PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 23:IIinnamburan
23-07-2011, 12:42 PM
அன்றொரு நாள்: ஜூலை 23:II
I. சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15. ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்! சந்திரசேகர் ‘ஆசாத்’ என்ற புரட்சி வீரனின் ஜென்ம தினம் ஜூலை 23, 1906. ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் என்ற அமைப்பை தோற்றுவித்தது, நம்ம ‘ஆசாத்’, பகத் சிங்க், சுக்தேவ், ராஜ்குரு. ‘ஆசாத்’ ஹனுமத் உபாசகர். ஜாலியன்வாலா பாக் படுகொலை (அதை பற்றி எழுதணும்.) இவரை மிகவும் பாதித்தது. வைஸ்ராய் பயணித்த ரயில்வண்டியை தகர்க்க முயன்றது (1926), ககோரி ரயில் கொள்ளை (1926), லாலா லஜ்பத் ராய் மரணத்துக்கு பழிக்கு பழி என்று ஸாண்டர்ஸ் கொலை என்று தீவிர வாத குற்றம் சாட்டிய வழக்குகள். பாருங்கள், விதி விளையாடுவதை!
ஃபெப்ரவரி 27, 1990 அன்று, சந்திரசேகர் ‘ஆசாத்’ தோட்டத்தில் (முற்காலம் ஆல்ஃப்ரெட் பார்க்), 1931ம் வருடம் இங்கு தன் கையாலேயே வீரமரணம் அடைந்த சந்திரசேகர் ‘ஆசாத்’ அவர்களுக்கு, அஞ்சலி செலுத்த சென்றிருந்தேன். அலஹாபாத் நகரம். ஒரு முதியவர், ‘இங்கு தான் வந்தார், இப்படித்தான் போனார், இங்கு தான் துரோகிகள் காட்டிக்கொடுத்தனர். இங்கு தான் சுட்டுக்கொண்டார். இங்கு தான் அவரது பூதவுடல் கிடந்தது’ என்று காண்பித்தார். 1931ல் அவர் சிறுபையனாக இருந்திருக்கலாம். வெள்ளைக்காரன் ஆட்சியில் போய் பார்த்திருப்பது துர்லபம். ‘உங்களுக்கு எப்படி தெரியும்’ என்று கேட்டேன். தன்னுடைய தந்தை காண்பித்ததாகச் சொன்னார். கனத்த மனதுடன் திரும்பி வந்தேன்.
http://www.travelindia-guide.com/indian-stamps/collection/images/1988-Chandrasekhar_Aza.jpg

2. எந்த வீட்டுப்பிள்ளையோ? எங்கேயோ பொறந்து எங்கேயே கண்காணாதத் தேசத்திலே அல்பாயிசுலே போயிட்டான் என்றாலும், எரிநக்ஷத்ரம் மாதிரி தோன்றியவுடன் மறைந்த இந்திரலால் ராய் (டிசம்பெர் 2, 1898 ~ ஜூலை 23, 1918) என்ற ராயல் ஏர்ஃபோஸ்ஸின் இந்திய விண்மீனை பற்றி எழுதத்தான் வேண்டும். அந்த 19 வயது பாலகனின் அம்மையாவது மின் தமிழில் நம்ம பையனை பற்றி வந்திருக்கிறதே, என்று தேவருலகத்தில் ஆனந்திப்பாள். அன்னையும் பிதாவும் கொல்கத்தாவில் பிரபல கல்வியாளர்கள். இவன் படித்ததோ,லண்டனின் பிரபல பள்ளி ஒன்றில். 17 வயதில் ராணுவத்தில் அதிகாரியாக வேலை அமர்ந்தது. இல்லை, பறந்தது! வேலை அப்படி. 13 நாட்களில் பத்து தடவை வாகை சூடினான். அடுத்த தடவை நடந்த ஆகாயப்போரில், இவனது விமானம் எரிந்து நொறுங்கியது. அமரனானான். அந்த விமானப்படையின் தலை சிறந்த மெடல் தரப்பட்டது, அதற்கு பிறகு. இந்தியாவின் விமானப்படை தந்தை என அறியப்படும் ஸுப்ரடோ முக்கர்ஜி, இவனுடைய மருமான்.

http://www.indiapicks.com/stamps/Gallery/1997-98/1824_Lt-Indra-Lal-Roy.jpg
இன்னம்பூரான்
23 07 2011
உசாத்துணை:
http://www.iloveindia.com/indian-heroes/chandrashekhar-azad.html
http://www.firstworldwar.com/bio/roy.htm