PDA

View Full Version : அன்றொரு நாள்: ஜூலை 21



innamburan
20-07-2011, 07:39 PM
அன்றொரு நாள்: ஜூலை 21
கலையரங்கம் தமிழ் இலக்கியத்திலே ஊறியது என்பதற்கு அரிய சான்றுகள் பண்டை காப்பியமான சிலப்பதிகாரத்தில் உளன. அரங்கத்தின் அமைப்பு, திரைகள், இசைக்கருவிகள், ஆசிரிய பெருமக்கள், நர்த்தகி ஆகியவை மென்மையான கலையுணர்வுடன் சித்தரிக்கப்படும்போது, தற்கால பேசும்படங்களையும், நடிக, நடிகையரையும் நினைப்பது இயல்பே. பேசும்படத்தின் அன்னை நாடகமேடை. என்றாவது ஒரு நாள், உசிலம்பட்டி கொட்டாயில் சங்கீத சம்ராட் சங்கரய்யர் வாசிக்கும் ஹார்மோனியத்தில் லயித்து, டிராமா பார்க்காமல் தூங்கி வழிந்ததை அசை போடும் போது, சங்கரதாஸ் ஸ்வாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், நவாப் ராஜமாணிக்கம் (என் தாத்தாவின் ஃபெரண்ட்.), டி.கே.எஸ். சகோதரர்கள், மனோஹர், சிவாஜி கணேசன் எல்லாரும் குறும்படக்காட்சியாக முன்னால் வந்து நிற்கிறார்கள். நமது தேசீய நாடகபண்புகள் ஸூபர்! வள்ளியும், முருகனும் காதலிக்கும்போதே காந்தி மஹான் பாட்டு பாடுவார்கள்! அதெல்லாம் பற்றி ஒரு நாள் எழுதணும்.

இன்று சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள். அவரை ஜூலை 21, 2001 ல் இழந்தோம். அக்டோபர்,1, 1927ல் விழுப்புரத்தில் நாட்டுப்பற்று கொண்ட குடும்பத்தில் பிறந்த பத்ம விபூஷண் வி.சி.கணேசன் அவர்களுக்கு தந்தை பெரியாரால் சூட்டப்பட்ட அடைமொழி, ‘சிவாஜி’. நாடகத்தில் எடுத்த நற்பெயர். 1952லிருந்து 1999 வரை 300க்கு மேற்பட்ட சினிமாக்களில் நடித்த நம் கதாநாயகனுக்கு செவாலியே விருதும், தாதா சாஹேப் பால்கே விருதும் கிடைத்தது பொருத்தமே. சொல்லப்போனால் காலம் தாழ்த்தி கிடைத்தன. இவர் நடிகர் அல்ல. ஒவ்வொரு பாத்திரத்திலும் இரண்டற கலந்து இயங்கியதால், சிவாஜி என்றால், கணேசன், வ.உ.சி. என்றால், கணேசன், ப்ரெஸ்டிஜ் பத்மனாபன் என்றால், கணேசன்! இப்படி 300க்கு மேல்! பராசக்தி கணேசனையும் மறக்க முடியாது; சிக்கில் சண்முகசுந்தரத்தையும் மறக்கமுடியாது.
சிவாஜி கணேசன் அரசியலுடன் பரீக்ஷார்த்தமாகவே சற்றே ஊடலும், கூடலுமாக இருந்தாலும், விவேகத்துடன் விலகியே இருந்தார். அவரை பற்றி அதிக எழுதாமல், உசாத்துணையில் இருக்கும் தளத்தில், அவரை பற்றி விருப்பமுள்ளவர்கள் தெரிந்து கொள்ளலாம், என்று கேட்டுக்கொள்கிறேன். என் நண்பர் ஒருவர் எழுதிய ஆங்கில நூலையும் அங்கு சுட்டியிருக்கிறேன்.
இன்னம்பூரான்
21 07 2011
http://www.vinavu.com/wp-content/uploads/2010/05/Sivaji_Ganesan_India_postal_stamp.jpg

உசாத்துணை:
http://velu.blogsome.com/2006/08/02/vc/
Sundararaj Theodore Baskaran (2008): Sivaji Ganesan:Legends of Indian cinema

sarcharan
27-07-2011, 09:53 AM
பலே! பலே!
ஒரு பக்கம் நடிகர் திலகத்தின் சுயசரிதை.. மற்ற்றொரு பக்கம் உங்களது ஆக்கம்... சபாஷ்... தொடரட்டும் உங்கள் பணிகள்