PDA

View Full Version : கொசுறு..



Nivas.T
16-07-2011, 08:09 AM
அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????:confused:

Nivas.T
16-07-2011, 08:10 AM
நான் மேகம்

நீ பூமி

என்றால் பசுமை?

Nivas.T
16-07-2011, 08:13 AM
உனக்கு

காலை
மதியம்
இரவு

மூன்றுவேளையும் உணவு

என் உதடுகள்தானா?

Nivas.T
16-07-2011, 08:26 AM
நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்

Nivas.T
16-07-2011, 08:29 AM
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி :frown:

Nivas.T
16-07-2011, 08:34 AM
பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும் :D

Nivas.T
16-07-2011, 08:35 AM
பேய் என்றால் ஆண்
பிசாசு என்றால் பெண்

அப்படியென்றால் அவர்கள்?:confused:

Nivas.T
16-07-2011, 08:39 AM
வண்ணத் தொலைக்காட்சி என்றால்

கருப்பு வெள்ளை என்பது என்ன ?:confused:

பூமகள்
16-07-2011, 02:34 PM
கொசுறு விகுதி..
அதன் கார(ண)ம் மிகுதி..

தொடருங்கள் நிவாஸ்..

:)

Nivas.T
16-07-2011, 02:48 PM
கொசுறு விகுதி..
அதன் கார(ண)ம் மிகுதி..

தொடருங்கள் நிவாஸ்..

:)

மிக்க நன்றி பூமகள்

Nivas.T
16-07-2011, 02:50 PM
நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்" :frown:

Nivas.T
16-07-2011, 02:53 PM
விஸ்கி
பிராந்தி
ரம்
ஜின்
ஒயின்
......
......
......

இவையெதுவும் ஜெயிப்பதில்லை
என் காதலியின் முத்தத்தை :D

அமரன்
16-07-2011, 03:20 PM
அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????:confused:

ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கத்தான்..

Nivas.T
16-07-2011, 03:22 PM
ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கத்தான்..

:lachen001:

Nivas.T
16-07-2011, 03:23 PM
நட்பு ஒரு வட்டம்

தொடக்கமும் தெரியாது
முடிவும் கிடையாது

Nivas.T
16-07-2011, 03:26 PM
ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம் ;)

Nivas.T
16-07-2011, 03:29 PM
ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில் :frown:

த.ஜார்ஜ்
16-07-2011, 04:47 PM
ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில் :frown:

இரண்டு இடத்துக்கும் வரமுடியாதுய்யா. ஒரே இடமா பாருங்க.

innamburan
16-07-2011, 05:50 PM
ஜார்ஜ்! பாயிண்ட் மேட்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-07-2011, 07:27 PM
ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில் :frown:

என்னை ரசிக்க வைத்த கவிதை ...

Ravee
16-07-2011, 10:31 PM
அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????:confused:

குளிச்சுட்டு வாங்க பாஸ் ..... :lachen001:


நான் மேகம்

நீ பூமி

என்றால் பசுமை?

நிவாஸ் மானாவாரி விளைச்சலை காட்டி காட்டி தான் உலகம் இப்படி பெருத்து போய் இருக்கே ... அடங்குங்க பாஸ் ... :liebe028: ... :linie009:



உனக்கு

காலை
மதியம்
இரவு

மூன்றுவேளையும் உணவு

என் உதடுகள்தானா?

இதுக்குத்தான் சொல்லுறது கொடுத்து சாப்பிடனும்ன்னு ... :shutup::icon_tongue: .....இப்ப பாருங்க கடிச்சு வச்சுடாங்க ... :lachen001:




நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்

பையில் இருக்கும் பணம் கரைந்ததோடு ....

அருகில் இருந்த இதயமும் கரைந்ததே உன்னால் :icon_smokeing:




ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி :frown:

சின்னதாக கண்ணாடி பதித்த இரும்புக்கதவு எங்களுக்கு -

இப்படிக்கு

கனிமொழி, ராஜா ...........:cool-smiley-016::cool008:



பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும் :D

எது சி.பி.ஐ சோதனையா ??? :icon_nono:



பேய் என்றால் ஆண்
பிசாசு என்றால் பெண்

அப்படியென்றால் அவர்கள்?:confused:


குட்டி சாத்தான்கள்:icon_rollout::icon_rollout::icon_rollout:


வண்ணத் தொலைக்காட்சி என்றால்

கருப்பு வெள்ளை என்பது என்ன ?:confused:

ஒன்று இருப்பது ...மற்றது இல்லாதது :schnelluebersicht_k



நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்" :frown:

நான் அடிக்கடி சொல்லும் பொய் - ஏய் நீ ரொம்ப அழகா இருக்க !!! :D



விஸ்கி
பிராந்தி
ரம்
ஜின்
ஒயின்
......
......
......

இவையெதுவும் ஜெயிப்பதில்லை
என் காதலியின் முத்தத்தை :D


நாட்பட்ட மதுவுக்கு மதிப்பு அதிகம் என்றார்கள் ..... காதலி விசயத்தில் எப்படி ....? :violent-smiley-034::wub:




நட்பு ஒரு வட்டம்

தொடக்கமும் தெரியாது
முடிவும் கிடையாது

வட்டங்கள் வளர்வதில்லை .... நேர்கோடுகளே மேல் :icon_03:


ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில் :frown:

எனக்கு மதுரையில் - சொல்லவே இல்லை ....விருந்து எத்தனை நாள் ??? .... :wuerg019:.....:icon_drunk: .... :lachen001:




ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம் ;)

எல்லாம் ஜானகி அம்மாவின் கை வண்ணம் .... :lachen001:

அல்லிராணி
17-07-2011, 01:21 AM
அருவி நீர்ப்போல் உன்னருகில் வருவது காதலுக்காக

ஒரு துருவ காந்தம்போல் நீ விலகிபோவது எதற்காக????:confused:

அருவி நீர்?
யூ மீன் ஜொள்ளு?
ஒரு துருவ காந்தம்?
யூ மீன் யூ மீன் (அமரரால் சென்ஸார் செய்யப்பட்டது)

அல்லிராணி
17-07-2011, 01:26 AM
நான் மேகம்

நீ பூமி

என்றால் பசுமை?

உன்னைக் காய்ச்சி எடுத்ததில்
உய(யி)ரே போய்
ஆவியாய் அலைந்துமா
இன்னும் விடுகிறாய்
ஜொள்ளு?

பசுமை வேறொணுமில்லை
பசு போட்ட மைதான்...
கொஞ்சம் துடைப்பத்தில் தோய்த்து
ஓங்கி வச்சிருக்கேன்...
நீ வருவாயென

அல்லிராணி
17-07-2011, 01:30 AM
உனக்கு

காலை
மதியம்
இரவு

மூன்றுவேளையும் உணவு

என் உதடுகள்தானா?

மத்த எடமெல்லாம்
தோல் தடிச்சி
கடிக்க முடியாம இருக்கே

இப்படிக்கு
கொசு!:lachen001:

அல்லிராணி
17-07-2011, 01:32 AM
நெருப்பையும் உறிஞ்சும்
நீரையும் உறிஞ்சும்
உயிரையும் உறிஞ்சும்

சிகரெட்

சிகரெட்
சீக்ரெட்
கரெக்ட்

கீதம்
17-07-2011, 01:39 AM
உன்னைக் காய்ச்சி எடுத்ததில்
உய(யி)ரே போய்
ஆவியாய் அலைந்துமா
இன்னும் விடுகிறாய்
ஜொள்ளு?

பசுமை வேறொணுமில்லை
பசு போட்ட மைதான்...
கொஞ்சம் துடைப்பத்தில் தோய்த்து
ஓங்கி வச்சிருக்கேன்...
நீ வருவாயென

கொஞ்சமாய் நூல்விட்டு
பறக்கவிட்டார் கொசுறுகளை!
அஞ்சாத அருச்சுனரை
அஞ்சவைத்த அல்லிராணி
கொஞ்சக் காத்திருக்கிறாள்
வெஞ்சாமர விசிறியோடு!
இனியும் கொசுறுகளில்
தட்டுமா பிசிறு?

அல்லிராணி
17-07-2011, 01:45 AM
பாதளம் வரை வேண்டாம்
என் வீட்டு பீரோ வரை
போதும் :D

பாய்ந்து என்ன
பிரயோசனம்
சாவி யார் கையில்?


பேய் என்றால் ஆண்
பிசாசு என்றால் பெண்

அப்படியென்றால் அவர்கள்?:confused:

ஒருத்தருக்கொருத்தர்
உயிரையே கொடுத்து
காதலிச்சவங்க!!!


வண்ணத் தொலைக்காட்சி என்றால்

கருப்பு வெள்ளை என்பது என்ன ?:confused:

வெள்ளை வண்ணங்களின் சங்கமம்
கறுப்பு வண்ணங்களின் வறுமை
அவை வண்ணங்களின் விளைவுகள்..

அதாவது

வெள்ளையில் கொஞ்சம்
கறுப்பில் மிச்சம்.


நான் அடிக்கடி
பயன்படுத்தும் பொய்

"நான் நலம்" :frown:

ஏன் அதுக்கு மேல பேச விட மாட்டங்கறாங்களா?


ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
ஒன்று இரண்டு மூன்று நன்கு ஐந்து ஆறு
..........................................
.......................

இப்படிக்கு கைதி :frown:


எண்ணு வது கம்பி
இடம் புழல்
குற்றம் சாதாரணத் திருட்டு

எண்ணுவது பணம்
இடம் பாலு ஜூவல்லர்ஸ்
குற்றம் இதயத் திருட்டு!!!

அல்லிராணி
17-07-2011, 01:52 AM
விஸ்கி
பிராந்தி
ரம்
ஜின்
ஒயின்
......
......
......

இவையெதுவும் ஜெயிப்பதில்லை
என் காதலியின் முத்தத்தை :D

முத்தம்
கன்னத்தில் போடப்படும் உரம்

அமோகமாய் வளரும்
தாடி!!!

சந்தேகமிருந்தால்
இங்கே படிக்கவும்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6294

அல்லிராணி
17-07-2011, 01:59 AM
நட்பு ஒரு வட்டம்

தொடக்கமும் தெரியாது
முடிவும் கிடையாது

அதான் நண்பர்கள் சேர்ந்தா
(ஊர்) சுத்தக் கிளம்பிடறீங்களோ?


தொடங்கிய இடத்திலேயே
முடிந்து போவதும்
வட்டம் தான்

அவற்றிற்கு
புள்ளிகள் என்று பெயர்
கரும்புள்ளிகள்..:wuerg019:

அல்லிராணி
17-07-2011, 02:02 AM
ரசம் மங்கிய கண்ணாடியிலும்
அழகாய் தெரிகிறது உன் முகம் ;)

ஆமாம்
மூக்கிலிருந்த
மூக்குத்தியைக் காணோம்

அடகு வச்சுக்
குடிச்சிட்டியே
பாவி!

அல்லிராணி
17-07-2011, 02:07 AM
ஜனவரி மாதம்
எனக்கும் அவளுக்கும் திருமணம்

எனக்கு மதுரையில்
அவளுக்கு சென்னையில் :frown:

பெண்கள்
ஆடம்பர வாழ்க்கை நோக்கி
நகரத்தின் பக்கம்
நகருகிறார்கள்

ஆண்கள்
அடங்கி வாழும்
பெண்ணுக்காக
கிராமத்தின் பக்கம்
கிளம்புகிறார்கள்

அவர்களின் பேருந்துகள்
சந்திந்த பொழுது


பஸ் பதினைஞ்சு நிமிஷம் நிக்கும்
டீ காஃபி டிஃபன் சாப்பிடறவங்க
சாப்பிட்டுக்கலாம்.


அநியாய விலை

கல்யாணச் சாப்பாடும்
மொய்யும்தான்!

Nivas.T
17-07-2011, 06:31 AM
இந்தியாவும் சீனாவும்
உலகில் தவறுகள் அதிகம் நடக்குமிடம் :D

Nivas.T
17-07-2011, 06:33 AM
கனச்சதுரமாக இருந்தாலும்
கனச்செவ்வகமாக இருந்தாலும்
கனஉருளையாக இருந்தாலும்

அது குண்டுதான்
வெடிகுண்டு கலாச்சாரத்தில் :sprachlos020:

Nivas.T
17-07-2011, 06:43 AM
ரசித்து பின்னூட்டமிட்ட
அமரன், பூமகள், ஜார்ஜ், ஐயா, ஜெய், கீதம், ரவி அண்ணா, அல்லிராணி

அனைவருக்கும் நன்றி :)

Nivas.T
18-07-2011, 07:32 AM
ஆசைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல்
அரங்கேற்றிக்கொள்ளும் தருணம்
கனவு காணும் தருணம் மட்டுமே :)

Nivas.T
18-07-2011, 07:37 AM
இன்று முர்ச்செடிகளாய் என்னுள்
அன்று நீ விதைத்துபோன
காதல் நினைவு விதைகள் :frown:

Nivas.T
18-07-2011, 07:44 AM
நான் இழக்கும் தருணத்தை
நொடித்துக்காட்டும் உண்மை இயந்திரம்
இயங்கிக்கொண்டிருக்கும் என் கடிகாரம்

Nivas.T
18-07-2011, 07:55 AM
அவள் குனிந்தபொழுது நான் திரும்பிக்கொண்டேன்
என்னை தவறாய் நினைத்திருப்பளோ? :confused:

Ravee
18-07-2011, 12:34 PM
இந்தியாவும் சீனாவும்
உலகில் தவறுகள் அதிகம் நடக்குமிடம் :D


பாதுகாப்பு வளையங்களை மீறி உண்மைகள் கசிவதில்லை பல நாடுகளில்
விக்கி லீக்ஸ் கூறும் உண்மைகளை ஒரு நாள் ... :lachen001:

Ravee
18-07-2011, 12:39 PM
ஆசைகள் அனைத்தும் அச்சுப் பிசகாமல்
அரங்கேற்றிக்கொள்ளும் தருணம்
கனவு காணும் தருணம் மட்டுமே :)


பேய் கனவும் பிசாசு கனவும் எங்கிருந்து வந்தது
காலையில் கண்ணாடியில் விழித்த பலனா ??? :eek:

Ravee
18-07-2011, 12:43 PM
அவள் குனிந்தபொழுது நான் திரும்பிக்கொண்டேன்
என்னை தவறாய் நினைத்திருப்பளோ? :confused:


ஆமாம் நினைத்தாள் ...........:rolleyes:
அவனா நீஈஈஈஈஈஈ ??? .............. :lachen001:

Nivas.T
18-07-2011, 01:57 PM
பாதுகாப்பு வளையங்களை மீறி உண்மைகள் கசிவதில்லை பல நாடுகளில்
விக்கி லீக்ஸ் கூறும் உண்மைகளை ஒரு நாள் ... :lachen001:



பேய் கனவும் பிசாசு கனவும் எங்கிருந்து வந்தது
காலையில் கண்ணாடியில் விழித்த பலனா ??? :eek:



ஆமாம் நினைத்தாள் ...........:rolleyes:
அவனா நீஈஈஈஈஈஈ ??? .............. :lachen001:

:lachen001:

Nivas.T
18-07-2011, 01:59 PM
முற்றுப்பெறாத தேவைகள்
தேவைகளின் தேடல்கள்
கலந்த பிணைப்பின் தொகுப்பே
வாழ்க்கை :eek:

Nivas.T
18-07-2011, 02:02 PM
பொய் ஏற்ப்புடையது கவிதையில்
பொய் என்று தெரிந்தும் ஏற்றுக்கொள்வது காதலில் :D

Nivas.T
21-07-2011, 06:46 AM
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது கடைசி சிகரட்டை

Nivas.T
21-07-2011, 06:47 AM
திறமைக்கு பணம் தரப்பட்டது அன்று
பணத்திற்காக திறமை வளர்க்கப் படுகிறது இன்று :frown::confused:

பூமகள்
21-07-2011, 07:02 AM
அவள் குனிந்தபொழுது நான் திரும்பிக்கொண்டேன்
என்னை தவறாய் நினைத்திருப்பாளோ? :confused:

நிச்சயம் இருக்காது... :rolleyes:

அதுவரை கண்கள் இணைந்தன.. - திரும்பியபின்
மனம் இணைந்தது.. :icon_b::icon_b:

பூமகள்
21-07-2011, 07:06 AM
இன்று முர்ச்செடிகளாய் என்னுள்
அன்று நீ விதைத்துபோன
காதல் நினைவு விதைகள் :frown:

முட்செடி அருகே
முல்லைப்பூச்செடி வையுங்கள்..

மணம் மனம் குளிர்விக்கும்..!! - பின்
மங்கை தினம் குடியிருக்கும்..!! :)

பூமகள்
21-07-2011, 07:10 AM
தினமும் தேடிக்கொண்டிருக்கிறேன்
எனது கடைசி சிகரட்டை

தேடாமல் விடுங்கள்..
கடைசியே காணாமல் போகும்..!! :rolleyes:

கெட்டதெனில் சட்டென மற..!!:wuerg019:

Nivas.T
21-07-2011, 07:33 AM
மிக்க நன்றி பூமகள் :)

Nivas.T
21-07-2011, 09:04 AM
பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம் :)

Nivas.T
21-07-2011, 09:09 AM
கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்

Nivas.T
21-07-2011, 09:12 AM
அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்

அக்னி
21-07-2011, 10:18 AM
நிவாஸின் கொசுறுகளும்,
அக்கொசுறுகளுக்கு
ரவீ, அல்லிராணி, பூமகள் ஆகியோரின்
விசிறல்களும்
:icon_b: :icon_b: :icon_b: :icon_b:


பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம் :)
பாவம் இறைவன்...


கடவுளும் மிருகமும் கலந்திருப்பதை விட
மிருகமாய் மட்டுமே இருப்பது மேல்
அப்போ feமேல்... :confused:


அடிமைகளை விட
அனாதைகள் சிறந்தவர்கள்
தன்னை இழந்தவன் அடிமை.
மற்றோரை இழந்தவன் அனாதை.
இல்லாமலாகக்கூடிய இழப்புக்கள் இவை.
இல்லாமற்போவதே பெரும் சிறப்பு.
:icon_b:

என்சார்பில் ஒரு கொசுறு:
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்,
ஏழைகளை உருவாக்குங்கள்.., சிரிக்கவைக்க...

Nivas.T
21-07-2011, 10:23 AM
என்சார்பில் ஒரு கொசுறு:
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணுங்கள்,
ஏழைகளை உருவாக்குங்கள்.., சிரிக்கவைக்க...

:aktion033::icon_03::icon_clap::shutup:

மிக்க நன்றி அக்னி :)

நாஞ்சில் த.க.ஜெய்
21-07-2011, 11:22 AM
அடிமைகள் :

உறவுகள் இருந்தும்
அனாதையாகி போனவர்கள் ...

அனாதைகள் :

உறவுகளை தேடி
அடிமையாகி போனவர்கள்

படைப்புகள் அருமை தோழர் நிவாஸ்.T அவர்களே ........

Nivas.T
21-07-2011, 11:40 AM
அழகான கவிதைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ஜெய்

Nivas.T
06-05-2013, 09:42 AM
வக்கற்ற தன்மையின் பொய்முகம் பொறாமை

A Thainis
06-05-2013, 11:01 AM
அடிமைகள், அனாதைகள் கவி அமைப்பு அருமை, உள்ளதை உள்ளத்தை உலுக்கி சொன்னது, வாழ்த்துக்கள் நிவாஸ்.

Nivas.T
07-05-2013, 03:04 AM
அடிமைகள், அனாதைகள் கவி அமைப்பு அருமை, உள்ளதை உள்ளத்தை உலுக்கி சொன்னது, வாழ்த்துக்கள் நிவாஸ்.

கருத்துரைப்பிர்க்கு மிக்க நன்றி தைனிஸ்

arun karthik
12-05-2013, 05:59 PM
அட்டகாசம்....

கும்பகோணத்துப்பிள்ளை
12-05-2013, 06:27 PM
பாவம் மட்டுமே செய்யுங்கள்
அப்பொழுதும் இறைவனை அடையலாம்

பாவம் செய்கிறவன் இறுதியில் இறைவனை அடைகிறானோ இல்லையோ
இருக்கும்வரை இப்பரத்தில் எல்லா சுகத்தையும் அடைந்துவிடுகிறான்! -- நல்லவனாய்யிருக்கும் ஒரு கஷ்டஜீவன்!


அடிமைகள் :

உறவுகள் இருந்தும்
அனாதையாகி போனவர்கள் ...

அனாதைகள் :

உறவுகளை தேடி
அடிமையாகி போனவர்கள்



உறவுகள் இருந்தும்
அனாதையாகி போனவர்கள் ... வெளிநாட்டிலிருக்கும் நாங்கள்!

உறவுகளை தேடி
அடிமையாகி போனவர்கள் ... வெளிநாட்டிலிருந்து திரும்பிவந்தவர்கள்!