PDA

View Full Version : NEWTONS THIRD LAW.... கடைசி பாகம்....ரங்கராஜன்
16-07-2011, 11:50 AM
NEWTONS THIRD LAW

“மச்சி நான் தான் டா பேசறேன் சிட்டிங்(குடிக்க) போடலாமா”........... செல்லை எடுத்தவுடன் இப்படி கேட்டான் என் நண்பன்......... பதில் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருந்தேன் நான்.....

வெள்ளிகிழமை மாலை எப்போதும் போல தூங்கி எழுந்து விட்டு, வழக்கம் போல விட்டத்தை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். சீலிங்கில் இருந்த ஒட்டை துண்டு என் கண்ணில் வந்து விழுந்தது.

துடித்துக் கொண்டு எழுந்தேன். கண்ணை அலசினேன். தேமுதிக தலைவரின் கண்களைப் போல ஆனது என் கண்கள்.

வாழ்க நியூட்டன்ஸ் 3டு லா.......... EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

ச்சீ முதலில் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். இப்படி பல ஆண்டுகளாக முடிவு மட்டும் செய்துக் கொண்டிருப்பதன் விளைவு தான் மேலே என்னோடு நீங்கள் இப்போ கண்ட ஒட்டை. அதுக்கு கண்டிப்பா 7 மாத வயது இருக்கலாம். கண்ணை துடைத்துக் கொண்டே கிச்சனை நோக்கி நடந்தேன். காபி குடிக்கலாமா, டி குடிக்கலாமா.......

இரண்டிற்கும் பால் வேண்டும், பால் இருக்காது, சமீபத்தில் தான் பால் வாங்குவது நிறுத்தினேன். ஒருத்தனுக்கு எதுக்கு தினமும் அரை லிட்டர் பால், ஒரு அரை லிட்டர் பால் வாங்கினால், நான்கு நாட்கள் நான் இரண்டு வேளை காபி குடிப்பேன்..... அதன்பிறகும் மீந்த பாலை தயிருக்கு பொற ஊற்றி விடுவேன். பால் வாங்கும் காலத்தில் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அடுக்கடுக்காக பால் பாக்கெட் எப்போதும் இருக்கும்....... ஒரு கட்டத்தில் குளிர்சாதன பெட்டியில் உள்ள பாகங்களையெல்லாம் கழட்டி பால் பாக்கெட் அடுக்கி வைக்க வேண்டிய நிலை வந்துவிட்டது ,,,,,,அந்தளவுக்கு பால் பாக்கெட்டுகள் சேர்ந்து போயின.

ஒருமுறை எதிர்வீட்டு மாமி (வயதானவர் தான்) குளிர்சாதன பெட்டியில் இருக்கும் பாலை பார்த்து விட்டு,

“எதுக்கு இத்தனைப் பால் வச்சிட்டு இருக்க, வீட்ல பால் கெட்டுப் போச்சுனா வீட்டுக்கு ஆகாது”

“சரி அப்ப வீட்டுக்கு வெளியே வச்சி கெட்டுப்போச்சுன்னா, ஊருக்கும் நாட்டுக்கும் ஆவாதா”

“எக்கேடாவது போ” ஒரு வார்த்தையில் அங்கிருந்து கிளம்பி விட்டாள்......ஸ்மார்ட் கேள்.

அன்று மாலை பால் இல்லததால் கிரீன் டி போட்டு குடித்தேன்.

வாழ்க நியூட்டன்ஸ் 3டு லா.......... EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

அதை குடித்ததுக்கு நான் சும்மா இருந்திருக்கலாம், வாயை கெடுத்து விட்டது அந்த டீ. டீ பொட்டலத்திற்கு பின்னாடி தயாரித்த தேதியை பார்த்தேன். உபயோகப்படுத்தும் தேதி முடிந்தே இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது.

அடக்கருமமே...... முதலில் இந்த பழைய சமையல் பதார்த்தங்களை களைய வேண்டும் என்று உத்வேகம் வந்தது........ சரி சரி அப்புறம் களையலாம் அப்புறம் களையலாம்..... உத்வேகம் வந்த வேகத்தில் சென்றது. என்றாவது ஒருநாள் சாம்பார் வைப்பதற்கு பருப்பு டின்னை திறக்கும் போது உள்ளே இருந்து கருநாகம் வந்து என் நெற்றியிலே போட்டு ஒண்ணு போட போவுது...........

மனது ஒருவிதமாக பாரமா இருந்தது.... கருநாகத்தை நினைத்து அல்ல.... வாழ்க்கையை நினைத்து, எப்போதும் போல ஒரே மாதிரியான வாழ்க்கை. கொஞ்சம் கூட வித்தியாசமில்லை.......தினமும் ஒரே இடத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும்....... பின்ன மத்தவங்க மட்டும் என்ன முதல் நாள் பாங்க் வேலை, இரண்டாவது நாள் பெட்ரோல் பங்க் வேலை, மூன்றாவது நாள் கோர்ட்டு தவாளி வேலை என்று வாரத்திற்கு ஏழு நாட்கள் மாறி மாறிய வேலை செய்யறாங்க.

சரி கோவிலுக்கு போகலாம் என்று என் இஷ்ட தெய்வம்...... உண்மையில் இஷ்டமாக்கிக் கொண்ட தெய்வம் மயிலாப்பூரில் உள்ள கோலவிழியம்மா கோவிலுக்கு சென்றேன். கோவிலுக்கு உள்ளே சென்றேன். நான் அடிக்கடி இங்கு வர மாட்டேன். வட்டி கடைக்கு போகும் இளைச்சவன் போல, வேலை மாறுதல், மனக்கஷ்டம், பணக்கஷ்டம் , காரியமாக வேண்டும் உள்ளிட்ட பல சுயநலமிக்க காரணங்கள் இருந்தால் மட்டுமே அங்கு நான் போவது வழக்கம். இது தெரிந்தும் கோலவிழியம்மா இந்த சுயநலமிக்க பக்தனை ஏற்றுக் கொள்வாள். ஓவ்வொரு முறையும், நான் கேட்பதையும் செய்து தருவாள்.

பூசாரி வந்தார் விபூதி, குங்குமம், கொடுத்தார். அனைவருக்கும் பூ கொடுத்தார், என் முறை வரும் போது பூ தீர்ந்து போனது. எனக்கு இது சங்கடமாகி விட்டது. அடுத்தமுறை எப்படியாவது பூ வாங்க வேண்டும் என்று காத்திருந்தேன். உயரமாக இருப்பதால், கடைசியில் நான் நின்றேன். மறுபடியும் பூசாரி வந்தார், தட்டில் பூ குறைந்துக் கொண்டு வந்தது. எனக்கு முன்னாடி பல பெண்கள் நின்றுக் கொண்டிருந்தனர். நான்கு பூ தான் தட்டில் இருந்தது. எப்படி கேட்பது பூசாரியிடம், உடனே தலையில் பல்பு எரிந்தது. பர்ஸை திறந்து ஐந்து ரூபாய் காயினை எடுத்து

“சாமி இந்தாங்க” என்று உயரமாக இருப்பதால் சுலபமாக பெண்களை தாண்டி தட்டில் வைத்தேன்.

வாழ்க நியூட்டன்ஸ் 3டு லா.......... EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

பூசாரிதட்டில் இருந்த நான்கு பூவில் மூன்று பூவை என் கையில் வைத்து அமுக்கினார். வாழ்க நியூட்டன். கடவுளுக்கே லஞ்சம் கொடுத்து அவளின் ஆசிர்வாதத்தை பெற்றது போல மனதில் ஒரு நெருடல்.... பூவை கண்ணில் ஒத்திக் கொண்டு வெளியே வந்தேன். செருப்பை தேடினேன்.

செருப்பை காணவில்லை....... EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

அடப்பாவிங்களா, எங்கடா என் செருப்பு, என் செருப்பு இருந்த இடத்தில், வேறு ஒரு செருப்பு இருந்தது, செருப்பு என்பதை விட அதை செ....... என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்........ காரணம் அதில் ....ருப்பு இல்லை. கீழே செருப்பின் அடித்தளம் மட்டும் இருந்தது. மேலே இரண்டு கயிறு காலை உள்ளே நுழைத்துக் கொள்வதுற்கு, நடக்கும் போது செருப்பு நம்மை விட்டு போகாமல் இருப்பதற்காகவாம். இதைவிட கேவலமான செருப்பை நான் உலகத்தில் பார்த்ததில்லை. காடு மலைகளி்ல் திறிந்த புத்தரின் செருப்பு கூட இந்தளவு கிழிய வாய்ப்பில்லை.. வெளியே போகும் போது என் முன்னாடிச் சென்ற அவசரமாக சென்ற கர்ப்பிணி பெண் ஒருத்தி எண்ணை மீது காலை வைத்து வழுக்கி தொப் என்று விழுந்தாள். அருகே இருக்கும் பெண்கள் அவளை தூக்கி விட்டார்கள். அடிப்பட்டு இருக்கா என்று, கிட்ட போய் பார்த்தேன், அடி எதுவும் படவில்லை. அவளின் காலில் என்னுடைய மஞ்சள் நிற செருப்பு.......

EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

நான் கண்டுக்கொள்ளவில்லை, திரும்பி அம்மனை பார்த்து எனக்கு நல்ல புத்தியை கொடு தாயே.......

“தீர்த்தகரையினிலே தெற்கு மூளையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கினோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடிக் கண்ணம்மா மார்பு துடிக்குதடி”


செல்போன் என்னை அழைத்தவுடன், பழைய கசப்பான நினைவுகளுக்கு என் மனம் சென்றது..... உண்மையில் மார்பு துடித்தது.

“ஹலோ” என்றேன்.

“மச்சி நான் தான் டா பேசறேன் சிட்டிங்(குடிக்க) போடலாமா”........... செல்லை எடுத்தவுடன் இப்படி கேட்டான் என் நண்பன்.........

“டேய் போனை எடுத்தவுடன் ஹலோன்னு ஒருவார்த்தை சொல்லுடா அப்புறம் வாயேன்டா மெட்டருக்கு, லூசு”

“டைமில்ல மச்சி சீக்கிரம் சொல்லு போலாமா”

“டேய் நான் எங்க இருக்கேன் தெரியுமா”

“தியெட்டர்ல இருக்கியா மச்சி, கொஞ்சம் வெளியே வந்து பேசுடா ப்ளீஸ், பாட்டு சத்தத்தில் எதுவும் கேட்கலை”

“டேய் நான் கோவிலில் இருக்கேன்டா, பாடுறது சாமி பாட்டு, செல்லாதா மாரியத்தா பாட்டு எந்த புது படத்துல டா இருக்கு”

“கோவில்லா, சத்ததத்தை கேட்டு, எதோ நல்ல டிடிஎஸ் தியெட்டர்ல இருக்கன்னு நினைச்சேன்...... பரவாயில்லை ஹெட் செட்டு போட்டு பேசு, பக்கத்துல இருக்கும் யாருக்கும் கேட்காது”

“டேய் சாமிக்கு கேட்காதா டா”

“ இருக்குறதே, ஐநூறு ரூபாய் தான், உனக்கு ஆஃப் எனக்கு ஆஃப் டா, அவருக்கெல்லாம் காசில்லை”

“டேய் சும்மா இருடா என் செருப்பு வேற தொலைஞ்சி போச்சு”

“மச்சி கோவில்ல செருப்பு தொலைஞ்சி போனா, நல்லது... நம்மை பிடித்த தர்தரம் போச்சுனு எங்க பாட்டி சொல்லுவாங்க டா”

“டேய் மவனே உங்க பாட்டி காலத்துல செருப்பே கிடையாது டா, எதாவது சொல்லனும்னு சொல்லிடு இருந்த அதே செருப்பால் உன்ன அடிப்பேன்”

“மச்சி சீக்கிரம் வாடா, அப்புறம் பார்ல கூட்டம் அதிகமாயிடும் டா”

“நான் உன்கூட அப்புறம் பேசறேன்” செல்லை கட் செய்தேன்.

செருப்பு துளைந்தால் தர்தரமாமே தொலையுமாமே..., அத ஒரு தர்தரம் போன் பண்ணி சொல்லுது, என்று நினைத்துக் கொண்டு, வண்டில் அமர்ந்தேன். கோவிலுக்கு போயிட்டு வந்தா நேரா வீட்டுக்கு தான் போகணும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க, வெளியவே போககூடாதுனு சொல்றாங்க, இந்த ஆப்ரிக்கன் பப்பூன் குரங்கு என்னை பாருக்கு கூப்பிடுது.........மறுபடியும் செல்லில்.....


“தீர்த்தகரையினிலே தெற்கு மூளையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கினோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடிக் கண்ணம்மா மார்பு துடிக்குதடி”

அந்த மார்பு துடிக்குதடி வார்த்தை வரும் வரை செல்போனை அடிக்க விட்டு தான் எப்போதும் போனை எடுப்பேன்.... அந்த வார்த்தை மீது அப்படியோரு ஈடுபாடு...... பாரதி பாரதி தான்.... செல்லை எடுத்து பேசாமல் துண்டித்தேன்.

மார்பு துடிக்குதடி........... என்ற வார்த்தை என் காதில் விழுந்துக் கொண்டே இருந்தது.

நாம் நம்புகிறவர்கள் எல்லாரும் நம்மை ஏமாற்றுகிறார்களே.... குறிப்பாக பெண்கள்... நம் நம்பிக்கைக்கு பாத்திரமான பெண் உலகத்தில் இருக்காளா, என் பேரன்பை பெற அவளுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா இல்லையா..... எத்தனை முறை தான் காதலில் தோல்வியடைவது..(மொத்தம் இரண்டு முறை தான் ஹி ஹி ஹி)... ஒரு செஞ்சுக்கு என்னை வெற்றியடைய வைக்கலாமே..(இது என்ன ஆப்டிட்யூடு டெஸ்டா. பாஸாக்க ) ..... சே என்னடா வாழ்க்கை இது.......... சரியான நேரத்தில் மறுபடியும் அந்க குடிகார நண்பன் போன் செய்தான்,

“டேய் மச்சி வரீயா இல்லையா டா”

“சரி வரேன்டா........... டேய் டேய் டேய் டே டே”

............டமார்.........,

எதிரே வந்த மோட்டர் சைக்கிள் என் பைக்கின் மீது மோதி, என் பைக் டூம் எகிறி கீழே விழுந்தது. 1500 ரூபாய் எள்ளு...........

வாழ்க நியூட்டன்ஸ் 3டு லா.......... EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

கடைசி பாகம் விரைவில்......

அமரன்
16-07-2011, 11:59 AM
சுவாரசியம் நிறைந்த எழுதோட்டம்.

ஒவ்வொரு எழுத்திலும் அந்த நேரத்து மனவோட்டம், அது வாட்டமோ காட்டமோ, உன் மனசை தெளிவாகக் காட்டுது.

நாம் நம்புறவர்கள் எல்லாரும் நம்மை ஏமாற்றுகிறார்கள்..

இதைப் படித்ததும் நேற்று நான் பேசியது நினைவுக்கு வந்தது..

நம்மைச் சுற்றி இருக்கிறவங்க எல்லாருமே நல்லவங்கதான்.. ஆனால் அவங்க அப்படி இருக்காமல் போக நாமதான் சந்தர்ப்பம் அளிக்கிறோம்..

சொல்ல வேணும் போல தோணிச்சு.. சொல்லிட்டேன்...

திரி செல்லும் திசை அடைய ஓட்டத்தில் கலந்திட்டேன்..

அசத்துப்பா..

ஆதவா
16-07-2011, 12:13 PM
:lachen001::lachen001::lachen001::D:D:eek::eek::eek::cool::cool:

Nivas.T
16-07-2011, 01:10 PM
சூப்பர்

பெண்டாஸ்டிக்

பிரமாதம்
பின்னிட்ட பங்காளி :D

பூமகள்
16-07-2011, 01:48 PM
இத்தனைக்கும் காரணம் நியூட்டனா தக்ஸ்??!! ;)

நல்ல எழுத்து நடை..

செருப்பு சறுக்கல்.. உன் மனம் புரிகிறது தக்ஸ்..

நமக்கு பிடித்தவர்கள் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்... -- இதற்கான அமரன் அண்ணாவின் தத்துவம் எதார்த்தம்.. அந்த நோக்கில் தான் நானும் பார்க்கிறேன். :cool:

ஐயய்யோ.. கடைசியில் போன் பேசிட்டே விழுந்திட்டியா தக்ஸ்.. அடி ஏதும் படலையே.... உனக்கு தான்.. பைக்குக்கு என்ன ஆனாலும் நீ பார்த்துப்பாயே...

தொடருங்கள் தக்ஸ்..

Ravee
16-07-2011, 01:57 PM
சிவா மனசுல சக்தி பார்த்த மாதிரி சப்ஜெக்ட் என்னவோ பாட்டிலேயே சுத்தி சுத்தி வருது .... கடைசியில கட்டிங் ஆச்சா இல்லையா தகஸ்..... :lachen001:

innamburan
16-07-2011, 05:53 PM
Newton's Fourth Law தெரியுமா?

நாஞ்சில் த.க.ஜெய்
16-07-2011, 07:06 PM
சந்தோசம் எனும் பெயரில் பிறர் சந்தோசம் கெடுக்கும் நண்பர்கள் எனும் போர்வையில் உள்ள சில விசமிகளின் செய்த திட்டமிட சதி இது ...இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ...அடி கிடி ஏதும் படலையே வண்டி ஒட்டி வந்தவனுக்கு...:D:D:D

மதி
17-07-2011, 02:54 AM
பழசாகி மறந்து போன பிசிகிச்சை இப்பவாவது ஞாபகப்படுத்தலாம்னா... அப்படியே ந்யூட்டனின் மூன்றாம் விதி படம் பார்த்த மாதிரி... இருக்கு. ந்யூட்டன் சின்ன தப்பு பண்ணிட்டார்...

There was only one action. Whatever happening now is just reaction and reaction to those reactions.. :D:D:D:D
காலையில எழுந்து எவ்ளோ தெளிவா எழுதறேன் பார். அப்புறம் இது முந்தாநேத்து நடந்துதா..?

அப்படின்னா... கடைசியில... அந்த பாழாப்போன கடன்காரன் மதியால தான் இத்தனையும் நடந்துச்சு. அவன் மட்டும் பந்தா பண்ணாம சீன் போடாம இருந்திருந்தான்னா... உன்னிடமிருந்து இப்படிப்பட்ட வரிகளை கடைசி பத்தியா எதிர்பார்க்கிறேன்.:D:D:D

இறுதிபாகத்தை போடுப்பா..

Mano.G.
17-07-2011, 05:10 AM
இது உனக்கு மட்டும் தான் வரும்,
உனக்கு நடந்த சம்பவங்களை
சுவாரசியமாக எங்களுக்கு சொல்லி
எங்களையும் உன்னோட அனுபவத்தை
பங்கெடுக்க வைக்கிரது.

கண்மணி
17-07-2011, 05:47 AM
பழசாகி மறந்து போன பிசிகிச்சை இப்பவாவது ஞாபகப்படுத்தலாம்னா... அப்படியே ந்யூட்டனின் மூன்றாம் விதி படம் பார்த்த மாதிரி... இருக்கு. ந்யூட்டன் சின்ன தப்பு பண்ணிட்டார்...

There was only one action. Whatever happening now is just reaction and reaction to those reactions.. :D:D:D:D
காலையில எழுந்து எவ்ளோ தெளிவா எழுதறேன் பார். அப்புறம் இது முந்தாநேத்து நடந்துதா..?

அப்படின்னா... கடைசியில... அந்த பாழாப்போன கடன்காரன் மதியால தான் இத்தனையும் நடந்துச்சு. அவன் மட்டும் பந்தா பண்ணாம சீன் போடாம இருந்திருந்தான்னா... உன்னிடமிருந்து இப்படிப்பட்ட வரிகளை கடைசி பத்தியா எதிர்பார்க்கிறேன்.:D:D:D

இறுதிபாகத்தை போடுப்பா..


அண்ணே மதி அண்ணே.. அது பட்டர்ஃபிளை எஃபெக்ட். கண்மணி தசாவதாரம் திரியிலும் அப்புறம் கிறுக்க் கேள்வி நறுக்கு பதில் திரியிலும்.. அப்பால வாழ்க்கைப் பட்டி மன்றத்திலும் வெளக்கோ வெளக்குன்னு வெளக்கினேனே மறந்திருச்சா?

sarcharan
18-07-2011, 01:04 PM
துடித்துக் கொண்டு எழுந்தேன். கண்ணை அலசினேன். தேமுதிக தலைவரின் கண்களைப் போல ஆனது என் கண்கள்.அதுக்கு என்ன காரணமுன்னு சொல்லீடுங்க...:D:D:D:D:Dஒருமுறை எதிர்வீட்டு மாமி (வயதானவர் தான்)

“எக்கேடாவது போ” ஒரு வார்த்தையில் அங்கிருந்து கிளம்பி விட்டாள்......ஸ்மார்ட் கேள்.


குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் விடை சொல்லுங்க :p“சரி அப்ப வீட்டுக்கு வெளியே வச்சி கெட்டுப்போச்சுன்னா, ஊருக்கும் நாட்டுக்கும் ஆவாதா”

:confused:செந்தில் மாதிரி கேள்வி கேட்டிருக்கீங்க.. அதன் மாமி ஓடீட்டாங்க...:frown::p

ரங்கராஜன்
18-07-2011, 06:44 PM
கடைசி பாகம்....

என் கண் முன்னாடியே நான் ஆசையாக வளர்த்த என் பைக்கின் தலை மட்டும் துண்டாக போய் விழுந்தது......... அதாங்க பைக் டூம்......... ஆம்பளைங்களுக்கு டூம் என்றால் என்னனு தெரியும் ........ பெண்களுக்கு தெரியாது, விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பைக்கின் முன்னாடி லைட் எரியும் இடத்திற்கு மேல் இருக்கும் இல்லையா, அந்த லைட்டு மேலே, பிளாஸ்டிக்கில் சாவி போடும் இடத்திற்கு முன்னாடி வரை ஒன்று நீட்டிக் கொண்டு இருக்குமே......... அதாங்க டூம்........

இப்பவும் புரியலையா, சரி அதை தெரிஞ்சிக்க ஒரு வழி சொல்றேன், என்னைப் போலவே யாருடனாவது செல்லில் பேசிக் கொண்டே போய் எதிரே வரும் வண்டியை இடிங்க....... உங்களுக்கு முன்னாடி வண்டியின் ஒண்ணு போய் விழுமே அது தான் டூம்..... டூ வீலரில் இடித்தால் டூம் பறப்பதை நீங்கள் பார்க்கலாம்.......... லாரி, பஸ், கார் போன்ற வாகனங்களில் இடித்தால் நீங்கள் பறப்பதை டூம் பார்க்கும்......... சோ கவனம் தேவை......

அந்த மாதிரி விழுந்தது என் டூம்........

அதை பார்த்தவுடன் எனக்கு கோபம் கொப்பளித்தது.

“டேய் மம்மி, பைக் ஓட்டறீயா இல்ல பிளைட் ஓட்றீயா, கெஸ்டுக்கு பிறந்தவனே, அறிவு இருக்கா உனக்கு, மம்மி................ கண்ணு தெரியலைன்னா எதுக்குடா வண்டியை ஓட்டிறீங்க, யுவர் மதர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....” என்று கீழே விழுந்த டூமை நோக்கி ஓடினேன்.

எதுவா இருந்தாலும் இத்தனை வாட்டி இடித்தவனுடைய அம்மாவை திட்டி இருக்க கூடாது தான், அதுவும் கடவுளைப் போல அம்மாவை அப்படி பேசி இருக்க கூடாது தான்......... ஆனால் உண்மையில் சென்னை வாசிகளை கேட்டால் தெரியும், அல்லது சென்னையில் வசிப்பவர்களை கேட்டால் தெரியும், அந்த வார்த்தை அதனுடைய அர்த்ததுடன் காயப்படுத்துவதற்காக சொல்லப்படுவதல்ல,

கோயம்பத்தூர் “எனூங்க”

திருநல்வேலி “எலே மக்கா”

விழுப்புரம் “ஓய்”

தூத்துக்குடி “என்னம்பலே”

மதுரை “........க்காளி”

இந்த வரிசையில் சென்னை “.......த்தா”


இது அர்த்தம் பொதிந்த வெறுப்புடன் சொல்லப்படும் வார்த்தையல்ல, எப்படி வண்டியை ஓட்ட கிக்கரை மிதித்தால் வண்டி டூர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று புறப்படுமோ, அப்படி சென்னையை பொறுத்தவரை இந்த வார்த்தையை பயன்படுத்தினால், கோபம் கொப்பளித்துக் கொண்டு வரும்.........

சென்னையில் சண்டைப் போடும் அனைவரும் இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்பது விதி....... அப்படி பயன்படுத்தவில்லை என்றால், அவன் மேற்கு மாம்பலத்தில் உள்ள தயிர் சாதம் சாப்பிட்டுக் கொண்டு, அலுவலகத்தில் சி்க்கன் பீசா ஆடர் செய்து சாப்பிடும் அம்மாஞ்சியா இருப்பான். (குறிப்பு நானும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவன் தான், ஒரு சிறு வித்தியாசம் நான் வீட்டிலே சிக்கன் பீசா ஆடர் செய்து சாப்பிடுபவன்)

சோ அந்த ஒரு வேகத்தில் தான் நான் அவ்வாறு என்னுடைய வண்டியை இடித்தவனை திட்டினேன். என்ன காரணம் சொன்னாலும் திட்டியது தப்பு தான். டூமை எடுக்க சென்றேன்.

வேகமாக வந்த குப்பை லாரி ஒன்று டூம் மீதி என் கண் முன்னே ஏறியது. டூம் சுக்கு நூறாக உடைந்தது.

EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

அந்த நாய் வந்து இடித்தற்கு ஒன்றும் அறியாத அவனின் தாயை எதற்கு திட்ட வேண்டும். அதற்காக ஆண்டவன் அல்லது நம்மை மீறிய ஒரு சக்தி, அல்லது என்னுடைய கோலவிழியம்மா எதற்கு அவனுக்கு தண்டனை கொடுக்க வேண்டும்............

என் டூம் கண் எதிரே துண்டு துண்டாக சிதறியதை பார்த்தவுடன், அவனை நோக்கி திரும்பினேன்.

“டேய் மம்மி என்ன ஹேரு டா வண்டி ஓட்டுற” என்று அவனை நோக்கி அடிக்க பாய்ந்தேன். வெள்ளை கலர் சட்டை, கருப்பு கலர் பென்ட், கண்ட கருமாந்திர கலரில் ட்டை கட்டிக் கொண்டிருந்த அவன் ஹெல்மெட்டை கழட்டினான்.

என்ன ஆச்சர்யம் அது அவன் இல்லை..................................... அவள்.

அந்த இருட்டில் கூட அவளின் ரத்த சிவப்பு உதட்டு சாயம் பளீச் என்று தெரிந்தது. கண்களை தாண்டிய மை, எதோ கம்பெனியல் வரவேற்பாளனியாக இருக்க கூடும் அல்லது பெரிய கடைகளில் வியாபார பெண்ணாக இருக்க கூடும். பார்த்தவுடன் அனைத்து ஆண்களுக்கு வருமே......... வேறு ஒண்ணும் இல்லைங்க பரிதாபம் தான், எனக்கும் வந்தது.

“சார் நீங்க தானே செல்போன் பேசிக்கிட்டே வந்து என் வண்டி மேல மோதினீங்க”

உண்மையை ஒரு ஆம்பிளை சொன்னால் உடனே மனசு தாங்காது........... எகிறிக் கொண்டு சண்டைக்கு போவான்............. ஆனா அதுவே ஒரு பொண்ணு சொல்லுச்சுன்னா..........

“இல்ல மேடம் கொஞ்சம் நல்லா தேடி பார்த்து இருக்கலாமே......... நான் வேணுனாலும் பட்டியலை காட்டுறேன்...........” பெண்களுக்கு ஆண்கள் ஆதரவு இருக்கோ இல்லையோ.........ஆண்களுக்கு பெண்கள் ஆதரவு எப்போதும் இருக்கு...... இருக்கு.

இதில் நான் மட்டும் விதிவிலக்கா என்ன......... மரத்தில் காயவைக்கப்படும் பச்சைப் புடவை காற்றில் அசைந்தாலே, அது பெண் தானோ என்று பல கிலோ மீட்டர் கடந்து வந்து பார்க்கும் ஜாதி, ஆண் ஜாதி...(சரி மன்றத்தின் பெரிய ஆண்களை விட்டு விடுவோம் தாமரை, சிவாஜி, தல, ஆரன், பாரதி போன்ற சின்ன ஆண்களை வைத்துக் கொள்வோம்...........ஹி ஹி ஹி ஹி, (ப்ராக்கெட்டுக்குள் ப்ராக்கெட்டாடாடாடாடாட மூத்தவர்களே சும்மா தமாசுக்கு மன்னித்துவிடவும்), மன்றத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு).......... நான் மட்டும் விதிவிலக்கா என்ன??????

“.........................”

நான் அப்படி கூறியவுடன் என்னை இடித்த பெண் எதுவும் பேசவில்லை.............. கண்கள் பயத்தில் வழக்கத்தை விட அதிகமாக விரிந்திருந்தன............. அதைப் பாத்தவுடன் எனக்கும் பாவமாக ஆகிவிட்டது......கண்களில் ஜாலம் செய்யும் வித்தை பெண்களை விட வேறு யாருக்கும் தெரியாது......... இந்த பொம்பளைங்களே இப்படி தான் எஜமா குத்துங்க எஜமா குத்துங்க...... குத்துங்க எஜமா குத்துங்க............

“பரவாயில்லை மேடம் நீங்க கிளம்புங்க...........” நான்.....

“டிராப்பிக் போலீஸ் கேப்பாங்களே...........” என்றாள் பயம் களைந்த உதட்டு சாயத்துடனும், பயம் களையாத கண்களுடனும்.......

“இன்னும் கொஞ்ச நேரம் நின்னீங்கன்னா........ டிராப்பிக் போலீஸின் அம்மா அப்பா .....கூட....... கேப்பாங்க, நீங்க முதல்ல கிளம்புங்க......” உடனே சிரித்துக் கொண்டு கிளம்பினாள்..........

அவள் என்னை சரியான ஜொல்லு பார்ட்டி என்று நினைத்திருக்க கூடும்....... அது உண்மை தான் என்றாலும், அப்போதைக்கு எவ்வளவு முயற்சித்தாலும்...... அவள் முகத்தைப் பார்த்து கோபம் வரமாட்டுது நான் என்ன செய்ய............

அதுக்குள்ள கூட்டம் கூடி விட்டது......... எல்லோரும் சிட்டாக பறந்துப் போன அந்த மை அழகிப் பெண்ணைப் பற்றியே பேசினார்கள்........ அலங்கோலமாக விழுந்து கிடந்த என் பைக்கை பற்றி ஒரு டாக் கூட பேசவில்லை........... லேடீஸ் டாக்கும் அதில் சேர்த்தி தான்..............

தூக்க ஆளில்லாமல் நானே என் டாகை..........சாரி என் பைக்கை தூக்கி சோகத்துடன் உதைத்தேன், அதன் கிளப்பானை..........அதங்க ஸ்டாட்டரை........

“தீர்த்தகரையினிலே தெற்கு மூளையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கினோடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடிக் கண்ணம்மா மார்பு துடிக்குதடி”

உண்மையிலே என் மனம் துடித்தது.............. மவனே போன் செய்யும் அந்த நாயை சாவடித்து விட வேண்டும் என்று........... போனை அட்டன் செய்தேன்.....

“டேய் ............தா சோறு தின்றியா இல்லா.,,,,,,வேறு எதாவது தின்றியா டா” என்றேன்.

அவனுக்கு டிராப்பிக் சத்தத்தில் சரியாக கேட்டு இருக்காது என்று நினைக்கிறேன்..........

“மச்சி நான் சாப்பாடு சொல்லலைடா, சைடு டிஷ் மட்டும் தான் சொல்லி இருக்கேன்.......” என்றான்.

“ஹலோலோலோலோ”

“ஹலோ”

“ஹலோலோலோலோ”

“ஹலோ” அவன் பேசியது எதுவும் எனக்கு கேட்கவில்லை.............

போனை கட் செய்தேன்......... சில பல கெட்ட வார்த்தைகளில் அவனை திட்டினேன். அவன் சொன்ன இடத்திற்கு சென்றேன். இதுவரை பல பார்களுக்கு சென்று இருக்கிறேன், ஆனால் டாஸ்மார்க் பாருக்கு செல்வது இதுதான் முதல் முறை.......

நரகத்தில் மறு உருவம் என்றால் அது அரசு மதுபான கடை தான்............ ஜெயின் அரசு..........அதில் வரும் பாதி சரக்கு.....ஜெயின் பாதி சசிகலாவின் கம்பெனியின் சரக்கு.... மீதி ஜெயின் ஆசி பெற்ற விஜய்மால்யாவின் சரக்கு............மீதி பாண்டிச்சேரி தரகர் மூலமாக வரும் பிரான்ஸ் நாட்டு சரக்கு.......அதிலும் சசிகலாவின் கை ஓங்கி இருக்கிறது..........இதில் நான் எம்மாத்திரம்.......... அல்லது இந்த சிபாரிசு நிறைந்த உலகத்தில் மன்மோகன் சிங் எம்மாத்திரம்........ அல்லது பிரதீபா பாட்டீல் எம்மாத்திரிம்............

அல்லது இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் இந்தியா போல, பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் அமெரிக்க அதிபர் புஷ் எம்மாத்திரம்..................... இலங்கை மக்கள் இந்தியாவை குறை சொல்வது போல்...... இந்திய மக்கள் பாகிஸ்தானை குறை சொல்வது போல்....... பாகிஸ்தானை உலக மக்கள் குறை சொல்வது போல்.........

உலக மக்களின் அஜாக்கிரதையால் தான் சுற்றுச்சூழலே நாசமாகிக் கொண்டு இருக்கிறது என்று அமெரிக்கா சொல்வது போல்........... டாஸ்மார்க் கேவலமாக இருப்பதற்கு ஜூப்பிட்டர் கிரகம் தான் காரணமாக இருக்குமோ......... நான் நண்பர்களிடத்தில் வேறு வழியில்லாமல் தங்கினேன்.

சொன்ன இடத்தில் போய் அமர்ந்தேன்....... தேன், மல்லிகைப்பூ, கருவாடு, அழுகிய மாம்பழம், வியர்வை வாசம், தொய்க்காமல் விட்ட ஊரவைத்த சலவைத்துணி ஆகியவற்றின் வாசனையை உடனடியாக நுகர்ந்தால் எப்படி இருக்கும்..........

நினைக்க வேண்டாம்........ஒரு நிமிடத்திற்கு மேல் வாந்தி எடுக்காமல் என்னால் இருக்க முடியவில்லை............

“டேய் முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு இல்லை, உன் சாவுக்கு நான் காரணமாகி விடுவேன்” என்றேன் போதையில்.........

“மச்சி நல்ல சரக்கு மச்சி”

“டேய் என்னடா factory க்கா வந்து இருக்கோம், சாவடிச்சிடுவேன்.......... முதல்ல இந்த இடத்தை விட்டு கிளம்பு......”

“இல்ல மச்சி இதுக்கு மேல இந்த இடத்தை விட்டு போக மனசில்ல டா,

“சாவடிச்சிடுவேன், பொணத்தை எரிக்கிற இடம் மாதிரி நாத்தம் அடிக்குதுடா, இருக்க முடியலா......”

“என்னாலையும் இருக்க முடியலை........ வேறு வழியில்லைடா.......”

“ஏன்னடா பரதேசி............. எத்தனை இடம் இருக்கு, ஏன் உடம்பு உனக்கு வளையாதோ.........”

சிறிது நேரம் இடைவேளி விட்டு அவன் சொன்னான்.........

“உடம்புக்கு இல்ல மச்சி மனசுக்கு தான்”

“டேய் என்னடா சினிமா டைலாக்கு எல்லாம் பேசற, தெய்வமகள் படம் எதாவது பார்த்தியா (நான் பார்த்து விட்டேன்)......”

“என் கல்யாணம் நடக்காது மச்சி”
....
.
.
.
.
.
.
“நான் இதை எதிர்பார்க்கவில்லை........................ "ஏண்டா மச்சி, உன் கல்யாண ட்ரீட்டுனு தானே வந்தேன் நான்"”

“.................” சிறிது நேரம் கழித்து........

“அவ வேறு ஒருத்தனை லவ் பண்றாலாம்”

“அடிப்பாவி, சரி அதுக்கு, கல்யாணத்தை நிறுத்த சொல்றாளா...”

“இல்லடா, வேறு யாருகிட்டயும் சொல்ல வேண்டாம்னு சொல்றா”

“இந்த மயிருக்கு யாரையும் கல்யாணப் பண்ணிக்காமல் இருக்கலாம் இல்லையா”

அவன் பதில் சொல்லவில்லை.......... சரக்கை வெறித்தனமாக அடித்தான்........

நானும் வெ.......றி.....த்தன.....மாக.................அடித்தேன்....நானும் எதுவும் பேசவில்லை...... அவனும் பேசவில்லை........ சிறிது நேரம் கழித்து அவன் பேச ஆரம்பித்தான்........

“நீ எப்படிடா உன் காதலி செய்த துரோகத்தை தாக்கிட்ட”

“மாமூ அவ துரோகம் செய்யலடா, நான் தான் துரோகம் செய்துட்டேன், ஒருத்திக்கு இல்ல, இரண்டு பேருக்கு டா............... நான் பல பேரை விரும்பி இருக்கேன், ஆனா இரண்டு பேர காதலிச்சேன் டா, அதுவே துரோக்கம் தானடா.....”

“ஓரே நேரத்திலாயாடா,,,,,,,,,,,,,, மச்சி”

“இல்லடா.................ஒண்ணு காலேஜ் ஆரம்பிக்கும் போது, இன்னோன்று காலேஜ் முடியும் போது டா மச்சி, இரண்டு பேரையும் நான் தான் ஏமாத்திட்டேன் டா”

“ஏண்டா” அவனின் தலை தொங்கிப் போச்சு............

“தெரியலை டா, வயசுக்கோளாறா இருக்கலாம்”

“நானும் ஏமாத்திட்டேன் டா, அவளை”

“யாரை டா, பழைய காதலை கல்யாணம் பண்ணிக் போற பொண்ணுக்கிட்ட சொல்றது தான் தப்பு............ சோ பயப்படாதே..அவ பேரு என்ன..”

“இப்ப பேரு ஞாபகம் இல்லை அவளை”

“சரி உட்டு தொல கழுதையை, உனக்கு தான் கல்யாணம் ஆக போவுதே”

“நடக்காது மச்சி”

“ஏன்னது டா”

“கல்யாணம் நடக்காது”

“அதான் ஏண்டா”

“மச்சி நான் இப்ப தாண்டா எல்லா உண்மையையும் பொண்ணு கிட்ட சொன்னேன்......”

“போடாங்கோ..... உங்க மம்மி.......”

EVERY ACTION HAS, EQUAL AND OPPOSITE REACTION.

மதி
19-07-2011, 02:38 AM
நிறைய தப்பு பண்ணிருக்க...

1. அழகான ஃபிகர்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் ரெண்டா இருந்த காதல் தோல்விய மூணாக்கியிருக்க முயற்சி பண்ணிருக்கலாம்.. டூம் போயிருக்கு.. இது கூட நடக்கலேன்னா எப்படி?

2. நல்ல பாருக்கு கூட்டிட்டு போகாம டாஸ்மாக் பாருக்கு கூட்டிட்டு போய் ட்ரீட் குடுக்கற நண்பர்களோட சகவாசம் வச்சிக்கிட்டது.

3. அனுபவஸ்தன் நீ.. காதல் சம்பந்தப்பட்ட விஷயங்கள.. எதை சொல்லணும்.. எதை சொல்லக்கூடாதுன்னு உன் நண்பர்களுக்கு வகுப்பு எடுக்காதது..

4. இறுதியா நீ சொல்ல வர்ற விஷயம்? எனக்கு பிரம்மமுகூர்த்தத்தில் தோணியதை சொல்றேன்.. பின்ன காலையில நாலு மணிக்கு எந்திருச்சி படிச்சா... "பொண்ணுக்கு தான் லவ் பண்ற மேட்டர் சர்வசாதாரணம். பெரிய மனசு பண்ணி அதை புருசனா வரப்போறவன்கிட்ட நல்ல புள்ள மாதிரி சொல்லிடுவாங்க. தற்சமயம் லவ் பண்ணிட்டு இருந்தாலும். ஆனா அதே சமயம் தனக்கு கணவனா வரப்போறவன் ஒளறினானா தாங்க மாட்டாங்க.. அது லவ்ஃபெயிலியரா இருந்தா கூட..." கரீக்டா...??? உன் பாடு கஷ்டம்டா... தெரியாம கூட உளறிடாத... அந்த லிப்ஸ்டிக் போட்டிருந்த பொண்ணுக்கிட்ட பழைய கதையெல்லாம்..

ஆல் த பெஸ்ட் மச்சி...!!

Every action has equal and opposite reaction...

இந்த மாதிரி பதிவு போட்டா இப்படியெல்லாம் கூட மொக்கையான பின்னூட்டம் வரும்..;););):eek::eek::eek:

ஆதவா
19-07-2011, 04:51 AM
“டேய் மம்மி, பைக் ஓட்டறீயா இல்ல பிளைட் ஓட்றீயா, கெஸ்டுக்கு பிறந்தவனே, அறிவு இருக்கா உனக்கு, மம்மி................ கண்ணு தெரியலைன்னா எதுக்குடா வண்டியை ஓட்டிறீங்க, யுவர் மதர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....” என்று கீழே விழுந்த டூமை நோக்கி ஓடினேன்.


இதைப் படித்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியவில்லை...
அற்புதம் அற்புதம்!!

உங்களுக்கும் நியூட்டனுக்கும் அப்படியொரு ராசி!!

Nivas.T
19-07-2011, 07:31 AM
போனால் போகட்டும் போடா (டூம சொன்னேன் பங்காளி ):D

மிக அருமை

த.ஜார்ஜ்
19-07-2011, 10:50 AM
There was only one action. Whatever happening now is just reaction and reaction to those reactions.. :D:D:D:D


இப்படியெல்லாம் ரொம்ப தெளிவா எழுத உங்களால மட்டும்தான் முடியும் மதி. [புல்லரிக்குது.]:lachen001:

மதி
19-07-2011, 10:54 AM
இப்படியெல்லாம் ரொம்ப தெளிவா எழுத உங்களால மட்டும்தான் முடியும் மதி. [புல்லரிக்குது.]:lachen001:

:):):):)

அட.. நானும் விஞ்ஞானி தான்.. நம்புங்க.. நம்புங்க.. நம்புங்க...!!:icon_b: