PDA

View Full Version : இன்னும் ஓர் இரவு



சசிதரன்
19-07-2011, 02:36 PM
சிரித்துக் கொண்டே இருந்தாய்

பின்னால் மலைகளின்
பசுமை பரவியிருக்க
முகம் தழுவும் பனிக்காற்றை
முழுவதும் உள்வாங்கி
மிக அழகாய்
சிரித்துக் கொண்டிருந்தாய்

என் எந்தவொரு செயலும்
உன்னிடம் எந்த மாற்றத்தையும்
ஏற்படுத்தவில்லை

விரல் வழி வழியும்
சிகரெட் புகை
உன் பனிக்காற்றுடன்
கலந்து விட்டிருந்தது

மாறாத உன் புன்னகை
விவரிக்கவியலாத ஓர்
அருவெறுப்பை தர தொடங்கியிருந்தது

வெறுப்பும் இயலாமையும் ஒருசேர
உக்கிரமாய் வீரிட்டு பின்
கதறி அழ தொடங்கிய போதும்
நீ சிரித்துக் கொண்டேதான் இருந்தாய்

அக்னி
19-07-2011, 04:02 PM
இன்னுமோர் இரவு இதுவா.., இன்னுமா...
இன்னும் என்றால் எதற்கு..,
வெறுக்கவா... ரசிக்கவா...

அமாவாசை வரட்டும்,
இன்னும் இரவு பலமாய்ச் சிரிக்கும்...

நம் நிலை சார்ந்து,
இதமானவையே, இடராக...

மறைந்திருக்கும் ஏதோ ஒன்று என் பார்வைக்குப் புலப்படாத உணர்வு.
பார்க்கலாம் பின்னூட்டங்களில்...

innamburan
19-07-2011, 08:11 PM
எனக்கு நற்றிணை நினைவு வருகிறது. ஆனால், அக்காலம் சிகரெட் கிடையாது. அடுத்து வருவது, உமது பதிலை பொறுத்து!

Ravee
19-07-2011, 11:48 PM
சில விஷயங்கள் இயற்கையானது ... அது அதுவாகவே இருக்கும் போது எதுவும் மாற்றம் செய்ய முடியாதது. இது எனக்கும் உனக்கும் அதற்கும் பொதுவானதே.

கீதம்
21-07-2011, 07:03 AM
சில புன்னகைகளை சிலரால் ஏற்கமுடிவதே இல்லை. அடுத்தவர் இன்பம் காணப்பொறுக்காதவர்கள்? அதன் வெளிப்பாடென ஒரு கோணத்தில் காணப்படும் கரு.

அழகான புன்ன்னகை இங்கே அருவருப்பைத் தருகிறது. வெறுப்பை உண்டாக்குகிறது. அதைத் தடுக்க இயலாத இயலாமையின் விளிம்பில் கழிவிரக்கத்தோடு கதறி அழவும் தூண்டுகிறது.

இத்தனைக்குப் பின்னும் எதிராளி (அது இரவோ.... எதுவோ..) தொடர்ந்து சிரித்திருக்கக் காரணம், பைத்தியம் அல்லது பழி வாங்கும் ஒரு யுத்தி. எதிராளியின் தரப்பிலிருந்து இன்னுமொரு கோணத்தில் யோசிக்கத் தூண்டுகிறது.

சிகரெட் இல்லையெனில் கவிதை இருபாலருக்கும் அழகாய்ப் பொருந்தும்.

பாராட்டுக்குரிய கவிதை, சசிதரன்.

அக்னி
21-07-2011, 10:00 AM
இத்தனைக்குப் பின்னும் எதிராளி (அது இரவோ.... எதுவோ..) தொடர்ந்து சிரித்திருக்கக் காரணம், பைத்தியம் அல்லது பழி வாங்கும் ஒரு யுத்தி. எதிராளியின் தரப்பிலிருந்து இன்னுமொரு கோணத்தில் யோசிக்கத் தூண்டுகிறது.
வெறுப்பேற்றும் உத்தியாகவும் இருக்கலாம்...

சிலர் விழும்போது சிரிப்பதும்,
சிலர் கோலம்கண்டு கலாய்ப்பதும்
மனித இயல்பின் தவறா...
அல்லது,
மனிதனின் தவறான இயல்பா...


சிகரெட் இல்லையெனில் கவிதை இருபாலருக்கும் அழகாய்ப் பொருந்தும்.
என்ன அக்கா... அவுஸ்சிலிருந்துகொண்டு இப்படிச் சொல்லலாமா... நம் நாடுகளிலேயே இவ்விடயத்தில் மகளிர் பெரிதும் முன்னேறிவிட்டார்களே...
ஆகவே, சிகரட் இருந்தாலும் இருபாலருக்கும் பொருத்தமானதே...

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 11:11 AM
இயலாமையின் விளிம்பில் இந்த அழுகை மறுமுறை சிரிக்கும் போது அந்த இயலாமையை இல்லாமையாக்கி நான் சிரிப்பேன் ..அதற்கு வேண்டும் இன்னுமோர் இரவு ...அருமை தோழர் ..

கீதம்
21-07-2011, 12:39 PM
என்ன அக்கா... அவுஸ்சிலிருந்துகொண்டு இப்படிச் சொல்லலாமா... நம் நாடுகளிலேயே இவ்விடயத்தில் மகளிர் பெரிதும் முன்னேறிவிட்டார்களே...
ஆகவே, சிகரட் இருந்தாலும் இருபாலருக்கும் பொருத்தமானதே...

நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்றாலும், சிகரட் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருவது ஆண்தானே? :) அதனால் அப்படிச் சொன்னேன், அக்னி.

அமரன்
22-07-2011, 11:00 PM
வெளிச்சத்தில் இருந்து பார்ப்போருக்கு இருட்டின் இரகசியம் தெரிவதில்லை.

இருட்டினுளிருந்து நோக்குவோருக்கு வெளிச்சத்தின் சூட்சுமம் இயல்பாகத் தெரிந்து விடுகிறது..

இது தெரியாமல் அழுது வடிக்கும் ஒருத்தனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமல் என்ன செய்வதாம்..

பௌதீகம் கலந்த வாழ்வியல்கவிதைக்கு பாராட்டு சசி.

சுகம்தானே..