PDA

View Full Version : உன்னிடம் என்ன இருக்கிறது ?

ஆதி
15-07-2011, 09:18 AM
பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற* வைத்திட இயலுமா உன்னால் ?

ஒரு மரம் வெட்டப்படுவதை
ஒரு பறவை அல்லது விலங்கு வேட்டையாடப்படுவதை
ஒரு சிசு கொல்லப்படுவதை
ஒரு பெண் அல்லது சிறுமி கற்பழிக்கப்படுவதை
ஒரு குழந்தை அநாதரவாய் அல்லது பிச்சையெடுக்க விடப்படுவதை
ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை
ஒரு நாடு வறுமையால் கொள்ளை தொழில் உற்றதை
ஒரு இனம் கொன்று குவிக்கப்படுவதை
என ஏதேனும் ஒன்று
நிகழ்தலிலிருந்து உன்னால் தடுத்துவிட இயலுமா ?

பிறகு
இவ்வுலகினுக்கு தர அல்லது செய்ய
உன்னிடம் என்ன இருக்கிறது ?

கொஞ்சம் அன்பை தவிர....

ஜானகி
15-07-2011, 09:38 AM
நம்மிடம் இருப்பதை [ அன்பை ] இல்லாதவர்க்குக் கொடுப்பதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை....அள்ளிக் கொடுப்போம்.....பகிர்ந்து மகிழ்வோம்....துயரம் மறப்போம்........

Nivas.T
15-07-2011, 09:39 AM
இதை புரிந்துகொண்டால் தான் உலகில் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடுமே

திருந்தமாட்டான் மனிதன்

மிக அருமையான கவிதை ஆதன்

ஆதவா
15-07-2011, 09:46 AM
ஒன்றுமில்லை! :)

பென்ஸ்
15-07-2011, 10:43 AM
அருமையான கவிதை ஆதன்....

உன்னிடம் இருப்பது அன்பு மட்டும்....

1) மற்றவை எல்லாம் செய்ய முடியாது அதனால்
அன்பை மட்டுமாவது கொடு...
இது ஒரு பார்வை...

2) நீ அன்பை மட்டும் கொடு
மற்றவை எல்லாம் தானாகவே நின்று விடும்
இது நிதர்சன பார்வை....

வாத்தைகளுக்கு எத்தனை பலம் பாருங்கள் ஆதன்...
சரியான இடத்தில் உபயோகிக்கும் போது....

3) ஆணியே புடிங்க வேண்டாம்... இல்லையா..???? :D

அக்னி
15-07-2011, 11:43 AM
நிகழ்தலிற் பெரும்பான்மை மனிதரிடமிருந்து...

இத்தனையும் நிகழாவிடங்கள்
ஆங்காங்கே உண்டு இந்தப் பூமியில்...
அங்கெல்லாம் மனித வாடை இருக்கும்,
உயிர் மூச்சு மட்டும் இருக்காது...

Ravee
15-07-2011, 11:52 AM
எங்களை போன்ற சிறுவர்களுக்கு புரியும் தமிழில் ஆதன் எழுதிய கவிதை அருமை. மையக்கருவை இறுதியில் சரியாக தொட்டுவிட்டார்.... :)

அக்னி
15-07-2011, 12:03 PM
எங்களை போன்ற சிறுவர்களுக்கு புரியும் தமிழில் ஆதன் எழுதிய கவிதை அருமை.
:eek: :sprachlos020:
நம்பீட்டமுங்க... எதுக்கும் அமரன் சென்னைச் சந்திப்பில எடுத்த படங்களைப் பார்த்துட்டு, உறுதிப்படுத்துறேங்க...

செல்வா
15-07-2011, 12:30 PM
அழுத்தமான கவிதை ஒன்று ஆதனிடமிருந்து.
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் காணப்படும் வசீகரம் மற்றும் அதிர்வு இங்கும்.
எல்லா மதங்களும் பேசும் வார்த்தை அன்பு.
அன்பு மட்டும் கொடுத்தால் போதும் என்று வலியுறுத்திய ஆதனுக்கு அன்பு.

நாஞ்சில் த.க.ஜெய்
15-07-2011, 05:35 PM
மரத்து விட்ட மனிதத்தை உயிர்பிக்கும் தோழர் ஆதனின் கவிதை வரிகள்.....

தாமரை
16-07-2011, 05:16 PM
கொடுக்க ஏதேனும் இயலுமா கொஞ்சம் அன்பைத் தவிர..

இதைப் படித்தவுடன் ரூம் போட்டு யோசிக்கலைங்க.. சும்மாத்தான் யோசிச்சேன்.

அன்பு விஷயத்தில் கொடுக்கல் வாங்கலே கிடையாது.. அது கொடுத்து வாங்கக் காசுமல்ல, கடனுமல்ல.. அன்பைச் சிறிதளவு காட்ட மட்டுமே முடியும்.

அன்பைக் கொடுக்க முடியும்னா ஆளுக்குக் கால் கிலோ குடுத்து உலகை அமைதியாக்கிடலாம். அன்பைக் கொடுக்க முடிந்தால் காதல்கள் ஏற்கப்படாமல் போகாது. அன்பைக் கொடுக்க முடியுமென்றால் ஆயுதங்கள் இருக்காது. அன்பை கொடுக்க முடிந்தால் ஆளுக்குக் கொஞ்சம் அன்பில்லாதவர்களுக்குக் கொடுத்து உதவலாம்.

அன்பைக் காட்டுகிறோம்.. இதுதான் அன்பு என்பதைக் காட்டுகிறோம்.. அவ்வளவுதான் நம்மால் முடிகிறது.

அப்புறம் அதற்கு மேல் உள்ள வரிகளிலும் எனக்குச் சற்று உடன்பாடில்லை.

இன்று கிருத்திகை என்று சொல்லி சில கோழிகளையும், புரட்டாசி மாதம் கார்த்திகை மாதம் என்று சொல்லி சில ஆடு கோழி மீன்களையும் இப்படி எதையெதையோ சொல்லி பல உயிர்களின் மரணங்களைத் தள்ளிப் போட்டிருக்கிறோம்..:aetsch013::aetsch013::aetsch013:

அப்புறம்

பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற* வைத்திட இயலுமா உன்னால் ?

முடியும்.. சில விரல் நுனிகளால் இக்காலத்தில் முடியும்.

ஆனால் ஒரே ஒரு வருத்தமான செய்தி.. அப்பொழுது உயிர் என்ற ஒன்று உலக மேலோட்டின் மீது ஒட்டிக் கொண்டிருக்காது. அந்த விரல் நுனிகள் சில பொத்தான்களை அழுத்தினால்.. உயிர் இருந்தால் தானே பசி இருக்கும். :eek::eek::eek:

ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை

இதையெல்லாம் தடுக்க முடியும்.. அந்த ஒருவன் "நான்" ஆக இருக்கிற போது .. ஹி ஹி...

அன்பைக் கொடுக்கிறோம் என்று எங்கேயும் தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள். அன்பைக் காட்டுவோம் என்று சொல்லுங்கள். அது உங்களுக்கு என்ன வென்று தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக காட்ட முடியும்.

அன்பை உணர்பவர்கள் தங்கள் அன்பை நமக்குக் காட்டுவார்கள். உணராதவர்களை ஒன்றும் செய்ய இயல்வதில்லை,,

:sprachlos020::sprachlos020::sprachlos020:

innamburan
16-07-2011, 05:49 PM
நண்பர் ஆதனுக்கு,
எப்போதுமே ஆக்கப்பூர்வத்தை முன் நிறுத்தி, ஆதங்கத்த்ஐ பின்னணியில் வைப்பது நலம், ஐயா. இது என் கருத்து.

ஆதி
18-07-2011, 08:36 AM
நம்மிடம் இருப்பதை [ அன்பை ] இல்லாதவர்க்குக் கொடுப்பதைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை....அள்ளிக் கொடுப்போம்.....பகிர்ந்து மகிழ்வோம்....துயரம் மறப்போம்........

ச*ரியா சொன்னீங்க*மா, ந*ன்றி...

இதை புரிந்துகொண்டால் தான் உலகில் முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்துவிடுமே

உண்மைதான் நிவாஸ், பின்னூட்டிய*மைக்கு ந*ன்றி..

ஒன்றுமில்லை! :)

:) :)

ஆதி
18-07-2011, 08:39 AM
அருமையான கவிதை ஆதன்....

உன்னிடம் இருப்பது அன்பு மட்டும்....

1) மற்றவை எல்லாம் செய்ய முடியாது அதனால்
அன்பை மட்டுமாவது கொடு...
இது ஒரு பார்வை...

2) நீ அன்பை மட்டும் கொடு
மற்றவை எல்லாம் தானாகவே நின்று விடும்
இது நிதர்சன பார்வை....

வாத்தைகளுக்கு எத்தனை பலம் பாருங்கள் ஆதன்...
சரியான இடத்தில் உபயோகிக்கும் போது....

3) ஆணியே புடிங்க வேண்டாம்... இல்லையா..???? :D

க*ருவை ச*ரியா பிடிச்சுடீங்க* பென்ஸ*ண்ணா.. பின்னூட்ட*த்திற்கு ந*ன்றிங்க*ண்ணா

நிகழ்தலிற் பெரும்பான்மை மனிதரிடமிருந்து...

இத்தனையும் நிகழாவிடங்கள்
ஆங்காங்கே உண்டு இந்தப் பூமியில்...
அங்கெல்லாம் மனித வாடை இருக்கும்,
உயிர் மூச்சு மட்டும் இருக்காது...

நிம்ம*தியும், அமைதியும், மாய*ன*த்தில்தான் நிர*ந்த*ர*மாய் உள்ள*ன*..

ந*ன்றி அக்னி..

எங்களை போன்ற சிறுவர்களுக்கு புரியும் தமிழில் ஆதன் எழுதிய கவிதை அருமை. மையக்கருவை இறுதியில் சரியாக தொட்டுவிட்டார்.... :)

ரவியண்ணா, இது கொஞ்சம் ஓவர்..

நன்றிங்கண்ணா...

ஆதி
18-07-2011, 08:46 AM
அழுத்தமான கவிதை ஒன்று ஆதனிடமிருந்து.
மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் காணப்படும் வசீகரம் மற்றும் அதிர்வு இங்கும்.
எல்லா மதங்களும் பேசும் வார்த்தை அன்பு.
அன்பு மட்டும் கொடுத்தால் போதும் என்று வலியுறுத்திய ஆதனுக்கு அன்பு.

ந*ன்றிடா..

மனுஷ்யபுத்திரனின், இந்த* வார்த்தைத்தான் ப*ய*மா இருக்கு... சாய*ல் இருந்து நேர*டியா சொல்லுடா மாற்ற* முய*ற்சிக்கிறேன்..

மரத்து விட்ட மனிதத்தை உயிர்பிக்கும் தோழர் ஆதனின் கவிதை வரிகள்.....

ந*ன்றி ஜெய்

நண்பர் ஆதனுக்கு,
எப்போதுமே ஆக்கப்பூர்வத்தை முன் நிறுத்தி, ஆதங்கத்த்ஐ பின்னணியில் வைப்பது நலம், ஐயா. இது என் கருத்து.

புரியுதுங்க ஐயா..

என்னை அடிக்கடி நான் கேட்டுக் கொள்ளும் கேள்வியும், அதற்கான பதிலையும், இந்த கவிதையாக வடித்தேன்..

இது ஆதங்கமில்லை ஐயா, சுய பரிசோதனை...

பின்னூட்டத்திற்கு நன்றி...*

ஆதி
18-07-2011, 09:53 AM
கொடுக்க ஏதேனும் இயலுமா கொஞ்சம் அன்பைத் தவிர..

இதைப் படித்தவுடன் ரூம் போட்டு யோசிக்கலைங்க.. சும்மாத்தான் யோசிச்சேன்.

அன்பு விஷயத்தில் கொடுக்கல் வாங்கலே கிடையாது.. அது கொடுத்து வாங்கக் காசுமல்ல, கடனுமல்ல.. அன்பைச் சிறிதளவு காட்ட மட்டுமே முடியும்.

அன்பைக் கொடுக்க முடியும்னா ஆளுக்குக் கால் கிலோ குடுத்து உலகை அமைதியாக்கிடலாம். அன்பைக் கொடுக்க முடிந்தால் காதல்கள் ஏற்கப்படாமல் போகாது. அன்பைக் கொடுக்க முடியுமென்றால் ஆயுதங்கள் இருக்காது. அன்பை கொடுக்க முடிந்தால் ஆளுக்குக் கொஞ்சம் அன்பில்லாதவர்களுக்குக் கொடுத்து உதவலாம்.

அன்பைக் காட்டுகிறோம்.. இதுதான் அன்பு என்பதைக் காட்டுகிறோம்.. அவ்வளவுதான் நம்மால் முடிகிறது.

அப்புறம் அதற்கு மேல் உள்ள வரிகளிலும் எனக்குச் சற்று உடன்பாடில்லை.

இன்று கிருத்திகை என்று சொல்லி சில கோழிகளையும், புரட்டாசி மாதம் கார்த்திகை மாதம் என்று சொல்லி சில ஆடு கோழி மீன்களையும் இப்படி எதையெதையோ சொல்லி பல உயிர்களின் மரணங்களைத் தள்ளிப் போட்டிருக்கிறோம்..:aetsch013::aetsch013::aetsch013:

அப்புறம்

பசிப்பிணி குரலற்று
தன்னை தானே இந்த பூமியை
ஒருமுறையேனும் சுற்ற* வைத்திட இயலுமா உன்னால் ?

முடியும்.. சில விரல் நுனிகளால் இக்காலத்தில் முடியும்.

ஆனால் ஒரே ஒரு வருத்தமான செய்தி.. அப்பொழுது உயிர் என்ற ஒன்று உலக மேலோட்டின் மீது ஒட்டிக் கொண்டிருக்காது. அந்த விரல் நுனிகள் சில பொத்தான்களை அழுத்தினால்.. உயிர் இருந்தால் தானே பசி இருக்கும். :eek::eek::eek:

ஒருவன் தூக்கிலப்படுவதை
ஒருவன் தற்கொலை புரிந்து கொள்வதை
ஒருவன் கொலை செய்யப்படுவதை
ஒருவன் திருடப்படுவதை
ஒருவன் நம்பிக்கை தூரோகத்துக்குள்ளாவதை
ஒருவன் ஏமாற்றப்படுவதை

இதையெல்லாம் தடுக்க முடியும்.. அந்த ஒருவன் "நான்" ஆக இருக்கிற போது .. ஹி ஹி...

அன்பைக் கொடுக்கிறோம் என்று எங்கேயும் தயவு செய்து பிரச்சாரம் செய்யாதீர்கள். அன்பைக் காட்டுவோம் என்று சொல்லுங்கள். அது உங்களுக்கு என்ன வென்று தெரியும் பட்சத்தில் கண்டிப்பாக காட்ட முடியும்.

அன்பை உணர்பவர்கள் தங்கள் அன்பை நமக்குக் காட்டுவார்கள். உணராதவர்களை ஒன்றும் செய்ய இயல்வதில்லை,,

:sprachlos020::sprachlos020::sprachlos020:

//Last edited by ஆதன்; 15-07-2011 at 08:48 PM.
//

அண்ணா, இந்த நேரம் வரைக்கும் கொஞ்சங்குற வார்த்தையில் இல்லவே இல்ல..

அது சேர்த்த பிறகு முதல் பின்னூட்டம் உங்களுடையதுதான்..

முழுமனசோடு பிறரை அன்பு செய்யாவிட்டாலும், கொஞ்சமாவது செய் என்று சொல்ல நினைத்தது, அன்பு செய்ய*வாவ*து யோசி என்ப*தை வ*லியுறுத்த*தான்..

அத*னால்தான் உங்க*க்கிட்டயும் மாட்டிக்கிட்டேன்... :D

அண்ணா, தர அல்லது செய்ய என்று வார்த்தை போட்டிருக்கனே.... :)

ப*ரிசு என்னும் சொல்லை காட்டிலும் அன்ப*ளிப்பு எனும் சொல் ஈர்ப்பான*தாய், ஈர*மான*தாய், உயிர்ப்புள்ள*தாய் இருக்கிற*து..

பரிசளிக்க*ப்ப*டும் பொருளில் உற*வின் உதிர*ம் உயிர்ப்பாய் ஓடிக் கொண்டிருப்ப*தால்தான் அத*னை அன்ப*ளிப்பு என்ற*ழைத்தோம், ஆனால் கால*ப்போக்கில் நோட்டு போட்டு மொய்யென* அத*னை க*ண*க்கு வைக்க* ஆர*ம்பித்துவிட்டோம்..

க*ண*க்கோடு வ*ரும் யாவும் அன்ப*ளிப்ப*ல்ல* அது வெறும் ப*ரிசு, அதில் உற*வின் ரெத்த*ம் உயிர்ப்பாய் ஓட*வில்லை, மெருமையும் பெருமித*முமே பீறிட்டு பாய்கிற*து..

அன்பை நாம் க*ண*க்கு வைப்ப*தில்லை, அதை நாம் எந்த நோட்டு போட்டும் எழுதுவதில்லை, அதனை எதனுடனும் நாம் மதிப்பிடுவதில்லை..

அன்பை பற்றி கொஞ்சம் நாம் யோசிக்க ஆரம்பித்துவிட்டாலே, அன்பாய் மாறிவிடுகிறோம்..

தர அல்லது செய்தல் என்பதைவிட காட்டல் என்பது சரியான ஆளுமை என்பதில் எனக்கு எந்த மறுப்புமில்லை அண்ணா... :)

தாமரை
18-07-2011, 10:10 AM
இப்ப நீ என்ன சொல்ல வர்ர?

கொஞ்சன்னு சொன்னவுடனே நான் முன்ன வந்து நிக்கிறனா?

என்னைக் கொஞ்ச ஆளிருக்கு ஆதன்..

உன்னைக் கொஞ்சத்தான் நீ ஆள் தேடணும். :lachen001::lachen001::lachen001:

மற்ற இடங்களுக்கும், நம் மன்றத்திற்கும் உள்ள வேறுபாடு என்னன்னா

மற்ற இடங்கள் அரசவை மாதிரி - அங்க கவிதை சொன்னியா? பாராட்டு பரிசு வாங்கினியா என்று போய்க் கொண்டே இருக்கலாம்.

நம்ம மன்றம் தமிழ்ச்சங்கம் போல. இங்கே அரசர் கிடையாது. மன்றத்தில் போடப்படும் கவிதைகள் அலசோ அலசு என அலசப்படும். அலசப்படுவதின் நோக்கம் கவிதையை எடை போடுவது கிடையாது. கவிஞனை மேம்படுத்தவே ஆகும்.

சொற்குற்றம் பொருட்குற்றம் ஆகியவை கவிஞனின் குற்றமில்லை. அவை நம் சமூகத்தில் உண்டாகிவிட்ட குறைபாடுகள் ஆகும். நாம் என்ன சமூகத்தில் இருந்து கற்றுக் கொண்டோமோ அதைத் தானே சொல்கிறோம்.

ஒரு சிலருக்கு அவற்றைப் பற்றிய மாறுபாடுகள் உள்ள பொழுது அவை இங்கே விவரிக்கப் பட்டு விவாதிக்கப்பட்டு அறிவு விசாலமாகிப் போகின்றது, அதனால் பொதுவாகவே எல்லோர் அறிவும் உயர்கிறது. ஏன் எதற்கு எப்படி என பல பதில்கள் அங்கங்கே கிடைப்பதனால் நாம் பட்டை தீட்டிக் கொள்கிறோம்.

இப்போ அன்பு செய்தலுக்கு வருவோம்.

அன்பு செய்யப்படும் ஒன்று என்றால் அது ஒரு செயல் அல்லது பொருள் என்ற வடிவத்தை எடுக்கிறது.

அன்பு செய்தல் என்பது செயல்களில் அன்பை வெளிப்படுத்தல் என்பதை நாம் மிக நன்றாக கவனத்தில் கொண்டு உபயோகிக்க வேண்டும்.

இந்த இடத்தில் அன்பைக் கொடு என்பதை விட அன்பு செய்தல் பொருத்தமானதாகும்.

ஆனால் அன்பு செய்தல் என்பதை விட அன்பு காட்டல் உயர்ந்தது ஏன் தெரியுமா?

நம்மில் பலருக்கு அன்பு என்றால் என்னவென்றே தெரிவதில்லை. அதனால்தான். எனவே நாம் அன்பு என்றால் எதை எண்ணுகிறோமோ அதை மற்றவர்களிடம் செய்தல் அன்பு காட்டல் என விரிவடைந்து பொருள் தரும்.

உன்னைப் பொருத்தவரை நீ அன்பு என்று எதை நீ எண்ணுகிறாயோ அதை அடுத்தவர்களுக்கு உன் செயல் மூலம் காட்டு. நான் என் எண்ணத்தை என் செயல் மூலம் காட்டுகிறேன் என்பதால் அதை விரித்து உரைக்கும் பொழுது மனதில் ஆழமாகப் பதியும்.

ஆதி
18-07-2011, 10:21 AM
//இப்ப நீ என்ன சொல்ல வர்ர?

கொஞ்சன்னு சொன்னவுடனே நான் முன்ன வந்து நிக்கிறனா?

என்னைக் கொஞ்ச ஆளிருக்கு ஆதன்..

உன்னைக் கொஞ்சத்தான் நீ ஆள் தேடணும்.

//

ஹா ஹா ஹா