PDA

View Full Version : அம்மாவுக்கு இது தெரிந்துவிடக் கூடாது.த.ஜார்ஜ்
15-07-2011, 04:04 PM
குளம் அம்மம்மான்னு நிறஞ்சு கிடக்கு. நாளைக்குள் மறுகால் பாய்த்துவிடும். பிறகு அருவியாய் கொட்டும் அந்த நீரில் கொட்டமடிக்க பெருங்கூட்டம் வந்துவிடும். பகல் வேளையில் நாலைந்து பேர்தான் குளித்துக் கொண்டிருந்தார்கள். உயர்ந்த கரைகளுக்கு நடுவில் தாழ்வாய் ‘ப’வடிவத்தில் மறுகால் பாய கல்பதிக்கப்பட்ட சமதளம். குளிக்கிற இடம்.

பரந்து விரிந்து கிடக்கிற குளத்தைப் பார்த்தாலே குளிக்க ஆசைவரும். சரி வந்துவிட்டு போகட்டும். நான் மட்டும் போயிருந்திருக்க வேண்டியதுதானே. மகனுக்கு இரண்டோ மூன்றோ வயதாயிருந்தபோது அவனையும் கூட்டிக்கொண்டு போனேன். அந்த வயதிலேயே நீச்சல் கத்துகுடுக்கனும்னு.[சின்ன வயசிலே அவனை சகலகலா மன்னனாக்கிவிடத் துடிக்கும் புது பெற்றோனின் ஆர்வத்துடன்]

பய தண்ணியப் பார்த்ததும் குதிக்க ஆரம்பிச்சான். கழுத்தளவு தண்ணி. குளத்தில் இறங்கி அவனை இரண்டு கைகளில் தூக்கி நீர்பரப்பில் ரெண்டு சுற்று. கையை காலை ‘தத்தக்கா பித்தக்கா’ என்று அடித்தான். தண்ணீர் சிதறி வாய்க்குள் போக.. மூச்சு திணற விக்கினான். கரையில் உட்கார வைத்தேன். படிப்படியாதான் எல்லாத்தையும் படிச்சு குடுக்கணும். சோப்புப் பெட்டியை எடுத்துவைத்துக் கொண்டு விளையாடினான்.

குளத்தில் குளிப்பது அனுபவித்தவர்களுக்குதான் தெரியும். சுகம். அதில் நீச்சலடித்துக் குளிப்பது பரமசுகம். உடம்பு முழுதும் நீருக்குள் விழுந்துகிடக்க உஷ்ணம் மறைந்து குளுமை பரவிவிடும். புத்துணர்ச்சியாகிவிடும்.

அந்த சுகத்தை அனுபவித்து… ஒரு முங்கு போட்டுவிட்டு திரும்பிப் பார்த்தால் கரையில் விளையாடிக் கொண்டிருந்த பயலை காணோம் . பக்னு ஆகிப் போச்சி. செயலிழந்து போனேன் என்று சொல்லப்படுவதை அப்போதுதான் அனுபவித்தேன்.. பக்கத்தில குளிச்சிட்டு நிக்கிற எவனும் பார்க்கவில்லையாம். எங்கே போயிருப்பான்.எழுந்து ஓடிவிட முடிந்தவனா.. இங்கதான் எங்கயோ… பதட்டத்துடன் காலால் தண்ணிக்குள் துழாவ.. பாவி மக்கா.. அங்க தட்டுபட்டான். பொசுக்குன்னு முங்கி சரேல்னு தூக்குனா… எதையோ முழுங்க முடியாம விக்கிற மாதிரி.. விடைச்சி விடச்சி மூச்சு முட்டுறான். நல்லவேளை அப்பதான் மூழ்கினான் போலயிருக்கு.

இந்த விசயம் மட்டும் அவன் அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கணும்… அப்புறம்…. அப்புறம்…

அப்றம் வளந்து அவனாவே நீச்சல் படிச்சிகிட்டான்.

அமரன்
16-07-2011, 11:41 AM
பதற்ற வினாடிகளை அப்படியே எழுத்தாக்கம் செய்திருக்கிறீர்கள்.

வழக்கம் போலவே இழுக்கும் தலைப்பு.

தலைப்பின் அழைப்பை ஏற்று வந்தால் முடிவில் திருப்பம் இல்லாமல் திருப்பம் வைத்து வித்தியாசப்படுத்தி விட்டீர்கள்.

Nivas.T
16-07-2011, 12:54 PM
ஒருமுறை, இருமுறை அல்ல பலமுறை இதுபோல் சிக்கி இருக்கிறேன். நீச்சல் தெரியாமல் ஆழத்தில் இருக்கும்போது அந்த துடிப்பு, போராட்டம் என்னவென்று எனக்கு நன்கு தெரியும். இன்னமும் எனக்கு அந்த அனுபவங்கள் நன்கு நினைவிலிருக்கு

நீச்சல் கற்பதற்கு முன்னாலும், கற்ற பிறகும் இத சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளது. அனால் எப்படியோ பிழைத்துவிட்டேன்.

பூமகள்
16-07-2011, 01:57 PM
இது எனக்கு இரு ஆண்டு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.. இயன்றால் அதை தரப் பார்க்கிறேன்..

ஆனாலும்.. அந்த நிமிட பதட்டம்.. உணர முடியும் என்னாலும்...

நேற்று நடந்த சம்பவம்.. அங்காடி மாளிகையொன்றில் நட்புகளோடு உலாவிக் கொண்டிருக்க.. ஒரு நிமிட பொருள் பார்க்க திரும்பிய என் விழிக்கு என் சின்னப் பூ காலருகில் நின்ற தடம் காணவில்லை..

நட்புகளோடு பதறித் தேட.. கடை ஊழியர் ஒருவர் வழி காட்ட, வெளியே சிட்டாய் பறந்து குடையோடு நடந்து என் அழைப்பு கேட்டு நகராமல் நிற்க.. ஓடிச் சென்று அணைத்துப் பிடித்தேன்.. அந்த சில வினாடிகள் என் இதயம்.. பல லட்சம் துடிப்புகளைத் தன்னுள்ளே சேர்த்திருக்கும்.. சற்று தூரத்தில் தானியங்கிப் படிகள்.. :frown::sprachlos020::sprachlos020:

கவனம்.. கவனம்.. என சதா இருக்கும் நமக்கும் அடி சறுக்கிவிட்டதே என நொந்தது மனம்.. :eek::eek: :frown::frown:

பெற்றோராய் குழந்தையைக் காப்பதென்பது நம் உயிரினும் மேலான ஒன்று.. வாழ்த்துகள் ஜார்ஜ் அண்ணா. நல்ல எழுத்து நடை..

Ravee
16-07-2011, 02:06 PM
ம்ம்ம் எங்க வீட்டு குட்டி முதலில் பதுங்குவாங்க .... அப்புறம் பாய்ந்தால் பதினாறு அடிதான் .... காவிரி முக்கொம்பிலும் , எங்கள் ஊர் கல் கிணற்றிலும் சாவை இருமுறை கண்களின் முன் பார்த்தவன் எனவே எப்போதும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கும் .... அப்போது எல்லாம் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு எங்கேயாவது படியில் இருந்து டைவ் அடிப்பார்கள் ... பிள்ளைகள் விசயத்தில் கொஞ்சம் கஷ்டம்தான் ... நாம் செய்த சேட்டைகள்தானே அவர்களும் செய்வார்கள் ... அதனால் உங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் சமாளிப்பதில் கஷ்டம் இருக்காது.

த.ஜார்ஜ்
16-07-2011, 04:58 PM
பதற்ற வினாடிகளை அப்படியே எழுத்தாக்கம் செய்திருக்கிறீர்கள்.

வழக்கம் போலவே இழுக்கும் தலைப்பு.

தலைப்பின் அழைப்பை ஏற்று வந்தால் முடிவில் திருப்பம் இல்லாமல் திருப்பம் வைத்து வித்தியாசப்படுத்தி விட்டீர்கள்.

வாஙக. அமரன். சந்தித்தபோது அதிகம் பேசிக் கொள்ளும் வாய்ப்பில்லாமலே போய்விட்டது. அதுசரி.. தேன் நிலவுக்கு போயிருக்க வேண்டியவர் இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

த.ஜார்ஜ்
16-07-2011, 05:00 PM
ஒருமுறை, இருமுறை அல்ல பலமுறை இதுபோல் சிக்கி இருக்கிறேன். நீச்சல் தெரியாமல் ஆழத்தில் இருக்கும்போது அந்த துடிப்பு, போராட்டம் என்னவென்று எனக்கு நன்கு தெரியும். இன்னமும் எனக்கு அந்த அனுபவங்கள் நன்கு நினைவிலிருக்கு

நீச்சல் கற்பதற்கு முன்னாலும், கற்ற பிறகும் இத சம்பவங்கள் எனக்கு நடந்துள்ளது. அனால் எப்படியோ பிழைத்துவிட்டேன்.

பிழைத்தது தெரிகிறது. நீச்சல் படித்துக் கொண்டீர்களா..?:lachen001:

த.ஜார்ஜ்
16-07-2011, 05:03 PM
இது எனக்கு இரு ஆண்டு முன்பு நடந்த அந்த சம்பவத்தை நினைவூட்டுகிறது.. இயன்றால் அதை தரப் பார்க்கிறேன்..

ஆனாலும்.. அந்த நிமிட பதட்டம்.. உணர முடியும் என்னாலும்...

நேற்று நடந்த சம்பவம்.. அங்காடி மாளிகையொன்றில் நட்புகளோடு உலாவிக் கொண்டிருக்க.. ஒரு நிமிட பொருள் பார்க்க திரும்பிய என் விழிக்கு என் சின்னப் பூ காலருகில் நின்ற தடம் காணவில்லை..

நட்புகளோடு பதறித் தேட.. கடை ஊழியர் ஒருவர் வழி காட்ட, வெளியே சிட்டாய் பறந்து குடையோடு நடந்து என் அழைப்பு கேட்டு நகராமல் நிற்க.. ஓடிச் சென்று அணைத்துப் பிடித்தேன்.. அந்த சில வினாடிகள் என் இதயம்.. பல லட்சம் துடிப்புகளைத் தன்னுள்ளே சேர்த்திருக்கும்.. சற்று தூரத்தில் தானியங்கிப் படிகள்.. :frown::sprachlos020::sprachlos020:

கவனம்.. கவனம்.. என சதா இருக்கும் நமக்கும் அடி சறுக்கிவிட்டதே என நொந்தது மனம்.. :eek::eek: :frown::frown:

பெற்றோராய் குழந்தையைக் காப்பதென்பது நம் உயிரினும் மேலான ஒன்று.. வாழ்த்துகள் ஜார்ஜ் அண்ணா. நல்ல எழுத்து நடை..

உங்கள் தவிப்பை உணர்ந்து கொள்ள முடிகிறது பூமகள். வாழ்த்துக்கு நன்றி. [முடிந்தால் 'அந்த சம்பவத்தையும்' தர பாருங்கள்.]

த.ஜார்ஜ்
16-07-2011, 05:11 PM
ம்ம்ம் எங்க வீட்டு குட்டி முதலில் பதுங்குவாங்க .... அப்புறம் பாய்ந்தால் பதினாறு அடிதான் .... காவிரி முக்கொம்பிலும் , எங்கள் ஊர் கல் கிணற்றிலும் சாவை இருமுறை கண்களின் முன் பார்த்தவன் எனவே எப்போதும் எச்சரிக்கை மணி அடித்துக்கொண்டே இருக்கும் .... அப்போது எல்லாம் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு எங்கேயாவது படியில் இருந்து டைவ் அடிப்பார்கள் ... பிள்ளைகள் விசயத்தில் கொஞ்சம் கஷ்டம்தான் ... நாம் செய்த சேட்டைகள்தானே அவர்களும் செய்வார்கள் ... அதனால் உங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் சமாளிப்பதில் கஷ்டம் இருக்காது.
சமீபத்தில் இதே குளத்தில் நடந்த மரணமும் எனக்கு நினைவுக்கு வருகிறது ரவி. எங்கள் பகுதியில் கல்லூரிகள் அதிகம். மாணவர்களுக்கு விடுமுறையில் குளத்தில் குளிப்பது கொண்டாட்டம்தான்.
தேர்வுகள் முடிந்ததை கொண்டாட நினைத்த கேரளா மாணவனுக்கு நீச்சல் தெரியாது. ஆனாலும் என்ன. உயரத்திலிருந்து ஒரே குதி.
அப்புறம் அவன் உடலை மட்டும் தான் மேலே எடுக்க முடிந்தது.

innamburan
16-07-2011, 06:01 PM
நான் கூட குளத்தில் தத்தளித்தவன் தான். அந்த போராட்டமும் அறிவேன்.

நாஞ்சில் த.க.ஜெய்
16-07-2011, 07:01 PM
நீச்சல் தெரிந்திருந்தாலும் என்தாயாரின் கண்டிப்பு எங்கும் எவ்விடத்திலும் உண்டு ...இந்த நீச்சல் அனுபவம் கற்றுத்தந்த எனது தாய்மாமா மற்றும் அண்ணன்களின் நீச்சல் நினைவுகளையும் ஒரு முறை ஆழமான பகுதியில் சிக்கி மீண்டு வந்த பழைய நினைவுகளையும் தூண்டுகிறது ..அந்த நிலையில் என் துடிப்பு இன்றும் நினைவில் ..இது நீச்சலை நன்றாக கற்றுகொள்ளவைத்த ஒரு பாடாமாக அமைந்தது என்பதே உண்மை ..அருமையான பதிவு தோழர்..

அமரன்
28-08-2011, 05:16 PM
வாஙக. அமரன். சந்தித்தபோது அதிகம் பேசிக் கொள்ளும் வாய்ப்பில்லாமலே போய்விட்டது. அதுசரி.. தேன் நிலவுக்கு போயிருக்க வேண்டியவர் இங்கே என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்.

அந்தப்படம் எந்த தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கு என்று சொல்லி இருக்கலாம்ணா.

நான் பேசினது கொஞ்சம். நீ என்னை விஞ்சிட்டீங்க. ஆனாலும் உங்கள் பேச்சில் இருந்த ஈழ வாடை உங்கள் பேச்சை நினைவில் வைச்சிருக்க வைக்குது.