PDA

View Full Version : பெண்பா - மீண்டும்!ஆதவா
21-07-2011, 03:23 PM
பொங்கு நுரையாற்றை அங்குயர் மாமலைமேல்
அங்கியாய் போற்றி விடுப்ப மலையிடுக்கே
தொங்கி நெடுந்தொலை வீழும் அருவியென
அங்கயர் கண்ணி குழல்

நானே பேசாம, திரியை ஆரம்பிக்காம கையெழுத்தா வெச்சிருந்தேன். ஏன்?? நம்மாளுகிட்ட ஏற்கனவே பெண்ணைப் புகழ்றேன்னு பிரானா மீன் மாதிரி கடிவாங்கினது பத்தாதான்னுதான்.. பயமில்லை, மன்றத்து மகளிர் ”என்ன ஆதவா, நீதானா அது?” நு கேட்டுடக்கூடாதுல்ல? இப்போ இந்த வெண்பா(?)வும் அப்படித்தான் ஆச்சு.. நானொரு அர்த்தத்தில எழுதப் போக, அது ஒரு அர்த்ததில அகஸ்மாத்தா அமைஞ்சிட.... இப்போ திரி ஆரம்பிச்சி புலம்பிட்டு இருக்கேன்.

மக்களே.. நீங்கள் எனக்கு உதவுங்கள், உங்களுக்கு தனியா ஏதாச்சும் செய்யலாம்.

அக்னி
21-07-2011, 03:39 PM
ஏனப்பா இது என்ன தப்பா...
என்னப்பா வேணுமப்பா...

தாமரை
21-07-2011, 03:43 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=25799

அடப்பாவி! ஆதவா, துரோகி, மதிக்கு பார்த்த பொண்ணை எதையோ சொல்லி மதி மனசைக் கலைச்சு மதியோட கல்யாணத்தையேக் கெடுத்திட்டு இப்போ அதே பொண்ணை நீ உஷார் பண்ணப் பாக்கறியே நியாயமா? அடுக்குமா? மக்களே நீங்களே சொல்லுங்க..

http://2.bp.blogspot.com/_x__vwisw_WY/TRhUWiAxd5I/AAAAAAAAA0I/-ajyFgs2WhU/s1600/aadava.jpgபொங்கு நுரையாற்றை அங்குயர் மாமலைமேல்
அங்கியாய் போற்றி விடுப்ப

பொங்கும் நுரை போல ஷாம்பு போட்டு அலசிய புஸூ புஸூ வென்ற கூந்தல் உயர்ந்த மலைகளின் மேல் அங்கியைப் போர்த்தது போல் மார்பின் மேல் விரிந்து விழுந்து புரண்டு கிடக்க

படத்துக்கு அப்படியே பொருந்துதுங்களா

மலையிடுக்கே
தொங்கி நெடுந்தொலை வீழும் அருவியென
அங்கயர் கண்ணி குழல்

மார்பின் மீது விழும் குழலின் ஒரு பகுதி மலையிடுக்கில் விழும் அருவி போல நீண்டு தொங்குகிறதாம் அந்த அழகியக் கயல் கன்னிக்கு.

ஐயாக்களே, அம்மாக்களே நீங்களே நியாயம் சொல்லுங்க. இப்படியெல்லாம் மதி போன்ற ஒரு நல்லவனுக்கு துரோகம் செய்யலாமா?

ஆதவா, முதலில் அவள் நெஞ்சில் உன் பெயரை எழுதின. அப்புறம் நீ ஜி-டாக்ல அவதார் மாத்தின. அப்பவே சந்தேக வளையத்தில் வச்சாச்சு..

இப்ப நீயே வாயைக் குடுத்து மாட்டிகிட்ட...

கீதம் அக்கா, இந்தப் பஞ்சாயத்தை தீர விசாரித்து நீங்கள் தான் பைசல் பண்ணனும். ஏன்னா ஃபோட்டோவை கீதம் அக்கா மதிக்குதான் அனுப்பினாங்க. அதை ஆதவா அப்பவே சுட்டுட்டான். இப்பதான் அவன் வேஷம் கலையுது..

:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::confused::confused::confused::eek::eek::eek:

(இதுக்கு ஸ்மைலி போட்டு மாளாது போல இருக்கே!)
:icon_p::icon_nono::huepfen024::icon_shout::icon_clap::sport-smiley-005::sport-smiley-002::sport-smiley-008:


இதோ பார் ஆதவா.. ஆட்டோல வந்துகிட்டே இருக்காங்க கீதம் அக்கா:auto003:

வந்ததும் .. :waffen093::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-027::violent-smiley-034:

அக்னி
21-07-2011, 03:53 PM
தாமரையார் வந்துட்டு ஏன் ஒன்றுமே சொல்லாமப் போயிட்டார் என்று யோசிச்சேன்...

தாமரை
21-07-2011, 03:54 PM
ஏம்ப்பா மதியை உசுப்பேத்தறீங்க.....இம்புட்டு நல்ல பொண்ண வேணான்னு சொல்ல மதிக்கு மதியில்லையா....?

ஆதவாதான் ஏதோ டபுள்கேம் ஆடறாரு....அவருக்கு அனுப்பினது ஒண்ணு...இங்க போட்டிருக்கறது ஒண்ணு....(ஆஹா....அக்னி வந்து கணக்கு டேலியாகலையேன்னு சொல்லப்போறாரு)

படம் சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர். அசத்தலா இருக்கு.(ஆயில் பெயிண்டா....வாட்டர் கலரா?)

வாழ்த்துக்கள் ஆதவா.

சிவா நீங்க தீர்க்கதரிசி:4_1_8::icon_03:

தாமரை
21-07-2011, 03:55 PM
தாமரையார் வந்துட்டு ஏன் ஒன்றுமே சொல்லாமப் போயிட்டார் என்று யோசிச்சேன்...

இப்ப நீங்க வந்திட்டீங்களே.. அதான் திரி பற்றி எரியுது!!!:lachen001::lachen001::lachen001:

மதி
21-07-2011, 04:10 PM
:):):):):):):):):)

தாமரை
21-07-2011, 04:14 PM
:):):):):):):):):)

பாவங்க மதி.. அவன் முகத்தைக் கூட அந்தப் பொண்ணு ட்ரஸ் கலர்லயே மாத்தி மேட்சா மாத்தியிருக்கான் பாருங்க.
.

மதி
21-07-2011, 04:18 PM
பாவங்க மதி.. அவன் முகத்தைக் கூட அந்தப் பொண்ணு ட்ரஸ் கலர்லயே மாத்தி மேட்சா மாத்தியிருக்கான் பாருங்க.
.
:eek::eek::D:D

Nivas.T
21-07-2011, 04:20 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:


ஆடே வந்து பிரியாணி போட சொல்லிடுச்சுப்பா

:lachen001:


என்ன ஒரு வில்லத்தனம்

கீதம்
21-07-2011, 10:27 PM
பொங்கு நுரையாற்றை அங்குயர் மாமலைமேல்
அங்கியாய் போற்றி விடுப்ப

பொங்கும் நுரை போல ஷாம்பு போட்டு அலசிய புஸூ புஸூ வென்ற கூந்தல் உயர்ந்த மலைகளின் மேல் அங்கியைப் போர்த்தது போல் மார்பின் மேல் விரிந்து விழுந்து புரண்டு கிடக்க

படத்துக்கு அப்படியே பொருந்துதுங்களா

மலையிடுக்கே
தொங்கி நெடுந்தொலை வீழும் அருவியென
அங்கயர் கண்ணி குழல்

மார்பின் மீது விழும் குழலின் ஒரு பகுதி மலையிடுக்கில் விழும் அருவி போல நீண்டு தொங்குகிறதாம் அந்த அழகியக் கயல் கன்னிக்கு.

:icon_b::icon_b::icon_b:


ஐயாக்களே, அம்மாக்களே நீங்களே நியாயம் சொல்லுங்க. இப்படியெல்லாம் மதி போன்ற ஒரு நல்லவனுக்கு துரோகம் செய்யலாமா?:

ஆதவா, முதலில் அவள் நெஞ்சில் உன் பெயரை எழுதின. அப்புறம் நீ ஜி-டாக்ல அவதார் மாத்தின. அப்பவே சந்தேக வளையத்தில் வச்சாச்சு..

இப்ப நீயே வாயைக் குடுத்து மாட்டிகிட்ட...

கீதம் அக்கா, இந்தப் பஞ்சாயத்தை தீர விசாரித்து நீங்கள் தான் பைசல் பண்ணனும். ஏன்னா ஃபோட்டோவை கீதம் அக்கா மதிக்குதான் அனுப்பினாங்க. அதை ஆதவா அப்பவே சுட்டுட்டான். இப்பதான் அவன் வேஷம் கலையுது..

:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020::confused::confused::confused::eek::eek::eek:

(இதுக்கு ஸ்மைலி போட்டு மாளாது போல இருக்கே!)
:icon_p::icon_nono::huepfen024::icon_shout::icon_clap::sport-smiley-005::sport-smiley-002::sport-smiley-008:

நான் அப்பவே யோசிச்சேன். இவர் ஏன் பழங்கிழவியின் நரைமுடியைப் பக்குவமா வர்ணிச்சிட்டிருக்காருன்னு. இப்பத்தானே தெரியிது, இது அந்த வெள்ளைக்காரப் பொண்ணுன்னு.


இதோ பார் ஆதவா.. ஆட்டோல வந்துகிட்டே இருக்காங்க கீதம் அக்கா:auto003:

வந்ததும் .. :waffen093::violent-smiley-010::violent-smiley-004::violent-smiley-027::violent-smiley-034:

பாவம், ஆதவா சின்னப்பையன் தானே... பிழைச்சுப் போவட்டும். :icon_rollout: (ஆதவா ஜொள்ளுதான் அனைவரும் அறிந்த விஷயமாச்சே...):aetsch013:

தாமரை
22-07-2011, 12:45 AM
அதுசரி..


இந்த பொண்ணையா நான் வேண்டாம்னு சொன்னேன்.. இந்த போட்டோவ எனக்கு அனுப்பல..
ஆனாலும் ஜெஸ்ஸி போட்டோ சூப்பர்.. வாழ்த்துக்கள்.. :icon_ush::icon_ush:


ஆதவா, நான் அனுப்பின பெண்ணின் புகைப்படம் இதுவாய் இருக்க வாய்ப்பே இல்லை. என்னதான் தலைக்குப் பொன்னிறமும், கண்ணுக்கு நீலநிறமும் இருந்தாலும் முகத்தில் இந்தியப் பெண்ணின் சாயல் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆஸ்திரேலியப் பொண்ணுன்னு சொல்லி இந்தியப் பெண்ணைக்காட்டினால் எப்படி? அதான் மதி உஷாராயிட்டார்.

பொண்ணு படம் சூப்பர், ஆதவா.:icon_b:

நீங்களும் இந்தச் சதியில் உடந்தை என்று அப்பவே சந்தேகம் இருந்துச்சி..

பாவம்.. மதிங்கற ஒரு அப்பாவியை இப்படியுமா எல்லோரும் கூட்டு சேர்ந்து ஏமாத்தறது?

தாமரை
22-07-2011, 12:57 AM
:icon_b::icon_b::icon_b:நான் அப்பவே யோசிச்சேன். இவர் ஏன் பழங்கிழவியின் நரைமுடியைப் பக்குவமா வர்ணிச்சிட்டிருக்காருன்னு. இப்பத்தானே தெரியிது, இது அந்த வெள்ளைக்காரப் பொண்ணுன்னு.போதுமா ஆதவா?

இல்லை இன்னும் 10 பேர் வந்து சாட்சி சொல்லணுமா?

------------------------------------------------------------------------

தாமரை: "படமெடுத்து போட்ட அது" னால தான் பொங்குதோ நுரை?

Aadavan: யோசிக்கிறேன், ஏதாச்சும் தப்பா எழுதிட்டமான்னு

தாமரை: ஒரு பெண்ணின் கொங்கைகளுக்கு நடுவே விழும் நரைத்த கூந்தல் அப்படின்னு அர்த்தம் வருதேப்பா

தாமரை: நுரைத்த நீர் = நரைத்த கூந்தல்

தாமரை: அங்குயர் மாமலை = கொங்கைகள்
அங்கியாய் போற்றி விடுப்ப
நரைத்த கூந்தலை முன்பக்கம் இழுத்து மார்பின் மேல் போட்டுக் கொண்டிருக்கிறாள்
மலையிடுக்கே தொங்கி நெடுந்தொலை வீழும் அருவி --- சௌரியா?
ஏம்பா பொண்ணுங்க உனக்கு ஏன் அவ்வளவு கோபம்?


Aadavan: நீர் எப்படி கூந்தல் ஆகும்?


தாமரை: நீதானே ஒப்பிட்டு இருக்க..
ஒருவேளை விக் கை சொன்னியோ?
விக்குக்கே சௌரியா? அநியாயமா இல்லையா உனக்கு?


Aadavan: இல்லையே.. நுரையாற்றை, நுரைத்த ஆறு


தாமரை: நுரைத்த ஆறு வெள்ளையாத்தானே இருக்கும்
அதுதானே அருவியா விழும்
அப்ப அது பார்ட்டி இல்லப்பா, பாட்டி


Aadavan: அப்படியும் வெச்சுக்கலாம்னாலும்
அங்கியாய்? இது இடிக்குதே?


தாமரை: விரித்த கூந்தல் மார்பின் மேல் அங்கியாய்தானே விழும்


Aadavan: மார்பின் மேல் சட்டையை போர்த்தி விட்டமாதிரியா?
நல்ல சிந்தனைதான்.. இருந்தாலும் ஏதோ மிஸ் ஆவது மாதிரி ஒரு ஃபீலிங்


தாமரை: பேய் மாதிரி முடியை விரிச்சு போட்டு இருக்கிற பாட்டி


Aadavan: ஹாஹா


தாமரை: உன்னுடைய அவதாரைப் பாரு
அந்த கூந்தல் வெள்ளைதானே
மார்பின் மேல் போர்த்திய மாதிரி புரளுதுதானே


Aadavan: மார்பில வேற படர்ந்து இருக்கு


தாமரை: அதான் சொன்னேன்


Aadavan: சரியாபோச்சு போங்க


தாமரை: அதை நல்லாப் பார்த்துகிட்டே கவிதையைப் படி
இப்ப பொருத்தமா இருக்கா?


Aadavan: பொங்கு நுரையாறு க்கு சரியான விளக்கம் பொருந்தலையே? பொங்கு என்பது எதில் பொங்குச்சாம்?


தாமரை: அதாம்பா ஷாம்பு போட்டு அலசிய கூந்தல் புஸூ புஸூன்னு இருக்கில்ல


Aadavan: :)
தமிழ் மன்றத்தில போட்டு கேட்டுப் பார்க்கிறேன்.


தாமரை: போடு.. ஆனா அடிப்பேன் அழக்கூடாது...


Aadavan: என்னோட அர்த்தம் சரியா இருக்கும்னு நம்பி....


தாமரை: அர்த்தம் அனர்த்தம் ஆகி நீ துரோகின்னு பட்டம் வாங்கப் போற


Aadavan: பெண்பாவில வாங்காததா... இதையும் ஒரு கை பார்த்துடுவோம்

-------------------------------------------------------------------------

இதுதாங்க அந்த சாட்...

கீதம்
22-07-2011, 03:04 AM
நன்கு பெருத்து நீண்ட பழங்கிழவி அவள். அவளூக்கு எத்தனை வயது என்று கணக்கிட்டுச் சொல்ல முடியவில்லை. அவளை முன்னேபின்னே இதுவரையிலும் நான் பார்த்ததுமில்லை. ஆனால் ஆசை வந்தது ஒருநாள். கிளம்பினேன். அந்த பழம் பெரும் கிழவியின் உடல் கண்ணுக்கு எட்டாத தொலைவில் நீண்டு இருந்தது. பசும்படுக்கையில் அவள் நீட்டி படுத்திருந்தாள். என்ன செய்தும் அவளது உடலமைப்பை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. யாரோ சொன்னார்கள், அவளது ஆதி, மட்டுமே தெரியும் சென்று பாருங்கள் என்று. அதனோடு, அவள் இறைவனே வணங்கும் பேரின்பம் பெற்றவள், அவளிடம் ஆசி வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.

எனக்குத் தெரிந்து அவளை முழுமையாகப் பார்த்தவர்கள் இல்லை. அவள் கவர்ச்சிகரமான உடையணிந்தவள் என்றூ பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அவளுக்குள் பழங்காடு பொதிந்து கிடப்பதாகவும், அவள் மனம் முழுக்க பிரியத்தின் சுவாசம் நிறைந்திருப்பதாகவும் அவளுல் இறங்கிக் காதலித்த ஒரு கவிஞர் சொன்னார். அவள் என்ன உடுத்தியிருக்கிறாள், அவளது முகம் எந்த வர்ணம் என்ற ஒரு விபரமும் எனக்குத் தெரியாது. ஆனால் ஒரேஒரு விஷயம் நான் பார்த்தபொழுது தெரிந்து கொண்டேன். அவளின் கூந்தல் நீண்டது. ஃப்லோரசண்ட் வெள்ளை வர்ணத்தில் கண்ணைப் பறித்து தனக்குள் ஒளித்துக்கொள்ளும் குணமுடையது. முதல் முறை பார்த்த பொழுது என்னை அவளது கவர்ச்சிக்குள் இழுத்தாள்.

கூந்தல் தரிசனம் முடிந்து வர யாருக்கும் மனமேயில்லை. நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்தை கண்களால் சிறைபிடிப்பது தவறானது. ஆனால் கிழவி கடவுளுக்கும் மேலானவள். அவள் ஒன்றும் சொல்லமாட்டாள் என்று தெரிந்தே, கண்களால் ஓவியம் தீட்ட ஆரம்பித்தேன்.

இங்கே படித்ததுதான் என் நினைவுக்கு வந்தது. :):):)

ஆதவா
22-07-2011, 05:06 AM
மக்களே.... என்னையும் மதியையும் பிரிக்க சதியே நடக்குது.. மதி!!! இதையெல்லாம் நம்பாதீங்க.. நான் ரொம்ப நல்லவன்ன்ன்னு உங்களுக்கே தெரியும். நீங்களும் ஆதனும் சேர்ந்து ஒரு பெண்ணை சைட் அடிச்சதையெல்லாம் நான் மன்றத்தில சொல்லிட்டு இருக்கேனா? இல்லை தக்ஸோட வண்டியில ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணப் போயி ரெண்டுபேரும் குப்பறடிச்சு பொறண்டு விழுந்ததையெல்லாமா நான் சொல்லிட்டு இருக்கேன்??

இப்போ கவிதைக்கு வருவோம்.
மக்களே நல்லா கவனிங்க, இதுக்கும் மதிக்கு பார்த்த பொண்ணுக்கும் சம்பந்தமேயில்ல, (நம்புங்க எசமான், நம்புங்க) “அங்கயர் கண்ணி” என்னோட கன்னி, ஆனால் இந்த போட்டோவில இருக்கிற கன்னியோ நல்லா விழிச்சு இருக்கிறதிலிருந்தே தெரியலையா கவிதைக்கும் பொண்ணுக்கும் சம்பந்தமில்லைன்னு...

கீதம் அக்கா.... சரியான நேரத்தில சரியான வரிகளை அதுவும் நானே எழுதிய வரிகளை பொருத்தமா போட்டிருக்கீங்க... பார்த்தீங்களா நான் எவ்வளவு நல்ல பையன்!!?

சிவாண்ணன் தான் காலை வாரிவிட்டுட்டார்!!! இருங்கண்ணே... உங்களைப் பார்க்கிறப்போ நானும்.......

ஆதவா
22-07-2011, 05:11 AM
நான் அப்பவே யோசிச்சேன். இவர் ஏன் பழங்கிழவியின் நரைமுடியைப் பக்குவமா வர்ணிச்சிட்டிருக்காருன்னு. இப்பத்தானே தெரியிது, இது அந்த வெள்ளைக்காரப் பொண்ணுன்னு.


அக்கா...
அந்த பொண்ணுக்கு இருக்கிறது Blonde Hair. நான் சொன்னது நரைமுடி! சோ இரண்டுக்கும் இது பெரிய வித்தியாசமில்லையா? :icon_b::icon_b:

Ravee
22-07-2011, 06:40 AM
ம்ம்ம் ....... மன்றத்துக்கு இளைச்சது மதிதானா .... பாவம்ங்க ..... :)

ஆதி
22-07-2011, 07:29 AM
"அங்கயர் கண்ணி"

அந்த பொண்ணூ சரக்கு போட்டிருந்துச்சோ!!!!!!!!!

ஆதவா...

நீர்வீழ்ச்சி என்பது தப்பான பதம் என்பதை மறந்துட்டீங்களா!! , அருவிதான் சரியாம்...

விழுந்தால் தானே அருவி, அப்புறம் அருவி எப்படி விழும்..

அதான் அண்ணா சௌரியா நு கேக்குறாரு!!!

நேரமில்லை, அப்புறம் வர்றேன்...

தாமரை
22-07-2011, 08:00 AM
தாமரை: மாட்னியா


Aadavan: பதில் கொடுத்திருக்கேன்

தாமரை: கிழவியைக் கூட விட்டு வைக்கலியே நீ


Aadavan: அங்கயர் கண்ணி, Blonde Hair.. இதைவெச்சுதான் பேசப்போறேன். அந்த பொண்ணுக்கு நரைமுடியில்லை,
ஹேஹே


தாமரை: ஆனாலும் ஓவியத்தில் ஆதவான்னு பேர் எழுதி இருக்கியே
அதை வேறு மதிக்குப் பார்த்த பொண்ணுன்னு இண்ட்ரடக்ஷன்


Aadavan: :D அப்படின்னா இது வேற் பொண்ணுன்னு வெச்சுக்கலாமே
:)


தாமரை: அப்புறம் எதுக்கு அவளை (கூகுல் அவதாரா) வச்சிருக்கன்னு கேட்பேனே


Aadavan: அதான் மதி பொண்ணை வேணாம்னு சொல்லிட்டாரே.


தாமரை: இந்த பொண்ணையா நான் வேண்டாம்னு சொன்னேன்.. இந்த போட்டோவ எனக்கு அனுப்பல.. அப்படின்னு வாக்கு மூலம் கொடுத்திருக்காரே மதி


Aadavan: :( என்ன பண்ணலாம்,,, பேசாம யாரும் பார்க்கிறதுக்கு முன்ன அவளை மாத்தலாம்


தாமரை: கயற்கண்ணி கண்ணை மூடிகிட்டு இருப்பாள் என்று யார் சொன்னது?


Aadavan: இல்லையில்லை.... ஒருமாதிரி சோம்பல் கண்!!
அட்லீஸ்ட் லைட்டா மூடினாப்ல.


தாமரை: கயல் சோம்பலா இருக்குமா? யார் சொன்னது?
பட்டை ஜிலேபி தெரியாதா? சிங்கம் புலி பாக்கலியா?


Aadavan: மீன்கள் தூங்கி எழுந்துச்சின்னா?


தாமரை: தூங்கினா மீனின் உடல் சின்னதாகிடுமா? ரீல் விடறதுக்கும் அளவில்லையா?


Aadavan: அய்யோ, தூங்கியெழுந்த மீனைப் போன்ற கண்ணை உடையவளே!!! சரியா?


தாமரை: மீனுக்கு இமையே கிடையாதே அது எப்படித் தூங்கும்? மீன் தூங்கிப் பார்த்திருக்கியா நீ?


Aadavan: ஒரு உவமைதான்... தூங்கினா எப்படியிருக்கும்னு ஒரு கற்பனை!


தாமரை: மீனோட கண்கள் வட்ட வடிவமானவை.. அதுசரி நீ எப்போ கண்ணைப் பார்த்த?


Aadavan: சரி, கவிதையில பொங்குநுரையாறு என்பது கூந்தலா இருந்தா கடைசியா வர்ற குழல்?? அந்த ஒப்புமையில இரண்டும் வேற வேறயா நிக்குதே?


தாமரை: ஆறு அருவியா விழுது.. அதே போல் கூந்தலின் ஒரு கற்றை அவள் மார்பினூடே விழுது..
அவ்வளவுதான். நீதானே சொன்ன மலையிடுக்கே அப்படின்னு


Aadavan: ஆறை கூந்தலா எடுத்துக்கிட்டா குழலை என்னவா எடுத்துக்கணும் என்பதுதான் கேள்வி. மலையிடுக்கே எல்லாம் ஓகே


தாமரை: ஆறுதானேப்பா அருவியா விழுது..


Aadavan: அதெல்லாம் ஓக்கேண்ணா


தாமரை: உவமேயமும் உவமையும் சொல்லப்படுவதுதான் உவமையணி. உவமை மட்டுமே சொல்லப்படுவது உருவக அணி


Aadavan: ஆறை போர்த்தி அருவியா விழுந்து...... கடைசியிலதான் அது குழல்னு சொல்றேன். அப்படின்னா ஆறு என்னவாம்?
ஒரே நேரத்தில ஒண்ணுக்கே இரண்டு உவமை தரலாமா?
ஐமீன் ஒண்ணு உவமையாகவும் இன்னொண்ணு பொருளாகவும்.


தாமரை: எங்க ரெண்டு இருக்கு ஒண்ணுதானே இருக்கு


Aadavan: ஆறு = கூந்தல்... குழல் = கூந்தல்.. இதில் ஆறு உவமை. குழல் பொருள்


தாமரை: மலைமேல் பெருக்கெடுத்த ஆறு இடுக்கில் அருவியாக விழுவது போல் அவள் மார்பின் மேல் பரந்த கூந்தலின் ஒரு கற்றை மார்பினூடே விழுகிறது. அப்படித்தான் எழுதி இருக்கே


Aadavan: ஒரு சந்தேகம்.. குழல்னா கூந்தலின் ஒரு கற்றையா?


தாமரை: ஒரே ஒரு முடியைக் கூட குழல்னு சொல்லலாம்..
கட்டோடு குழலாட ஆட ஆட..


Aadavan: ஓ!


தாமரை: காரணம் முடியின் அமைப்பு குழல் போல உருளையானது இல்லையா? அதனால்தான்


Aadavan: ஓஹ்!! செம்ம.


தாமரை: இப்ப நீ என்ன நினைச்சு எழுதின என்று சொன்னால் காமெடி பீஸாகிடும் இல்லையா?


Aadavan: :)
ஏற்கனவே மன்றத்தில “காம” கவிஞன்னு ஒரு ந்லல பேரு இருக்கு!!
நான் பேசாம ஆறு மலை, மலையிடுக்குன்னு இயறகையா எழுதினேன்
இப்போ யார் சொன்னாலும் நம்பமாட்டாங்க


தாமரை: தப்பு சுல்தான் என்று பட்டப் பேர் கூடக் கொடுத்தாச்சு


Aadavan: அவ்வ்.. :(தாமரை: காமக் கவிஞன் கால் மாத்திப் போட்டுக் கமாக் கவிஞனாகலாம்னு பாக்கறியா?


Aadavan: ஹாஹாஹா


தாமரை: அருவியென
அங்கயர் கண்ணி குழல்
அதாவது அருவி போன்ற கூந்தல்.. கூந்தல் போன்ற அருவி அல்ல

தாமரை: அருவியோ என எழுதி இருந்தால் இரண்டு பக்கமும் சேர்த்துக்கலாம்


Aadavan: அங்கயர் கொஞ்சம் இடிக்குதே... அங்கு+அயர்+கண்ணி.. இதில மீன் வரவாய்ப்பில்லையே?
:)


தாமரை: சொற்சிலம்பம் படி
அம்+கயற்+கண்ணி
அழகிய மீன் போன்ற கண்ணுடையவள்


Aadavan: அதிலிருந்துதான் அங்கயர்கண்ணி புடிச்சேன்
அயர் நா அயர்ந்த இல்லையா?


தாமரை: அது பின்னாடி கிண்டலுக்குச் சொல்லி இருப்பேன்
அப்படியும் பொருள் கொள்ளலாம்னு


Aadavan: எப்படியோ வாதாட பொருள் சரியா இருக்கே
ஹேஹெ


தாமரை: சிலேடைகள் அப்படித்தான்

அங்கயற்கண்ணி = அழகிய மீன் விழியாள்
அங்கு அயற் கண்ணி = அங்கே அயர்ந்த (தூக்கம் கலந்த) கண்களைக் கொண்டவளாய் இருப்பவள்.


Aadavan: நீங்கள் சொன்னது சரியாக இருக்கிறது. நான் என்னோட வாதத்துக்கு ”அயர்ந்த” எடுத்துகிட்டேன். பட் கவிதை எழுதறப்போ இதெல்லாம் யோசிக்கலை,


தாமரை: அயர்ந்திருக்கிறாளோ, தூங்கிகிட்டு இருக்கிறாளோ? ஏன் எங்கெங்கோப் பார்க்கிறே?


Aadavan: :) வேணவே வேணாம் கிரைம் ரேட் கூடிட்டே போவுது பத்தாதற்கு கையெழுத்தில ஸ்மைலி வேற... அம்மாஞ்சியா போட்டிருக்கேன்

தாமரை: பச்சையா முகத்தைப் போட்டா பச்சைக் குழந்தைன்னு நினைத்துக் கொள்வாங்களா என்ன?
பச்சையாப் பேசி இளிக்கிறான்னு கூட நினைக்கலாம் இல்லையா?


Aadavanan: :( இப்ப இதுவேறயா? :)


தாமரை: வேற இல்லை,, இரண்டும் ஒண்ணுதான்


Aadavan: :)


தாமரை: அதனாலதானே பச்சைக் குழந்தையே பிறக்குது..


Aadavan: ஹ


தாமரை: பானை பிடித்தவள் பாக்கியசாலி
அப்ப ஃபோனைப் பிடித்தவள்... ?


Aadavan: போர்ஜரியா?


தாமரை: யோசிச்சு சொல்லு லி-யில் முடியும்


Aadavan: காலியில் முடியுமோ?


தாமரை: போ வில் ஆரம்பித்து லி யில் முடிக்கணும்


Aadavan: நான் நினைச்சது போக்காலி... அல்லது போலின்னு கூட
ம்ஹு,ம்,.


---------------------------------------------------------------------------

பாவம்தான் ஆதவா!!!

தாமரை
22-07-2011, 08:02 AM
ஒரு வேளை நேமாலஜி சாஸ்திரப்படி ஆதவா - பெண்பா இரண்டுக்கும் ஆகாதோ என்னவோ.

தாமரை
22-07-2011, 08:40 AM
அங்கயற்கண்ணி -

விளக்க உரை இங்கே

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=315854#post315854

பெண்பா வின் முதற் தொகுதி

http://tamilmantram.com/vb/showthread.php?t=13586

கருணை
22-07-2011, 09:21 AM
:fragend005: :fragend005: :fragend005:

தாமரை
22-07-2011, 09:27 AM
:fragend005: :fragend005: :fragend005:

கருணைன்னு பேரு வச்சுகிட்டு இப்படிக் கோபப்படலாமா?:D:D:D

ஆதவா
22-07-2011, 01:38 PM
ஒரு வேளை நேமாலஜி சாஸ்திரப்படி ஆதவா - பெண்பா இரண்டுக்கும் ஆகாதோ என்னவோ.
வம் சேர்த்துக்குங்க.


அங்கயற்கண்ணி -

விளக்க உரை இங்கே

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=315854#post315854

பெண்பா வின் முதற் தொகுதி

http://tamilmantram.com/vb/showthread.php?t=13586

மக்களே, அந்த தொகுதியிலயும் நான் ஒரு அப்பாவி...


"அங்கயர் கண்ணி"

அந்த பொண்ணூ சரக்கு போட்டிருந்துச்சோ!!!!!!!!!

ஆதவா...

நீர்வீழ்ச்சி என்பது தப்பான பதம் என்பதை மறந்துட்டீங்களா!! , அருவிதான் சரியாம்...

விழுந்தால் தானே அருவி, அப்புறம் அருவி எப்படி விழும்..

அதான் அண்ணா சௌரியா நு கேக்குறாரு!!!

நேரமில்லை, அப்புறம் வர்றேன்...

வீழும் நீர்,
நுரை பொங்கிய ஆற்றை மலைகளில் போர்த்த இடுக்கில் வழியும் அருவியைப் போல.....


:fragend005: :fragend005: :fragend005:

நீங்க ஏங்க தானா வந்து தலையைக் கொடுத்தீங்க?

சிவா.ஜி
22-07-2011, 02:33 PM
என்னப்பாநடக்குது இங்க....ஆதவா....பாவம்....தாமரைக்கிட்ட மாட்டிக்கிட்டாரு....

ஆனா....மதி.......பாவம்........!!!!

தாமரை
22-07-2011, 04:53 PM
என்னப்பாநடக்குது இங்க....ஆதவா....பாவம்....தாமரைக்கிட்ட மாட்டிக்கிட்டாரு....

ஆனா....மதி.......பாவம்........!!!!

மதியைப் பற்றிக் கவலைப்பட இப்பொ நானும் நீங்களும்தான் இருக்கோம் என்று நினைக்கறப்பவே அழுவாச்சி அழுவாச்சியா வர்துண்ணா!:traurig001::traurig001::traurig001:

ஆதவா
23-07-2011, 04:27 AM
மதியைப் பற்றிக் கவலைப்பட இப்பொ நானும் நீங்களும்தான் இருக்கோம் என்று நினைக்கறப்பவே அழுவாச்சி அழுவாச்சியா வர்துண்ணா!:traurig001::traurig001::traurig001:

பாத்தீங்களா? இந்த திரியில திரிச்சு சொன்னதைப் பார்த்துட்டு மதியே ஒண்ணும் சொல்லாம போயிட்டாரு!!!

தாமரை
23-07-2011, 04:47 AM
பாத்தீங்களா? இந்த திரியில திரிச்சு சொன்னதைப் பார்த்துட்டு மதியே ஒண்ணும் சொல்லாம போயிட்டாரு!!!

அந்த மௌனத்தில்தான் எத்தனைக் கதறல்கள்,,, :traurig001::traurig001::traurig001::traurig001: