PDA

View Full Version : தேவை எனக்கு...

Nivas.T
18-07-2011, 08:23 AM
அறியாமல் செய்துவிட்ட
தவறொன்றை தவிர்த்துவிட

விசம் தோய்ந்த வார்த்தைகளால்
காயப்படுத்திய தருணங்களை கவர்ந்துவிட

கையேந்தியும் கவனியாமல் வந்த
கணங்களை கலவாடிவிட

கண்களோடு கண்களை மட்டும் உலவிட்டு
வார்த்தை வராமல் போன
பொழுதுகளை திரும்பப்பெற

கட்டாயமாய் திணிக்கப்பட்ட
திணிப்புகளை உதறி தள்ளிவிட

தேவை எனக்கு கச்சிதமாய் கணிக்கப்பட்ட
ஒரு காலயெந்திரம்

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 04:05 PM
இழந்து விட்ட வாய்ப்புகளை
மீண்டும் பெற, வேண்டும் ஒரு
கால எந்திரம் .....
அருமை தோழர் நிவாஸ்.T அவர்களே ...

Nivas.T
19-07-2011, 07:55 AM
பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஜெய்

கீதம்
19-07-2011, 10:23 AM
கடந்துவிட்டக் காலத்திடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் பல பாடம். எதிர்வரும் நாளில் இன்றைய தினத்துக்குத் திரும்பும் முனைப்புடன் கால எந்திரமொன்று தேடாதிருக்கும் வண்ணம் நம் வசப்படுத்துவோம் இன்றைய தருணங்களை!

தவறவிட்டத் தருணங்களை எனக்கும் நினைவுபடுத்திய கவிதை. பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
19-07-2011, 11:55 AM

கடந்துவிட்ட காலத்திடம் பாடம் பல கற்றாலும்
ஏற்ப்படுத்திய காயங்களுக்கு மருந்திட முடியும்
ஆனால் மறைத்திடவோ இல்லை மருத்திடவோ இயலாதே
அதனைத் தவிர்த்திடவே கேட்டேன்
ஒரு கால எந்திரம்

அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றீங்க

innamburan
19-07-2011, 08:04 PM
தட்டுங்கள். திறக்கப்படும்.

Ravee
20-07-2011, 12:14 AM
தவறுகள் திருத்தப்படும் என்ற என் குறுங்கவிதையில் என் அப்பாவிடம் இருக்கிறது .... பெற்றுக்கொள்ளவும் உங்கள் அப்பாவிற்கு தெரியாமல் ... :lachen001:

Nivas.T
20-07-2011, 06:42 AM
தட்டுங்கள். திறக்கப்படும்.

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா

Nivas.T
20-07-2011, 06:49 AM
தவறுகள் திருத்தப்படும் என்ற என் குறுங்கவிதையில் என் அப்பாவிடம் இருக்கிறது .... பெற்றுக்கொள்ளவும் உங்கள் அப்பாவிற்கு தெரியாமல் ... :lachen001:

:lachen001: