PDA

View Full Version : சில கிறுக்"கல்"கள்



நாஞ்சில் த.க.ஜெய்
16-07-2011, 07:24 PM
பின்னோட்டம்

புதியவர்களின் பதிவுகளை
வரவேற்க காத்திருக்கும்
என் கையெழுத்து ..

காவியம்

தொலைந்த கனவுகள்
நனவாகும் போது ...


விடாமுயற்சி

நேற்று சுத்தபடுத்திய மூலையில்
சிலந்தி கட்டிய வலை ...

Ravee
16-07-2011, 10:53 PM
நான் அனுபவித்த வரிகள்
காவியம்

தொலைந்த கனவுகள்
நனவாகும் போது ...


வாழ்த்துக்கள் ஜெய் ... :)

நாஞ்சில் த.க.ஜெய்
17-07-2011, 05:08 PM
வாழ்த்துக்கு நன்றி தோழர் ரவி அவர்களே ....

Nivas.T
18-07-2011, 07:26 AM
அனைத்துவரிகளும் அருமை

பாராட்டுகள் ஜெய்

ஆதி
18-07-2011, 07:30 AM
அனைத்தும் அழகு..

என்றாலும் இது சுருக்கென* தைத்த*து நெஞ்சில்...

//விடாமுயற்சி

நேற்று சுத்தபடுத்திய மூலையில்
சிலந்தி கட்டிய வலை ...
//

வாழ்த்துக்கள் ஜெய்..

ஓவியன்
18-07-2011, 07:34 AM
விடாமுயற்சியுடனான உங்கள் காவிய படைப்புகளுக்கு என் பின்னூட்டம் என்றைக்கும் இருக்கும் ஜெய்....!!

வாழ்த்துகள்..!! :)

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 03:06 PM
அனைத்துவரிகளும் அருமை

பாராட்டுகள் ஜெய்

வரிகளில் வாழ்த்துகளை கூறும் தோழர் நிவாஸ் அவர்களுக்கு மிக்க நன்றி ...


அனைத்தும் அழகு..

என்றாலும் இது சுருக்கென* தைத்த*து நெஞ்சில்...

//விடாமுயற்சி

நேற்று சுத்தபடுத்திய மூலையில்
சிலந்தி கட்டிய வலை ...
//

வாழ்த்துக்கள் ஜெய்..

விரும்பிய வரிகளை சுட்டி பின்னோட்டமிட்டு ஊக்குவிக்கும் தோழர் ஆதன் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ..


விடாமுயற்சியுடனான உங்கள் காவிய படைப்புகளுக்கு என் பின்னூட்டம் என்றைக்கும் இருக்கும் ஜெய்....!!

வாழ்த்துகள்..!! :)

மாறுபட்ட வார்த்தைகளில் பின்னோட்டமிட்டு ஊக்குவிக்கும் தோழர் ஓவியனின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ...

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 03:10 PM
முதியோர் இல்லம்

வாழும் தெய்வங்களின்
வசிப்பிடம் ....

சுருக்

தைத்தது ஊசி
காதலனுடன் மகள் ....

தீண்டாமை

இருவேறு தட்டுகளில் உணவு
வருத்தத்தில் பப்பியும் டாமியும் ...

ஓவியன்
18-07-2011, 04:10 PM
முதியோர் இல்லம்

வாழும் தெய்வங்களின்
வசிப்பிடம் ....

தெய்வங்களை வீடு விட்டு
துரத்தி விட்டு
கோயில்களில் தெய்வங்களைத்
தேடி அலைகின்றனர்....



சுருக்

தைத்தது ஊசி
காதலனுடன் மகள் ....


சுருக்கென உறைத்தது
இப்படித்தானே இருந்திருக்கும்
என் மனைவியின் தந்தைக்கும்....


தீண்டாமை

இருவேறு தட்டுகளில் உணவு
வருத்தத்தில் பப்பியும் டாமியும் ...

இது சூப்பர் ஜெய்..!! :icon_b::icon_b:
வாழ்த்துகள் நண்பரே, தொடர்ந்தும் அசத்துங்கள்..!! :icon_b:

Nivas.T
19-07-2011, 08:00 AM
:aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033:

கீதம்
19-07-2011, 10:13 AM
குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை, ஜெய்.

என்னை எழுதிய என் கவியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாயென்று கவிதைகள் உங்களைக் கேட்க நினைத்திருக்கலாம். கிறுக்கல்கள் என்று பெயரிட்டக் கோபத்தால் ஊடலில் இருக்கக் கூடும் யாவும்! :)

Ravee
20-07-2011, 12:22 AM
முதியோர் இல்லம்

வாழும் தெய்வங்களின்
வசிப்பிடம் ....

இனி இருப்பிடத்தை விட்டு செல்வார்கள்
பிள்ளைகளுக்காக ... :mad:



சுருக்

தைத்தது ஊசி
காதலனுடன் மகள் ....

பெருமூச்சு விட்டான் இயலாத அப்பன்
புத்திசாலி மகள் என்று ............. :frown:


தீண்டாமை

இருவேறு தட்டுகளில் உணவு
வருத்தத்தில் பப்பியும் டாமியும் ...


:) :) :) ......... :lachen001:

ஆதவா
20-07-2011, 05:12 AM
மூன்றே வரிகளென்றாலும் அதன் வீரியம் அதிகம் தான்.
சில கவிதைகள் வாவ் ரகம், வெகு சில பழையவை..
தொடருங்கள்!

கௌதமன்
20-07-2011, 02:31 PM
ஆகா !

ஜெய் போட்டுத் தாக்குங்க!!

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 12:22 PM
தெய்வங்களை வீடு விட்டு
துரத்தி விட்டு
கோயில்களில் தெய்வங்களைத்
தேடி அலைகின்றனர்....

கோவிலிலும் காணவில்லையோ
தெய்வங்களை ...


சுருக்கென உறைத்தது
இப்படித்தானே இருந்திருக்கும்
என் மனைவியின் தந்தைக்கும்....

:aktion033::aktion033::aktion033:.


இது சூப்பர் ஜெய்..!! :icon_b::icon_b:
வாழ்த்துகள் நண்பரே, தொடர்ந்தும் அசத்துங்கள்..!! :icon_b:

தோழர் ஓவியன் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ....

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 12:29 PM
:aktion033::aktion033::aktion033::aktion033::aktion033::aktion033:

கைதட்டலுடன் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழர் ...



குறுங்கவிதைகள் அனைத்தும் அருமை, ஜெய்.

என்னை எழுதிய என் கவியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாயென்று கவிதைகள் உங்களைக் கேட்க நினைத்திருக்கலாம். கிறுக்கல்கள் என்று பெயரிட்டக் கோபத்தால் ஊடலில் இருக்கக் கூடும் யாவும்! :)

நினைவு தொட்டிலிலிட்டு சீராட்டி நினைவிநூடே சென்று விடாமல் என்னை எழுதிய கவியே என்று மீண்டும் கூடல் கொள்ளும் ....
கீதம் அவர்களே உங்களுடைய நளினமான கவிதைவரிகளின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ...


இனி இருப்பிடத்தை விட்டு செல்வார்கள்
பிள்ளைகளுக்காக ... :mad:

பிள்ளைகள் நகர்ந்து விட்டார்கள் சந்தடியற்ற இடம் தேடி ...அவர்களின் பிள்ளைகளுக்காக ...


பெருமூச்சு விட்டான் இயலாத அப்பன்
புத்திசாலி மகள் என்று ............. :frown:

தோழர் ரவி அவர்களே அந்த தகப்பனின் பெருமூச்சு காமம் நிறைத்த கண்களில் தோன்றிய காதல் நிலைக்குமா என்று இருந்திருக்கும் ..
கவிதை வரிகளில் வித்யாசமான பின்னூட்டம் ....


மூன்றே வரிகளென்றாலும் அதன் வீரியம் அதிகம் தான்.
சில கவிதைகள் வாவ் ரகம், வெகு சில பழையவை..
தொடருங்கள்!

தோழர் ஆதவா அவர்களே என் சிந்தையில் உதித்தவை பழையவை என்றாலும் இன்றும் என்றும் தேவை தானே இன்றைய மனிதத்தை மறுத்துவிட்ட மனிதர்களுக்கு ...


ஆகா !

ஜெய் போட்டுத் தாக்குங்க!!

தோழர் கவுதமன் அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி ...

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 12:38 PM
கடன்

குடியிருக்க கட்டிய வீடு
அவன் ரசித்தான் தெருவில் நின்று ....

வாஸ்து

அக்னி மூலை குபேர மூலை ,வாயு மூலை
ஐயோ காணல மேற் கூரையை ....

விவசாயம்

உழவுத்தொழிலின் உன்னதம்
இன்று நினைவில் நாளை கனவில் ....

Nivas.T
21-07-2011, 01:43 PM
:lachen001:

பிரமாதம் ஜெய் அதுவும் அந்த வாஸ்து மிக அருமை

தொடருங்கள்

அக்னி
21-07-2011, 03:01 PM
கிறுக்'கல்'கள் அனைத்தும் அருமை...

அவற்றில் எனக்கு மிகவும் அருமையாய்ப் பட்ட சிலவற்றோடு...

பின்னோட்டம்

புதியவர்களின் பதிவுகளை
வரவேற்க காத்திருக்கும்
என் கையெழுத்து ..
கையெழுத்துக்கள் தட்டெழுத்துக்களானதால்,
பின்னூட்டங்கள்தான்
இயல்பு சொல்லும் கையெழுத்துக்கள்...


விடாமுயற்சி

நேற்று சுத்தபடுத்திய மூலையில்
சிலந்தி கட்டிய வலை ...
மீண்டும் சுத்தப்படுத்த
முயற்சிக்காத மனிதன்...


முதியோர் இல்லம்

வாழும் தெய்வங்களின்
வசிப்பிடம் ....
தெய்வங்களைக் கலைத்தவர்க்கு
அவமானச் சின்னம்...



வாஸ்து

அக்னி மூலை குபேர மூலை ,வாயு மூலை
ஐயோ காணல மேற் கூரையை ....
வாஸ்து இல்லை,
அகற்றமுடியாததால்
நிலத்திற்கு மட்டும்...

தொடரட்டும் கிறுக்'கல்'கள்...
(தலைப்பில் கிறுக்'கல்'கள் என மாற்றலாமோ...)

நாஞ்சில் த.க.ஜெய்
23-07-2011, 11:49 AM
:lachen001:

பிரமாதம் ஜெய் அதுவும் அந்த வாஸ்து மிக அருமை

தொடருங்கள்

வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர் ....


கிறுக்'கல்'கள் அனைத்தும் அருமை...

அவற்றில் எனக்கு மிகவும் அருமையாய்ப் பட்ட சிலவற்றோடு...

கவிதயினூடே பின்னூட்டமிட்டு வாழ்த்திய தோழர் அக்னி அவர்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி...

Ravee
23-07-2011, 12:29 PM
கடன்

குடியிருக்க கட்டிய வீடு
அவன் ரசித்தான் தெருவில் நின்று .... :traurig001: .....கண்ணீருடன்

:icon_b: :icon_b: :icon_b:

நாஞ்சில் த.க.ஜெய்
24-07-2011, 02:22 PM
கடன்

குடியிருக்க கட்டிய வீடு
அவன் ரசித்தான் தெருவில் நின்று .... :traurig001: .....கண்ணீருடன்

:icon_b: :icon_b: :icon_b:

பிடித்த வரிகளுடன் வாழ்த்துகள் கூறிய தோழர் ரவி அவர்களுக்கு மிக்க நன்றி....

நாஞ்சில் த.க.ஜெய்
24-07-2011, 02:37 PM
கல்வி கூடம்

இது சிறைசாலை அல்ல
விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடம் ...

நம்பிக்கை

இருட்டிய மேகம் விலகியது
தோன்றியது வெளிச்ச கீற்று ....

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 10:09 AM
சின்னத்திரை

கண்ணீரில் நனைக்க வைத்து
கண்ணீரில் நனையும் மனைவி ...

ஏமாற்றம்

நம்பிக்கையுடன் நான்
மாறியது பாதை ...

சிவா.ஜி
16-08-2011, 02:50 PM
சின்னச் சின்னதான கிறுக்கல்களில் பெரிதான தாக்கம் உள்ள வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய். இன்னும் கிறுக்குங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-08-2011, 06:23 PM
.சிவா.ஜி [/COLOR]"]சின்னச் சின்னதான கிறுக்கல்களில் பெரிதான தாக்கம் உள்ள வரிகளுக்கு வாழ்த்துக்கள் ஜெய். இன்னும் கிறுக்குங்கள்.

.ஊக்கமூட்டும் தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி தோழர் சிவா.ஜி அவர்களே ...

ஜானகி
17-08-2011, 01:11 AM
வார்த்தை ஜாலங்கள் போடும் கோலங்களை...' கிறுக்கல்கள் ' என்பதும் ஏனோ...?

சான்வி
17-08-2011, 04:02 AM
ஜெய் அவர்களின், கவிதை சிலம்பிலிருந்து
சிதறிய பரல்கள் முத்துக்க(ல்லா)ளா??? மாணிக்கங்(கல்லா)ளா??

மாறுபட்ட சிந்தனைகள்
உங்கள் கிறுக்"கல்"கள் :aktion033::aktion033:

நாஞ்சில் த.க.ஜெய்
17-08-2011, 06:19 AM
வார்த்தை ஜாலங்கள் போடும் கோலங்களை...' கிறுக்கல்கள் ' என்பதும் ஏனோ...?

இந்த வார்த்தை கோலங்கள் அழகுற அமையுமோ எனும் சிந்தையில் உதித்த சிந்தனை கிறுக்கல்கள் ஆகி விட்டது ...உங்களின் ஊக்கமூட்டும் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஜானகி அம்மா அவர்களே ...

நாஞ்சில் த.க.ஜெய்
17-08-2011, 06:20 AM
ஜெய் அவர்களின், கவிதை சிலம்பிலிருந்து
சிதறிய பரல்கள் முத்துக்க(ல்லா)ளா??? மாணிக்கங்(கல்லா)ளா??

மாறுபட்ட சிந்தனைகள்
உங்கள் கிறுக்"கல்"கள் :aktion033::aktion033:

சிதறிய பரல்களை கோர்த்து ஊக்கமூட்டும் வகையில் பின்னூட்டம் இட்ட சான்வி அவர்களின் கைதட்டலுடன் கூடிய பாராட்டுகளுக்கு மிக்க நன்றி .....

கீதம்
17-08-2011, 11:29 PM
கல்வி கூடம்

இது சிறைசாலை அல்ல
விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடம் .......

சமயங்களில் சோதனை எலிகளாய் மாணவர்கள்?


[நம்பிக்கை

இருட்டிய மேகம் விலகியது
தோன்றியது வெளிச்ச கீற்று ....

என்னால் முடியும் என்று காற்று கொண்ட நம்பிக்கை!


சின்னத்திரை

கண்ணீரில் நனைக்க வைத்து
கண்ணீரில் நனையும் மனைவி ....

மன அழுத்தம் குறைக்குமாம் கண்ணீர். இங்கே அதிகமாக்குகிறதே!


ஏமாற்றம்

நம்பிக்கையுடன் நான்
மாறியது பாதை ...

ஏமாற்றத்துக்கும் ஏமாற்றம்!

கிறுக்'கல்' எறிந்து வீழ்த்தும் எண்ணக்கனிகளின் சுவை அருமை, ஜெய்.

Nivas.T
18-08-2011, 07:12 AM
மிக அழகான கருத்துக்கள்,

தொடரட்டும் ஜெய் உங்கள் கருத்துத் தெ(ரி)ளிப்புகள்

பாராட்டுகள்

நாஞ்சில் த.க.ஜெய்
18-08-2011, 07:01 PM
கிறுக்'கல்' எறிந்து வீழ்த்தும் எண்ணக்கனிகளின் சுவை அருமை, ஜெய்.
மேலும் எழுத தூண்டும் உங்களின் நேசமுடனான ஊக்கமளிக்கும் பதில் கவிதை வரிகளின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி கீதம் அக்கா....

தொடரட்டும் ஜெய் உங்கள் கருத்துத் தெ(ரி)ளிப்புகள்

பாராட்டுகள்
ஊக்கமூட்டும் தோழர் நிவாஸ் அவர்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ...

நாஞ்சில் த.க.ஜெய்
18-08-2011, 07:10 PM
இணையம்

உள்ளங்கையில் உலகம்
மறந்தது தாத்தாவின் அன்பு .....

சிந்தனை

மலையேறும் தங்கம்
விலைபோகுமா என் தங்கம்....

நாஞ்சில் த.க.ஜெய்
06-12-2011, 02:44 PM
மனநலகாப்பகம்

சிந்திக்க மறந்தவர்கள்
சந்திக்கும் இடம்.,

M.Jagadeesan
06-12-2011, 03:14 PM
கிறுக்கல்கள் எல்லாமே அருமை. தொடர்ந்து கிறுக்கவும்.

நாஞ்சில் த.க.ஜெய்
19-12-2011, 11:08 AM
ஊக்கமூட்டும் வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜெகதீசன் ஐயா ....

நாஞ்சில் த.க.ஜெய்
19-12-2011, 11:20 AM
ஒற்றுமை

முன்னாளும் இந்நாளும்
புரிகின்ற ஊழல் ..

சுமைதாங்கி

உயரும் விலைவாசி
பசிமயக்கத்தில் தோழன் ....

நாஞ்சில் த.க.ஜெய்
01-01-2012, 06:03 AM
வறுமை

இன்னும் விடியவில்லை
விடிந்தால் முடிவில்லை ...


புகழ்

நெருஞ்சி முட்களின் இனிய வேதனை
தாங்கும் தலையில் முள் கிரீடம் ..

கீதம்
06-01-2012, 09:36 AM
புகழ்

நெருஞ்சி முட்களின் இனிய வேதனை
தாங்கும் தலையில் முள் கிரீடம் ..

அதற்குத்தானே ஆளாய்ப்பறக்கிறார்கள் சந்தர்ப்பவாதிகள்!

கிறுக்கல்கள் தொடரட்டும். பாராட்டுகள் ஜெய்.

ஜானகி
07-01-2012, 12:46 AM
எறியப்படும் 'கற்கள்' சரியான இலக்கை அடைந்து சிந்தையைத் தூண்டுவதில் வெற்றியடைகின்றன...நன்று

govindh
07-01-2012, 09:16 AM
கிறுக்"கல்'"கள்....
எண்ணங்களின் பெருக்கல்கள்...!

பிரமாதமானப் படைப்புகள்....
தொடர்ந்து செய்யுங்கள்...ஜெய்.
வாழ்த்துக்கள்....

பிரேம்
07-01-2012, 12:31 PM
தொலைந்த கனவுகள்
நனவாகும் போது ...

இந்த வரிகள் அருமை சார்..

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 03:25 PM
அதற்குத்தானே ஆளாய்ப்பறக்கிறார்கள் சந்தர்ப்பவாதிகள்!

கிறுக்கல்கள் தொடரட்டும். பாராட்டுகள் ஜெய்.


எறியப்படும் 'கற்கள்' சரியான இலக்கை அடைந்து சிந்தையைத் தூண்டுவதில் வெற்றியடைகின்றன...நன்று


கிறுக்"கல்'"கள்....
எண்ணங்களின் பெருக்கல்கள்...!

பிரமாதமானப் படைப்புகள்....
தொடர்ந்து செய்யுங்கள்...ஜெய்.
வாழ்த்துக்கள்....


தொலைந்த கனவுகள்
நனவாகும் போது ...

இந்த வரிகள் அருமை சார்..

ஊக்கமிகு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி உறவுகளே..

நாஞ்சில் த.க.ஜெய்
22-04-2013, 03:29 PM
பயணம்
முடிவில்லை பாதையில் தடை
பதிவுகள் மீண்டு(ம்) தொடர்கிறது ...

முதிர்ச்சி

முடிவற்ற வாழ்வில் முடிந்த
அனுபவங்கள் ..

கீதம்
23-04-2013, 01:28 AM
\\முடிவற்ற வாழ்வில் முடிந்த
அனுபவங்கள் ..\\

முடிந்துவிட்ட வாழ்விலும்
சில முடிவற்ற அனுபவங்கள்!

அனுபவக் கற்பிதங்கள் ஏராளம்!
அன்றாடம் கற்போம் ஏதேனும்!

பாராட்டுகள் ஜெய்.

சுகந்தப்ரீதன்
25-04-2013, 07:32 PM
முதிர்ச்சி
முடிவற்ற வாழ்வில் முடிந்த
அனுபவங்கள்..
சிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த அனுபவங்களுக்கு பெயர்தான் முதிர்ச்சியோ..?!:)

கலக்குங்குறீங்க ஜெய்... தத்துவவியலில்..!!:lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 07:02 AM
\\முடிவற்ற வாழ்வில் முடிந்த
அனுபவங்கள் ..\\

முடிந்துவிட்ட வாழ்விலும்
சில முடிவற்ற அனுபவங்கள்!

அனுபவக் கற்பிதங்கள் ஏராளம்!
அன்றாடம் கற்போம் ஏதேனும்!

பாராட்டுகள் ஜெய்.
அனுபவ கற்பிதத்துடன் கூடிய பாராட்டுக்கு மிக்க நன்றி கீதம் அக்கா ..

சிதறிய வாழ்வியல் தருணங்களை அள்ளி முடிந்த அனுபவங்களுக்கு பெயர்தான் முதிர்ச்சியோ..?!:)

கலக்குங்குறீங்க ஜெய்... தத்துவவியலில்..!!:lachen001:
ஆம் இருக்கலாம் அதுவும் உண்மைதான் சுபி ..பாராட்டுக்கு நன்றி ..

நாஞ்சில் த.க.ஜெய்
28-04-2013, 07:12 AM
பிரிவு



நேற்று உடைந்த பானை
இன்றும் ஒட்டவில்லை...

காத்திருப்பு


வரும் என்ற நம்பிக்கை
வராவிட்டால் மீண்டும் ..

A Thainis
28-04-2013, 07:38 AM
காத்திருப்பு கவிதையில் நம்பிக்கை மீண்டும் வரும் என்றதும் உடைந்த பானை ஏற்கனவே ஒட்டிவிட்டதுப்போல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் நாஞ்சில் த.க.ஜெய்.

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 06:34 AM
காத்திருப்பு கவிதையில் நம்பிக்கை மீண்டும் வரும் என்றதும் உடைந்த பானை ஏற்கனவே ஒட்டிவிட்டதுப்போல ஒரு உணர்வு வாழ்த்துக்கள் நாஞ்சில் த.க.ஜெய்.

வாழ்த்திற்கு மிக்க நன்றி தைனிஸ் அவர்களே..

நாஞ்சில் த.க.ஜெய்
03-05-2013, 06:37 AM
அலைகழிப்பு

அங்குமிங்கும் இல்லா பேருந்தை தேடி
தோழனுடன் நான் அருகில் அணங்கு ..


சாதி


நாடழியும் வீடழியும் காடழியும்
நான் அழியேன் ...

அணங்கு = பெண்

நாஞ்சில் த.க.ஜெய்
28-05-2013, 05:13 AM
அடிமைகள் :

உறவுகள் இருந்தும்
அனாதையாகி போனவர்கள் ...

அனாதைகள் :

உறவுகளை தேடி
அடிமையாகி போனவர்கள்

கீதம்
29-05-2013, 01:30 PM
அலைகழிப்பு

அங்குமிங்கும் இல்லா பேருந்தை தேடி
தோழனுடன் நான் அருகில் அணங்கு ..



இல்லாப் பேருந்தைத் தேடி நில்லாப் பேருந்தை நாடி... இன்னும் எத்தனை நாடகமோ?

அது சரி. தோழன் எதற்கு? துணைக்கா? :)


சாதி


நாடழியும் வீடழியும் காடழியும்
நான் அழியேன் ...
[/COLOR]

தானே அழிய நினைத்தாலும் அதை வைத்துப் பிழைப்பவர்கள் விடமாட்டார்கள்...

நச்சென்று நன்றாக உள்ளன யாவும். பாராட்டுகள் ஜெய். தொடர்ந்து எழுதுங்கள்.

நாஞ்சில் த.க.ஜெய்
07-06-2013, 02:43 PM
இல்லாப் பேருந்தைத் தேடி நில்லாப் பேருந்தை நாடி... இன்னும் எத்தனை நாடகமோ?

அது சரி. தோழன் எதற்கு? துணைக்கா? :)

காளையர் துணையின்றி தேடுவரோ கன்னியரை
எங்கு துணையின்றி தேடுவர் இக்காளையர்
சச்சரவே ன்றாலும் இத்துணை மீட்டிடும் ...



தானே அழிய நினைத்தாலும் அதை வைத்துப் பிழைப்பவர்கள் விடமாட்டார்கள்...

நச்சென்று நன்றாக உள்ளன யாவும். பாராட்டுகள் ஜெய். தொடர்ந்து எழுதுங்கள்.

அழிவிலும் பிழைத்திடும்
பருந்துகள் என்று அழியுமோ
காத்திருப்பில் சாதி ...


தங்கள் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி அக்கா...