PDA

View Full Version : ஒரு மிருகம்..

Nivas.T
13-07-2011, 12:00 PM
ஆடை அணிந்து வலம் வருகிறேன்
அழகாய் இருக்க முயல்கிறேன்

மொழிகளில் வல்லமை காண்கிறேன்
பிழை என்கிறேன்
நிறை என்கிறேன்

இறக்கம் கொள்கிறேன்
வார்த்தை வடிக்கிறேன்
கதை கவிதை புணைகிறேன்

இசை இசைக்கிறேன்
பா படிக்கிறேன்
தூரிகை தொடுகிறேன்
ரசிக்கிறேன்
சிரிக்கிறேன்
மறக்கிறேன்
நினைக்கிறேன்

பண்பாடு காண்கிறேன்
பதவி ஏற்கிறேன்
பணிவிடை செய்கிறேன்

நன்றி
கருணை
காதல்
அன்பு
பாசம்
நேசம்

என்று பலவாறு
வேறுபடுத்த முயன்றாலும்

உண்மை சுடுகிறது
மனிதன் ஒரு மிருகம்
என்று உணரும் போது...

அக்னி
13-07-2011, 12:19 PM
மனிதன் என்ற உயிரினை, மற்ற உயிர்களினின்றும்
வேறுபடுத்துவதும் மேம்படுத்துவதும் இவைதான்.

இயல்பாகவே இருக்கவேண்டிய இக்குணங்களை,
திணித்துக்கொள்ள வேண்டிய நிலையில் மனிதன்.

மாற்றியது யார்...
மனிதன் தான்...

கீதம் அக்காவின் மிருகத்தைப் போன்று (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23164) கவிதையும்,
அதிலுள்ள பின்னூட்டங்களும் இக்கவிதையையும் சேர்ந்து வரும்.
குறிப்பாகப் பென்ஸ் அவர்கள் பின்னூட்டத்தில் இப்ப்வாறு கேட்டிருப்பார்...

ஒருவேளை குரங்குகள் கூட தன்னை தவிர மீதி உயிரினங்களை "மிருகம்" என்று தான் கூறுமோ என்ன..???

வெளிப்படுத்த முடியும்வரை,
மனிதன் வெளிப்படுத்திக்கொள்வான்
மனித இயல்பை...

வெளிப்படுத்த இயலாத கணத்தில்
மனிதன் இழந்துவிடுகின்றான்
மனித இயல்பை...

பாவம் மிருகம்... அதனைச் சாட்டித் தப்பித்துக் கொள்கின்றோம்...

:icon_b:

Nivas.T
13-07-2011, 01:10 PM
உண்மைதான் அக்னி

எனக்கு இவை அனைத்தும் வெறும் திணிப்புகலாகவே தென்படுகிறது

தன்னைக் காத்துக்கொள்ளும் தருணத்தை தவிர மனிதன் மிருகத்திடம் இருந்து வேறுபடுத்திக்கொண்டு மனிதனாக வேடம் தரிக்க முயல்கிறான்

எவ்வளவு வேடம் தரித்தாலும் மிருகம் என்னும் உண்மை சுடும் அளவுக்கு வேடத்தோடு ஒன்றிப் போய்விடுகிறான்

உண்மையில் விலங்குகளோடு ஒப்பிட்டால் இன்னும் கீழ்த்தனமாகி விடுவோமோ என்று உணர்ந்துதான் அவ்வாறு ஆகிவிட்டான் போல :frown:

மிக்க நன்றி அக்னி :)

Ravee
13-07-2011, 01:57 PM
மிருகம் எப்போதும் மனிதனாக வாழ நினைப்பது இல்லை மிருகம் மிருகமாகவே வாழ்ந்து வாழ்ந்து மடிகிறது. ஆனால் மனிதன் மாற்று ஒன்றுடன் போட்டி போட்டு தான் தானாக இல்லாமல் தவறி போகும் போது அதுவாகிறான் .... அதை மிருகம் என்று சொல்லாதீர்கள்.... :)

Nivas.T
13-07-2011, 02:11 PM

:eek:அப்படி என்றால் அதை என்னவென்று அழைப்பது? :confused:

மனிதன் என்றே சொல்லிவிடலாமா? :D

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ரவி அண்ணா :)

தாமரை
13-07-2011, 02:31 PM
நான் யார்?
தாமரை
ஆண்
படித்தவன்
மேலாளர்
பொறியாளன்
கவிஞன்
எழுத்தாளன்
பேச்சாளன்
நல்லவன்
தியாகி
செட்டியார்
இந்து
தமிழன்??
மதராஸி
இந்தியன்
தெற்காசியன்
மனிதன்
இப்படி எதிலிருந்தும்
எப்படியாவது
வித்தியாசப்படுத்தி
நான் வேறு என
காட்டிக் கொண்டே இருக்கிறேன்

இப்படிக்கு
வித்தியாசமாவன்:lachen001::lachen001::lachen001::lachen001:

Ravee
13-07-2011, 02:34 PM
நான் யார்?
தாமரை
ஆண்
படித்தவன்
மேலாளர்
பொறியாளன்
கவிஞன்
எழுத்தாளன்
பேச்சாளன்
நல்லவன்
தியாகி
செட்டியார்
இந்து
தமிழன்??
மதராஸி
இந்தியன்
தெற்காசியன்
மனிதன்
இப்படி எதிலிருந்தும்
எப்படியாவது
வித்தியாசப்படுத்தி
நான் வேறு என
காட்டிக் கொண்டே இருக்கிறேன்

இப்படிக்கு
ரொம்ப ரொம்ப வித்தியாசமாவன்:lachen001::lachen001::lachen001::lachen001:

Nivas.T
13-07-2011, 03:18 PM
:lachen001::lachen001::lachen001::lachen001:

ஆதவா
14-07-2011, 05:31 AM
மனிதன் ஒரு மிருகம் என்ற வாக்கியமே தவறானது.. மிருக வகைகளில் மனிதன் ஒரு வகை. மற்ற மிருக வகைகள் செய்யமுடியாத பல விஷயங்களை மனித வகை மிருகங்கள் செய்கின்றன என்பதைத் தவிர வேறெந்த வித்தியாசமும் இருவருக்குமிடையே இல்லை.

@ தாமரை அண்ணா..

ஒரு மனிதனை மிருகத்திடமிருந்து (அதாவது மற்ற மிருகங்களிலிருந்து மனித மிருகத்தை) வித்தியாசப்படுத்த இந்த அடையாளங்கள்தான் தேவையா?

பென்ஸ்
14-07-2011, 05:48 AM

அருமையான பதில் ஆதவா.....
பண்பாடி என்று பிரித்து சொல்லும் நாம்... காக்கையிடம் இருக்கும் ஒற்றுமை பண்பு இருக்கிறதா....
பெலிக்கானின் தியாகம் இருக்கிறதா....
நாம் நம்மையே வித்தியாச படுத்தி கொள்ள நாமாக்கு நாமே போட்டுகொண்ட "சூடுகள்" தான் இந்த ஆறாம் அறிவு...

தாமரை
14-07-2011, 05:49 AM

எதாவது அடையாளம் கிடைக்காதா என்னை வித்தியாசப்படுத்திக் காட்ட என்பது மனிதனின் அழியாத ஆசை.. தனக்குத் தெரிஞ்சதை எல்லாம் வச்சி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதே அவனோட இலட்சியம். :wuerg019::wuerg019::wuerg019:

Nivas.T
14-07-2011, 06:08 AM

உண்மை ஆதவா,

இந்த உண்மை உங்களுக்கும், எனக்கும் சரி. ஆனால் பலருக்கு இது உண்மை என்று தெரிந்தாலும் மனம் ஒப்புக் கொள்வதில்லை என்பதைத்தான் எழுதியுள்ளேன்.

உண்மையில் இதை நான் எனது பார்வையிலிருந்து எழுதவில்லை, இந்த உண்மை புரியாதவர் (மனிதன் மிருகத்தை விட சிறந்தவன் என்று நினைப்பவரின்) பார்வையிலிருந்து எழுதியுள்ளேன் அந்த இறுதி வரிகளை.

மிக்க நன்றி ஆதவா

Nivas.T
14-07-2011, 06:11 AM
அருமையான பதில் ஆதவா.....
பண்பாடி என்று பிரித்து சொல்லும் நாம்... காக்கையிடம் இருக்கும் ஒற்றுமை பண்பு இருக்கிறதா....
பெலிக்கானின் தியாகம் இருக்கிறதா....
நாம் நம்மையே வித்தியாச படுத்தி கொள்ள நாமாக்கு நாமே போட்டுகொண்ட "சூடுகள்" தான் இந்த ஆறாம் அறிவு...

ஒவ்வொரு மிருகத்திடம் இருந்து மனிதன் என்கிற மிருகம் திருடிக் கொண்ட பழக்க வழக்கங்களின் ஒட்டுமொத்த தொகுப்புதான் ஆறாம் அறிவு.

உண்மை கூறும் பின்னூட்டம்

நன்றி பென்ஸ்

தாமரை
14-07-2011, 06:14 AM
ஒவ்வொரு மிருகத்திடம் இருந்து மனிதன் என்கிற மிருகம் திருடிக் கொண்ட பழக்க வழக்கங்களின் ஒட்டுமொத்த தொகுப்புதான் ஆறாம் அறிவு.

உண்மை கூறும் பின்னூட்டம்

நன்றி பென்ஸ்

உயிருள்ளவற்றிடமிருந்து மட்டும் மனிதன் திருடவில்லை என நான் எண்ணுகிறேன்.. நீங்க எப்படி?

Nivas.T
14-07-2011, 06:17 AM
உயிருள்ளவற்றிடமிருந்து மட்டும் மனிதன் திருடவில்லை என நான் எண்ணுகிறேன்.. நீங்க எப்படி?

:icon_03:

செல்வா
15-07-2011, 12:49 PM
இந்த உண்மை என்னைச் சுடவில்லை
நான் பெருமை கொள்கிறேன்.
ஒரு மிருகமாகிய நான்
இத்தனை வளர்ச்சிகளை எனக்குள் கண்டுள்ளேன் என்பதால்.

என்னால் உருவாக்கப்பட்ட கலைகள் காலத்தை வென்று வாழ்கின்றன.
எனது இருப்பை இறப்பிற்குப் பின்னும் காட்டிக் கொண்டே இருக்கிறது.
இவை அத்தனையும் என் மேற்கண்ட முயற்சிகளாலே வந்தவை.

வாழ்த்துக்கள் நிவாஸ்

ஆதி
15-07-2011, 01:05 PM
எதாவது அடையாளம் கிடைக்காதா என்னை வித்தியாசப்படுத்திக் காட்ட என்பது மனிதனின் அழியாத ஆசை.. தனக்குத் தெரிஞ்சதை எல்லாம் வச்சி வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதே அவனோட இலட்சியம். :wuerg019::wuerg019::wuerg019:

சாதிகள், மதங்கள், பிரிவினைகள் பிறந்ததே இந்த* இல*ட்சிய*த்தால்தான்...............

Nivas.T
15-07-2011, 01:17 PM
இந்த உண்மை என்னைச் சுடவில்லை
நான் பெருமை கொள்கிறேன்.
ஒரு மிருகமாகிய நான்
இத்தனை வளர்ச்சிகளை எனக்குள் கண்டுள்ளேன் என்பதால்.

என்னால் உருவாக்கப்பட்ட கலைகள் காலத்தை வென்று வாழ்கின்றன.
எனது இருப்பை இறப்பிற்குப் பின்னும் காட்டிக் கொண்டே இருக்கிறது.
இவை அத்தனையும் என் மேற்கண்ட முயற்சிகளாலே வந்தவை.

வாழ்த்துக்கள் நிவாஸ்

வித்தியாசமான சிந்தனை, அழகான பின்னூட்டம் சாதகமான பார்வை

வாழ்த்துக்களுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி செல்வா

Nivas.T
15-07-2011, 01:21 PM
சாதிகள், மதங்கள், பிரிவினைகள் பிறந்ததே இந்த* இல*ட்சிய*த்தால்தான்...............

மிருகத்திடம் இருந்து தன்னை வித்தியாசப் படுத்தத் தொடங்கி இன்று ..

நான்
எனது
என்னுடையது
எனக்கு மட்டும்
எனக்கு மட்டும்தான்
நான் மட்டும்தான்

என்று மனிதன் இன்னொரு மனிதனிடமே கையாளத் தொடங்கி விட்டான்