PDA

View Full Version : நாணயம்ஐரேனிபுரம் பால்ராசய்யா
13-07-2011, 01:33 PM
இரண்டாம் வகுப்பு படிக்கும் ஜெலினாவிடம் பத்து ருயாய் நோட்டை கொடுத்து பக்கத்து கடைக்கு சென்று வாசிங் சோப்பும் ஷாம்புவும் வாங்கி வரும்படி சொன்னாள் அவளது தாய் ராதிகா.

``சரிம்மா!’’ என்றபடியே உற்சாகமாய் கடையை நோக்கி நடந்தாள் ஜெலினா. கடைக்காரரிடம் வாசிங்சோப்பும் ஷாம்புவும் கேட்டு வாங்கிவிட்டு பத்து ருபாய் நோட்டை நீட்டினாள்.

``மொத்தம் ஒன்பது ரூபாய் ஆச்சு மீதி ஒரு ருபாய்க்கு சில்லரை இல்லை அதுக்கு ஒரு சாக்லெட்டு வாங்கிக்க!’’ என்றார் கடைக்காரர்.

``எனக்கு சாக்லெட் வேண்டாம், பாக்கி ஒரு ரூபா தான் வேணும்!’’ அடம் பிடித்தாள் ஜெலினா.

``ஏம்மா சாக்லெட் வேண்டாங்கறே, சாக்லெட் சாப்பிட்டா பல்லு கெட்டு போயிடுமுன்னு உன் அம்மா சொன்னாங்களா? ஆச்சர்யமாய் கேட்டார் கடைக்காரர்.

``சாக்லெட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனா இப்போ உங்ககிட்ட சில்லரை இல்லையின்னு நான் சாக்லெட் வாங்கினா என் அம்மா நம்பமாட்டாங்க, நான் தான் வேணுமுன்னு மீதி காசுக்கு சாக்லெட் வாங்கிட்டேன்னு என்ன தப்பா நினைப்பாங்க.!”” ஜெலினா சொல்லச்சொல்ல இந்த சின்ன வயதில் அவளுக்கிருக்கும் நாணயத்தை பாராட்டியபடியே கல்லாப்பெட்டியில் தேடி ஒரு ருபாய் நாணயத்தை தந்தார் கடைக்காரர்...

Nivas.T
13-07-2011, 01:40 PM
:eek::eek::eek:

மிக அருமை

பாராட்டுகள்

அக்னி
13-07-2011, 01:42 PM
இக்கதையில் ஜெலினாவின் நாணயத்தை விடவும் அவளின் பயமும்,
தாயின் பிள்ளை மீதான அவநம்பிக்கையுமே தெரிகின்றது.

நாணயத்துக்காக நா நயத்தை நான் விடமாட்டேன்.
சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன். :aetsch013:

Ravee
13-07-2011, 03:44 PM
இக்கதையில் ஜெலினாவின் நாணயத்தை விடவும் அவளின் பயமும்,
தாயின் பிள்ளை மீதான அவநம்பிக்கையுமே தெரிகின்றது.

நாணயத்துக்காக நா நயத்தைய் நான் விடமாட்டேன்.
சாக்லெட் வாங்கிச் சாப்பிட்டுவிடுவேன். :aetsch013:

அட அக்னி , பால்ராசய்யா என் பொண்ணை பார்த்து கதை எழுதினார் போல .... அம்மாவிடம் பயம் இருக்கும் .... அவள் அடிப்பதால் அல்ல .... அவள் அரவணைப்பு கிடைக்காமல் போய் விடும் என்று ... என் பெண்ணுக்கு அவள் அம்மாதான் உலகம் ... தப்பு செய்தால் அம்மா பேசமாட்டாள் என்றால் அடி வாங்கியதை விட தேம்பி அழுவாள் ... இந்த பாசம் நல்லதா கேட்டதா என்று என்னால் இன்றும் முடிவு சொல்ல முடியாதது. சிறிய கதையில் குழந்தையின் உணர்வுகள் தெளிவாக .... வாழ்த்துக்கள் அய்யா

redblack
22-07-2011, 11:27 AM
கடைசியில் நாணயம்தான் கிடைத்துவிட்டதே. அட மீதி உள்ள ஒரு ரூபாயத்தான் சொன்னேன்.

சிவா.ஜி
22-07-2011, 02:02 PM
சிறியகதை பெரிய செய்தி. வாழ்த்துக்கள் ஐ.பா.ரா அவர்களே.

அமரன்
22-07-2011, 11:43 PM
அக்னிப் பழமும் ரவீண்ணாவின் ரசமும் கதைக்கு மேலும் சுவையூட்டுகின்றன.

பிள்ளை இனிப்பை வாங்கிவிட்டு அம்மாவிடம் உண்மையைச் சொல்லி இருக்க வேணும். அம்மாவும் அதை கண் திறந்து நம்பி இருக்க வேணும். அதனால் ஏற்படும் பிணைப்பு வலுவானது. வளமானது.

ஒற்றை நாணயம் ஜெலினாவின் நா நயத்தின் உதவியுடன் கடைக்காரரின் நாணயத்தை கண்டு பிடித்திருக்கிறது

பாராட்டுகள் ஐபாரா

கீதம்
28-07-2011, 02:14 AM
ஒரு சிறுவிதைக்குள் அடங்கும் பெருவிருட்சம் போல் இக்குறுங்கதை சொல்லும் உளவியற்சிந்தனை மிகப்பெரியது. மனமார்ந்த பாராட்டுகள்.

தாமரை
28-07-2011, 02:26 AM
அட அக்னி , பால்ராசய்யா என் பொண்ணை பார்த்து கதை எழுதினார் போல .... அம்மாவிடம் பயம் இருக்கும் .... அவள் அடிப்பதால் அல்ல .... அவள் அரவணைப்பு கிடைக்காமல் போய் விடும் என்று ... என் பெண்ணுக்கு அவள் அம்மாதான் உலகம் ... தப்பு செய்தால் அம்மா பேசமாட்டாள் என்றால் அடி வாங்கியதை விட தேம்பி அழுவாள் ... இந்த பாசம் நல்லதா கேட்டதா என்று என்னால் இன்றும் முடிவு சொல்ல முடியாதது. சிறிய கதையில் குழந்தையின் உணர்வுகள் தெளிவாக .... வாழ்த்துக்கள் அய்யா

இங்க அதை விட மோசம் இரவி... சிரிச்சிகிட்டே எத்தனை அடிச்சாலும் பிரச்சனை இல்லை.. கோவமா அல்லது சோகமா ஒரே ஒரு பார்வை பார்த்தா அவங்க அழுகை ஸ்டார்ட்...

ஒரு வேளை அடியை அவாய்ட் பண்ண ஈஸியான டெக்னிக்கை அவங்க கத்துகிட்டாய்ங்களோ?:confused::confused::confused:

இராஜேஸ்வரன்
15-02-2012, 03:22 PM
நல்ல கருத்துள்ள கதை. ஆனாலும் அதை விட நண்பரின் இந்த கருத்து மிகவும் பொருத்தமாக உள்ளது.

பிள்ளை இனிப்பை வாங்கிவிட்டு அம்மாவிடம் உண்மையைச் சொல்லி இருக்க வேணும். அம்மாவும் அதை கண் திறந்து நம்பி இருக்க வேணும். அதனால் ஏற்படும் பிணைப்பு வலுவானது. வளமானது.

பாராட்டுக்கள்.

jayanth
15-02-2012, 04:41 PM
ஜெலினாவைப்போல எல்லாப்பிள்ளைகளும் இருந்து விட்டால்.............
நல்ல கதை!!!

Dr.சுந்தரராஜ் தயாளன்
21-03-2012, 10:29 AM
ஆஹா ...இந்தச் சின்ன வயதில் இப்படி ஒரு சிந்தனையா...பாராட்டவேண்டும் :)