c/life-after-death-bishwajit-das.jpg



அவனா ? நானா ? ... எது உண்மை



நண்பா ஒரு கேள்வி ... பதில் சொல்
இறப்புக்கும் பிறப்புக்கும் இடையில் என்ன ?
எத்தனை நாள் ...எத்தனை தூரம் ... சொல் என்றான்
இவன் யார் ... பார்த்த முகம் ...பழகிய குரல்
நினைவில் இல்லை .... இவனிடம் இருந்து
இந்த கேள்வி சற்றும் எதிர் பாராதது ...
இவனுக்கு என்ன இதை பற்றி சிந்தனை

கேள்விக்கு பதில் அறியும் முன்னே
எனக்குள் ஆயிரம் கேள்விகள்
இறந்த பின் நான் யார் ...
எது என் அடையாளம் ...எது என் அங்கீகாரம்...
எது என் பாதை ... எது என் பயணம் ...
என் இறந்த காலம் பற்றி பேச எவர் வருவார் அங்கே?
பாதை மாறிய பயணங்கள் இங்கு மட்டுமா ? அங்குமா?
முடிவில்லா கேள்விகளில் மூழ்கிப் போனேன்

என்னை நினைவிருக்கிறதா ? எங்கே என் பதில் என்றான்.
இயலாமை ... எரிச்சல் ... இறந்து பார் தெரியும் என்றேன்

நடுநிசியில் மீண்டும் வந்தான்
நண்பா நலமா ?
பாதி வழியில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தேன்
உன் நினைப்பு வர உடனே வந்தேன்
உண்மை தெரியுமா ?
இப்போது சுமையே இல்லை
என் பொருள் உற்றம் சுற்றம்
இன்பம் துன்பம் கோபம் தாபம்
தர்மம் பாவம் எல்லாம் தொலைத்தேன்
இலகுவாகி விட்டது இப்போது
நான் நானாக இல்லை

எல்லாவற்றிலும் என்னை காண்கிறேன்
என்னுள்ளே எல்லாவற்றையும் காண்கிறேன்
எதுவோ என்னை ஈர்க்கிறது
என்னுடன் வா ... எதுவென்று பார்ப்போம்
வீணாய் காலத்தை விரயம் செய்யாதே
உன்னை மட்டும் பிரிய மனமில்லை எனக்கு
இத்தனை நாள் என் முகவரி நீ

வா ... வா ... வா
கைகளை இறுக்கி காற்றில் அழைத்தது

காற்றோடு காற்றாய் இருந்தவன்
கைகளில் இத்தனை பலமா ?
கரம் உதறி கண்கள் விரித்தேன் ...

உதறிய வேர்வை துளிகளில் ஒரு முகம்
அது அவன் முகம் ... இல்லை என் முகம்
அவனா ? நானா ? ... எது உண்மை


தெளிவில்லாமல் அவன் நினைவு
சம்பவத்துக்கு சாட்சியாக
இருதயம் மட்டும் துடிக்கிறது
இடைவெளி விடாமல் ....

ஜானகி
23-07-2011, 04:07 PM
நீயேதான் அவன் , அவனேதான் நீ......சாட்சியான உன்னை...சாட்சியாக நீயே பார்ப்பது...இதுதானோ...?

Nivas.T
23-07-2011, 04:48 PM
உன்னுள் இருக்கும் நீ
உன்னை யாரென்று
அறிய நீ முயன்றாலே போதும்
அனைத்தையும் பகுத்துப்பர்த்து
வகுத்துப்பார்க்க தொடங்கி விடுவாய்
வாழ்க்கை எளிமையாகும்
வருத்தம் வற்றிப்போகும்
துன்பம் துலைந்துபோகும்
ஆசை கடந்து போகும்
நிலையை உணர்வாய்
தெளிவாய் உணர்வாய்
எல்லாம் இங்கு ஒரு மாயை என்று புரியும்

கவிதை அருமை அண்ணா
வாழ்த்துக்கள்

Ravee
23-07-2011, 08:44 PM
நீயேதான் அவன் , அவனேதான் நீ......சாட்சியான உன்னை...சாட்சியாக நீயே பார்ப்பது...இதுதானோ...?


உன்னுள் இருக்கும் நீ
உன்னை யாரென்று
அறிய நீ முயன்றாலே போதும்



உடலுக்கும் உயிருக்கும் நடுவில் உணர்வாய் சிக்கிக்கொண்டு இதுவும் இல்லாமல் அதுவும் இல்லாமல் படும் அவஸ்த்தை கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.

நாஞ்சில் த.க.ஜெய்
24-07-2011, 04:25 PM
எனக்குள் ஆயிரம் கேள்விகள்
இறந்த பின் நான் யார் ...
எது என் அடையாளம் ...எது என் அங்கீகாரம்...
நான் எனக்குள் என்னையே தேடுகிறேன் அருமையான வரிகள் ...