Log in

View Full Version : 123456

KAMAKSHE
17-07-2011, 04:59 PM
டிலீட் எப்படி எனத் தெரியாமல் வரிகளாஇ நீக்கியுள்ளேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-07-2011, 06:24 PM
எண்ணையிலிட்ட கடுகாக மனைவியரை தாளிக்கும் கணவன்மாரின் குணம் அறிந்து நடக்கும் மனையாளால் திருமண பந்தங்கள் இன்னும் சிதறாமல் வாழ்கின்றன ...

அன்புரசிகன்
18-07-2011, 03:49 AM
வித்தியாசமான யோசனை. சாதாரணமாக தாயின் அனுபவத்தை பார்த்த பிள்ளை அதனை தொடராது. இங்கு அது வேறுபடுகிறது. (எனது தந்தையும் எனது ஐயாவும் இதற்கு சிறந்த உதாரணம்... நடுச்சாமம் அல்லது பின்னிரவில் கூழ் வேண்டும் என்று அப்பம்மாவிடம் கேட்ப்பார். அதுவும் குத்தரிசியை அரைத்து கூழ் தயாரிக்க வேண்டும். குத்தரிசியின் மகிமை தெரிந்தவர்களுக்கு இதன் கடினம் புரியும்...)

சில இடங்களில் சந்தேகம்.

மாமியாருக்கு எத்தனை வருஷமாச்சு கல்யாணம் ஆகி? அதனால அழல. நான் அப்படியா? அப்பதான் புதுசா கல்யாணம் ஆச்சு. அதுவும் ஒத்தையில செல்லமா வளந்த பொண்ணு. எனக்கு அப்ப அதெல்லாம் ரொம்ப புதுசு, எப்பப்பாத்தாலும் நசுங்கின தக்காளி மாதிரி அழுதுட்டேதான் இருப்பேன்.
----------------
எனக்கு இது 50 வருஷமா பழக்கம்.

வாழ்த்துக்கள் காமாக்ஷி.

ஜானகி
18-07-2011, 03:52 PM
தீய்ந்துபோன கடுகின் காட்டம்...மூக்கை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கிறது.....தீயக் காரணமான மனதின் கவனத்திற்கு இந்த பாதிப்பின் தாக்கம், ஏக்கம், எடுத்துரைக்கப்பட்டு, புரியவைக்கப்படவேண்டும். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு...தீயவை முளையிலேயே கிள்ளப்படவேண்டும். எதிர்காலமாவது மணக்க, மணக்க இருக்கட்டுமே !

KAMAKSHE
19-07-2011, 04:03 AM
எண்ணையிலிட்ட கடுகாக மனைவியரை தாளிக்கும் கணவன்மாரின் குணம் அறிந்து நடக்கும் மனையாளால் திருமண பந்தங்கள் இன்னும் சிதறாமல் வாழ்கின்றன ...
ஒவ்வொரு எழுத்தையும் படிப்பதற்கு முதல் நன்றி

படித்தபின் மறக்காமல் விமர்சிப்பதற்கு அடுத்த நன்றி

KAMAKSHE
20-07-2011, 08:07 AM
தீய்ந்துபோன கடுகின் காட்டம்...மூக்கை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கிறது.....தீயக் காரணமான மனதின் கவனத்திற்கு இந்த பாதிப்பின் தாக்கம், ஏக்கம், எடுத்துரைக்கப்பட்டு, புரியவைக்கப்படவேண்டும். பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு...தீயவை முளையிலேயே கிள்ளப்படவேண்டும். எதிர்காலமாவது மணக்க, மணக்க இருக்கட்டுமே !

நன்றி ஜனகி

KAMAKSHE
21-07-2011, 02:44 PM
வித்தியாசமான யோசனை. சாதாரணமாக தாயின் அனுபவத்தை பார்த்த பிள்ளை அதனை தொடராது. இங்கு அது வேறுபடுகிறது. (எனது தந்தையும் எனது ஐயாவும் இதற்கு சிறந்த உதாரணம்... நடுச்சாமம் அல்லது பின்னிரவில் கூழ் வேண்டும் என்று அப்பம்மாவிடம் கேட்ப்பார். அதுவும் குத்தரிசியை அரைத்து கூழ் தயாரிக்க வேண்டும். குத்தரிசியின் மகிமை தெரிந்தவர்களுக்கு இதன் கடினம் புரியும்...)

சில இடங்களில் சந்தேகம்.

வாழ்த்துக்கள் காமாக்ஷி.

மிக்க நன்றி அன்புரசிகன் அவர்களே!
கல்யாணாம் ஆகி 50 வருஷம்னு அர்த்தம் -

அக்னி
21-07-2011, 03:23 PM
இப்போ அவரு நல்லவரா கெட்டவரா...

வித்தியாசமான பதிவு... முயற்சிகள் தொடரட்டும்...

KAMAKSHE
27-07-2011, 04:38 PM
இப்போ அவரு நல்லவரா கெட்டவரா...

வித்தியாசமான பதிவு... முயற்சிகள் தொடரட்டும்...

மிக்க நன்றி அக்னி அவர்களே! தாங்கள்
படித்தமைக்கும்!
ஊக்குவித்தமைக்கும்!

அட நீங்க வேற! பிரச்சனையே. இப்பன்னு இல்ல! அவரு ‘எப்போதுமே நல்லவரு ‘ அதான் .

ஆதவா
28-07-2011, 05:13 AM
கதையோட கருப்பொருள் சமையலறை என்பதும், அதனோடு ஒப்பிட்டும், விமர்சித்தும் பேசுவதும் மிகவும் புதுமையாக இருக்கிறது. வசனங்களும் இயல்பாக கண்ணியமாக இருந்தது. கடைசியில் இன்னொண்ணை எதிர்பார்த்தேன். இவள் உண்மையாகவே கட்டையில் போய்விட்டபிறகு அவருக்கு வசவுவதற்கு யார் இருப்பார்கள் எனும் உளவியல் ரீதியான முடிவை எதிர்பார்த்தேன். வெகுசில இடங்களில் சிலாகிக்க வைத்தீர்கள்

எப்பப்பாத்தாலும் நசுங்கின தக்காளி மாதிரி அழுதுட்டேதான் இருப்பேன்

கிரைண்டர்ல போட்ட உளுந்து மாதிரி புஸு புஸுன்னு கோவம் வரும்

இப்படியெல்லாம் கூட அவர் பேசுவார். என் கனவுல.

சமையல் பாத்திரங்களை மையமாக்கி வசவைப் பற்றி பேசிய வித்தியாசமான கதைக்கு
வாழ்த்துக்கள் காமாக்*ஷி

KAMAKSHE
28-07-2011, 02:35 PM

நன்றி ஆதவா அவர்களே ! இத்தன சின்ன கதைக்கு இவ்வளவு பெரிய பாராட்டா?

மீண்டும் நன்றி! மிகுந்த நன்றி!

கீதம்
31-07-2011, 02:44 AM
பிரமாதம் காமாக்ஷி. ஒரு இல்லத்தரசி(?) தன் மனதிற்கொவ்வா சூழல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தையும், எதிர்த்து நிற்கத் துணியா இயலாமையையும் அழகா நகைச்சுவை போல் சொல்லியிருக்கிறீகள். ஆனாலும் நகைச்சுவையை மீறிக் கசியும் துயரத்தைக் கண்டுகொள்ள முடிகிறது.

வாழ்க்கையில் பிரச்சனை வேண்டாமென்றோ அல்லது, வாய் பேசத் தெரியாததாலோ பல பெண்களின் வாழ்வு இன்றும் இந்த நிலையில்தான் இருக்கிறது. இப்படிப்பட்ட கணவர்களை, பொருளாதார அடிப்படையில் சார்ந்து வாழும் பெண்களின் நிலையோ இன்னும் மோசம்.

அலுவலகக் கடுப்புகளை கணவன் மனைவியிடம் காட்ட, கணவன் மீதான குற்றச்சாட்டுகளை மனைவி இப்படி அடுப்படியில் காட்ட நேரிடும் துர்பாக்கியம். இப்படிக் காட்டுவதும் ஒருவகையில் ஒரு துக்க வடிகால்தான். உள்ளுக்குள்ளிருந்தால் ஒருநாள் மனச்சிதைவு உண்டாகலாம்.

நல்ல கருத்து, காமாக்ஷி. அதை வெளிப்படுத்திய எழுத்தும் நன்று. பாராட்டுகள்.

KAMAKSHE
15-09-2011, 09:05 AM

அன்பு கீதம்

தங்களுக்கு பதில் எழுத தாமதித்தமைக்கு மன்னிக்கவும். இத்தனை அழகாக வும், பொறுமையாகவும் சிந்தித்து ஊக்குவித்ததற்கு நன்றிகள் ஓராயிரம்

காமாக்க்ஷி

seguwera
15-09-2011, 04:02 PM
இன்றைய ஆணாதிக்க சமுதாயத்தில் நிறைய குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை நல்ல நகைச்சுவையாய் காய் கறிகளைக் கொண்டு சொல்லியிருக்கிறீர்கள் நன்று

KAMAKSHE
17-09-2011, 02:00 PM
இன்றைய ஆணாதிக்க சமுதாயத்தில் நிறைய குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை நல்ல நகைச்சுவையாய் காய் கறிகளைக் கொண்டு சொல்லியிருக்கிறீர்கள் நன்று

என் நன்றிகள்

innamburan
17-09-2011, 05:25 PM
முதலில் கற்பனையை மெச்சி விடுகிறேன். பிறகு யதார்த்ததை. பிறகு படைப்பாற்றலை. பிறகு உரை நடையை.

simariba
03-02-2012, 12:45 AM
கதை பிரமாதம் காமாக்ஷி!
வசவின் காட்டம் ஒரு 10 , 15 சதம் குறைவாக இருந்தால் எங்கள் கதை போல் இருந்திருக்கும். மிகுந்த வருத்தத்துடன் தமிழ்மன்றம் வந்தால் மன்ற உறவுகளின் படைப்புகள் ஆறுதல் சொல்வதுபோல் இருக்கின்றன. கஷ்டம் வரும்போதுதானே கடவுளின் நினைவு வருகிறது?
கீதம் சொல்வது போல் பொருளாதாரத்தில் கணவனை சார்ந்திருப்பதால் தான் இப்படி என்று தான் நானும் நினைத்திருந்தேன். சார்ந்து இல்லாமல் இருந்தாலும் வசவுகள் ஈகோவால் உந்தப்பட்டு இன்னும் காட்டமாக இருக்கும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. ஆனால் அவை முன் போல் மனதை பாதிப்பதில்லை. பிறரை நம்மால் மாற்றமுடியாது. ஆனால் நம்மால் நம்மை மாற்றிக்கொள்ள கண்டிபாக முடியும். அனாவசிய வசவுகளை சொந்தம் கொண்டாடாமல் இருக்க முடியும்.

இராஜேஸ்வரன்
22-02-2012, 01:54 PM
முற்றிலும் வித்தியாசமான 'ஹோம்லி' கதை. அதில் மிகவும் சுவையூட்டுவது கதையில் வரும் காய்கறிகள் பேசும் வசனங்கள். அதற்காகவே ஒரு தனி பாராட்டு.

தேங்காய்: நீ என்னை மாதிரின்னும் பெருமைப் பட்டுக்கோ சாந்தி. நான் இல்லேன்னா எத்தனையோ பேருக்கு சமையலே பண்ணத் தெரியாது. அந்த மாதிரி நீ கொஞ்ச நாள் இல்லாம போனா இவங்க எல்லாரும் தவிக்கறது இருக்கே. தமாஷா இருக்கும்

இப்படி வசவுகளை தாங்கும் ஒருத்தி வீட்டில் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்பதை தேங்காய் மூலம் மிகவும் அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

நல்ல வேளை!. இத்தனை வயசுக்கப்பறமும், ஏதோ ஒரு வேலைக்கு போறார். அவர் வைராக்யம் எனக்குப் பிடிச்சிருக்கு.

கதை பூராவும் அவருடைய வசவுகளின் புராணத்தை சொல்லிய நீங்கள் பாராட்டை மட்டும் ஏன் ஒரே வரியில் முடித்து விட்டீர்கள்? வசவு என்பதை தவிர வேறு எந்த குறையும் உங்களுக்கு வைத்ததாக தெரியவில்லையே? நல்ல பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று எவ்வளவு நல்ல விஷயங்கள்!

சிந்திக்க வைத்த ஒரு கதையை கொடுத்ததற்கு பாராட்டுக்க்ள்.

KAMAKSHE
13-03-2012, 11:47 AM
முற்றிலும் வித்தியாசமான 'ஹோம்லி' கதை. அதில் மிகவும் சுவையூட்டுவது கதையில் வரும் காய்கறிகள் பேசும் வசனங்கள். அதற்காகவே ஒரு தனி பாராட்டு.

இப்படி வசவுகளை தாங்கும் ஒருத்தி வீட்டில் இல்லாமல் போனால் என்ன ஆகும் என்பதை தேங்காய் மூலம் மிகவும் அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

கதை பூராவும் அவருடைய வசவுகளின் புராணத்தை சொல்லிய நீங்கள் பாராட்டை மட்டும் ஏன் ஒரே வரியில் முடித்து விட்டீர்கள்? வசவு என்பதை தவிர வேறு எந்த குறையும் உங்களுக்கு வைத்ததாக தெரியவில்லையே? நல்ல பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று எவ்வளவு நல்ல விஷயங்கள்!

சிந்திக்க வைத்த ஒரு கதையை கொடுத்ததற்கு பாராட்டுக்க்ள்.

கதையைப் படித்ததற்கும், பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்

Dr.சுந்தரராஜ் தயாளன்
20-03-2012, 02:05 PM
சின்னக் கதை ஆனாலும் சிந்திக்க வைத்த கதை. சமையல் அறையிலேயே முடிந்துவிட்டது ...அருமை..அருமை...நன்றி:)