PDA

View Full Version : உப்பும் சர்க்கரையும்



M.Jagadeesan
15-07-2011, 04:40 PM
மோர்சாதம் உண்ணுகையில் கணவன் மனைவியிடம்
"ஊர்செல்கிறேன் வருவதற்கு நாளாகும்" என்றான்

அதைக்கேட்டதும்
விழிநீர் பெருக்கி அழுதாள் மனைவி
வழியும் நீரைத் துடைத்தான் கணவன்

"கண்ணே! அழாதே! கவலையை விட்டுவிடு
எண்ணிப் பத்துநாளில் வருவேன்" என்றான்.

அப்போது அவள்
"உண்ணும் சோற்றுக்கு உப்பிட மறந்துவிட்டேன்.
மண்ணை உண்பதுபோல் உண்டு முடித்தீரோ?"
என்று கேட்டாள்.

" கண்ணே நீ!
விழிநீர் பெருக்கி அழுதபோது சோற்றில்
விழுந்தது அம்மா இரண்டொரு துளிகள்
மூடமறந்து கண்கள் அழுதகண்ணீர் நீ
போடமறந்த உப்பைப் போட்டு விட்டதம்மா!"
என்றான்.

மாலை மணி நான்காயிற்று
மனைவியிடம் கணவன் கேட்டான்.

"விடைபெற்றுக் கொள்கிறேன் கண்ணே நீசெய்த
வடைஇரண்டும் காபியும் கொண்டு வா! என்றான்.

அப்போது கைபேசி கத்தியது.
கத்திய கைபேசியில் கணவன் பேசினான்.

"ஒத்திப்போடு பயணத்தை" என்று
சத்தமிட்டுப் பேசினார் மேலாளர்.

அருகில் நின்றிருந்த
மான்விழியாள் மங்கையவள் காதுகளில்
தேனாகப் பாய்ந்தது இச்செய்தி.
ஆனந்தக் கண்ணீர் கொட்டியது அருவிபோல.

அதைக்கண்ட கணவன்
" ஏன் கண்ணே அழுகிறாய்? பயணம்
ரத்தான பின்னும் முத்தான கண்ணீர் எதற்கு?"
என்றான்.

" அத்தான்! இது அழுகையல்ல ஆனந்தக் கண்ணீர்!
தித்திக்கும் அதிமதுரம் போல் இனிக்கும்"
என்றுரைத்தாள்.

"அப்படியானால் இந்தக்
காபியிலே உன் கண்ணீரைக் கலந்துவிடு!
சர்க்கரை போட மறந்து விட்டாய்" என்றான்.

நாஞ்சில் த.க.ஜெய்
15-07-2011, 04:58 PM
இல்லாளின் சோகம் மகிழ்வினை சுருங்க கூறும் அழகான கவிதை கதை அருமை அருமை ...

பென்ஸ்
15-07-2011, 05:05 PM
ரசத்தில் நவரசம்......
(நவ)ரசம் ..
கண்ணே!
உன் கைபட்டு
கரைந்ததில்
ஆனந்தமாய்
கண்ணீர் விட்டதோ புளி..
...
...
...
...
ரசத்தில்
உப்பு கொஞ்சம் தூக்கல்தான்
- தாமரை


இது நண்பர் தாமரை மன்றத்தில் பதித்த முதல் கவிதைகளில் ஒன்று....

குடும்ப வாழ்க்கையை
கரைத்து குடித்தவர்களுக்கு
உப்பும் இனிப்பும்
வெறும் சுவையல்ல....


சரிதானே ஜகதீசன்...:D

M.Jagadeesan
16-07-2011, 06:13 AM
பாராட்டுக்கு நன்றி பென்ஸ்!

innamburan
16-07-2011, 06:31 AM
ஜாலி தான் போங்க!

M.Jagadeesan
16-07-2011, 06:44 AM
ஜாலி தான் போங்க!


நன்றி!இன்னம்புரன்.

Nivas.T
16-07-2011, 08:18 AM
நமக்கு இன்னும் வைக்கவில்லை

கவிதை மிக அழகு ஐயா

M.Jagadeesan
16-07-2011, 08:44 AM
நன்றி நிவாஸ்!

கீதம்
21-07-2011, 11:41 PM
சமையலில் மனமொன்றி ஈடுபடவியலா செயல்களின் மூலம் கணவனின் பிரிவைத் தாளாத மனைவியின் சோகத்தையும், அவள் வேதனை உணர்ந்து அன்பாய்ச் சுட்டிய கணவனின் அரவணைப்பையும் அழகானக் க(வி)தையாக அரங்கேற்றியுள்ளீர்கள். மிகுந்த பாராட்டுகள் ஐயா.

சான்வி
27-07-2011, 08:11 AM
சின்ன பிரிவும்,
பிரிவின் வழி பரிவும்
பரவி வந்த வரிகள் அருமை.

உணர்வுக் கூட்டின் உன்னதம் உணர்த்திய வரிகள் அழகு.. வெகு அழகு

dellas
02-08-2011, 05:20 PM
அடடா..காதல் கடலில் மூழ்கி, உப்பெடுக்கவும் சர்க்கரை எடுக்கவும் முடியும் என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.
மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.

M.Jagadeesan
03-08-2011, 12:32 AM
பாராட்டுக்கள் நல்கிய கீதம்,சான்வி மற்றும் டெல்லாஸ் ஆகியோருக்கு நன்றி!

பிரேம்
14-09-2011, 11:09 AM
புதுசா கல்யாணம் ஆனவங்க போல..:frown:

கருணை
14-09-2011, 10:16 PM
அழுகை மாறி வந்தால் அப்புறம் விளைவு எப்படி அய்யா இருக்கும் ... :food-smiley-010:

jaffer
10-10-2011, 06:15 AM
அருமையான கவிதை, உறவுகள் பலப்படும் படைப்பாளிக்கு நன்றி

vseenu
10-10-2011, 08:43 AM
ஆக்கியோனின் கற்பனை அழகோ அழகு.பாராட்டுக்கள்