PDA

View Full Version : நல்ல மருமகள்!!!!



தாமரை
14-07-2011, 01:45 PM
அந்த ஊரில் நிறைய குடும்பக்கள் இருந்தன. ஆனால் மாமியார் மருமகள் சண்டை மிக மிக அதிகமா இருந்தது.

கணவர்களால் தினம் தினம் இந்தத் தொல்லையைத் தாங்க முடியலை. அதில ஒரு புத்திசாலிக் கணவன் சொன்னான்.. எங்க ஆஃபிஸில இப்படி அடிக்கடி ஒருத்தரோட ஒருத்தருக்கு மனக்கசப்பு வந்து கிட்டே இருக்கும்.
நாங்க எல்லாம் ஒன்னா ஒரு நாள் பிக்னிக் போவோம். ஒண்ணாக் கொண்டாடுவோம். கூத்தடிப்போம். எங்க மத்தியில் இருக்கிற போட்டிப் பொறாமையெல்லாம் தீர்ந்து போயிடும். எல்லோரும் ஒத்துமையா ஆயிடுவோம். நீங்களும் இதைச் செய்யலாமேன்னு ஐடியா கொடுத்தார்.

அதன்படியே ஒரு நாள் பிக்னிக் முடிவாச்சி.. மாமியார்களெல்லாம் ஒரு பஸ்ஸிலயும், மருமகள்களேல்லாம் ஒரு பஸ்ஸிலயும் புறப்பட்டு பிக்னிக் போனாங்க..

போற வழியில ஒரு பெரிய பள்ளத்தில பிரேக் பிடிக்காம மாமியார்கள் போன பஸ் விழிந்திருச்சி.. யாருமே பிழைக்க வாய்ப்பே இல்லை.

எல்லா மருமகள்களும் ஓன்னு ஓலமிட்டு அழுதாங்க.. உடனே செல்ஃபோன் எடுத்து தங்கள் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் தகவல் சொல்லி அழுது கொஞ்ச நேரத்தில் நிதானமானாங்க..

ஆனால் ஒரே ஒரு மருமகள் மாத்திரம் அழுகையை நிறுத்தவே இல்ல. எல்லோரும் அவளை சமாதானம் செய்து.. ஆனது ஆயிடுச்சி இனிமே என்ன செய்வது.. அழாத.. எனச் சமாதானம் செய்தாங்க..

அவ அழுதுகிட்டே சொன்னா

எம்மாமியார் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... !!:eek::eek::eek:


நன்றி : இமெயிலில் அனுப்பிய புண்ணியவானுக்கு!!!

Nivas.T
14-07-2011, 02:01 PM
:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

நாஞ்சில் த.க.ஜெய்
14-07-2011, 05:22 PM
ஆழ்ந்த வருத்தங்கள் அந்த மருமகளுக்கு ...வாழ்த்துகள் பேருந்தினை தவற விட்ட மாமியாருக்கு....:lachen001::lachen001::lachen001:

த.ஜார்ஜ்
15-07-2011, 04:08 PM
ரொம்ப கவலை பட வேணாம். அவங்க மருமக வந்து மீதி கவலைய தொடருவாங்களாம்..

கண்மணி
16-07-2011, 02:28 AM
ஒரு பஸ் தப்பிச்சிருச்சே ஜஸ்ட் மிஸ்னு எந்தக் கணவனும் அழலியா என்ன?

(ஜஸ்ட் மிஸஸ் அப்படின்னு கூட அழலாம். யார் கண்டாங்க.. )

M.Jagadeesan
16-07-2011, 02:59 AM
பஸ்ஸை மிஸ் பண்ணின மாமியார் வீட்டிலிருந்து அழுதார்கள். "கடவுளே! மருமகள்கள் போன பஸ்ஸை விட்டுட்டு மாமியாருங்க போன பஸ்ஸை ஆக்சிடென்ட் பண்ணிட்டியே! உனக்கு இரக்கமே இல்லையா?"

அமரன்
16-07-2011, 11:42 AM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..

ஆதவா
16-07-2011, 12:15 PM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..

:eek::eek::eek:

அமரன்
16-07-2011, 12:31 PM
ஏன்..... ஏன்.....

நல்லாத்தான் போயிட்டுப்பா...

"நல்ல" என்று சொல்லி இருக்க வேணுமோ..

வியாசன்
16-07-2011, 09:26 PM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..

அமரன் அதற்குள்ளாகவா முடிவெடுத்துவிட்டீர்கள்?. உங்கள் பதிலை பார்த்ததும் ஒரு பிரளயமே வரும் போல் இருக்கிறது உங்கள் வீட்டில் ஏதோ என்னாலை முடிந்த உதவி உங்கள் குடும்பத்துக்கு

Ravee
16-07-2011, 09:54 PM
எம்மாமியார் பஸ்ஸை மிஸ் பண்ணிட்டாங்களே... !! :eek:


ரொம்பவும் பேராசைபடக்கூடாது ..... அட ., உலகம் அழிய ஒரு அழிவு சக்தியாவது இருக்கணும் தானே ......... :lachen001:

aren
20-07-2011, 09:28 AM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..

அதுக்குள்ளேவா இப்படி????????

பூமகள்
21-07-2011, 07:32 AM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..:eek::eek:

:sauer028::sauer028: நல்ல மாமியார்களும் ரொம்பக் குறைவு தான்.. :aetsch013::aetsch013:

Nivas.T
21-07-2011, 07:48 AM
நேற்றைய மருமகள் இன்றைய மாமியார்
இன்றைய மருமகள் நாளைய மாமியார்

இதில் மருமகள் யார்?
மாமியார் யார் ? :confused::confused::confused:

தாமரை
21-07-2011, 08:25 AM
ம்ம்ம்.. நல்ல மருமகள்கள் ரொம்பக் குறைவுதான்..


:eek::eek:

:sauer028::sauer028: நல்ல மாமியார்களும் ரொம்பக் குறைவு தான்.. :aetsch013::aetsch013:

அதாவது பொதுவாச் சொல்லப்போனா

நல்ல பெண்கள் மிக மிகக் குறைவுதான். :aetsch013::icon_ush:

தாமரை
21-07-2011, 08:30 AM
நேற்றைய மருமகள் இன்றைய மாமியார்
இன்றைய மருமகள் நாளைய மாமியார்

இதில் மருமகள் யார்?
மாமியார் யார் ? :confused::confused::confused:

அவரேதாங்க நிவாஸ்!!!

redblack
22-07-2011, 10:19 AM
மாமியார் உயிரோடு இருந்தால்தான் தினமும் பொழுது போகும் என்று அந்த மருமகளுக்கு தெரியவில்லை போலும்..

சிவா.ஜி
22-07-2011, 04:47 PM
மாமியாரை “பத்திரமா” பஸ்ல ஏத்தி விட்டுட்டு....அப்புறமா மருமகள் பஸ் பிடிச்சிருந்தா...வருத்தப்படவே தேவையிருந்திருக்காது......ஆனா....நாளைக்கு...இந்த மருமகள்...மாமியார் ஆகும்போது.....ரொம்ப “பத்திரமா” மருமகள் பஸ் ஏத்தி....விடாம இருக்கனுமே.....

மதுரை மைந்தன்
23-07-2011, 09:15 AM
எங்க வீட்டு நாயைக் காணோம் சார்…

அடையாளம் சொல்லுங்க…

அது குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்…….!”

___________________________________________________________________

என்னோட மாமியார் அவங்க பணக்காரப் புத்தியைக் காட்டிட்டாங்க.

அப்படியா… என்ன பண்ணினாங்க?

எனக்கும் அவங்களுக்கும் நடந்த சண்டையை உள்ளூர் கேபிள்ல ஒளிபரப்ப ஏற்பாடு பண்ணிட்டாங்களாம்..!

parimaala
24-07-2011, 04:41 PM
இது அவளுடைய நியாயமான ஏக்கம் தான்.. ஆனால் அவளும் ஒரு நாள் மாமியாராக வருவாள் என்பதை நினைவு கொள்ள வேண்டும்..

vseenu
20-09-2011, 02:04 PM
மாமியார் அழுததை யாரும் கவனிக்கலையே. மருமகள் அந்த பஸ்ஸில் ஏறாமல் போனதுக்காக

aparajithc.achan
08-10-2011, 08:58 AM
மிகவும் அருமையான கற்பனை... வாழ்த்துக்கள்...

அன்புடன்


அபராஜிதன்

jaffer
08-10-2011, 09:13 AM
இது கற்பனைக்கு தானே,,,, அப்படின்னா சரிதான்