PDA

View Full Version : புதிய கோணம்...

Nivas.T
14-07-2011, 06:43 AM
நிலா முகம் விழுந்து
உடைகிறது தண்ணீர் தடாகம்

பூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்
பூமியை சுற்றுகிறது சூரியன்

பகலில் பழுப்பு வானம்
தண்ணீர் சுடுகிறது
தீ சில்லிடுகிறது
காற்றில் கருந்துகள்
பனிக்கட்டி கருமை நிறம்
பசுமை என்பது சாம்பல் நிறம்

மான்களுக்கு புலிப்பல்
புலிகளுக்கு கிளி மூக்கு
கிளிக்கு யானைக்கால்
யானைக்கு பூனை உடல்

வேரில்லாத மரம்
கிளையில்லா தழை
நிறமில்லா இலை

பெண்மை ஆளுமை
ஆண்மை கருதரிக்கிறது

இந்த எதிர்மறைகள் அனைத்தும்
ஒரு புதிய கோணம்

தாமரை
14-07-2011, 07:08 AM
நிலா முகம் விழுந்து
உடைகிறது தண்ணீர் தடாகம்

பூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்
பூமியை சுற்றுகிறது சூரியன்

பகலில் பழுப்பு வானம்
தண்ணீர் சுடுகிறது
தீ சில்லிடுகிறது
காற்றில் கருந்துகள்
பனிக்கட்டி கருமை நிறம்
பசுமை என்பது சாம்பல் நிறம்

மான்களுக்கு புலிப்பல்
புலிகளுக்கு கிளி மூக்கு
கிளிக்கு யானைக்கால்
யானைக்கு பூனை உடல்

வேரில்லாத மரம்
கிளையில்லா தழை
நிறமில்லா இல்லை

பெண்மை ஆளுமை
ஆண்மை கருதரிக்கிறது

இந்த எதிர்மறைகள் அனைத்தும்
ஒரு புதிய கோணம்

பழைய கோணம்தான் நிவாஸ்.. அதுக்குப் பேர் இல்பொருள் உவமையணி..

நிறமில்லா இல்லை ன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க.. அது எழுத்துப் பிழையாக இருந்தாலும் கருத்துப் பிழை இல்லை.

இல்லை என்ற சொல் உணர்ச்சிகளுடைய நிறத்தை ஏற்று நிற்கும். பொறாமை, கருணை, அன்பு, வெறுப்பு, சலிப்பு, கபடம் இப்படி எத்தனையோ வண்ணங்களில் இல்லை இருக்கிறது :mini023::mini023::mini023:

பென்ஸ்
14-07-2011, 07:15 AM
பூமி சுழலவில்லை ஆனால் இரவு பகல்
பூமியை சுற்றுகிறது சூரியன்

இது பழைய கோணம் அல்லவா...
இதை சரி செய்ய நினைத்த கலிலீயோ வைதானே சித்திரவதை செய்தார்கள்...

உண்மையை சொன்னதற்கு இத்தனை பாடு... உண்மையை மீறி சொல்வதற்கு உமக்கு என்ன பாடோ...

ஏழுத்து பிழை... தாமரை.. நன்றி...

ஆதவா
14-07-2011, 07:34 AM
எதிர்மறைகள்???

நீங்கள் பூமியை தலைகீழாகத் திருப்ப முயலுகிறீர்கள்..
நாங்கள்ல்லாம் விவரமானவர்கள்
தலைகீழாக நாங்கள் நின்று பூமியைப் பார்ப்போம்! (அல்லது சுமப்போம்!!)
புதிதாக கோணம் உருவாக்க புதிதாக பிம்பம் உருவாக்கவேண்டும்! உலகம் வட்டத்தாலானது. அதற்கு மீறிய கோணம் வேறெதுவுமில்லை!!

ஏழுத்து பிழை......

பிழையை பிழையோடு எழுதிப் பிழைத்த
பிசிராந்தையார் வாழ்க வாழ்க... :lachen001::lachen001:

பென்ஸ்
14-07-2011, 07:42 AM
எதிர்மறைகள்???

பிழையை பிழையோடு எழுதிப் பிழைத்த
பிசிராந்தையார் வாழ்க வாழ்க... :lachen001::lachen001:
என் கையெழுத்தை படித்தாயா..???:sauer028::sauer028:

Nivas.T
14-07-2011, 07:42 AM
பழைய கோணம்தான் நிவாஸ்.. அதுக்குப் பேர் இல்பொருள் உவமையணி..

நிறமில்லா இல்லை ன்னு சொல்லி இருக்கீங்க பாருங்க.. அது எழுத்துப் பிழையாக இருந்தாலும் கருத்துப் பிழை இல்லை.

இல்லை என்ற சொல் உணர்ச்சிகளுடைய நிறத்தை ஏற்று நிற்கும். பொறாமை, கருணை, அன்பு, வெறுப்பு, சலிப்பு, கபடம் இப்படி எத்தனையோ வண்ணங்களில் இல்லை இருக்கிறது :mini023::mini023::mini023:

இல்லை எனபது கூட நிரமேர்க்கும் என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். பொருட்பிழை இல்லை என்றாலும், அது எழுத்துப்பிழைதான் இப்பொழுது திருத்திவிட்டேன்

மிக்க நன்றி அண்ணா

Nivas.T
14-07-2011, 07:46 AM
இது பழைய கோணம் அல்லவா...
இதை சரி செய்ய நினைத்த கலிலீயோ வைதானே சித்திரவதை செய்தார்கள்...

உண்மையை சொன்னதற்கு இத்தனை பாடு... உண்மையை மீறி சொல்வதற்கு உமக்கு என்ன பாடோ...

ஏழுத்து பிழை... தாமரை.. நன்றி...

வாழ்க்கை என்பது ஒரு சுழற்சி தானே
மீண்டும் மீண்டும் அதே தான் திரும்ப திரும்ப வரும்

அப்படிதான் இதுவும்

மிக்க நன்றி பென்ஸ்

Nivas.T
14-07-2011, 07:52 AM
எதிர்மறைகள்???

நம்மை பொறுத்தவரை மட்டுமே
உலகை பொறுத்தவரை இல்லை

நீங்கள் பூமியை தலைகீழாகத் திருப்ப முயலுகிறீர்கள்..

என்னால் முடியாது, அதுவாக திரும்பு என்றுதான் சொல்ல வந்தேன்

நாங்கள்ல்லாம் விவரமானவர்கள்
தலைகீழாக நாங்கள் நின்று பூமியைப் பார்ப்போம்! (அல்லது சுமப்போம்!!)

:icon_b::icon_b::icon_b::D

புதிதாக கோணம் உருவாக்க புதிதாக பிம்பம் உருவாக்கவேண்டும்! உலகம் வட்டத்தாலானது. அதற்கு மீறிய கோணம் வேறெதுவுமில்லை!!

வேறொன்றும் இல்லை என்பது உண்மைதான்

ஆனால் வேறொன்றாக மாற வாய்ப்பிருக்கு இல்லியா?

மிக்க நன்றி ஆதவா

தாமரை
14-07-2011, 08:00 AM
இல்லை எனபது கூட நிரமேர்க்கும் என்பதை இப்பொழுதுதான் தெரிந்துகொண்டேன். பொருட்பிழை இல்லை என்றாலும், அது எழுத்துப்பிழைதான் இப்பொழுது திருத்திவிட்டேன்

மிக்க நன்றி அண்ணா

நீங்க சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. நிறமில்லாத இல்லை என்பதே இல்லை நிவாஸ்.. கடவுள் இல்லை என்பதற்கு கூட மறுப்பு நிறம் இருக்கில்லையா? அது மாதிரி எல்லா இல்லைகளுக்கும் எதாவது ஒரு வண்ணம் உண்டு..

நான் குண்டாக இருக்கிறேனா என மனைவி கேட்க... வெள்ளையாக இல்லையடி செல்லம் என்பான் கணவன்.

நான் அழகா இருக்கேனா என்று காத்லி கேட்க.. உலகத்தில் உன்னைப் போல அழகி இல்லை எனப் பச்சையாகச் சொல்வான் காதலன்..

நிறமில்லாத இல்லை இல்லை என்பதால்தான் அது கருத்துப் பிழை இல்லை என்றேன் நான்.

:icon_b::icon_b::icon_b::icon_b::icon_b:

Nivas.T
14-07-2011, 08:12 AM

இல்லை என்பது எப்பொழுதும் நிரமில்லாமல் இருப்பதில்லை

எதிர்மறை என்பதால்
நிறமில்லா இல்லை என்று இருந்தது சரியானது :sport-smiley-018::sport009:

M.Jagadeesan
14-07-2011, 01:43 PM
நிவாஸ்! உங்களின் புதிய கோணம் தங்களின் ஆசையாக இருக்கலாம்!
இறைவனின் படைப்பில் அல்லது இயற்கையின் படைப்பில் நாம் குறை காண முடியுமா?
ஆட்டுக்கு அளவறிந்து வால்!
சிறிய கொடியில் பெரிய பூசணி!
பெரிய ஆலமரத்தில் சிறிய பழம்!
இவற்றில் நாம் குறை காணமுடியுமா?
எனினும் வித்தியாசமான சிந்தனைக்கு எனது பாராட்டுக்கள்!

Nivas.T
14-07-2011, 01:57 PM

தங்கள் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா

நாஞ்சில் த.க.ஜெய்
14-07-2011, 05:31 PM
மாறாத நிகழ்வுகளின் எதிர்மறைகள் என்றும் மாறாதவை ...பாராட்டுகள் தோழர் உங்கள் மாறுபட்ட கோணத்திற்கு ....

Nivas.T
15-07-2011, 07:12 AM
மாறாத நிகழ்வுகளின் எதிர்மறைகள் என்றும் மாறாதவை ...பாராட்டுகள் தோழர் உங்கள் மாறுபட்ட கோணத்திற்கு ....

பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஜெய்

செல்வா
15-07-2011, 12:34 PM
எதிர் மறைச் சுட்டிய வார்த்தைகள் அழகு
அடுக்கிய விதம் அதைவிட அழகு
வாழ்த்துக்கள் நிவாஸ்

Nivas.T
15-07-2011, 01:25 PM
எதிர் மறைச் சுட்டிய வார்த்தைகள் அழகு
அடுக்கிய விதம் அதைவிட அழகு
வாழ்த்துக்கள் நிவாஸ்

பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி செல்வா

ஷீ-நிசி
15-07-2011, 03:05 PM
பெண்மை ஆளுமை
ஆண்மை கருதரிக்கிறது

இந்த எதிர்மறைகள் அனைத்தும்
ஒரு புதிய கோணம்

எல்லாமே மிக அழகான எதிர்மறைகள்...

பெண்மை ஆளுமை இதில் சேருமா?!!

வாழ்த்துக்கள்!

Nivas.T
16-07-2011, 07:36 AM
எல்லாமே மிக அழகான எதிர்மறைகள்...

பெண்மை ஆளுமை இதில் சேருமா?!!

வாழ்த்துக்கள்!

சேருமா இல்லையா என்பதை ஆண்களாகிய நாம்தான் சொல்ல வேண்டும்

மிக்க நன்றி ஷீ நிசி

பூமகள்
16-07-2011, 02:39 PM
ஆஹா.. அற்புதம் நிவாஸ்..

புதிய கோணம் திக்குமுக்காட வைக்கிறது.. பாராட்டுகள்.. ஹ்ம்ம்.... அனைத்தையும் விடுங்கள்.. அந்த கடைசி நான்கு வரி மட்டும் சாத்தியமா சொல்லுங்கள்.. ;):D:D

Nivas.T
16-07-2011, 02:46 PM
ஆஹா.. அற்புதம் நிவாஸ்..

புதிய கோணம் திக்குமுக்காட வைக்கிறது.. பாராட்டுகள்.. ஹ்ம்ம்.... அனைத்தையும் விடுங்கள்.. அந்த கடைசி நான்கு வரி மட்டும் சாத்தியமா சொல்லுங்கள்.. ;):D:D
:eek:
சாத்தியம்தான் ஆனா சாத்தியமில்ல :D

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி பூமகள்

ஆதவா
16-07-2011, 03:28 PM
இந்த கவிதையை மறுவாசிப்புக்கு எடுத்துக் கொண்டபொழுது சில விசயங்கள் தோன்றின. முதலில் ஒட்டுமொத்தமாக கவிதை நிறுவ முனைவது எது என்பது எனக்கு விளங்கவில்லை. அது வாசிப்பின் குறைபாடாக இருக்கலாம்.

எதிர்மறைகள் அனைத்தும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் கவிதையில் மொத்தம் நான்கே இடங்களில் எதிர்மறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மற்றவை அனைத்தும் இல்பொருள் உவமை. மொத்த கவிதையும் இல்லாத ஒன்றை உவமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதாவது கவிதையின் தீம் “இல்பொருள் உவமையணி” ஆகும் பொழுது

பசுமை என்பது சாம்பல் நிறம்..

இது ஒரு வார்த்தைக்கான அர்த்தத்தை மாற்றுவதாக மட்டுமே இருக்கிறது. பச்சை என்பது சிவப்பு என்பது போல/// “என்பது” தூக்கியிருந்தால் சரியாக இருந்திருக்கலாம். அடுத்து, இங்கே பசுமையின் நிறத்தை சாம்பல் என்று குறிப்பிட்ட பிறகு எதற்கு “நிறமில்லா இலை”?

யானைக்கு பூனை உடல்

இதை ஒரு விளையாட்டுக்காகச் சொல்லுகிறேன். யானைக்குப் பூனை உடல் என்றால் அதனை பூனை என்றே அழைத்துவிடலாமே?

Nivas.T
16-07-2011, 03:55 PM

ஆதவா நீங்கள் யோசிக்கும் அளவிற்கு நான் பெரிதாக பொருள் படுத்தி ஒன்றுமே எழுதவில்லை, இயல்பு நிலையில் இருக்கும் ஒன்றை எதிர்பதமாக கூறும்பொழுது அது எதிர்மறையாகிறது, அதாவது வழக்கத்திலிருந்து முழுதுமாக மாறி, புதிய நிலையை அடைகிறது. நம்மைப் பொறுத்தவரை இவை எதிர் மறையாக இருக்கலாம், இயற்கையைப் பொறுத்தவரை எதிர்மறை என்று ஒன்று கிடையாது.

நிலவு பூமில் இருந்து பிரிந்ததாக தகவல், அந்த கூற்றுப்படி பார்த்தால், அந்த நிகழ்வு அதற்க்கு முன்னால் இருந்தவைக்கு எதிர்மறை, அதைத்தான் நானும் குறிப்பிட்டேன்.

பசுமை என்பது பச்சை நிறம், அதே பசுமையான இலை உதிந்தால் காய்ந்து சருகாகி நிறம் மாறும், இங்கு அதனை மாற்றவே நிறமில்ல இலையை குறிப்பிட்டேன்

யானை பெரிதாய் இருந்தாலும், குட்டியாய் இருந்தாலும், பொம்மையை இருந்தாலும் யானை யானைதான் :D

innamburan
16-07-2011, 05:57 PM
எதிர்மறையென்றொன்றில்லை.

Nivas.T
17-07-2011, 06:27 AM
எதிர்மறையென்றொன்றில்லை.

அதைத்தான் புதிய கோணம் என்கிறேன் நான்
மிக்க நன்றி ஐயா