PDA

View Full Version : ஒன்றேதான் !

ஜானகி
15-07-2011, 03:45 AM
வானம் சிலிர்த்தது ; பூமி குளிர்ந்தது ;

கானம் பிறந்தது ; வித்து முளைத்தது ;

அதுவோ ?.....இதுவோ ?......எதுவோ ?

கால்கள் முளைத்தன ; பாதை தெரிந்தது ;

சூல் கொண்டன புலன்கள் ; வேகம் பிறந்தது ;

இங்கே.....அங்கே....எங்கே ?

சிகரம் அழைத்தது ; திறமை விரிந்தது ;

உதிரம் கொதித்தது ; பயணம் தொடர்ந்தது ;

இதுவரை.....அதுவரை.....எதுவரை ?

உள்ளம் சோர்ந்தது ; உடலும் தளர்ந்தது ;

கள்ளம் மறைந்தது ; மௌனம் பேசியது ;

நானோ ?.... நீயோ ?...... யாரோ ?

உண்மை உணர்ந்திட, உன்னுள் புகுவாய் !

அன்பால் பிணைந்து....அருளால் கரைந்து

தன்னைக் காட்டும் அது உன்னுள்ளே...!

இதுவோ....அதுவோ.....அது எதுவும்தான் !

இங்கோ....அங்கோ.....அது எங்கும் தான் !

நானோ....நீயோ.....அது ஒன்றேதான்....நன்றேதான் !

தாமரை
15-07-2011, 04:42 AM
70 திருமந்திரக் கனி பறித்து அதில்

64 ஐ தோல் நீக்கி சுளையெடுத்து

அதைச் சாறுபிழிந்து சுண்டக் காய்ச்சி..

பாகும் பருப்பும் சேர்த்து

மூணாறு வரிகளாய்

காய்ச்சி ஊற்றிய அல்வா..

அல்லவா?

(தலை, இரவி, மதி, தக்ஸ் நம்ம மூணாறு திட்டம் ஜான்கி அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சு.. அதான் மூணு வரிகளில் ஆறு பதிகம் எழுதி என்ன கேட்கறாங்க பாருங்க)

அது இது எது (சைவம் அசைவம் எந்த சாப்பாடு)
அங்கே இங்கே எங்கே (மூணாறு, ஏற்காடு, எந்த இடம்)
அதுவரை இதுவரை எதுவரை (எத்தனை நாளுன்னு கேட்கிறாங்கப்பா )
நானோ நீயோ யாரோ (யார் யார் வர்ராங்கன்னு கேட்கிறாங்கப்பா, நானும் வர்ரேன்னும் சொல்றாங்க)

தன்னைக் காட்டும் அது உன்னுள்ளே (***************:D:D:D:D:D:D மாட்டிகிட்டோம் டோய்)

நானோ நீயோ அது ஒன்றேதான் நன்றேதான் (ஆஹா விட மாட்டாங்க போல இருக்கே,, யார் வராட்டியும் நான் வருவேன்னு அடம் பிடிக்கிறாங்களே)

:confused::confused::confused::sprachlos020::sprachlos020::sprachlos020::eek::eek::eek:;););):rolleyes::rolleyes::rolleyes::wuerg019::wuerg019::wuerg019:

Ravee
15-07-2011, 04:58 AM
(தலை, இரவி, மதி, தக்ஸ் நம்ம மூணாறு திட்டம் ஜான்கி அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சு..

அது இது எது (சைவம் அசைவம் எந்த சாப்பாடு)
அங்கே இங்கே எங்கே (மூணாறு, ஏற்காடு, எந்த இடம்)
அதுவரை இதுவரை எதுவரை (எத்தனை நாளுன்னு கேட்கிறாங்கப்பா )
நானோ நீயோ யாரோ (யார் யார் வர்ராங்கன்னு கேட்கிறாங்கப்பா, நானும் வர்ரேன்னும் சொல்றாங்க)

தன்னைக் காட்டும் அது உன்னுள்ளே (***************:D:D:D:D:D:D மாட்டிகிட்டோம் டோய்)

நானோ நீயோ அது ஒன்றேதான் நன்றேதான் (ஆஹா விட மாட்டாங்க போல இருக்கே,, யார் வராட்டியும் நான் வருவேன்னு அடம் பிடிக்கிறாங்களே)

http://www.yardflex.com/archives/smiley_lol.gif

செல்வா
15-07-2011, 12:42 PM
வாழ்க்கைச் சக்கர வட்டம்
ஆறு ஆரங்களுடன்
எல்லாம் ஒன்றே
எல்லாம் நானே...
என்ற பாரதக் கதை பேசும் காவியம்
வெறும் ஆறு பத்திகளுக்குள்.
சுருங்கச் சொல்லி விரியவைக்கும் தமிழே உன் ஆற்றல் அளப்பரியது.

வாழ்த்துக்கள் அம்மா..!

அப்போ அடுத்த பயணம் மூணாறு தானா? முடிவு செய்தாச்சா?

ஜானகி
15-07-2011, 04:04 PM
70 திருமந்திரக் கனி பறித்து அதில்

64 ஐ தோல் நீக்கி சுளையெடுத்து

அதைச் சாறுபிழிந்து சுண்டக் காய்ச்சி..

பாகும் பருப்பும் சேர்த்து

மூணாறு வரிகளாய்

காய்ச்சி ஊற்றிய அல்வா..

அல்லவா?

(தலை, இரவி, மதி, தக்ஸ் நம்ம மூணாறு திட்டம் ஜான்கி அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சு.. அதான் மூணு வரிகளில் ஆறு பதிகம் எழுதி என்ன கேட்கறாங்க பாருங்க)

அது இது எது (சைவம் அசைவம் எந்த சாப்பாடு)
அங்கே இங்கே எங்கே (மூணாறு, ஏற்காடு, எந்த இடம்)
அதுவரை இதுவரை எதுவரை (எத்தனை நாளுன்னு கேட்கிறாங்கப்பா )
நானோ நீயோ யாரோ (யார் யார் வர்ராங்கன்னு கேட்கிறாங்கப்பா, நானும் வர்ரேன்னும் சொல்றாங்க)

தன்னைக் காட்டும் அது உன்னுள்ளே (***************:D:D:D:D:D:D மாட்டிகிட்டோம் டோய்)

நானோ நீயோ அது ஒன்றேதான் நன்றேதான் (ஆஹா விட மாட்டாங்க போல இருக்கே,, யார் வராட்டியும் நான் வருவேன்னு அடம் பிடிக்கிறாங்களே)

:confused::confused::confused::sprachlos020::sprachlos020::sprachlos020::eek::eek::eek:;););):rolleyes::rolleyes::rolleyes::wuerg019::wuerg019::wuerg019:

மூணோ.... ஆறோ......சாறு பிழிந்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொணடவரிடமிருந்து தப்புவது.......கடினம் தான் ! அல்வா பதமாக இருந்தால் சரி !

பூஜை வேளையில் கரடியாக...நான் உங்கள் உல்லாசப் பயணங்களில் குறுக்கிடமாட்டேன்...கவலை வேண்டாம்.. ஜமாயுங்கள்.......பயண அநுபவத் திரியில் கலந்துகொள்கிறேன்.

ஜானகி
15-07-2011, 04:09 PM
வாழ்க்கைச் சக்கர வட்டம்
ஆறு ஆரங்களுடன்
எல்லாம் ஒன்றே
எல்லாம் நானே...
என்ற பாரதக் கதை பேசும் காவியம்
வெறும் ஆறு பத்திகளுக்குள்.
சுருங்கச் சொல்லி விரியவைக்கும் தமிழே உன் ஆற்றல் அளப்பரியது.

வாழ்த்துக்கள் அம்மா..!

அப்போ அடுத்த பயணம் மூணாறு தானா? முடிவு செய்தாச்சா?

விளக்கம் தந்ததற்கு நன்றி.

திட்டமிட்டு எழுதவில்லை...மனதில் தோன்றியதை சொல்லியிருக்கிறேன்...யார், யாருக்கு எப்படி, எப்படி பொருள் தருகிறதோ....பார்க்கலாம் !

Nivas.T
16-07-2011, 07:44 AM
மனித வாழ்க்கையின் முக்கிய கட்ட நிகழ்வுகளாக

பிறப்பு, மழலைப்பருவம், இளமை காலப் போராட்டம் வெற்றி, திருமணம், முதுமை, பண்பட்ட வாழ்க்கை, ஆன்மிகம் கடந்து

இறைவனடி சேரும் ஆத்மா

பாராட்டுகள் ஜானகியம்மா
கவிதை பிரமாதம்