PDA

View Full Version : தவறுகள் திருத்தப்படும் ...

Ravee
20-07-2011, 12:08 AM
http://frescomac.files.wordpress.com/2009/02/time-machine.png?w=512&h=512

என் தவறுகளை திருத்திக்கொள்ள .... :cool:

கால இயந்திரத்தை கையில் எடுத்தேன் .... :)

தவறுகள் திருத்தி முடிக்கும் போது .... :icon_rollout:

என் தந்தை வாங்கி கொண்டார் ..... :frown:

இனி தவறுகள் முழுமையாய் திருத்தப்படும் ... :traurig001:

Nivas.T
20-07-2011, 06:34 AM
அப்போ........ அப்போ...........
அப்படீன்னா........... அப்படீன்னா..........:eek::eek::eek::eek:

கீதம்
20-07-2011, 07:55 AM
அவருக்குப் பின் அவரது தந்தை காத்திருப்பாரோ... அவர் தம் தவறு திருத்த? :)

கடைசியில் மிஞ்சியது யார்தான் ரவீ?:confused:

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ? :eek:

தாமரை
20-07-2011, 08:28 AM
கால எந்திரத்தில் போய் உங்களுக்கான பின்னூட்டத்தை போட்டுவிட்டு வந்திட்டேன்.. இங்கே போய் படிக்கவும்..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=435202&postcount=7

Ravee
20-07-2011, 08:48 AM
அப்போ........ அப்போ...........
அப்படீன்னா........... அப்படீன்னா..........:eek::eek::eek::eek:

அப்படின்னா அப்படித்தான் நிவாஸ் .... :lachen001:

Ravee
20-07-2011, 08:50 AM
அவருக்குப் பின் அவரது தந்தை காத்திருப்பாரோ... அவர் தம் தவறு திருத்த? :)

கடைசியில் மிஞ்சியது யார்தான் ரவீ?:confused:

எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்களோ? :eek:

கடவுளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே அக்கா .... :)

Ravee
20-07-2011, 08:55 AM
கால எந்திரத்தில் போய் உங்களுக்கான பின்னூட்டத்தை போட்டுவிட்டு வந்திட்டேன்.. இங்கே போய் படிக்கவும்..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=435202&postcount=7

நேற்றைய சரி இன்று தவறாகலாம்
இன்றைய தவறுகள் நாளை சரியாகலாம்
நாளைய சரி மீண்டும் தவறாகலாம்
அன்றைய சூழலையும் தேவைகளையும் பொறுத்தே
சரியும் தவறும் ... சரிதானே அண்ணா ... :confused:

தாமரை
20-07-2011, 09:03 AM
நேற்றைய சரி இன்று தவறாகலாம்
இன்றைய தவறுகள் நாளை சரியாகலாம்
நாளைய சரி மீண்டும் தவறாகலாம்
அன்றைய சூழலையும் தேவைகளையும் பொறுத்தே
சரியும் தவறும் ... சரிதானே அண்ணா ... :confused:

சரிதான்..

கத்தாழைக் கண்ணழகி கண்மணி சொன்னதையும் மனசில் வச்சுக்குங்க..

அட நம்ம பட்டர்ஃபிளை எஃபெக்ட் தியரி சொல்லப்படுதே ஞாபகம் இருக்கா? இல்லையின்னா தசாவதாரம் ஒருமுறை பாருங்க.

எந்த ஒரு செயலும் அந்தச் சூழலில் அளக்கவியலா தொடர் நிகழ்வுகளை தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் ஒழுங்கற்ற முறையில் அமைந்தவை. அதனால் இந்த ஒரு செயலால் இந்த ஒரு நிகழ்வை உண்டாக்கலாம் என ஒரு எல்லை வரைதான் நம்மால் அனுமானிக்க முடியுது.

ஆனால் இதைச் சொன்னவரே பின் வருவதை யோசிக்க மறந்திட்டாரு.

பலரும் / பலதும் ஒரே சமயத்தில் பல செயல்களைச் செய்கிறார்கள். இதனால் பல விளைவுகள்., அவற்றின் தொடர் விளைவுகள், அதனால் தூண்டப்பட்ட பின்விளவுகள, பின்விளைவுகளின் பின்விளைவுகள் இப்படிப்பட்ட விளைவுகள் ஒன்றுக்கொன்று குறுக்கிட்டு அதனால் விளையும் விளைவுகள் நாம் எண்ணியும் பார்க்காத பல ஒழுங்கற்ற விளைவுகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. இதுதான் அந்த ஒழுங்கற்ற கற்பனையிலும் அடங்காத அளவில்லாத பின் விளைவுகளை ஏற்படுத்துகிறது. (பட்டர் ஃபிளை எஃபெக்டை சொன்னவருக்கே இவ்வளவு தெளிவா தெரியுமான்னு தெரியலை. நான் தான் விளக்கு விளக்குன்னு விளக்கிகிட்டு இருக்கேன்.)

நாம் செய்யும் செயலைத் தவிர மிச்சமிருப்பதெல்லாம் சூழல். அதாவது 600 கோடி மனிதர்களும், பல்லாயிரங்கோடிக் கணக்கான இன்ன பிறவும் அவை செய்யும் செயல்களும், அவற்றின் பலப்பல மடங்கான பின் விளைவுகளும் நமது சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அப்படின்னா ஒரு செயலின் பலனில் சூழலின் பங்கு எவ்வளவு என்பதை அளக்கத்தான் முடியுமா?

அதனால ஸ்டியரிங்கைத் திருப்பி வண்டியைத் திருப்புகிற மாதிரி வாழ்க்கையைத் திருப்பிவிட முடியாது..

கால எந்திரத்தை யாரோ கண்டுபிடிச்சாலும் அவரால நிகழ்காலத்திற்கு திரும்பி வரமுடியுமா என்பது சந்தேகமே!!!

சிவா.ஜி
20-07-2011, 01:22 PM
வாழ்க்கைக்கு ரீவைண்ட், ஃபாஸ்ட் ஃபார்வேட் பட்டன்கள் இல்லை. எங்கேயோ படிச்சது. தவறைத் திருத்திக்க கால இயந்திரம் தேவையில்லை...வாழும் காலமே போதும். ஆனா...அதுக்குத்தேவை...யந்திரமில்லை.....யதார்த்தம் உணர்ந்த மனசு.

நல்லாத்தான் யோசிக்கிறீங்க ரவீ. வாழ்த்துக்கள்.

கௌதமன்
20-07-2011, 02:28 PM
பாஸ் எனக்கும் ஒரு ட்ரிப்புக்கு முன்பதிவு செய்து கொள்ளுங்கள்! [க்யூ பெரிசாயிட்டே போகுதில்ல?]

த.ஜார்ஜ்
20-07-2011, 02:29 PM
இப்படி ஆளாளுக்குக் கையிலெடுத்துக் கொண்டால்.. தவறுகளே இல்லாத வாழ்க்கை அமைந்துவிட்டால்.. கடவுள்கள் தேவைப்படாமல் போகலாம். மாயான அமைதியில் சீக்கிரமே செத்துப் போய்விடலாம் என்று தோன்றலாம்.. மேலும் இயந்திரகதிக்கு தள்ளப்படலாம்.. தனிமனித எல்லைகள் இன்னும் சிறிதாகலாம்... அல்லது திருத்திக் கொள்ள மிஷின் இருக்கிறதே என்று தப்புகள் அதிகமாகலாம்..
[அந்த இயந்திரம் கைவசம் வந்தவுடன் தெரிவிக்கவும்.]

த.ஜார்ஜ்
20-07-2011, 02:30 PM
வாழ்க்கைக்கு ரீவைண்ட், ஃபாஸ்ட் ஃபார்வேட் பட்டன்கள் இல்லை. எங்கேயோ படிச்சது. தவறைத் திருத்திக்க கால இயந்திரம் தேவையில்லை...வாழும் காலமே போதும். ஆனா...அதுக்குத்தேவை...யந்திரமில்லை.....யதார்த்தம் உணர்ந்த மனசு.

நல்லாத்தான் யோசிக்கிறீங்க ரவீ. வாழ்த்துக்கள்.

:icon_b::icon_b::icon_b:

Ravee
21-07-2011, 05:26 AM
:lachen001:
இப்படி ஆளாளுக்குக் கையிலெடுத்துக் கொண்டால்.. தவறுகளே இல்லாத வாழ்க்கை அமைந்துவிட்டால்.. கடவுள்கள் தேவைப்படாமல் போகலாம். மாயான அமைதியில் சீக்கிரமே செத்துப் போய்விடலாம் என்று தோன்றலாம்.. மேலும் இயந்திரகதிக்கு தள்ளப்படலாம்.. தனிமனித எல்லைகள் இன்னும் சிறிதாகலாம்... அல்லது திருத்திக் கொள்ள மிஷின் இருக்கிறதே என்று தப்புகள் அதிகமாகலாம்..
[அந்த இயந்திரம் கைவசம் வந்தவுடன் தெரிவிக்கவும்.]

இப்ப கூட வாகனம் எங்க வீட்டிலே சும்மா தான் நிக்குது ஜார்ஜ் அண்ணா ... ஒரு ட்ரிப்புக்கு ஒரு கோடி ரூபாதான் ... உங்களை பத்திரமா ஏத்தி அனுப்பி வச்சுடுவேன் திரும்பி வரது உங்க சாமர்த்தியம் ..... டீல் ஒ.கேயா .... :lachen001:

Ravee
21-07-2011, 05:31 AM
வாழ்க்கைக்கு ரீவைண்ட், ஃபாஸ்ட் ஃபார்வேட் பட்டன்கள் இல்லை. எங்கேயோ படிச்சது. தவறைத் திருத்திக்க கால இயந்திரம் தேவையில்லை...வாழும் காலமே போதும். ஆனா...அதுக்குத்தேவை...யந்திரமில்லை.....யதார்த்தம் உணர்ந்த மனசு.

நல்லாத்தான் யோசிக்கிறீங்க ரவீ. வாழ்த்துக்கள்.

அண்ணா மனசு இருந்தாலும் தவறை திருத்திக்க சந்தர்ப்பம் வாய்க்கணுமே .... :frown:

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 12:59 PM
என்னங்க வாழ்க்கைய சுவாரசியம் இல்லாம பண்ணிடுவீங்க போலிருக்கே...தவறு நடந்தாத தான் ஒரு எதிபார்ப்பு இருக்கும் அடுத்ததா அந்த தவற எப்படி தீர்க்கலாம் ன்னு கொஞ்சமேனும் யோசிப்ப்போம் ..செஞ்ச தவறால என்னென்ன விளைவுகள் ஏற்ப்படுமுன்னு எதிபார்ப்பு இருக்கும் ...இந்த முறை கற்ற பாடத்தை வைத்து தவறு நிகழாமல் என்ன வழியுண்டோ அதனை செய்வோம் ...அப்படியே ரொம்ப சுவாரசியமா இருக்கும் வாழ்க்கை ..இந்த எந்திரத்தை பயன்படுத்துறவங்க ம்..... கொடுத்துவச்சது அவ்வளவுதான் ...

Ravee
21-07-2011, 01:09 PM

ஜெய் இன்னும் தவாறன தவறை செய்யலைன்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசுறீங்க .... அந்த தவறை நாங்க செய்துட்டு படுற பாடு இருக்கே அய்யாயோயோவ் ... :traurig001:

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 01:36 PM
ஜெய் இன்னும் தவாறன தவறை செய்யலைன்னு நினைக்கிறேன். அதான் இப்படி பேசுறீங்க .... அந்த தவறை நாங்க செய்துட்டு படுற பாடு இருக்கே அய்யாயோயோவ் ... :traurig001:
ஏனுங்க கல்யாணம் பண்ணுரதுங்கிறது கொடுமையான நிகழ்வு போல சொல்லுறீங்க ...வீட்ல இருக்கிறவங்க பார்த்த என்ன நினைப்பாங்க...கண்ணீர் சிந்தி தம்பியை இப்படி பயமுறுத்தாதுங்க.....

Ravee
27-07-2011, 12:55 PM
ஏனுங்க கல்யாணம் பண்ணுரதுங்கிறது கொடுமையான நிகழ்வு போல சொல்லுறீங்க ...வீட்ல இருக்கிறவங்க பார்த்த என்ன நினைப்பாங்க...கண்ணீர் சிந்தி தம்பியை இப்படி பயமுறுத்தாதுங்க.....

ஜெய் வீட்டில பெண் பார்த்து செய்யுற கல்யாணம் ரோட்டில போற போது நாய் கடிச்ச மாதிரி ஒரு விஷயம் ... உங்கள பார்த்து கவலை பட ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும் ... அதே காதல் கல்யாணம் செய்யுறது ரோட்டில போற நாய் கிட்ட நீங்களே போய் கடி கடி ன்னு சொல்லி கடி வாங்கிட்டு வந்த மாதிரி ஒரு அனுபவம் .... எப்படி கடி பட போறீங்க ??? :traurig001: :D :traurig001:

கருணை
14-09-2011, 09:59 PM
பார்த்த ஆங்கில படத்தை எல்லாம் கவிதை ஆக்கிடீங்க, ஆனால் அழகா சுருக்கமா மற்றவர்களின் கற்பனைக்கு விடைகளை விட்டு இருக்கு

கருணை
14-09-2011, 10:01 PM
ஜெய் வீட்டில பெண் பார்த்து செய்யுற கல்யாணம் ரோட்டில போற போது நாய் கடிச்ச மாதிரி ஒரு விஷயம் ... உங்கள பார்த்து கவலை பட ஒரு கூட்டம் எப்பவுமே இருக்கும் ... அதே காதல் கல்யாணம் செய்யுறது ரோட்டில போற நாய் கிட்ட நீங்களே போய் கடி கடி ன்னு சொல்லி கடி வாங்கிட்டு வந்த மாதிரி ஒரு அனுபவம் .... எப்படி கடி பட போறீங்க ??? :traurig001: :D :traurig001:

இப்படி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் :lachen001:

Ravee
15-09-2011, 04:25 AM
இப்படி பேசுவதை வன்மையாக கண்டிக்கிறேன் :lachen001:

பரிசோதனைக்காக அறுத்த கோழிகளை ரோஸ்ட் போட்டு சாப்பிடுவதையும் கண்டிக்கிறேன். ஹா ஹா ஹா ............... :lachen001:

பென்ஸ்
03-10-2011, 04:14 PM
நல்ல கவிதை ரவி...

கவிதையை படித்ததும் நினைவுக்கு வந்தது..
"டீ பட்டர்பிளை எபக்ட்" திரைபடமே ...
தவறுகள் பாடங்களாக இருக்கும் வகையில் தவறில்லை...
அவற்றை மாற்ற முய்ச்சிக்கும் படத்தின் ஹீரோ நிலை என்ன என்பதே கதை...

கடவுள் கூட "ஓர்ம் ஹோலை" பயன் படுத்தி கடந்த காலத்தை மாற்ற நினைக்கவில்லை என்று நினைக்கிறேன்...
அவர் அப்படி செய்திருந்தால் கண்டிப்பாக மனிதனை படைத்த நிமிடங்களை மாற்றியிருப்பார்...