PDA

View Full Version : உனக்கே இல்லாமல் போகலாம்

ஆதி
15-07-2011, 07:51 PM
மரம் வெட்டுதல்களை நிறுத்து
ஒருநாள் உனக்கே இல்லாமல் போகலாம்
ஒரு நிழல்

அமரன்
15-07-2011, 10:24 PM
இந்த வகைக் கவிதைகளை "நிறுத்து"க் கொடுக்கலாம் பொட்டலம் கட்டி..

ஞானப் பிரகாசக் கவிதைகளால் பிரயோசனம் இல்லையோ என்ற ஆதங்கம் எனக்குண்டு ஆதன்..

ஒட்ட வெட்டுபவனை இப்படிக் கொட்டினால் நிழலில் நின்றபடி கிளைகளை வளர வளர வெட்டுபவனை எப்படிக் கொட்டுவது..

கண்மணி
16-07-2011, 02:33 AM
ஏன் அவனே மரமானால் தப்பா ஆதி/ அமரன் அண்ணா..

மரத்தை வெட்டி
நிழல் தந்தான்
விறகுவெட்டி!

கண்மணி
16-07-2011, 02:53 AM
இந்த வகைக் கவிதைகளை "நிறுத்து"க் கொடுக்கலாம் பொட்டலம் கட்டி..

ஞானப் பிரகாசக் கவிதைகளால் பிரயோசனம் இல்லையோ என்ற ஆதங்கம் எனக்குண்டு ஆதன்..

ஒட்ட வெட்டுபவனை இப்படிக் கொட்டினால் நிழலில் நின்றபடி கிளைகளை வளர வளர வெட்டுபவனை எப்படிக் கொட்டுவது..

அவர்கள் இலக்கியத்தில் மனைவி என்று சொல்லப் பட்டு இருக்கிறார்கள் அண்ணா!!!:eek::eek::eek:

நாஞ்சில் த.க.ஜெய்
18-07-2011, 04:41 PM
வளர்ந்து விட்ட வீடுகள்
கனத்தது மரம் வெட்டியின் கோடரி ....
அருமை தோழர் ஆதன் அவர்களே....

muthuvel
27-07-2011, 11:19 AM
ஆண்டு 2022 ,
இந்திய வரைபடத்தில்,
ஆறுகளை காணவில்லை ,
இன்றைய,ஆற்று மணல் திருட்டு ......

இன்று ,நிலவுக்கு அனுப்பியதை,
நாளை நிலத்துக்குள் அனுப்புவான் ,
தண்ணீரை கண்டறிய,
ஆற்று மணல் திருட்டு ........