PDA

View Full Version : அப்பாற்ப்பட்டவன்.....



Nivas.T
19-07-2011, 11:50 AM
எண்ணமும் எழுத்தும்
சங்கமமாய் சமுத்திரம் படைக்கும்
இயற்கையும் காதலும்
அலைகளாய் ஆடிடத்துடிக்கும்

முத்துக்களாய் பிறந்துவிட்ட
வார்த்தை வடிப்புகள்
மாலைகளாய் மாறினாலும்
எங்கோ எதுவொன்றோ
குறையும்

தாயைக் கண்டுவிட்ட பசுக்கன்றாய்
சிலநேரம்
மழைமேகம் கண்டுவிட்ட மயிலாய்
சிலநேரம்
பலநாள் கழித்து
பழையதைக் கண்டுவிட்ட பிச்சைக்காரனாய்
சிலநேரம்
என்று சில்லிடும் மகிழ்ச்சியது
கோடையில் விழும் மழைத்துளியாய்
மறைந்து போகும் எங்கோ

பதம்பார்த்து விதைக்கக் காத்திருப்பவனுக்கு
மழை வேண்டும்
பதமாய் பெயர்த்தெடுத்த ஈரப்பானைக்கு
வெய்யில் வேண்டும்
அறுத்துவிட்டு கதிரடிக்க காத்திருப்பவனுக்கு
விரைவாய் வீசும் காற்று வேண்டும்

ஒவ்வொரு வடிமைப்பும் ஒவ்வொரு தேவை பொறுத்தே
என்றாலும் ஒவ்வொன்றும் வக்குக்கப்பட்டது ஒவ்வொரு காலம் பொறுத்தே

அவனுக்கு சூரவெளியும் வேண்டும்
அதனூடே சுரம் மீட்டும் தென்றலும் வேண்டும்
சுட்டெரிக்கும் வெய்யிலும் வேண்டும்
உறையவைக்கும் பனியும் வேண்டும்
சிலநேரம் இறைவனும் வேண்டும்
சிலநேரம் மிருகமும் வேண்டும்
காதலிலும் களிப்படைவான்
காமத்திலும் புலப்படுவான்
கள்ளும் நஞ்சும் கலந்தே வேண்டும் என்பான்

கல்லைக் காணும்போது கடவுள் இல்லை
கடவுளை காணும்போது கல்லில்லை

அவற்றிற்கு அப்பாற்ப்பட்டவன்

அக்னி
19-07-2011, 02:49 PM
படைப்பிலிருந்து
படைப்பாக்கி
படைப்பாகிப்போவது
படைப்பாளிக்கே சாத்தியம்...

ஒரு மழைத்துளி வீழ்ந்து
அதிலிருந்து
மீளத் தெறித்துவிழும் துளியை
நுண்காட்டி இல்லாமலே
வெளிக்காட்டிடும் வல்லமை
படைப்பாளிக்கே இருக்கையில்..,
அவன் அப்பாற்பட்டவன் தானே...

என்பார்வையில் இதுவாகப் பட்டது. அதுவே மேலே பதிவாகப் பட்டது.
மற்றவர் பார்வைகளுக்காகப் பார்த்திருக்கின்றேன்...

பாராட்டு நிவாஸ்... அது சரி ஒரு சந்தேகம் இது குறுங்கவிதையா...

innamburan
19-07-2011, 08:07 PM
கல்லிலிருக்கும் கடவுளை கண்கள் காண்பதில்லை.
கண்கள் காண்பதெல்லாம் கடவுளுமல்ல.

Nivas.T
20-07-2011, 05:56 AM
படைப்பிலிருந்து
படைப்பாக்கி
படைப்பாகிப்போவது
படைப்பாளிக்கே சாத்தியம்...

ஒரு மழைத்துளி வீழ்ந்து
அதிலிருந்து
மீளத் தெறித்துவிழும் துளியை
நுண்காட்டி இல்லாமலே
வெளிக்காட்டிடும் வல்லமை
படைப்பாளிக்கே இருக்கையில்..,
அவன் அப்பாற்பட்டவன் தானே...

என்பார்வையில் இதுவாகப் பட்டது. அதுவே மேலே பதிவாகப் பட்டது.
மற்றவர் பார்வைகளுக்காகப் பார்த்திருக்கின்றேன்...

பாராட்டு நிவாஸ்... அது சரி ஒரு சந்தேகம் இது குறுங்கவிதையா...

அசத்திட்டீங்க அக்னி

அவ்வளவே, இருந்தாலும் பார்க்கலாம் யார்யாருக்கு எப்படி தெரிகிறதென்று

பாராட்டிற்கு மிக்க நன்றி தலைவா

வரிகள் அதிகமாக இருந்தாலும் நான் குழந்தை தானே :D

குழந்தை எழுதிய கவிதை குறுங்கவிதை:rolleyes:

அது மட்டுமல்ல பெருங்கவிதை என்று ஒரு திரி இலையே என்ன செய்வது? :confused:

Nivas.T
20-07-2011, 05:57 AM
கல்லிலிருக்கும் கடவுளை கண்கள் காண்பதில்லை.
கண்கள் காண்பதெல்லாம் கடவுளுமல்ல.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா