PDA

View Full Version : மெசேஜா .. உங்களுக்கா.. நானா...

த.ஜார்ஜ்
19-07-2011, 03:57 PM
அறுபது ரூபாய். தினசரி 200 குறுஞ்செய்திகள் இலவசம். தொலைதொடர்பு நிறுவனம் குறிபார்த்து அடித்தது. அந்த அரிய சேவையை பயன்படுத்தாமல் உனக்கெல்லாம் எதுக்குடா கைபேசி என்று உலுக்குவது மாதிரி இருந்தது. நம் செல்பேசி நம்மையே நக்கலடிக்கும் சாத்தியகூறுகள் இருப்பதால் உடனே சேவையை பயன்படுத்தியாயிற்று.

அடுத்த நாள் புத்தாண்டு தினம்.… விடுவோமா. நாங்களும் அனுப்புவோம்ல. ஒரு நாளில் 200 . தட்டி தள்ளிவிடலாம் என்று போன் புத்தகத்தின் அனைத்து எண்களுக்கும் ஆறேழு வாழ்த்து. நம்மகிட்டயா.

எல்லாம் சரியாய்தான் போய்க்கொண்டிருந்தது.

அடுத்த நாள் குடும்பத்தோடு கன்யாகுமரி கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபோது..அழையா எண்ணிலிருந்து ஒரு அழைப்பு.
“அலோ.. எப்படியிருக்கீங்க..” அழகான பெண்குரல் .ரகசியமாய் கேட்டது.
“அலோ.நீங்க யாருங்க”
“க்கும்.. தெரியாத மாதிரி…. விளாடாதீங்க”
யாராயிருக்கும். யோசித்ததில் மண்டை காய்ந்தது. “புரியலையே”
“மெஸேஜ் அனுப்பிட்டு.. தெரியாத மாதிரி ரொம்பதான் நடிக்கிறீங்க”
“மெசேஜா .. உங்களுக்கா.. நானா.. இந்த நம்பரையே நான் இப்பதானே பார்க்கிறேன்.”
“சும்மா பொய் சொல்லாதீங்க.. நீங்க சுரேஷ் தானே.”
“இல்ல.”
“அப்ப யாரு. மனோவா..”
“விடுங்க நான் எந்த SMS-ம் அனுப்பல.”

இது என்ன இழவா போச்சி.பேசாமல் தொடர்பை துண்டித்தேன்.
யாராவது காமெடி பண்ணுகிறார்களா. இல்லையென்றால் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டி விடவா… அல்லது வேண்டுமென்றே வலைவிரிக்கிறார்களா. நேற்று செய்தி அனுப்பின பட்டியலை அவசரமாய் நோட்டமிட்டேன். தெரியாத எந்த எண்ணுக்கும் அனுப்பியிருக்கவில்லை. அதிலும் பெண் பெயரே இல்லை [ நம்ப கஷ்டமாயிருக்கு இல்ல?]

மறுபடியும் இன்னொரு எண்ணிலிருந்து அழைப்பு.

“போனை ஏன் கட் பண்ணுனீங்க.”
“அட நீங்க யாருங்க.. உங்களுக்கு என்ன வேணும்.”
“நீங்க என் பிரெண்டுக்கு நியூ இயர் மெசேஜ் அனுப்புனீங்களே. இப்ப மட்டும் என்னவாம். நேரடியாவே சொல்லுங்க. இப்ப அவகிட்ட குடுக்கிறேன்..”
“அட . நீங்க யாரு எங்க இருந்து பேசறீங்க.”
“என்ன தெரியாத மாதிரி கேட்கிறீங்க. நான் சித்ராவோட பிரெண்ட்.”தஞ்சாவூரில் ஏதோ கோயில் ஒன்றின் பெயரைக் கூறி அங்கே நின்று கொண்டிருப்பதாக கூறினாள். “கொஞ்சம் எட்டி பாருங்க. தெரியும்” என்று வேறு சொன்னாள்.

அதெப்படி தெரியும் . நான் இருப்பது கன்யாகுமரி அல்லவா. இது தவறுதலாய் வந்த அழைப்புதான். அவசரமாய் இணைப்பை துண்டித்தேன்.

படித்துக் கொண்டிருக்கிற இளம்பெண்கள் போலிருக்கிறது. ஒரே தெருவில் வசிப்பவர்களாயிருக்கும். அல்லது சேர்ந்து படிப்பவர்களாயிருக்கும். அவர்களை ஒரு கும்பல் நோட்டம் விட்டுக் கொண்டே அலைவார்களாயிருக்கும். அதில் எவனோ ஒருத்தன் என்று எண்ணிதான்…

தவறுதலாய் என்னிடம் பேசியிருக்கிறாள் போலிருக்கிறது. சுரேஷோ மனோவோ இருவருக்கும் சம வாய்ப்பளிக்கும் உயர்ந்த எண்ணம் அவளிடம் இருக்கிறது. விட்டால் குலம் கோத்திரம் எல்லாம் சொல்வாள் போலிருந்தது.

இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மறுபடி அழைப்பு. அவளாகத்தான் இருக்கும். எடுக்கவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அழைத்தது அருள்சாமி என்று கைபேசி திரை காட்டியது. பழைய நண்பன். பார்த்து ரொம்ப நாளாயிற்று. ஒருமுறை எக்மோரில் ரயில் ஏறப்போன நேரம் மாட்டினான். ‘எப்படிடா இருக்கிற’ என்பதற்குள் வண்டி கிளம்பியது.. ‘அப்புறம் பேசலாம்’ என்று நம்பர் தந்தான்.. அப்புறம் மறந்தே போனேன். நேற்றுதான் ஞாபகம் வந்து அவனுக்கும் மெஸேஜ் அனுப்பியிருந்தேன்.
அதான் இப்போ கூப்பிடுகிறான் போல். எடுத்து ஹலோ என்றேன்.
பதிலேயில்லை.

“என்ன மக்கா எப்படியிருக்க. ரொம்ப நாளா உங்கிட்ட பேசணும் பேசணும்னு நினச்சேன். முடியாம போச்சி.. “

“பரவாயில்ல.. இப்ப பேசுங்க..” என்று அதே பெண்குரல் கேட்டது.

அப்ப அது அருள்சாமி நம்பர் இல்லையா.. பாவி நம்பற மாத்திட்டானா. இல்ல.. அவசரத்தில நான்தான் தப்பா நோட் பண்ணிட்டேனா..?

அக்னி
19-07-2011, 04:09 PM
ஹா ஹா ஹா...

நீங்க தப்பாவே நோட் பண்ணியிருந்தாலும், இனித் தப்ப முடியாது போலிருக்கே...

ஆமா... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...
அப்படீன்னா... தவில்தான்...

30, 35 பேர்தான் உங்க போன் புத்தகத்தில இருக்காங்களா...

innamburan
19-07-2011, 08:01 PM
அதற்கு தான் பரிபாஷையில் பேசணும்கிறது. என்னிடம் பிரத்யேக நிகண்டு உளது.

அன்புரசிகன்
19-07-2011, 11:37 PM
ஜார்ஜ்: ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.............
:D :D :D
--------------------
இனி அந்த 200 எல்லாம் பத்தாது. காரணம் காலை மதியம் மாலை இரவு என வணக்கங்கள். அப்புறம் அவுங்க தாறதுக்கு நன்றி வணக்கம்... இதுலயே 8. அப்புறமா தேனீர் நேரங்களில் ஒரு ஹாய். அந்த ஹாய்க்கு வாறதுக்கு பதில் பதிலுக்கு பதில் என்று சில பல.. அப்புறமா உணவு நேரங்களில் உணவு பற்றி நேரடி வர்ணணைகளுக்கு சமனான குறுந்தகவல்கள் அது இது என்று டபிள் ரிபிள் செஞ்சரி அடிக்கலாம்...

ஆனா இந்த பிரச்சனைகளை 30 ரூபாவோட தான் முடிச்சிடலாம் என்றால் இதுகள கண்டும் காணாததுமாக இருக்க உங்க மனைவிக்கு 30,000.00 மேல செலவழிக்க வேண்டிவருமே... :D :D :D

30, 35 பேர்தான் உங்க போன் புத்தகத்தில இருக்காங்களா...
அருங்காட்சியகத்தில் வைக்கப்படவேண்டிய அலைபேசி.

Ravee
19-07-2011, 11:53 PM
நீங்கள் அழைத்த எண் இப்போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது ........ ஹா ஹா ஹா ஜார்ஜ் அண்ணா ஏன் இப்படி ..... கட்டையை உருவிடுங்க .... :)

மதி
20-07-2011, 01:08 AM
அதெப்படி நான் அனுப்பற மெசேஜ் மட்டும் சரியான ஆளுங்களுக்கே போய் சேருது.. நீங்க கொடுத்து வைத்தவர் தான்.. அப்படியே தஞ்சாவூரில மேல வீதியா கீழ வீதியா.. அப்படிங்கற விவரம்லாம் தெரிஞ்சுக்கலாம்ல :eek::eek::eek:

பாரதி
20-07-2011, 01:30 AM
ஹஹஹா....:lachen001:
அலைபேசி என்பதால் அலைய வைக்கும் போலும்!
வழமையான மனதை ஈர்க்கும் விதத்தால் கதை சொன்ன விதம் சிறப்பு.

அழையா எண் அருள்சாமியின் எண்ணாக மாறிய மர்மம் என்ன ஜார்ஜ்?:aetsch013:

ஓவியன்
20-07-2011, 03:29 AM
இது உங்க நண்பன் அருள்சாமிக்குத் தெரியுமா...??? :D:D:D

“பரவாயில்ல.. இப்ப பேசுங்க..”

அதானே, மேசேச் மட்டும் அனுப்புறீங்க பேசாம இருந்தா எப்படி...??? :lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
20-07-2011, 05:03 AM
இந்தமாதிரி ராங் மெஸெஸில் (ராங் கால் மாதிரி) தோழிகளான இருவர் எனக்கு இருக்கிறார்கள். சத்தியமாக நான் அனுப்பவில்லை, அவர்களது அப்பாவுக்கு அனுப்புவதற்குப் பதில் எனக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு நம்பர்தான் வித்தியாசம்!!

அறுபது ரூபாய். தினசரி 200 குறுஞ்செய்திகள் இலவசம்.

அடுத்த நாள் புத்தாண்டு தினம்.… விடுவோமா. நாங்களும் அனுப்புவோம்ல. ஒரு நாளில் 200 . தட்டி தள்ளிவிடலாம் என்று போன் புத்தகத்தின் அனைத்து எண்களுக்கும் ஆறேழு வாழ்த்து. நம்மகிட்டயா.

பாஸ்!! புத்தாண்டுக்கு ஃப்ரீ எஸ்.எம்.எஸ் செல்லுபடியாகாதே??
எங்கேயோ ஒதைக்குதே??? :eek::eek:

Nivas.T
20-07-2011, 06:21 AM
எல்லாம் சரிதான், ரொம்ப தொல்லையா இருந்தா நம்பர் மாத்திட்டேன்னு என்னோட நம்பர் குடுத்திடுங்க:D அப்புறம் நான் பேசிக்கிறேன் என்ன நமக்கு தஞ்சாவூர் முழுக்க அடியாள் இருக்கு :D

அன்புரசிகன்
20-07-2011, 06:37 AM
எல்லாம் சரிதான், ரொம்ப தொல்லையா இருந்தா நம்பர் மாத்திட்டேன்னு என்னோட நம்பர் குடுத்திடுங்க:D அப்புறம் நான் பேசிக்கிறேன் என்ன நமக்கு தஞ்சாவூர் முழுக்க அடியாள் இருக்கு :D

என்னங்க.. தர்க்கம் இல்லாம (நன்றி கூகிள் மொழிமாற்றி - logic) சொல்றீங்க என்று அவுங்க கேட்டிடக்கூடாதென்பதற்காக உங்கள் இலக்கம் கொடுக்க முடியாதாம். (இந்தியா இலக்கங்களுக்கும் நைஜீரியா இலக்கத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிராதா???):lachen001:

ஓவியன்
20-07-2011, 07:15 AM
இந்தியா இலக்கங்களுக்கும் நைஜீரியா இலக்கத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிராதா???:lachen001:

அந்தளவுக்கு விபரம் இல்லாதவர் நம்ம நிவாஸ் கிடையாது, இப்படியான விடயங்களுக்காகவே இந்திய அலைபேசி இலக்கம் ஒன்றை ரோமிங்கில விட்டு வைத்திருக்கிறார்....!! :icon_b:

இல்லையா நிவாஸ்...??? :D:D

Nivas.T
20-07-2011, 08:09 AM
என்னங்க.. தர்க்கம் இல்லாம (நன்றி கூகிள் மொழிமாற்றி - logic) சொல்றீங்க என்று அவுங்க கேட்டிடக்கூடாதென்பதற்காக உங்கள் இலக்கம் கொடுக்க முடியாதாம். (இந்தியா இலக்கங்களுக்கும் நைஜீரியா இலக்கத்துக்கும் வித்தியாசம் தெரிஞ்சிராதா???):lachen001:

அந்தளவுக்கு விபரம் இல்லாதவர் நம்ம நிவாஸ் கிடையாது, இப்படியான விடயங்களுக்காகவே இந்திய அலைபேசி இலக்கம் ஒன்றை ரோமிங்கில விட்டு வைத்திருக்கிறார்....!! :icon_b:

இல்லையா நிவாஸ்...??? :D:D

அதே... அதே...

ஓவி..... நீங்கள் க... க... க... போங்கள்

அந்த எண் இதுபோன்ற பொது சேவைக்கு மட்டுமே
என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :D:D:D

Nivas.T
20-07-2011, 08:12 AM
தர்க்கம் இல்லாம (நன்றி கூகிள் மொழிமாற்றி - logic)

:eek::icon_rollout::eek::icon_rollout::eek::icon_rollout:

sarcharan
20-07-2011, 08:19 AM
அறுபது ருபாய் செலுத்தி
அல்லல் (ஜொள்ளல்) படும்
அன்பரே..

ஜார்ஜு குட்டி- நீங்க ஒரு மச்சக்கார ஆளு தான் போங்க..

sarcharan
20-07-2011, 08:22 AM
ஒரு நம்பர்தான் வித்தியாசம்!!

பாஸ்!! புத்தாண்டுக்கு ஃப்ரீ எஸ்.எம்.எஸ் செல்லுபடியாகாதே??
எங்கேயோ ஒதைக்குதே??? :eek::eek:

அவருக்கு அழைப்பு வந்த அந்த நாள் ஒரு புத்தாண்டு பிறந்த நாள் போல..:redface::p

சரி விடுங்க... இதுலே எல்லாம் குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு.:D:p;)

அக்னி
20-07-2011, 09:26 AM
இனி அந்த 200 எல்லாம் பத்தாது. காரணம் காலை மதியம் மாலை இரவு என வணக்கங்கள். அப்புறம் அவுங்க தாறதுக்கு நன்றி வணக்கம்... இதுலயே 8. அப்புறமா தேனீர் நேரங்களில் ஒரு ஹாய். அந்த ஹாய்க்கு வாறதுக்கு பதில் பதிலுக்கு பதில் என்று சில பல.. அப்புறமா உணவு நேரங்களில் உணவு பற்றி நேரடி வர்ணணைகளுக்கு சமனான குறுந்தகவல்கள் அது இது என்று டபிள் ரிபிள் செஞ்சரி அடிக்கலாம்...
அசந்துட்டேன் அன்பு...
மக்களே, அடுத்த கல்யாணச் சாப்பாடு ரெடியாயிட்டே இருக்குதுங்கோ...

அருங்காட்சியகத்தில் வைக்கப்படவேண்டிய அலைபேசி.
:lachen001:
கிடைக்கிற தொடர்பிலக்கங்கங்கள் அனைத்தையும் பதிந்து வைத்துக்கொண்டு,
அதுக்குள்ள முங்கி தேவையான நம்பரைத் தேடிற இன்பமான அவஸ்தையை,
இப்படி வெறும் 35 நம்பர்களை மட்டும் வைத்து இழக்கலாமா...

அதெப்படி நான் அனுப்பற மெசேஜ் மட்டும் சரியான ஆளுங்களுக்கே போய் சேருது.. நீங்க கொடுத்து வைத்தவர் தான்.. அப்படியே தஞ்சாவூரில மேல வீதியா கீழ வீதியா.. அப்படிங்கற விவரம்லாம் தெரிஞ்சுக்கலாம்ல :eek::eek::eek:
அவரோட நண்பர் மாதிரி நம்பர மாத்திக் கொடுக்கிற உண்மையான நண்பர் உங்களுக்கு அமையாததறுகு,
நீங்க என்ன செய்வீங்க மதி... :cool:

இந்தமாதிரி ராங் மெஸெஸில் (ராங் கால் மாதிரி) தோழிகளான இருவர் எனக்கு இருக்கிறார்கள். சத்தியமாக நான் அனுப்பவில்லை, அவர்களது அப்பாவுக்கு அனுப்புவதற்குப் பதில் எனக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு நம்பர்தான் வித்தியாசம்!!
உங்களை அப்பா ஸ்தானத்தில வச்சுப் பாத்திருக்காங்க என்று சொல்லுங்க...

பாஸ்!! புத்தாண்டுக்கு ஃப்ரீ எஸ்.எம்.எஸ் செல்லுபடியாகாதே??
எங்கேயோ ஒதைக்குதே??? :eek::eek:
அதான், அடுத்தநாள்தான் புத்தாண்டு தினம் என்று தெளிவா எழுதியிருக்காரே...
0000க்கு முன்னால் அனுப்பியிருப்பார்...

எல்லாம் சரிதான், ரொம்ப தொல்லையா இருந்தா நம்பர் மாத்திட்டேன்னு என்னோட நம்பர் குடுத்திடுங்க:D அப்புறம் நான் பேசிக்கிறேன்
பார்ரா...

என்ன நமக்கு தஞ்சாவூர் முழுக்க அடியாள் இருக்கு :D
இது அவுங்களுக்குத் தெரியுமா...

அந்த எண் இதுபோன்ற பொது சேவைக்கு மட்டுமே
என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன் :D:D:D
திரும்பவும் பார்ரா...

aren
20-07-2011, 09:38 AM
மாட்டினீங்களா, அனுபவியுங்கள்.

இதுக்குத்தான் நான் இந்த மாதிரி யாருக்கும் குறுஞ்செய்திகள் அனுப்புவது கிடையாது. நேரா ஃபோன்தான்.

Nivas.T
20-07-2011, 09:50 AM
மாட்டினீங்களா, அனுபவியுங்கள்.

இதுக்குத்தான் நான் இந்த மாதிரி யாருக்கும் குறுஞ்செய்திகள் அனுப்புவது கிடையாது. நேரா ஃபோன்தான்.

:confused:நேரவே பாத்து சொல்ல போன் எதுக்குங்க ஆரென் :D

ஆதவா
20-07-2011, 10:32 AM
அவருக்கு அழைப்பு வந்த அந்த நாள் ஒரு புத்தாண்டு பிறந்த நாள் போல..:redface::p

சரி விடுங்க... இதுலே எல்லாம் குத்தம் கண்டுபிடிச்சுகிட்டு.:D:p;)

அதான், அடுத்தநாள்தான் புத்தாண்டு தினம் என்று தெளிவா எழுதியிருக்காரே...
0000க்கு முன்னால் அனுப்பியிருப்பார்...
.

பாஸ்... டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 இரண்டு நாளுமே ஃப்ரீ எஸ்.எம்.எஸ் கிடையாது.!! கட்டண எஸ்.எம்.எஸ் தான்.
தமிழ் புத்தாண்டாக இருந்தால் சரியாக இருக்கும்!!

த.ஜார்ஜ்
20-07-2011, 10:42 AM
ஹா ஹா ஹா...

ஆமா... உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா...

மீசைக்கு 300 ரூபாய்க்கு கரு'மை' அடித்துக் கொண்டு வந்த பெரியவர் என்று தக்ஸ் சொன்னபிறகும் ... இப்படி ஒரு கேள்வியா? [அப்ப அவர் சொன்னத் நீங்க நம்பல இல்ல:lachen001::lachen001::lachen001:]

த.ஜார்ஜ்
20-07-2011, 10:45 AM
அதற்கு தான் பரிபாஷையில் பேசணும்கிறது. என்னிடம் பிரத்யேக நிகண்டு உளது.

ஹா..ஹா.. எல்லாவற்றுக்கும் நீங்கள் நிகண்டு வைத்திருக்கிறீர்கள் போல..

த.ஜார்ஜ்
20-07-2011, 10:48 AM
ஜார்ஜ்: ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.............
:D :D :D
--------------------
வாழ்த்துக்கள்.

அருங்காட்சியகத்தில் வைக்கப்படவேண்டிய அலைபேசி.

வைத்தாகிவிட்டது.

த.ஜார்ஜ்
20-07-2011, 10:49 AM
கட்டையை உருவிடுங்க .... :)

தெளிவாச் சொல்லுங்க ரவி.. எந்த கட்டையைச் சொல்றீங்க.

த.ஜார்ஜ்
20-07-2011, 10:54 AM
அதெப்படி நான் அனுப்பற மெசேஜ் மட்டும் சரியான ஆளுங்களுக்கே போய் சேருது.. நீங்க கொடுத்து வைத்தவர் தான்.. அப்படியே தஞ்சாவூரில மேல வீதியா கீழ வீதியா.. அப்படிங்கற விவரம்லாம் தெரிஞ்சுக்கலாம்ல :eek::eek::eek:

சரியான நம்பருக்கு பண்ணுனா அது அப்படிதான் சரியான ஆளுகளுக்குப் போய் சேருமாமே. தப்பு தப்பான நம்பருக்கு முயற்சிப் பண்ணிப் பாருங்க. நல்லது நடந்தாலும் நடக்கலாம்.:D:D:D

த.ஜார்ஜ்
20-07-2011, 10:57 AM
ஹஹஹா....:lachen001:

அழையா எண் அருள்சாமியின் எண்ணாக மாறிய மர்மம் என்ன ஜார்ஜ்?:aetsch013:

அது எப்படி உங்களுக்கு மர்மமாகத் தெரிந்தது:confused:

த.ஜார்ஜ்
20-07-2011, 11:00 AM
இது உங்க நண்பன் அருள்சாமிக்குத் தெரியுமா...??? :D:D:D

:lachen001::lachen001::lachen001::lachen001:

பின்னொரு நாளில் விசயத்தைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். "அந்த தப்பான நம்பரை முதல்ல எனக்கு குடு"

த.ஜார்ஜ்
20-07-2011, 11:06 AM
பாஸ்!! புத்தாண்டுக்கு ஃப்ரீ எஸ்.எம்.எஸ் செல்லுபடியாகாதே??
எங்கேயோ ஒதைக்குதே??? :eek::eek:

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா..:lachen001::lachen001::lachen001:

ஹட்ச், வோடாபோனாக மாறிய ஆரம்ப காலத்தில் இப்படியான சலுகைகளை நாங்க அனுபவித்தோமாக்கும் [அப்படீன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க..]:aetsch013:

த.ஜார்ஜ்
20-07-2011, 11:10 AM
எல்லாம் சரிதான், ரொம்ப தொல்லையா இருந்தா நம்பர் மாத்திட்டேன்னு என்னோட நம்பர் குடுத்திடுங்க:D அப்புறம் நான் பேசிக்கிறேன் என்ன நமக்கு தஞ்சாவூர் முழுக்க அடியாள் இருக்கு :D

அதான் வெளியூர் ஓடிட்டீங்களா. [அந்த நம்பர் கிடைக்காத ஏக்கம் புரிகிறது நிவாஸ். முதல்ல ஊருக்கு வாங்க விலாவாரியா பேசுவோம்.:lachen001::lachen001:]

சிவா.ஜி
20-07-2011, 01:14 PM
சூப்பர்......உங்களுக்கே உரித்தான அசரடிக்கும் எழுத்து. 60 ரூபாய்க்கு அல்லல் வாங்கின வள்ளல் வாழ்க.

எனக்கு இதைவிடக் கொடுமையா ஒண்ணு நட்ந்துது. ஒரு அழைப்பு...

நான்:ஹலோ....

ஒரு பெண்குரல்: ஹலோ...பாஸ்கரா....

நான்: இல்லீங்க ராங் நம்பர்

அதே பெண்குரல்: பரவால்ல....இனிமே ரைட் நம்பரா நினைச்சுக்குங்க....தொடர்ந்து பேசலாமே....

(அப்ப போனை ஆஃப் பண்ணி வெச்சவன் தான்...ரெண்டுநாளைக்கு வேற நம்பரைத்தான் உபயோகிச்சேன்)

Nivas.T
20-07-2011, 02:05 PM

அண்ணிதான் டெஸ்ட் பண்ணிருப்பாங்க போல நீங்க எஸ் ஆகிட்டீங்க :confused:

இங்க செலஸ்ட்டீனா, லூரா, ரோஸ் மேரி எல்லாரும் உங்க நம்பர கேக்குறாங்க, நான் கொடுத்திடவா? :aetsch013::D

அக்னி
20-07-2011, 03:07 PM
இங்க செலஸ்ட்டீனா, லூரா, ரோஸ் மேரி எல்லாரும் உங்க நம்பர கேக்குறாங்க, நான் கொடுத்திடவா? :aetsch013::D

ஏன் நல்லாப் போற குடும்பத்தில கும்மியடிக்கப் பார்க்கிறீங்க...
அது உங்களுக்குப் பாவமில்லியா...

நீங்க பேசாம அவங்க மின்னஞ்சல்களை எனக்கு தனிமடலிடுங்க.
நானே சிவா.ஜி நம்பர அனுப்பி வைக்கிறன்.
இதுக்கெல்லாம் அனுமதி கேட்டிட்டிருப்பாங்களா...

ஆதி
20-07-2011, 03:40 PM
உங்களுக்கேயான மொழிநடையில் வந்த அழகிய பதிவுகள்...

**********----------------------------

ஜார்ஜண்ணா, சிவாண்ணா, உங்களுக்கெல்லாம் பரவாயில்ல, ஒரு பெண் குரல்ல போன் வந்தது, நான் சென்னையில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்தப்ப எனக்கொரு தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்தது, போன் எடுத்து ஹலோ சொன்னதுதான் தாமதம்..

பச்ச பச்சயா.. பச்ச பச்சயா ஒருத்தன் திட்றான்..

யாருடா நீ..........

நான் யாரா இருந்தா உனக்னென்ன டா நு, பச்ச பச்சயா பச்ச பச்சயா திட்றான்...

போன கட் பண்ணி அப்படியே அணச்சுட்டேன்....

ரொம்ப நேரம் கழிச்சு தான் போன உயிர்ப்பிச்சேன்...

அடுத்த 5 நிமிசத்துல அதே நம்பர்..

"ஹலோ"

"ஏன் டா போன ஆஃப் பண்ண.." மீண்டும் பச்ச பச்சயா பச்ச பச்சயா.. :(

இன்ன*க்கி வ*ரைக்கும் தெரிய*ல* அவ*ன் யாரு.. ஏன் என்ன* அப்ப*டி திட்டினானு...

*************
---------------------------

ஒரு ஆறேழு மாசத்துக்கு முன்னாடி, ஒரு நம்பரில் இருந்து கால் வரும்,
அழைப்பை எடுத்தால், துண்டிக்கப்படும்..

இப்படி ஒரு ரெண்டு நாள் போச்சு..

அப்புறம் ஒரு நாள் நானே அந்த நம்பர்க்கு கால் பண்ணி யாருங்க நீங்க ?

எதுக்குங்க எனக்கு அடிக்கடி கால் பண்றீங்க நு கேட்டா...

பய புள்ள சொல்றான்... உங்கள் காலர் டீயூன் ரொம்ப நல்லா இருக்கு அத கேட்கத்தான் அடிக்கடி கால் பண்றேன், இனிமே இந்த நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க நு...

அக்னி
20-07-2011, 03:58 PM
ஆதன்...
உங்க காலர் டியூன் அவ்ளோ சூப்பரா... ஹா ஹா ஹா...
சிரிப்பை அடக்க முடியல...

காலர் டியூன நீங்க திட்டிற மாதிரி வச்சுடுங்க.

Nivas.T
20-07-2011, 04:48 PM
ஏன் நல்லாப் போற குடும்பத்தில கும்மியடிக்கப் பார்க்கிறீங்க...
அது உங்களுக்குப் பாவமில்லியா...

நீங்க பேசாம அவங்க மின்னஞ்சல்களை எனக்கு தனிமடலிடுங்க.
நானே சிவா.ஜி நம்பர அனுப்பி வைக்கிறன்.
இதுக்கெல்லாம் அனுமதி கேட்டிட்டிருப்பாங்களா...

மொபைல் நம்பர் வேலைக்காவது அக்னி :sprachlos020:

நான் லேன்ட் லைன் நம்பர் கொடுக்கலாம்னு இருக்கேன் :D

நீங்க பேசாம அவங்க மின்னஞ்சல்களை எனக்கு தனிமடலிடுங்க.

இதுல ஏதும் உள்குத்து இல்லயே :confused:

உங்க வீட்ல லேன்ட் லைன் இருக்கா :lachen001:

Nivas.T
20-07-2011, 04:51 PM
நல்ல பாருங்க ஆதன் அது நம்ப பங்காளியா இருக்கும் :D

அக்னி
20-07-2011, 04:54 PM
உங்க வீட்ல லேன்ட் லைன் இருக்கா :lachen001:
இருக்குங்க... ஆனால், அதில லைன் இல்லியே...
இப்ப என்ன செய்வீங்க... இப்ப என்ன செய்வீங்க... :aetsch013:

நல்ல பாருங்க ஆதன் அது நம்ப பங்காளியா இருக்கும் :D
கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டேயிருங்க...

யாராச்சும் வீடியோ போட்டுத் திட்டுவாங்களா.., பார்க்க...

த.ஜார்ஜ்
20-07-2011, 05:04 PM
பச்ச பச்சயா.. பச்ச பச்சயா ஒருத்தன் திட்றான்..

அப்ப நிறைய பச்ச பச்சையா கத்துகிட்டிருப்பீங்க.

ஆதி
20-07-2011, 05:34 PM
நல்ல பாருங்க ஆதன் அது நம்ப பங்காளியா இருக்கும் :D

அவனும் சமீபத்துல இது மாதிரி பண்ணான்...

எனக்கு கால் பண்ணான், கட் பண்ணிட்டு திரும்பவும் அழைச்சா உடனே எடுக்கல..

ஏன் டா உடனே எடுக்கல, இப்ப தான டா எனக்கு கால் பண்ண நு கேட்டா...

ங்கொய்யால சொல்றான்...

புதுசா ஒரு ரிங் டோன் செட் பண்ணேன் டா அது எப்படி இருக்கு நு பாக்கத்தான் உனக்கு போன் பண்ணேன் நு...

ஆதி
20-07-2011, 05:35 PM
அப்ப நிறைய பச்ச பச்சையா கத்துகிட்டிருப்பீங்க.

பட் எங்க அப்பா கூட என்ன அவ்வளவு திட்ன தில்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்

பாரதி
20-07-2011, 07:28 PM
அடுத்த நாள் குடும்பத்தோடு கன்யாகுமரி கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டிருந்தபோது..அழையா எண்ணிலிருந்து ஒரு அழைப்பு.
...............................
..................................
இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது மறுபடி அழைப்பு. அவளாகத்தான் இருக்கும். எடுக்கவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் அழைத்தது அருள்சாமி என்று கைபேசி திரை காட்டியது.

ஹஹஹா....:lachen001:
அழையா எண் அருள்சாமியின் எண்ணாக மாறிய மர்மம் என்ன ஜார்ஜ்?:aetsch013:

அதாவது முதலில் அழைப்பு வந்த போது அழையா எண் எனவும் பின்னர் அருள்சாமி எனவும் கைபேசித்திரை காட்டியது என்றிருக்கிறதல்லவா..? அதைத்தான் கேட்டேன்.
இது போல அழைப்புகள் உங்களுக்கு என்றென்றும் வரட்டும் என்று வாழ்த்துகிறேன்...:lachen001:

அமரன்
20-07-2011, 07:57 PM
ஹஹ்ஹ்ஹா..

வயசானவங்களுக்கு சிட்டுகளா மாட்டுது. வயசுப் பசங்களுக்கு வசவா மாட்டுது..

என்ன கொடுமை அக்னி இது..

Nivas.T
21-07-2011, 06:24 AM
அவனும் சமீபத்துல இது மாதிரி பண்ணான்...

எனக்கு கால் பண்ணான், கட் பண்ணிட்டு திரும்பவும் அழைச்சா உடனே எடுக்கல..

ஏன் டா உடனே எடுக்கல, இப்ப தான டா எனக்கு கால் பண்ண நு கேட்டா...

ங்கொய்யால சொல்றான்...

புதுசா ஒரு ரிங் டோன் செட் பண்ணேன் டா அது எப்படி இருக்கு நு பாக்கத்தான் உனக்கு போன் பண்ணேன் நு...

பட் எங்க அப்பா கூட என்ன அவ்வளவு திட்ன தில்ல... அவ்வ்வ்வ்வ்வ்வ்

ஹஹ்ஹ்ஹா..

வயசானவங்களுக்கு சிட்டுகளா மாட்டுது. வயசுப் பசங்களுக்கு வசவா மாட்டுது..

என்ன கொடுமை அக்னி இது..

:lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
21-07-2011, 07:03 AM
ஹஹ்ஹ்ஹா..

வயசானவங்களுக்கு சிட்டுகளா மாட்டுது. வயசுப் பசங்களுக்கு வசவா மாட்டுது..

என்ன கொடுமை அக்னி இது..

:lachen001::lachen001::lachen001:

சொன்னவுடனே வயசானவரின் சிரிப்பை பாருங்கள்... :eek:

Nivas.T
21-07-2011, 07:30 AM
சொன்னவுடனே வயசானவரின் சிரிப்பை பாருங்கள்... :eek:

:sauer028::sauer028::sauer028:
ஏன் இந்த கொலைவெறி?

அன்புரசிகன்
21-07-2011, 09:03 AM
:sauer028::sauer028::sauer028:
ஏன் இந்த கொலைவெறி?
இதத்தான் சொல்வாங்க.. உண்மை கசக்கும் என்று...:D

Nivas.T
21-07-2011, 09:22 AM
இதத்தான் சொல்வாங்க.. உண்மை கசக்கும் என்று...:D

உங்களுக்கும் பல தடவ கசந்திருக்கு போல :D

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 11:17 AM
குறுந்தகவல் மூலம் கண்ட புது நட்பு ...தோழரின் சந்தோஷ இன்னல்கள் ....ஹய்யோ ஹய்யோ ...
இதில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற எண்ணம் தோன்றாதிருக்குமானால் நன்று ...:D:D:D

redblack
22-07-2011, 11:08 AM
இது போன்ற அழைப்புகள் இப்போது சீன தயாரிப்பில் வரும் கைப்பேசியில் இருந்து கூட வரலாம். கவனம் தேவை

சிவா.ஜி
22-07-2011, 01:07 PM
நிவாஸ்...அக்னி...எவ்ளோநாளா இந்தத் திட்டம்....என்னையக் கட்டம் கட்டாதீங்க கண்ணுகளா....அடுத்த வருஷம் சில்வர்ஜூப்ளிக் கொண்டாட்டத்துக்கு வேட்டு வெச்சுடாதீங்க அப்பு.

(நிவாஸ்....அவங்க எல்லாரையும் கேட்டதா சொல்லுங்க....ஹி...ஹி...)